Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

சாதியை ஒழித்து மதத்தை மறுத்து தமிழராய் நிற்க வேண்டிய தருணம் இது. மாமல்லபுரங்கள் மரக்காணங்கள் தாண்டி வந்து கடலூரில் மே 18 அன்று நாம் தமிழராய் ஒன்றிணைவோம். நாம் பிளவு பட்ட இனம் இல்லை, நாம் வீழ்ந்த இனம் இல்லை என்பதை நிரூபிப்போம்.

இந்தியாவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சக தேசிய இன சகோதர்கள் நம்மோடு கைகோர்க்கும் இந்நிகழ்வில் எழுச்சியோடு பங்கேற்போம்

 

947310_10151912749304128_474160653_n.jpg

 

(முகநூல்)

 

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted
315411_118310215035851_24646637_n.jpg

 

[முகநூலில் இருந்து]

 

 

 

 

Posted

இனிய வணக்கம் தோழர்களே..

 

நாளை காலை மாணவர்கள் கலந்தாய்வுக்கு நிச்சயமாக வந்துவிடுங்கள் இடம் V.O.C பூங்கா கோவை..

இதுவரை போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்த சக தோழர்களையும் நாம் கலந்தாய்வில் பங்குபெற வைப்பதென்பது அவசியம்..

-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோவை-

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

ஜேர்மனில் 18.05.2013 அன்று பேரணி.
 

399576_370229906429606_178688338_n.jpg

 

(முகநூல்)

Posted

பிரான்சில் மே 1 - மே 18 வரை அடையாள உண்ணாவிரத போராட்டம்.

 

942474_370756379710292_479357568_n.jpg

 

(முகநூல்)

Posted

லண்டனில் 18.05.2013 அன்று பேரணி.

 

923510_371177259668204_404387544_n.jpg

 

 

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

603772_613227132022649_89834293_n.jpg



மாணவர்களின் அடுத்த நகர்வு ....

 

Loyolahungerstrike -முகநூல்-

 

 

Posted

250164_612927555385940_1954246490_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

நேற்று (மே 1) ஜேர்மனில் நடைபெற்ற பேரணி படங்கள்.

 

942503_312427782224154_982059029_n.jpg

 

944622_312427792224153_1179652079_n.jpg

 

 

944954_312427972224135_27480192_n.jpg

 

 

936335_312427995557466_595713773_n.jpg

 

 

946871_312428028890796_906935448_n.jpg

 

 

315362_312428038890795_1234785519_n.jpg

 

 

575592_312428072224125_124858102_n.jpg

 

 

225685_312428085557457_157697172_n.jpg

 

 

935210_312428095557456_164074306_n.jpg

 

 

428519_312428265557439_1515494960_n.jpg

 

310075_312428312224101_549508145_n.jpg

 

 

393066_312428362224096_230382834_n.jpg

 

(முகநூல்)

Posted

நேற்று (மே 1) ஜேர்மனில் நடைபெற்ற பேரணி தொடர்பான மேலும் சில படங்கள்.

 

320845_312428318890767_656737577_n.jpg

 

 

270853_312428388890760_1930370857_n.jpg

 

 

942988_312428345557431_1766715141_n.jpg

 

 

302894_312428368890762_63973758_n.jpg

 

 

923331_312428415557424_2067926638_n.jpg

 

 

923159_312428422224090_482002257_n.jpg

 

 

253388_312430892223843_1869459731_n.jpg

 

 

940862_312428518890747_1447910993_n.jpg

 

 

11912_312428472224085_927117918_n.jpg

 

 

934946_312428488890750_1922861827_n.jpg

 

(முகநூல்)

 

Posted

பிரான்சில் நடைபெற்ற மே தினம்.

