Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

தமிழினப் படுகொலையை மறவோம்! தமிழீழம் வெல்லும் வரை ஒயோம்!

மே பதினேழு இயக்கம் ஞாயிறு, 05 மே 2013

 

 

 

may17_marina_606.jpg

 

2009 முள்ளிவாய்க்கால் போரில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையை தமிழருக்கு எதிராக சர்வதேசத்தின் துணையோடு இலங்கை இனவெறி அரசு நடத்தி ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் தமிழர்களை கொன்று குவித்தது.

இனப்படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் ஆனபின்னும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 'விடுதலை' என்கிற ஒற்றைச் சொல்லிற்காக ஒரு தலைமுறையே அழிந்தாலும் எதிரிகளை விடப்போவதில்லை, பிறந்த மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தமீழீழத் தமிழர்கள் போர் புரிந்து மடிந்தார்கள்.

இதோ இந்த தமிழர் கடலின் கரையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இலங்கைத்தீவில் இலங்கையில் நாம் மற்றும் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க, பதைக்க பதைக்க, வதைத்து வதைத்து, வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் நம் உறவுகள். தமிழீழம் என்கிற தனது நாட்டினை இலங்கையின் பிடியிலிருந்து விடுவிக்காமல் ஓயமாட்டோம் என்று போராடி மடிந்த தமிழர்களுக்காக 2009இல் நாம் போராடாமல் மெளனம் காத்த கொடுமை உலகில் வேறு எந்த இனத்திற்கும் நடந்து இருக்காது.

நம் வரிப்பணத்தினை வைத்து இந்தியாவும், இனவெறி கொண்ட இலங்கையும் கைகோர்த்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் துணையோடு தனித்து விடப்பட்ட தமிழர்களை வேட்டையாடினார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாமும் அவர்களை கைவிட்ட பாவம் வரலாறு முழுவதும் நம்மை துரத்தும்.

இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற சூழ்நிலையில் தமிழர்களின் அரசியல் கோரிக்கைக்கு வலுசேர்க்கவும், இந்த இனப்படுகொலை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வருடம்தோறும் சென்னை மெரினா தமிழர் கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் விதமாக பொதுமக்கள் பங்கேற்க்கும் நினைவேந்தலை தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது மே17 இயக்கம்.

2011 சூன் 26ஆம் நாள் ஐ.நாவின் சித்தரவதைக்கு எதிரான தினத்தில் ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளின் கவனத்திற்கு தமிழீழ இனப் படுகொலையையும், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய மீனவர்களின் நிலையையும் கொண்டு செல்வதற்காகவும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதில் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உணர்வாளர்கள், தலைவர்கள், வேற்று மொழி மக்கள் கலந்து கொண்டு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலையே என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்தார்கள்.

அதுபோல சென்ற ஆண்டு 2012 இனப்படுகொலை வாரமான மே 20ஆம் நாள் நினைவேந்தலை கீழ்க்கண்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள், தலைவர்கள் (குறிப்பாக இதில் வடநாட்டு தலைவர் திரு.ராம்விலாஸ் பசுவான் கலந்து கொண்டு தனி ஈழமே ஒரே தீர்வு என்று நமது கோரிக்கைக்கு மேலும் வலுசேர்த்தார். அதன் பின் அவர் ஈழம் சம்பந்தமாக யார் அழைத்தாலும் இந்த கோரிக்கையில் உறுதியாக இன்று வரை இருக்கிறார்.) பங்கேற்ப்போடு நடத்தினோம்.

1. தமீழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே.

2. தமீழீழ விடுதலைக்காக ஐ.நா அவையின் மேற்ப்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பானது தமீழீழத்தில் வாழும் தமிழர்களிடத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும்.

3. இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை சர்வதேச சமூகம் முன் தண்டிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் அதில் ஆசிய நாடுகள் எதுவும் இருக்க கூடாது.

இதுபோல இந்த 2013ஆம் ஆண்டும் இனப்படுகொலை வாரமான மே 19ஆம் தேதி தமிழனப் படுகொலைக்கான நான்காம் ஆண்டு நினைவேந்தலை அதே தமிழர் கடற்கரையில் நீதீ கேட்ட கண்ணகி சிலையின் பின்புறம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பொழுது நமது கோரிக்கைகள் ஆனது அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்து அது மாணவர் போராட்டமாக மாறி அரசுக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்து சட்டமன்றத்தில் ஈழம் சம்பந்தமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக நிறைவேறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இனப்படுகொலை என சொல்ல மறுக்கிறது. இனப்படுகொலை என்று சொன்னால்தானே தனி நாட்டிற்கான நீதி கிடைக்கும் என்பதால் இதை மறுக்கிறார்கள்.
 
ஏப்24 1915ல் நடந்த இனப்படுகொலைக்காக 98 ஆண்டுகள் கடந்த பின்னும் ஆர்மீனிய மக்கள் தங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்காக இன்றும் ஒன்று கூடுகிறார்கள், யூதர்கள் 60 ஆண்டு கழித்தும் இன்றும் தங்களது வேலைகளை நிறுத்தி யூத இனப்படுகொலைக்காக அஞ்சலி செலுத்துகிறார்கள்.
 
உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வருடம் தோறும் இதே தமிழர்கடல் கரையோரம் மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நம் குடும்பம்-குழந்தைகளுடன் நினைவேந்தி 'தமிழினப்ப டுகொலையை மறக்கமாட்டோம், தமிழீழ விடுதலையை அடையாமல் ஓய மாட்டோம்' என உறுதி மொழியேற்போம்.
 