 

பிரான்சு பாரிஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் தொழிலாளர் தின போராட்டத்தில் விடுதலையை தேடி நிற்கும் இனங்கள் அனைவரும் பங்குபற்றி தமது விடுதலை போராட்டங்களை வலியுறுத்தியதோடு, போராட்ட குழுக்கள் எல்லோரும் ஓர் அணியில் நின்று போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

தமிழீழ மக்களின் போராட்டத்தை மிகவும் உயர்வாக பார்க்கும் சிலர் வருங்காலத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களில் பங்கு எடுக்க தமது விருப்பத்தை தெரிவித்தனர்.

தந்தை செல்வா வழியில் வந்து, அவர்காலத்தில் முன்மொழிந்த தமிழீழ தேசியக்க கொள்கையை தமிழருக்கான ஒரே தீர்வாக எடுத்து, தமிழீழம் என்ற இடைக்கால அரசை உருவாக்கி, அதற்குரிய தேசியக்கொள்கைகளை உருவாக்கி, தமிழீழ மக்களுக்கு வட்டுகோட்டையில் தீர்மானிக்கப்பட்டு, தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழ சோஷலிச அரசை, முற்போக்கான கொள்கைகளும், சர்வதேசத்தையும், சகல மக்களையும் முன்னிறுத்திய அரசை நடைமுறையில் நடத்திக்காட்டிய தமிழீழப் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவருமாகிய, எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிகாட்ட தமிழீழ மக்கள், தமீழத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என்ற குறிக்கோளுடன் தொழிலாளர் தினப்போராட்டதில் கொட்டும் மழையிலும் தமிழீழ மக்கள் பங்குபற்றினர்.

 

 

575553_250514101760037_118923470_n.jpg

 

 

944952_250514375093343_537184860_n.jpg

 

 

942096_250514078426706_579616639_n.jpg

 

 

935536_250514998426614_12721308_n.jpg

 

 

935619_250514601759987_741435756_n.jpg

 

 

315323_250514285093352_1050893952_n.jpg

 

484565_250514365093344_2099030699_n.jpg

 

944465_250514668426647_635809315_n.jpg

 

 

942922_250515661759881_1798046111_n.jpg

 

485567_250515628426551_948740935_n.jpg

 

248082_250515671759880_760791772_n.jpg

 

12009_250515365093244_519170272_n.jpg

 

931383_250515728426541_1336692858_n.jpg

 

390630_250515978426516_331890312_n.jpg

 

 

229708_250516078426506_1998385483_n.jpg

 

248065_250516338426480_888916975_n.jpg

 

 

923345_250515975093183_449826174_n.jpg

 

935619_250516321759815_673856379_n.jpg

 

316387_250516411759806_1668153716_n.jpg

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
எழுச்சிகொள்ளும் தமிழக மாணவர்களின் போராட்டம்-தொடர இருக்கும் சுடர்பயணம்!
 

தமிழீழ விடுதலையினை வலியுறுத்தி தமிழீழவிடுதலைக்கான மாணவர்களின் சுடர்பயணம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள் ஊடாக தங்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளது(காணொளி)

தமிழத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி தஞ்சை முள்ளிவாய்க்கால்முற்றத்தில் மே 17 ஆம் நாள் காலை சென்றடையவுள்ளது
இந்த சுடர்பயணத்தினை 15ற்கு மேற்பட்ட ஈழ உணர்வாளர்களையும் ஆதரவாளர்களையினையும் ஒருங்கி;ணைத்து நெறியாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்மூத்த நெறியாளர்களாக பழ.நெடுமாறன்,நல்லக்கண்ணு அவர்களை கொண்டு மாணவர்கள் செயற்பாட்டினை முன்னெடுத்து செல்லவுள்ளதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான தினேஸ் தெரிவித்துள்ளார்.

 

 

Posted

தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?   -- 1 May 2013
----- திருமாவேலன்


இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.
இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனால், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது.

''இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்'' என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனித் தமிழீழம் அமைப்பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்!

தனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையை கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது.
முதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது.

திரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவ ரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதை கண்டுகொண்ட பிரிட்டன், 1947-ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948-58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றிவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956-1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970-ல் தொடங்கியது. அது வளரவில்லை. 1977-ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலை திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005-க்குப் பிறகான ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை!

இதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறுநாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்!
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததால், தமிழருக்கு ஆதரவாக, தமிழீழத்துக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த நாடு மாறிவிட்டது என்று அடையாளப்படுத்துவது அரசியல் புரியாத சிலரின் குருட்டுச் சிந்தனை. அமெரிக்கா ஆதரிப்பதாலேயே எந்த நல்ல லட்சியமும் மோசமானதாக ஆகிவிடும் என்று நினைப்பதும் அறிவு நாணயமற்றது.

1983... சிங்களப் பேரினவாதத்தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்’ என்று, அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான 'ஆசியனில்’ இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை. அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன.
சோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்துவதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 'ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்’ என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று 'ஏகாதிபத்தியமாக’ இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதிபத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். 'இந்துமாக் கடலை பங்கிடுவது மட்டுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்’ என்று 1987-ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்களும் தெளிவுப்படுத்தினர். அதனாலேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணரவேண்டியது.

ராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். 'எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை’ என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பனத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றி பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா?

'வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ - என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர்.

அமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ்.எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகனைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்து கப்பல் வந்தது.

'புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதை கைவிடச் செய்யும் அழுத்தமாக அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்’ என்று, ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்தார். 'இந்த பிராந்தியத்தைச் சாராத சக்திகளை தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளை குழப்பி வருகிறது இலங்கை அரசு’ என்று, புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேவை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது.

2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது!). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் 'அமெரிக்காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்’ என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் முகம்.

2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லூன்ஸ்டெடு பேசும்போது 'புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்போவார்கள்’ என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை!

- தொடரும்

 

மிரட்டிய அமெரிக்கா... மீறிய புலிகள்... -   2 May 2013

கியூபா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா, நமீபியா, பாலஸ்தீனம் போலவே ஈழத்தில் நடந்ததும் விடுதலைப் போராட்டம். இதை உணர்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் தயக்கம் என்ன? இந்த நாடுகளின் கோரிக்கையை சில ஏகாதிபத்திய சக்திகள் ஆதரித்தன அல்லது ஆதரிக்கும் என்பதற்காக, அதன் போராட்ட நியாயங்களை சமூக - ஜனநாயக சக்திகள் புறந்தள்ளிவிட முடியுமா?


கியூபாவுக்கும் சோசலிஸ நாடுகளுக்கும் அமெரிக்கா செய்ததை, யாழ்ப்பாணத்துக்கும் வன்னிப் பகுதிக்கும் சிங்களம் செய்தது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தடுத்தும், சொந்த தேசத்துக்குள் வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தும், விலைகொடுக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை உயர்த்தியும், 'பொருளாதாரத் தடை’ செய்யப்பட்ட பகுதியாக தமிழீழத்தை சிங்கள இனவெறி நடத்தியது. அப்போது, இன்று ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்காவோ அல்லது தீர்மானத்தை ஆதரித்து நிற்கும் நாடுகளோ அன்று குரல் கொடுக்கவில்லை. காரணம், ஒன்றுபட்ட இலங்கைதான் அவர்களுக்குத் தேவை. அது இருந்தால்தான் தங்களது சந்தை செழிக்கும் என்று நினைத்தனர். 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ புலிகளை அமுக்கப் பார்த்தனர். அதனால், ஏகாதிபத்திய சக்திகள் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. புலிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் நபர்களில் ஒருவராக இருந்த கா.வெ.பாலகுமாரன், ''கியூபா எங்களுக்குப் ஒரு பாடமாக இருக்கிறது. நாளை நாங்கள் விடுதலைபெற்றாலும்கூட தொடக்கத்திலேயே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக் கூடும்'' என்று, அமெரிக்காவை மனதில்வைத்தே சொன்னார்.