இந்த கருத்துப் பதிவுகளை மக்கட் சமூகங்களிடயே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும், அறிவுச்சீவிகள்-கலைஞர்கள் இந்த கோரிக்கைகளை மேலும் கூர்மைப்படுத்தவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரினாவில் மே 19 ஆம் தேதி நடைபெறுதல் அவசியமாகிறது. இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கம் மட்டுமே நடத்துகிற நிகழ்வாக அமையாமல் அனைத்து தோழமை இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய முழக்கங்களை முன்வைத்து இந்த நினைவேந்தலில் பங்களிக்க வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வை தங்களுடைய சொந்த நிகழ்வாக மாற்றி, அதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளுதலை வரவேற்கிறோம். மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைவுப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக செயல்படும். மேலும் விருப்பமுள்ள அமைப்புகள் எங்களது ஒழுங்கமைப்பு பணிகளில் பங்கெடுத்து, பணியை மேலும் செழுமை பெறச் செய்ய உதவுமாறும் வேண்டுகிறோம்.

2009 இல் தமிழீழ மக்களின் ரத்தம் கலந்த அதே தமிழர் கடற்கரையில் மே 19, 2013 ஆம் நாள் மாலையில் கண்ணகி சிலையின் பின்புறம் ஒன்று கூடி நமது வணக்கங்களை தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் செலுத்துவோம். நாம் இணைவோம்.
             
- மே பதினேழு இயக்கம்

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23784:2013-05-05-04-44-34&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268

 

 

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மார்க்ஸ், லெனின் சொன்னது என்ன?- திருமாவேலன்  -  5 May 2013

இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு, நான் மட்டுமே அரசு` என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி. - மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 3


பிரிந்து போகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, மார்க்சீய மூலவர்களான மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் முன்மொழிந்தது. அவர்கள் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு உல்டாவாகச் செயல்படுகிறது.
என தோழர் உ.வாசுகி சொல்கிறார்.

குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் அதாவது, ஏகாதிபத்திய இங்கிலாந்தின் நுகத்தடியில் இருந்து அயர்லாந்து பிரிந்து போவது குறித்து மார்க்ஸ் சொன்னதையும், சோஷலிஸ தேசக் கட்டமைப்பில் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்பத்தில் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் சொன்னதையும் அப்படியே நகல் எடுத்து, எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது.

மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல. குறிப்பான நிலைமைகளில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கப்படும் அறிவியல் பார்வை என்கிறார். மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல. அப்படி ஆகிவிடவும் கூடாது.

ஆனால், 'மார்க்ஸ் சொன்னதையும், லெனின் வழிகாட்டியதையும் எல்லாக் காலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைக்கும் பொருத்த முடியாது - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே சொல்ல ஆரம்பித்திருப்பது காலக் கொடுமை. எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சூழலுக்கும் பொருந்தாத ஒரு தத்துவத்தை வைத்துக்கொண்டு ஏன் கட்சி நடத்த வேண்டும்?

ஏகாதிபத்திய இங்கிலாந்துக்கு மார்க்ஸ் சொன்னது இலங்கை அரசுக்குப் பொருந்தாது என்றால், இலங்கை அரசு என்ன சோஷலிஸ அரசா? அதனிடம் ஏகாதிபத்தியக் குணாம்சங்கள் இல்லையா?

மக்களால் தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறையை வைத்துக்கொண்டு இலங்கையில் இப்போது நடப்பது மன்னராட்சி. 'நான் அரசு, நான் மட்டுமே அரசு� என்று சொல்லும் சர்வாதிகார ஆட்சி.

தனக்கு விரோதமாகத் தீர்ப்பளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதி மீதே அவதூறுகள் கிளப்பி வீட்டுக்கு அனுப்ப அதிகாரம் படைத்த ஆட்சி.

தேர்தல் கமிஷன்கூட சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்படும் ஆட்சி.

சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று சொல்லும் ஆட்சி.

பௌத்தம் தவிர மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழவேண்டியது இல்லை என்று சொல்லும் ஆட்சி.

இந்துக் கோயில் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் ஆட்சி.

ஹலால் முத்திரையிடப்பட்ட கறியை வாங்கத் தடைசெய்யும் ஆட்சி.

ராஜபக்சவின் குடும்பத்தினர் மட்டுமே அனைத்து அதிகார மையங்களிலும் இருக்கலாம் என்று அறிவித்த ஆட்சி.

இராணுவத் தளபதியையே கைதுசெய்து சிறைவைத்த ஆட்சி.

இது சிங்கள, பௌத்த, பேரினவாத ஏகாதிபத்தியம் அல்லவா? ஏகாதிபத்தியம் என்றால், பெரிதாக அமெரிக்கா போலத்தான் இருக்க வேண்டுமா? ஈராக், பாகிஸ்தான், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் என்று பல நாடுகளில் அத்துமீறி நுழைந்து குண்டு வீசுபவர்களைத்தான் ஏகாதிபத்தியம் என்பார்களா? மாற்று இனத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக சொந்த தேசத்து மக்கள் மீதே குண்டுபோட்ட அரச பயங்கரவாதிகள், இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தைவிட எந்த விதத்தில் குறைச்சல்?

இங்கிலாந்து ஏகாதிபத்தியம் ஜாலியன் வாலாபாக்கில் நடத்திய பச்சைப்படுகொலைகளைப் போல ஈழத்தில் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம்.

ஜெனரல் டயர் போல கொழும்புவில் 100 பேரை அடையாளம் காட்ட முடியும். என்ன நிலைமை மாறிவிட்டது?

ஏகாதிபத்திய இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிய வேண்டுமா கூடாதா என்று முடிவு எடுப்பதற்கு முன்னால், மார்க்ஸுக்கே குழப்பம் இருந்தது.

இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்துபோவது நடக்க முடியாதது என நான் கருதியது உண்டு. ஆனால், அயர்லாந்தின் பிரிவினைக்குப் பின்னர் ஒரு கூட்டரசு தோன்ற நேர்ந்தாலும், இத்தகைய பிரிவினை தவிர்க்க முடியாதது என இன்று நான் கருதுகிறேன் என்று எங்கெல்ஸுக்கு மார்க்ஸ் (1867- நவம்பர் 2) கடிதம் எழுதினார்.