ராஜபக்ஷேவை வைத்துப் புலிகளை வீழ்த்துவதும் பின்னர் ராஜபக்ஷேவை வீழ்த்துவதன் மூலமாக சீனாவை மிரட்டுவதும் என்ற தந்திரம் மட்டுமே ஜெனிவா தீர்மானமே தவிர, இது தமிழருக்கு ஆதரவானதும் அல்ல; சாதகமானதும் அல்ல. சர்வதேச அரசியலையே சர்வமும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கும்’ என்று நம்புவதுதான் ஆச்சர்யமானது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் குறித்து 'தீக்கதிர்’ பத்திரிகையில் தோழர் உ.வாசுகி 'சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகம் வர வேண்டாமா?’ என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளார். கொலம்பஸில் தொடங்கி, லத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து, பாலஸ்தீனம் வழியாக வந்து, வியட்நாமைத் தொட்டு, ஈராக் அநியாயத்தை அடையாளப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். ஆனால், இந்த நாடுகளில் நடந்த அட்டூழியங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சமும் குறையாதது ராஜபக்ஷே சகோதரர்கள் ஈழத்தில் நடத்தியது. ஆனால், அதைப் பற்றி கரிசனமான வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறதே... அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நுண்மையான அரசியல். இவர்களுக்குத் தூரப் பார்வைதான் உண்டு போலும். கிட்டப் பார்வை கிடையாதோ?
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான சித்துவிளையாட்டுகள் பகிரங்கமாக நடந்த இடம் இலங்கை. ஓஸ்லோவில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை அமைதியாகப் போய்க்கொண்டு இருந்தபோது, அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அமிட்ரேச் இடையில் புகுந்து, 'ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இருந்தார். 'ஒரு சமாதானக் கூட்டத்தில் தமிழரின் சுதந்திரப் போராட்டத்துக்கு இகழ்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடன் ஒரு உயர்தர அமெரிக்க அதிகாரி ஆத்திரமூட்டும் வகையில் எமது இயக்கத்தைச் சீண்டியது எனக்குச் சினத்தை ஏற்படுத்தியது. என்று பாலசிங்கம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை 2003-ம் ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் செய்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள்தான் அதிக நிதி அளிக்க ஒப்புக்கொண்டன. அளவுக்கு அதிகமான நிதி இலங்கைக்குள் வருவதை புலிகள் அமைப்பு கண்டித்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஜப்பானில் நடக்க இருந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடு செய்யும் ஆலோசனை மாநாட்டை வாஷிங்டனில் நடத்தப்போகிறோம் என்று திடீரென அறிவித்து, அதற்கு புலிகள் அமைப்பை அழைக்காமல்விட்டது அமெரிக்கா. 'எங்கள் நாட்டில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்களை அழைக்க முடியாது’ என்று சொன்னார்கள். 'நாங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே அமெரிக்காவில் நடத்தியுள்ளீர்கள்’ என்றார் பிரபாகரன். புலிகள் பங்கேற்காமலேயே அந்த மாநாடு வாஷிங்டனில் நடந்தது. 'நாசகாரச் சுழற்சிகள் நிலவும் அரசுகளது சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்த சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்துவிடாது சுதந்திரமாகச் செயல்படவே நாம் விரும்பினோம்’ என்று பிரபாகரன் கடுமையாக அமெரிக்காவைக் கண்டித்தார். இனி பேசிப் பயனில்லை என்று புலிகள் முடிவுக்கு வந்தது அதன் பிறகுதான்.


இதுபற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்துக்கு, அவர் பதில் அனுப்பவில்லை. ஆனால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆஸ்லி வில்ஸ் பதில் அனுப்பினார்.
'விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதாயின், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். பெரும் படை அணிகளையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதால், புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அது அவர்களுக்கு நெருக்கடியையே ஏற்படுத்தும்’ என்று, அமெரிக்கத் தூதர் சொன்னார். 'எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் ஆயுதம் வைத்துள்ளோம்’ என்று பதில் சொன்னார் பாலசிங்கம். 'இனப் பிரச்னையை இரு தரப்பும்தான் தீர்க்க வேண்டும். பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள வெளிநாட்டுச் சக்திகளை அநியாயமாகத் தலையீடு செய்யவைத்தது தவறு’ என்று ரணிலுக்கு புலிகள் கடிதம் அனுப்பினர். 'சமாதானத்தின் பெயரால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ரணில் அரசு விரித்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில், எமது இயக்கத்தின் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழரின் தேசிய இனப் பிரச்னையை சர்வதேசமயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால் அதேவேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட லட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு தலையீடு செய்வதை நான் வன்மையாக எதிர்த்தோம்’ என்று பாலசிங்கம் அறிவித்தார்.
அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தங்கள் சந்தை வளத்துக்கும் மூலதனத்துக்கும் புலிகளையும் தமிழர்களையும் பண்டமாக மாறுவதற்கு அமெரிக்கா கட்டாயப்படுத்திய வரலாறுதான் இவை. கொலம்பஸ் காலம் முதல் அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இலங்கையில் நடத்தப்பட்ட அமெரிக்க நெருக்கடிகள் தெரியாதா? தெரிந்தும் பார்க்கத் தவறினார்களா?இதைப் பற்றிச் சொன்னால், தேசிய இனப் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதால் பீதி அடைகிறார்களா?


தேசிய இனப் பிரச்னையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையிலேயே உள்வாங்க மறுப்பதால்தான், ஏகாதிபத்தியப் போர்வைகளைப் போட்டுமூடி, நாட்டில் நடக்கும் அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.
அப்படியே அமெரிக்கா, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் என்ன முடிவெடுப்பது? இதற்கு லெனின் வழிகாட்டுகிறார்...

''ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். இதனால் சமூக - ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள்.
அதேபோல், அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்ஷ்வாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதற்காக சமூக - ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை'' என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.
தேசிய இனப்பிரச்னை, சுயநிர்ணய உரிமை, பிரிந்துபோதல் ஆகியவற்றை எப்போது எழுதினாலும் லெனின், குடும்ப உதாரணம் ஒன்றைக் காட்டுவார். அதுதான் விவாகரத்து.

''சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்துபோகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது'' என்கிறார் லெனின். குடும்பத்துக்குள் சித்ரவதை செய்யப்படும் பெண் ஒருத்தி, அதில் அடங்கி இருப்பதைவிட அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதுதான் நிம்மதியானது என்று நித்தமும் மாதர் சங்கங்கள் கவுன்சிலிங் நடத்துகின்றன. ஆனால், 'என்ன கொடுமை செய்தாலும், அந்த நாட்டுக்குள் வாழத்தான் வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு எடுக்கிறது. மாதர் சங்கத்தின் அறிவுரை குடும்பத்துக்குக் குடும்பம் மாறாது. ஆனால் மார்க்சிஸ்ட் நிலைப்பாடு நாடுகளுக்கு நாடு மாறுகிறதே?
- தொடரும்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு   

https://www.facebook.com/SFFETN

 

(முகநூல்)

Posted

வணக்கம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோவை மாணவர்களின் கலந்தாய்வு முதலாம் திகதி V.O.C மைதானத்தில் நடந்தது..

இக்கலந்தாய்வில் கடந்த 20, 21 தேதிகளில் நடந்த கண்காட்சியின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது.

 

திட்டமிட்டபடி கண்காட்சியை V.O.C மைதானத்தில் நடத்த முடியாதபடி காவல் துறை அனுமதி மறுத்தது முதல் சமூக நல கூடத்தில் சிறப்பாக நடத்தி முடித்தது வரை நாங்கள் எதை எதை எல்லாம் தவறவிட்டோம் என ஆலோசித்து அடுத்தடுத்த நிகழ்வுகளில் இத்தகைய குறைகள் ஏற்படாது செல்படுவது குறித்து விவாதித்தோம் .