உலகப் பாட்டாளி வர்க்க ஐக்கியத்தை வலியுறுத்துவதையே தனது வாழ்க்கை லட்சியமாகக்கொண்ட மார்க்ஸ், இன்னோர் அதிர்ச்சிக்குரிய ஆலோசனையையும் சொன்னார்.

இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்து பிரிந்தால், இங்கிலாந்து பாட்டாளிகள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டபோது, 'அயர்லாந்துடன் இங்கிலாந்துகொண்டிருக்கிற ஒன்றியத்தைக் கலைத்துவிட வேண்டியதுதான்� என்று தீர்ப்பளித்தார். ஒடுக்கும் இனம், ஒடுக்கப்படும் இனம் என்று பிரித்துப் பார்த்தார்.

ஒடுக்கும் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள், அயர்லாந்து நாட்டை தேசிய ஒடுக்குதலில் இருந்து மீட்டெடுப்பார்கள் என்று மார்க்ஸ் முதலில் நம்பியது உண்டு, சிங்களப் பாட்டாளிகள், தமிழ்ப் பாட்டாளிகளுக்காகப் பேசுவார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று நம்புவதைப் போல. ஆனால் அது சாத்தியமில்லை என்று மார்க்ஸின் சிந்தனை அப்போதே முடிவுக்கு வந்தது. இதை 150 ஆண்டுகள் கழிந்த பிறகு, ஏகாதிபத்தியங்களின் நகமும் முகமும் கூர்மை அடைந்த பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உணர மறுக்கிறது.

அயர்லாந்து விவகாரத்தில் மார்க்ஸ் எடுத்த நிலைப்பாட்டையே சோவியத் நாட்டில் லெனின் அமல்படுத்தினார். இதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொருந்தாது என்கிறது. 'சோஷலிஸத் தேசக் கட்டமைப்பில் அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று சேர்க்கும் சந்தர்ப்பத்தில் லெனின் சொன்னதை நகலெடுக்கக் கூடாது� '' என்கிறார் வாசுகி.

பிரிந்துபோகும் தன்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது சோஷலிஸ அரசுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று லெனின் சொல்லவில்லை. 'சோஷலிஸத்தை அடைகிற வரையில் அந்தத் தேசிய இனச்சிக்கலை ஒதுக்கிவைக்காமல்...� என்று அறிவுறுத்தியவர் லெனின்.

சோஷலிஸக் கூட்டமைப்பிலேயே தேசிய இனங்களுக்குப் பிரிந்துபோகும் உரிமை தரப்பட வேண்டுமானால், பேரினவாதக் கட்டமைப்பில் அதனுடைய அவசியம் இன்னும் முக்கியம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி உணரத் தவறுவது ஏன்?

தேசிய இனச் சிக்கல் 19-ம் நூற்றாண்டில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எழுந்தது. அது கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியது. 1886-ம் ஆண்டு இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது பேராயம் லண்டனில் நடந்தபோது, தேசிய இனங்களின் தனிநாட்டு உரிமை தொடர்பான தீர்மானம் வந்தது. ''தேசிய இனங்கள் எல்லாவற்றுக்கும் தனி நாட்டுரிமை உண்டு.

மேலும், எல்லா நாட்டு தொழிலாளர்களும் சேர்ந்து உலகளவில் வர்க்கப் போராட்டம் நடத்த வேண்டும்'' என்று தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களிலும் தேசிய இனப் பிரச்சினை விவாதம் ஆனது. வர்க்க முரண்பாடுகளை வென்றெடுக்க நினைக்கும் மார்க்சிய சிந்தனையாளர்கள் மத்தியில் இனப் பிரச்னை விவாதப் பொருளானது. அப்போது துணிச்சலாக தேசிய இனப் பிரச்சினையையும், பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுயநிர்ணய உரிமையையும் பேசியவர் லெனின்.

ஒன்றுபட்ட சோவியத் புரட்சியை முன்னெடுத்துக்கொண்டு இருந்த லெனின், அங்கு பெரும்பான்மை இனமான மாருசிய தேசிய இனத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையேபடாமல் தன் கருத்தைச் சொன்னார்.

நம்முடைய சொந்த மாருசிய தேசிய இனத்தைச் சேர்ந்த சொந்த நாட்டவர்கள் கொண்டிருக்கிற தேசிய காழ்ப்புகளை எங்கே புண்படுத்திவிடுவோமோ என்னும் அச்சத்தைக் கருதி இந்த (தனிநாட்டு) உரிமையை முன்வைக்க நாம் மறக்கவோ தயங்கவோ செய்வோமாயின், 'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்� என்னும் அறைகூவல் அப்போது உதட்டளவிலான வெட்கங்கெட்ட பொய்யாக மட்டுமே இருக்கும்'' என்று எச்சரித்திருக்கிறார் லெனின்.

தேசிய இன உணர்ச்சி என்பது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் முயற்சி, சோஷலிஸத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சி என்று லெனின் முன்பு நினைத்தது உண்டு. ஆனால் அவரே, ''ஒரு தனித் தேசிய அரசை அமைத்துக்கொள்கிற உரிமையாகிய பிரிந்துபோகிற உரிமையைவிட மிகப் பெரிய உரிமை ஏதேனும் ஒரு தேசிய இனத்துக்கு உண்டா?'' என்று கேட்கும் அளவுக்குப் போனார்.

ஸ்வீடனில் இருந்து நார்வே தனி நாடு ஆவதை (1905-ல்) ஆதரித்தார். பிரியலாமா வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மைத் தீர்ப்புப்படி நார்வே பிரிந்தது. 'நாடுகள் பிரிந்துபோவதை, நார்வேக்கும் ஸ்வீடனுக்கும் இடையில் தீர்த்துவைக்கப்பட்ட ஒரே வழியில் மட்டும் தீர்த்து வைக்க வேண்டும்� என்றும் லெனின் எழுதினார்.

ஸ்வீடனுக்குள் இருந்தாலும், தனக்கெனத் தனியாக நாடாளுமன்றம் வைத்துக்கொள்ளும் உரிமை நார்வேக்கு இருந்தது. 'ஸ்வீடன் மன்னர் எங்கள் மன்னர் ஆக மாட்டார்� என்று தீர்மானம் போடும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக நார்வே நாட்டவர்கள் இருந்தனர்.