இறுதியாக கண்காட்சிக்கு அனுமதி மறுத்த காவல் துறையை கண்டித்து ஒரு நிகழ்வும் இலங்கையில் உச்சகட்ட போரின் இறுதி நாளான மே18 அன்று ஒரு நிகழ்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது..

இவ்விரு நிகழ்வுகளின் திட்டங்கள் அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் தயார் ஆகும். நிகழ்வுகள் குறித்த தகவல்களுடன் மீண்டும் சந்திக்கிறோம்

இவன்,
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோவை

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

மே 18 , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை முன்னிட்டு,

"சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கபட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்து, அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" எனும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி "நினைவேந்தல் பேரணியுடன் கூடிய மாபெரும் பொதுகூட்டத்திற்கான" முன்னெடுப்பு நடவடிக்கைகள் , தேர்வுக்கு மத்தியிலும் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது ,

கடலூர் மாவட்டத்திற்கான செயல் திட்டங்கள் பற்றிய மாணவர்கள் கலந்தாய்வு வரும் ஞாயிரு 05.05.2013 அன்று காலை 11.00 மணியளவில் விருத்தாச்சலத்தில் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட கல்லூரிகளின் மாணவ நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் .

தொடர்புக்கு: - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, கடலூர் மாவட்டம்

பிரவின் : 95000 78349
மாறன் : 81222 74273

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி பகுதியில்மாணவர்களை ஒருங்கிணைத்து தீவிரமாக களமாடிய நமது தோழர் சதீஷ் தற்போது கல்லூரி நிர்வாகத்தால் மிகவும் மிரட்டப்பட்டுள்ளார். இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் இருந்த நமது தோழரின் குடும்பத்தாரை தற்போது நேரடியாக நிர்வாகம் மிரட்டி வருகிறது.

 

ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தின் (இந்த கல்லூரி ஒரு காங்கிரஸ் கட்சியை சார்ந்த நபரின் பினாமி மூலம் இயக்குவதாகவும் தகவல்கள் உள்ளன) முறைகேடுகள் பலவற்றை நேரடியாக சாடிய நமது தோழருக்கு மாணவர்களின் ஆதரவும் அதிகமாகி இருப்பதை தொடர்ந்து அவரை ஒரேடியாக காலி செய்ய நிர்வாகம் முயன்று வருகிறது.

 

அந்த மாணவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அவருக்கும், தோழரை மிரட்டி வரும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பையும் பதிவு செய்யுமாறு தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தோழர் சதீஸ் எண்: 9597000579
கல்லூரி முதல்வரின் எண்: 8012520440

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

புலம்பெயர் மக்களை குழப்பும் தமிழ்வின் [lankasri ] இணையத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் "தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு' என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்று // ஒரு செய்தியினை தமிழ்வின் [lankasri ] என்னும் இணையம் செய்தி வெளியிட்டு புலம்பெயர் மக்களை குழப்புகின்றது. இந்த இணையம் மாணாவர்கள் போராடும் போது அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து மாணவர்கள் போராடுவதாக அன்று செய்திவெளியிட்டனர் நாம் அதற்க்கு கண்டனம் தெரிவித்தோம் . அதனால் அச் செய்தி உடனடியாக நீக்கப்பட்டது.

ஆனால் இன்று மாணவர்கள் அனைவரும் தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பை உருவக்கினர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர் நாம் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் உடனடியாக செய்தியை நீக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றோம் .

இவர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .

இது சு ப வீ மற்றும் திமுக உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது இதற்கும் தமிழீழ விடுதலைக்க போராடும் மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .

தமிழீழ உணர்வோடு போராடும் மாணவர்கள் பற்றிய செய்திகளை அரசியல் ஆதாயங்களுக்க திரிவு படுத்தி வெளியிடுவதை அனைத்து ஊடகங்களும் நிறுத்தி கொள்ளவேண்டும் .