ஆனால், ஈழத்தில் பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதியை ஒன்றிணைத்து ஒரு மாகாணம் ஆக்குவதற்கோ, அந்தப் பகுதியில் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கோ, சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை. யாரெல்லாம் நிலம் வைத்திருந்தார்களோ, அவர்களிடம் இருந்து அவையெல்லாம் பறிக்கப்பட்டு, தமிழர் நிலங்கள் அனைத்தும் சிங்களவருக்கு, இராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

சிறுபான்மை இனத்தை வஞ்சத்தோடு வறுத்தெடுக்கிறது. வாழவிடாமல் தடுக்கிறது.

அயர்லாந்து மக்களுக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. அழிவதா அல்லது தனி நாடா?'' என்று கேட்டு உண்மையை உடைத்துச் சொன்னார் மார்க்ஸ்.

தமிழர்களுக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று சரணடைவது அல்லது கடலுக்குள் விழுந்து சாவது என்று அறிவித்தார் சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

மார்க்ஸ் படம் பிடித்த அதே குணாம்சம்தான் 150 ஆண்டுகள் கழித்து பொன்சேகாவிடம் வெளிப்பட்டது. ஏகாதிபத்தியங்கள் மாறவில்லை. மார்க்சிஸ்ட்டுகள் மாறிப் போனார்கள்.

அத்தகைய சூழல் உருவாகிவிடக் கூடாது!

 

Link to comment
Share on other sites

தனது கடல் எல்லையில் கொல்லப்பட்ட மீனவனுக்கு நீதி கேட்டு இத்தாலி மாலுமிகளை சிறைபிடித்தான். நச்சு அணு உலைகள் தனது மண்ணுக்கு வராமல் தடுத்தான். நிலத்தடி நீரை உறிஞ்சும் கொக்கோ கோலா நிறுவனத்தை மூடும்படி செய்தான். ரசாயனம் நிரம்பிய ஜான்சன் குழந்தைகள் பயன்பாட்டு பொருட்களுக்கு தடை பெற்றுத்தந்தான். அண்மையில் கே.எப்.சி நிறுவனத்தின் கோழியில் புழு இருப்பதை கண்டறிந்து அந்த கடையையே மூடிவிட்டான்.

இப்படி தனது மண்ணுக்கும் மக்களுக்கும் வரும் ஆபத்தை உடனுக்குடன் தடுத்து விடுகிறான் கேரளாக்காரன். நிச்சயம் இதை நாம் பாராட்டத் தான் வேண்டும். அவனிடம் கற்றுக் கொள்ளவேண்டியது இந்த ஒற்றுமையும் போராடும் குணமும் தான்.

நாம் சாதியாக மதமாக இன்னமும் பிரிந்திருப்பதால் நம்மை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் நம் எதிரிகள். நாம் எதையும் முறியடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களே, இனியாவது நாம் ஒன்றுபடுவோம், போராடுவோம், வென்றெடுப்போம் நம் உரிமைகளை.

 

[ முகநூலிலிருந்து ]

 

Link to comment
Share on other sites

 
 
4 மாதங்கள் கழித்து சொந்த ஊர் சென்று
மூன்று நாட்களில்
இப்போது மீண்டும் சென்னை வந்துள்ளேன் ...
பார்த்து பேச விரும்பிய,ஏங்கிய
சிலரை பார்க்கக் கூட முடியல ...!!!!
ஆனால்
"போராடியது போதும் ; போய் படிக்கிற
வேலைய பாரு !என்று சொன்ன என்
அம்மாவும் அப்பாவும் ....

'நண்பர்களோடு இணைந்து எதற்காக தொடங்கினாயோ
அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல் !''
என்றார்கள் சிறு கண்ணீர் துளியோடு துணிவாக ...


வாருங்கள் நண்பர்களே மே மாதம் 18ல்
மீண்டும் திரளுவோம் எழுச்சியோடு பேரணியாக
...
.

 

[ முகநூலிலிருந்து ]

Link to comment
Share on other sites

931169_572957979410482_2003331339_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டும், இலங்கை புறக்கணிப்பு கோரியும் தமிழகம் தழுவிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்.. ஜூன் 21 முதல் 29 வரை .

பங்குபெற உங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்ணுடன் eduservice123@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்..

 

942455_467685856640650_1714409489_n.jpg

(முகநூல்)

Link to comment
Share on other sites

943666_467715029971066_882452946_n.jpg

 

(முகநூல்)

 

 

Link to comment
Share on other sites

தமிழ் இன அழிப்பு நாள் - சிட்னி

தமிழரின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப் பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் நினைவு நாள் மே 18 2013 அன்று சிட்னியில் நினைவுகூர திரண்டு வாரீர்

இடம் : Bowman Hall BLACKTOWN
காலம் : மே 18 2013 (சனிக்கிழமை)
நேரம் : 6.00 pm

 

 

253273_459471304121901_658095839_n.jpg

 

(முகநூல்)

 

Link to comment
Share on other sites

நோர்வேயில் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தினம். (இதில் மே 17 இயக்க திருமுருகன் காந்தி அவர்களும் கலந்து கொண்டார்.)

 

பலூன்களிலும் தமிழீழமும், புலி உருவமும் தென்படுகிறது. :)

 

397879_509346375797297_96531812_n.jpg

 

936772_509347372463864_538156159_n.jpg

 

945402_509347092463892_660942090_n.jpg

 

923304_509347442463857_828057645_n.jpg

 

62608_509347452463856_660250937_n.jpg

 

303433_509347565797178_1890613714_n.jpg

 

225725_509347625797172_891248433_n.jpg

 

942436_509347822463819_1802194265_n.jpg

 

945445_509348405797094_1629288176_n.jpg

 

931306_509349662463635_466548132_n.jpg

 

943716_509346342463967_734925836_n.jpg

 

941542_509349865796948_1495195998_n.jpg

255675_509350839130184_1044280118_n.jpg

 

65659_509350132463588_212767795_n.jpg

 

428385_509351545796780_1302892203_n.jpg

 

524717_509351812463420_384672438_n.jpg

 

(முகநூல்)

 

Link to comment
Share on other sites

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக வரும் 12/05/2013 முதல் 17/05/2013 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர்" தஞ்சை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் " சென்றடையும் நினைவேந்தல் நிகழ்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

அவை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜூன் இரண்டாவது வாரம் வரை தேர்வு இருப்பதால் , மேற்கண்ட "சுடர் பயணம்" தள்ளிவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். சுடர் பயணத்திற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதை கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு ,
சீ.தினேஷ் ( 9791162911 )
ஒருங்கிணைப்பாளர் ,
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

 

(facebook: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

தமிழின படுகொலை நாளான மே 18 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக பேரணி நடத்துவதற்கு சென்னையில் களப்பணியில் இருக்கும் மாணவர்கள்.

சென்னையில் உள்ள மாணவர்கள் கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கத்திற்கு வந்து கலந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

ஜோ பிரிட்டோ - 8678962611

மே 18 தமிழின படுகொலை நாளன்று பேரணியில் சந்திப்போம் சக மாணவர்களே..

 

302931_615589621786400_78554651_n.jpg

 

(facebook: loyolahungerstrike)

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பட்டினிப் போராட்டத்தை தொடங்கிய எண்வரில் மூவர் சென்னையில் உள்ள மாணவர்களோடு இணைந்து அடுத்த கட்ட தளத்திற்கு தயாராகி வருகின்றனர்.

 

மீதி உள்ள ஐவராகிய திலீபன், லியோ ஸ்டாலின், பால் கென்னத், செம்பியன், ஜோ பிரிட்டோ போன்றோர் மற்ற மாவட்ட மாணவர்களோடு இணைந்து தமிழகம் முழுக்க உள்ள மாணவர்களை சந்தித்து, அவர்களோடு கலந்தாலோசித்து மாணவர் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

 

விருப்பமுள்ளவர்கள் இணையவும்.. 8678962611.

இணைவோம் .களமாடுவோம் .வெல்வோம் !!!

 

405872_615716925107003_1145679601_n.jpg

 

(facebook: loyolahungerstrike)

 

Link to comment
Share on other sites

நியூசிலாந்தில் தமிழின அழிப்பு நினைவு நாள்.

 

காலம்: 19.05.2013

நேரம்: 6 pm
இடம்: Mt eden war memorial hall - 487 Dominion Rd, Mt Roskill

 

270758_451385774950282_541448591_n.jpg

 

(முகநூல்)

 

 

Link to comment
Share on other sites

வகுப்பறைக்கு ஒருவர் எழுந்து நிற்போம். களமாடி வென்றெடுப்போம்.

 

தொப்புள் கொடி ஈழ உறவுகள் ஒடுக்கப்பட்டும், சிதறியடிக்கப்பட்டும், இனப்படுகொலை செய்யப்பட்டும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாய்த்தமிழகத்திலிருந்து மாணவர்களாகிய நாம் நம் ஆதரவு குரலை உயர்தியிருக்கிறோம்.

தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்புக்கு தமிழர்களின் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. முன்பு ஈழத்தில் ஆயுதப் போராட்டமாகவும், ஐரோப்பாவில் பேரணி, அரசியல் லாபியிங் மூலமாகவும் நடக்கிறது.

 

தமிழகத்தில், ஈழ வரலாற்றை மக்களிடையே கொண்டுசேர்த்து அதன் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தமிழீழ கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதே சிறந்ததாக இருக்கும்.

சென்ற மாதம் வரை நம்முடன் இணைந்து நின்று போராடிய இறுதியாண்டு மூத்த மாணவர்கள் இறுதித் தேர்வு முடித்துவிட்டு இந்நேரத்தில் முன்னாள் மாணவர்களாக மாறிவிட்டனர். போராட்ட நிலையோ அப்படியே உள்ளது.

அடுத்தாண்டு நாமும் மாணவ பருவத்திலிருந்து வெளியேறி இருப்போம். ஆனால் அதற்கு முன் மாணவர்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிவிட்டு சென்றால்தான் சில சுயநல கட்சிகளிடமிருந்தும், சில சுயநல இயக்கங்களிடமிருந்தும் மாணவ போராட்டத்தை காத்துக்கொள்ள முடியும்.

வகுப்பறைக்கு ஒருவர் எழுந்து நிற்போம்,
இறுதி ஆண்டிலிருந்தும் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிலிருந்தும் கல்லூரிக்கு இருவர் மாணவர்களின் கருத்துக்களை சுமந்து வருவோம்,

மாவட்ட அளவில் குழு அமைத்து மண்டலத்துக்கு ஒருவரை கொண்டு மாநில மாணவர் குழுவை அமைப்போம்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும், நீலகிரி முதல் நாகை வரை உள்ள மாணவர்களின் குரலை ஒன்றிணைப்போம், "முடிவுகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பாமல் கூட்டுத் தலைமையாக இருக்கும் "

தமிழகத்தில் உள்ள மாணவர்களாகிய நாம் இணைந்து நின்று நம் கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அடுத்த ஐநா கூட்டத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்வோம்.

அடுத்த கல்வியாண்டு கல்லூரி திறந்தவுடன் கட்டமைப்பை உறுதிப்படுத்துவோம்.

உலக வல்லரசுகள் இணைந்து நடத்திய தமிழின படுகொலை தினமான மே 18ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியாக சென்று
ஈழத்தமிழரிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்துவோம்.