தமிழ்வின் [lankasri ] நிறுவனம் மதுரையில் இருந்து இயக்குவது எமக்கு தெரியும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .

 

 

216280_614407448571284_1236458694_n.jpg

 

 

 

(facebook: loyolahungerstrike)

Posted

இடம்: சண்முகம் சாலை.,தாம்பரம், சென்னை (06-05-2013) நேரம் மாலை 6.00

 

601761_518042128231573_1806501690_n.jpg

 

(முகநூல்)

Posted

இதில் முழு விபரமும் உள்ளது

 

945929_519795524722900_991406383_n.jpg

 

(முகநூல்)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
நான்காவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவுகூரும் நாள் மே 18,19..எழுக எழுகஉலகத்தமிழ் இனமே எழுக எழுகவே -----.21 ம் நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்தும் கண்கள் விழித்தபடி வேடிக்கை பார்த்து இருக்க வன்னிமண்ணில் மாபெரும் தமிழ் இனப்படுகொலைகளை செய்த இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்க வேண்டாமா?எங்கள் சொந்த தொப்புள் கொடி உறவுகளை நெஞ்சில் நிறுத்தி தீபங்கள் ஏற்ற வேண்டாமா ?அனைத்து நாடுகளும் வேடிக்கை பார்த்தனர்.ஆனால் தமிழ் இனம் ஓய முடியுமா?எம்மினத்தின் எங்கள் உறவுகள் கொத்து கொத்தாக இனப்படுகொலைகள் செய்யப்பட்டது உங்களுக்கு வலிக்கவில்லையா?இறுதிவரை போராடவேண்டும் என்ற இனமான உணர்வை தோற்றுவிக்கவில்லையா?யோசியுங்கள் உறவுகளே யோசியுங்கள் உலகத்தமிழ் இனமே!இனப்படுகொலைகள் செய்யப்பட்ட அனைத்து எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து தீபங்கள் ஏற்றுவோம்.உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஆர்ப்பரித்து எழும் கடல் அலைகள் போல் மே 18 இனப்படுகொலை நாளில் ஒற்றுமையாக அணி திரள்வோம். வெல்க தமிழ் .  

Loyolahungerstrike-முகநூல்-

Posted

179469_249320701876103_572097186_n.jpg

 

(முகநூல்)

 

Posted

பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நாளினை முன்னிட்டு முதற்தடவையாக பிரான்சு வாழ்தமிழ் மூதாளர்களால் நடாத்தப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 4ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு கரும்புலி மேஐர் அருணனின் அன்னையார் அவர்கள் ஈகைச்சுடரின ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மாலை 6.00 மணிவரை கவயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றது.  பல வெளிநாட்டவர்களும் பிரெஞ்சு மக்களும் தமது கேள்விகளை தொடுத்திருந்தனர். அவர்களுக்கு மக்கள் பேரவை உறுப்பினர்கள் விளக்கமளித்திருந்தனர்

 

936938_251485931662854_899665728_n.jpg

 

179439_251485954996185_905047372_n.jpg

 

190437_251486164996164_246066166_n.jpg

 

 

320765_251486034996177_1562545443_n.jpg

 

 

179418_251486101662837_2144489764_n.jpg

 

182500_251486224996158_497824490_n.jpg

 

 

941259_251486251662822_2122633585_n.jpg

 

945100_251486294996151_125480364_n.jpg

 

600777_251486371662810_150815792_n.jpg

 

603852_251486368329477_511210243_n.jpg

 

 

(முகநூல்)

Posted

பிரான்சில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் முதலாம் நாளின் போது.

 

பிரான்சில் 01.05.2013 அன்று காலை 10.00 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக் கல்லூரிக்கு முன்பாக உள்ள சமாதான சுவர் எழுப்பப்பட்ட இடத்தில் ஈகைச்சுடர் மாவீரர் குடும்பத்தினரால் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தலைமை ஆசிரியரும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினருமாகிய திரு. சத்தியதாசன் அவர்கள் தலைமையில் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பமாகியது.