 

களமாடி வென்றெடுப்போம்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக
பார்வை தாசன் - (லயோலா கல்லூரி-இறுதி ஆண்டு) -9962891945
 

394351_616499865028709_28633876_n.jpg

 

(facebook: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

கனடாவில் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2013

 

946254_275383319265077_586351454_n.jpg

(facebook)

Link to comment
Share on other sites

Powered by youth, fueled by passion, a campaign solely driven by the resistance of injustice will commence on the 16th of May in memory of the 2009 Tamil Genocide. Canadian-Tamil youth will unite to inform the general public about the horrid events during the height of the civil was in Sri-Lanka. Tamil Youth Organization - Canada (TYO-Canada) marks May 2013 as Tamil Genocide Remembrance Month

Tamil youths across Canada have decided to put forth a G for Genocide campaign on Thursday, May 16, 2013 from 4:00 PM - 8:00 PM at Young and Dundas.

390584_643285379021640_594707438_n.png

 

(facebook)

Link to comment
Share on other sites

தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்தும் தமிழின அழிப்பு நினைவு நாள் சென்னை மெரீனாவில்.

 

 

946560_644342328913954_464635904_n.jpg

 

(முகநூல்)

Link to comment
Share on other sites

சுவிஸில் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2013

 

944391_373211566131440_1805549159_n.jpg

 

 

(facebook)



நோர்வேயில் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2013

 

400603_374992449286685_525653854_n.jpg

 

 

(facebook)

Link to comment
Share on other sites

இத்தாலியில் தமிழின அழிப்பு நினைவு நாள்.

 

400744_290480471087485_2021165038_n.jpg

 

 

(facebook)

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல. இன்னொரு போராட்டத்திற்கான ஆரம்பம். நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல.
நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்


நீதி கேட்டு நெருப்பில் நீறாகும் இனம் நாம்.
வெள்ளிக்கிழமை என்றால்,
ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண்,
கொள்ளிவைக்கவும் யாரும் இன்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுள்ள உடலங்களை தன்னில் சுமக்கிறதே.

எம் சகோதரிகளின் மார்பரிந்து,
எம் மழலைகள் மீது பொஸ்பரஸ் குண்டுபொழிந்து,
எம் முதியவர் உயிரை பட்டினியால் பறித்து,
முட்கம்பிவேலிகளுக்குள் எம் உறவுகளை அடைத்து,
வெள்ளைக் கொடியை குருதியில் நனைத்து,
ஆயிரம் ஆயிரம் எம் உறவுகளை கொன்று குவித்து,
முடிந்தது போரென்று உலகுக்கு சிங்களப் பேரினவாதம்
முழக்கமிட்ட நாள் மே 18, 2009.

ஆயினும், மே மாதம்,
சோகங்களை மட்டும் சுமப்பதற்கல்ல.
விடுதலையை விரைவுபடுத்துவதற்கு,
வீரத்திற்கு மூச்சுகொடுப்பதற்கு,
தேசத்தை மீட்பதற்கு,
தியாகங்களை நினைவு கூருவதற்கு.
காலத்திற்கு கைகொடுத்து,
ஞாலத்திற்கு நாம் யார் எனக்காட்டுவதற்கு,
உலகம் எமக்கு தந்த உத்தரவாதமற்ற சந்தர்ப்பம்.

எங்களுக்காய் ஒரு 'இராமர்' வரட்டும்,
எங்களுக்காய் ஒரு 'இயேசுபிரான்' உயிர்கட்டும்,
என்ற எண்ணத்தை விட,
எங்களுக்காய் நாம் போராட வேண்டும் என்ற உணர்வே மேலானாது.
அதுவே, காலத்தின் கட்டாயமும், உலகத்தின் நியதியுமாகும்.
இன்றே சிந்தி, சபதம் எடு, செயல்பாடு.

மறந்து விடாதே!
நாம் வாழமட்டுமல்ல, எங்கள் மண்ணை ஆளவும் பிறந்தவர்கள்.
அவலத்தின் நாளையே எண்ணி அழுதபடி வாழாதே.
நாம் எழப்போகும் எதிர்காலத்திற்காய்,
நாம் நிமிர்ந்து நின்ற கடந்த காலத்தையும்
நகர்ந்துகொண்டிருக்கும் நிகழ்காலத்தையும் கணி.

நாம் முட்கம்பிக்குள் சிக்குண்ட பூவல்ல.
எமது மலர்வென்பதே முட்கம்பியில்தான் தோற்றம் பெற்றது.
நாம் இன்று தனிமரமாக நிற்கக்கூடும் - ஆனால்
நாம் நாளை ஒரு துளிர்விடும் மரமாக மாறுவோம்
என்பதை மறந்து விடாதே.

அலைகள் முன்னோக்கியே பாயும்.
நெருப்பு எப்போதும் நேராகவே எரியும்.
ஓளி எப்போதும் நேர்கோட்டிலேயே செல்லும்.
அதே போல்,
சுதந்திர தாகமுள்ள இனம் தன் இறுதி மூச்சுவரை போராடும்.

சிதறிய பிணங்களும்,
சிந்திய குருதியும்,
எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம்
மீள் எழுச்சிக்குமானதுதான்.

காலமும் உலகமும்,
கைகோர்த்தெழுதிய தீர்ப்பென்று,
நலிந்த சிந்தையோடு இருந்துவிடாதே.
சூரியன் எழும் திசைதான் கிழக்கு.
போராடும் இனத்திற்குத்தான் விடிவு.

முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல.
இன்னொரு போராட்டத்திற்கான ஆரம்பம்.
நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல.
நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.
தமிழா!!!
துணிந்திடு, எழுந்திடு, தேசம் விடிந்திடும் வரையினில்
போராட்டத்தைத் தொடந்திடு.

ச.பா.நிர்மானுசன்

 

(facebook: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

மே 18 தமிழினப் படுகொலை நாள் பேரணி

அன்புள்ள சக மாணவ நண்பர்களுக்கு ,

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும், சொந்த மண்ணை விட்டு பல இலட்சம் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஓடிய பின்னரும் ஈழத்தில் மீதமிருப்போர் மேலும் மேலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியில்லாமல் உலகத் தமிழரெல்லாம் மனம் வெதும்பிய நிலையில் தமிழக மாணவர்களாகிய நம் போராட்டம் எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.

தமிழக, இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்கள் நிறைவேறின. தமிழகத்தில் ஒரு நம்பத்தகுந்த அரசியல் எழுச்சியை ஏற்படுத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக, ஈழப்போரில் இறுதி நாட்களில் ஆயிரமாயிரம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டு ஓர் இனப்படுகொலை நடத்திமுடித்ததாக இந்த உலக நாடுகள் அறிவித்த நாள் மே மாதம் 18, 2009. தமிழினப் இனப்படுகொலையைக் கண்டித்தும், ஐ.நா. மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் மாணவர்கள் நாம் ஒன்று திரண்டு உணர்வாளர்களை ஒன்றிணைத்து அமைதி வழியில் பேரணியாக சென்று வலியுறுத்துவோம்.

ஈழத்தில் இனி ஒன்றும் செய்யமுடியாது வேண்டுமானால் தன்னுரிமை பெற்றுத்தரலாம் என்று நம்பிக்கையிழந்தோரை புறக்கணித்து தமிழீழ விடுதலையை நோக்கி உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் வலிமை சுயநலமில்லா மாணவ சமுதாயத்திற்கு உண்டு என்பதை நிருபிப்போம்.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு நட்பாக இருந்துகொண்டு ஈழத்தமிழர்களை இந்திய அரசு கைவிட்ட நிலையில், பல உலக நாடுகள் இலங்கை அரசுக்கு துணைபோகிற நிலையில், உலக மாணவ சமுதாயத்தையும் உலகெங்கும் உள்ள உண்மையான மனித உரிமைப் போராளிகளையும் உடன்சேர்த்துக்கொண்டு ஐநாவை வலியுறுத்துவதே ஒரே வழியாகும். அதற்கு உலகமாணவ சமுதாயத்தை ஒன்றுபடுத்துவோம். அரசியல் புத்தெழுச்சியை ஏற்படுத்துவோம்.

ஈழம் மலரட்டும்;! மானுடம் வெல்லட்டும்!!

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
தொடர்பு எண் : 8678962611, 8122863671, 7502272075

 

தமிழினப் படுகொலை நாள் பேரணி

மாவட்டம்------ தொடங்கும் இடம் -------- முடியும் இடம்
அரியலூர்
இராமநாதபுரம் அரண்மனை வாசல் -------- புதிய பேருந்து நிலையம்
ஈரோடு பெரியார் சிலை --------- கருங்கல் பாளையம்
கடலூர் (விருத்தாச்சலம்) மங்களம் பேட்டை----------வானொலி திடல்
கரூர் அஜந்தா திரையரங்கம் ---------- காமராஜர் சிலை
கன்னியாகுமாரி ((நாகர்கோயில்) சுசீந்தரம் கோயில்------சுசீந்தரம் பாலம்
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் ----------ஆட்சியர் அலுவலகம்
^ செங்கல்பட்டு அரசு மருத்துவமனை --------- பழைய பேருந்து நிலையம்
கிருஷ்ணகிரி?? பேருந்து நிலையம் ----------- புதுப்பேட்டை ரவுண்டானா
கோவை
சிவகங்கை புதுப் பேருந்து நிலையம்------------- ஐந்து விளக்கு
சென்னை காந்தி சிலை -------------- மன்றோ சிலை
சேலம்- செவ்வாபேட்டை தீ அணைப்பு நிலையம்--சுபாஸ் சந்திர போஸ் மைதானம்
தஞ்சாவூர் இரயில் நிலையம் ------------------- திலகர் திடல்
தர்மபுரி
திண்டுக்கல் குமரன் பூங்கர் ------------------- மணிகூண்டு
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ------ அண்ணா சிலை
திருநெல்வேலி சமாதானபுரம் ---------------- ஜவஹர் திடல்
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ------ இரயில் நிலையம்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர் இரயில் நிலையம் ------------ நகராட்சி அலுவலகம்
தூத்துக்குடி
தேனி பேருந்து நிலையம் -------------- ஆட்சியர் அலுவலகம்
நாகப்பட்டினம்
நாமக்கல் எல் எம் ஆர் திரையரங்கம் ---------- அண்ணா சிலை
நீலகிரி
புதுகோட்டை ஆட்சியர் அலுவலகம்---- பழைய பேருந்து நிலையம்
பெரம்பலூர் நீதிமன்றம் ---------- புதிய பேருந்து நிலையம்
மதுரை மீனாட்சி கல்லூர-------------- பெரியார் சிலை
விருதுநகர்
விழுப்புரம் இரயில் நிலையம் --- புதிய பேருந்து நிலையம்
வேலூர் அண்ணா திரையரங்கு ------- அண்ணா சிலை
புதுச்சேரி பல்கலைக்கழகம் -------------- கோட்டகுப்பம்

நாள் : 18 - 05 - 2013 -------------- நேரம் : மாலை 4 மணிக்கு
பேரணியின் முடிவில் நம் தலைமுறையிலாவது சாதிகளற்ற சம உரிமை சமுதாயம் படைக்க உறுதிமொழி ஏற்போம்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
தொடர்பு எண் : 8678962611, 9790847172, 7502272075,8122863671.

 

247592_616989441646418_148628176_n.jpg

 

(facebook:loyolahungerstrike)

Link to comment
Share on other sites

இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேசம் அறிந்திருந்தது என்ற குற்றச்சாட்டுக்குள் சர்வ தேச மக்களை உள்ளடக்க முடியாது.

அம் மக்கள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், அதிகார நலன்களுக்காக சிறிலங்கா அரசுக்குத் துணை போனார்கள், போகிறார்கள். இதனை மாற்றி அங்கு நடந்தது என்ன என்பதை உலக மக்கள் கண்டுனர என்ன செய்யலாம்..?