பல வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து பார்வையிட்டுச் செல்லும் இவ் இடத்தில்  தமிழர்களின் போராட்டத்தையும் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவளித்து அதற்குரிய படிவத்தில் பலர் கையெழுத்திட்டுச் சென்றதும், துண்டுப்பிரசுரங்களை தாமாகவே கேட்டு வேண்டிச் சென்றதும், எம்மால் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு மதிப்பளித்து பல வெளிநாட்டவர்கள் மற்றும் பிரெஞ்சு மக்களும் சில மணித்தியாலங்கள் அவர்கள் எம்முடன் செலவழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

551381_250268371784610_726069338_n.jpg

 

229724_250268525117928_1847493700_n.jpg

 

 

941781_250268488451265_1501121422_n.jpg

 

946169_250268478451266_360939221_n.jpg

 

(facebook)

Posted

பிரான்சில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் இரண்டாம் நாளின் போது.

 

பிரான்சு வாழ் தமிழ் மூதாளர்களால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பு நாள் மே 18 4 வது ஆண்டின் நினைவில் முன்னெடுக்கப்படும் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் (02.05.2013) காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடரினை கபிலன் சதா ஆகிய இரு மாவீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏற்றி வைத்தார்.

அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் பேரவை உறுப்பினரும், செயற்பாட்டாளருமாகிய திரு.பத்மநாதன் ஐயா அவர்களின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்தது. வழமை போல  பல பிரெஞ்சு மக்களும், வெளிநாட்டு மக்களும் இப்போராட்டத்தை பார்த்து சென்றனர்.

துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு கையெழுத்துக்களும் பெறப்பட்டது. பல பாடசாலை மாணவர்களும் பார்வையிட்டு சென்றதோடு அவர்களுக்கு பொறுப்பாக வந்தவர்கள் மாணவர்களுக்கு விளக்கங்கள் கொடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. மாலை 18 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது

 

947250_250717648406349_783214457_n.jpg

 

316089_250717661739681_497884927_n.jpg

 

577654_250717651739682_1129767917_n.jpg

 

577485_250717745073006_306547528_n.jpg

 

197675_250717755073005_175357320_n.jpg

 

263132_250717795073001_2053132500_n.jpg

 

943492_250717855072995_654629122_n.jpg

 

225675_250717885072992_454513721_n.jpg

 

249185_250717895072991_1908505575_n.jpg

 

315999_250717948406319_1244110732_n.jpg

 

 

485556_250717965072984_620767094_n.jpg

 

923335_250717998406314_391171975_n.jpg

 

922829_250718041739643_1944762131_n.jpg

 

946282_250718095072971_300062655_n.jpg

 

944520_250718108406303_1010496450_n.jpg

 

941590_250718158406298_332601793_n.jpg

 

417940_250718195072961_1824977698_n.jpg

 

(facebook)

Posted

பிரான்சில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் மூன்றாம் நாளின் போது.

 

ஈகைச்சுடரினை மாவீரன் மணிமாறனின் பெற்றோர் ஏற்றி வைத்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வழமைபோல பல வெளிநாட்டு மக்கள் பார்வையிட்டுச்சென்றனர்.

 

11814_251197281691719_61540173_n.jpg

 

945372_251197391691708_1382645474_n.jpg

 

942694_251197441691703_858732311_n.jpg

 

944484_251197481691699_49685376_n.jpg

 

945807_251197335025047_45527691_n.jpg

 

941989_251197315025049_1405195564_n.jpg

 

601667_251197531691694_1007939785_n.jpg

 

945163_251197551691692_1121091840_n.jpg

 

(முகநூல்)

 

4 ஆம் நாள் ஏற்கனவே இணைத்து விட்டேன். :)

Posted

431865_517366701632449_511899104_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.