No Fire Zone : இலங்கையின் 2009 இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்தும் கெலும் மெக்ரேயின் திரைப்படம்.Sri Lanka's Killing Field, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished ஆகியவற்றை அடுத்து கெலும் மெக்ரே உருவாக்கிய இலங்கை குறித்த மூன்றாவது ஆவணத்திரைப்படம் இதுவாகும்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர், மற்றும் ஜெனிவா சர்வதேச மனித உரிமைகள் திரைப்படவிழாவில் திரைக்கு வந்தது No Fire Zone. அதற்கு முன்னதாகவே காமன்வெல்த்திற்கான இங்கிலாந்தின் ஒன்றியம், மற்றும் இந்திய அரசியலாளர்களின் மத்தியில் இத்திரைப்படத்தை கொண்டு போயிருந்தார்கள் திரைப்பட குழுவினர்.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் கொண்டுவந்த பிரேரணை வெற்றி பெற்றதற்கு இத்திரைப்படத்தின் திரையிடலும் ஒரு முக்கிய செல்வாக்கு செலுத்தியிருந்தது. அதோடு, இலங்கை ஆளும் அரசை பற்றிய தங்களது நிலைப்பாட்டை பலர் மாற்றிகொள்வதற்கும், 2009ம் ஆண்டு இலங்கையின் இறுதியுத்தத்தில் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதையும், பல பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் இது நாள் வரை தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு உருவானது.

இப்போது No Fire Zone திரைப்படத்தை உலகமெங்கும் திரையிடுவதற்கு கொண்டு செல்ல போகிறார்கள் கெலும் மெக்ரே குழுவினர். அடுத்த செவ்வாய்க்கிழமை ( மே.14) இத்திரைப்படம், புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தினுள் திரையிடப்படப்போகிறது. பின்னர் கெலும் மெக்ரே எதியோப்பியாவில் நடைபெறும் அதியாஸ் அபாபா திரைப்பட விழாவுக்கு இத்திரைப்படத்தை கொண்டு செல்கிறார்.

அதற்கடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும், ஸகண்டினேவிய, அமெரிக்க நாடுகளுக்கும் இத்திரைப்படம் கொண்டு செல்லப்படவிருக்கிறது. அத்தோடு இப்புதிய திரைப்படத்தின் முழுமையான பதிப்பை வேறு மொழிபெயர்ப்புக்களுடன், தொலைக்காட்சி சேனல்களுக்கும் வழங்கப்போகிறார்கள். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தொடருக்கு முன்னதாக தொடர்ச்சியாக உலக நாடுகள் பலவற்றில் இத்திரைப்படம் காட்சிப்படுத்த திரைப்பட குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக உலகில் உள்ள முக்கிய அரசியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதனை தெரிந்திருக்க வேண்டும் என்பது இவர்கள் இலக்கு. ஆக்லாந்திலிருந்து ஆர்ஜெண்டீனா வரை அரசியல் தலைவர்களிடமும், மாணவ குழுக்களிடமும் இத்திரைப்படத்தை கொண்டு செல்லுமாறு நாம் கோரப்படுகிறோம். உலகின் அனைத்து நாடுகளும் ஒருமுறையாவது இத்திரைப்படத்தை பார்த்துவிட நாங்கள் முயற்சிக்கிறோம்.

இலங்கையில் அதே ஆளும் அரசு தொடர்ந்து ஆட்சி செலுத்துகிறது. இறுதி யுத்தத்தில் நடந்ததாக வெளியிடப்பட்ட அனைத்து போர்க்குற்ற ஆதாரங்களையும் அலட்சியமாக மறுக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் தாம் மேற்கொண்டது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்கிறார்கள். இத்திரைப்படத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். வெறுமனே இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதனை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் அல்ல. சர்வதேச சமூகத்தையும், பார்வையாளர்களையும் தட்டி எழுப்புங்கள். எங்களுக்கு தேவை நீதி.

உங்கள் உதவியில்லாது இது நடைபெறவாய்ப்பில்லை. இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவுங்கள் என நீள்கிறது அவர்கள் கோரிக்கை. இதற்காக 200,000 யூரோ திட்டத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளனர். பிரபல Kickstarter இணையத்தளம் மூலம் அடுத்து வரும் ஒரு மாதத்திற்குள் 20,000 யூரோ நிதி திரட்டுவதற்கு அறிவித்தல் விடுத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 30ம் திகதி இந்த அறிவிப்பு Kickstarter தளத்தில் வெளியானது. 10 நாட்களுக்குள் குறித்த இலக்கை எட்டிவிட்ட போதும் தற்போது இதன் இரு மடங்கை 40,000 யூரோக்கள் எனும் புதிய இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். எதிர்வரும் மே 30ம் திகதி வரை நிதி திரட்டும் காலக்கெடு Kickstarter இணையத்தளத்தில் தொடரவுள்ளது.

எவ்வளவு நிதி திரட்டுகிறமோ, அந்தளவு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்கிறார்கள். இது தொடர்பான விபரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.
http://www.kickstarter.com/projects/599171067/no-fire-zone-impact-distribution?ref=search

 

(facebook; loyolhungerstrike)

 

Link to comment
Share on other sites

நண்பர்களே ...
நாளை மாலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில்(கண்ணகி சிலை),இனப்படுகொலை தினமான மே 18ம் தேதி மாணவர்கள் ஒருங்கிணைக்கும் மாநிலம் தழுவிய பேரணி குறித்த பரப்புரை துண்டு பிரதிகள் மூலம் மாணவர்கள் ஆற்ற உள்ளனர்.மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் திரண்டு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்பதை பறை சாற்றுவோம் ...
CONTACT:9790847172

ஈழம் மலரட்டும் ! மானுடம் வெல்லட்டும் !

 

(facebook; loyolhungerstrike)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 தொடர்பாக இளையோர் அமைப்பால் ஒரு காட்சி தொகுப்பு

 

 
மே 18 தொடர்பாக இளையோர் அமைப்பால் ஒரு காட்சி தொகுப்பு தயாரிக்கப்பட்டது. அனைத்துத் தமிழ் மக்களையும் மற்றும் முக்கியமாக இளையோர்களையும் கலந்துகொள்ளமாறு இக் காட்சி எடுக்கப்பட்டது. 
 

http://www.sankathi24.com/news/29519/64/18/d,fullart.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.