Jump to content

பேரீச்சம்பழக் கேக்


Recommended Posts

தேவையானபொருட்கள்


400 கிராம் றவ்வை
350 கிராம் சீனி
250 கிராம் மாஜரீன்
400 கிராம் பேரீச்சம்பழம் ( விதை நீக்கியது)
250 கிராம் முந்திரிகை வற்றல்
1/2 ரின் அன்னாசி  
1/2 ரின் ரின்பால்
5 முட்டை
50 கிராம் இஞ்சி
1 கிளாஸ் தேயிலைச்சாயம் (4 பைக்கற் தேயிலையை ஊற வைத்து எடுக்கவும்)
1  மேசைக் கரண்டி பேக்கிங் பவுடர்
1 மேசைக்கரண்டி வனிலா
50 கிராம் கஜூ

செய்முறை

 

முதலில் இஞ்சியை சுத்தமாக்கி விழுதுபோல் அரைத்து எடுக்கவும்.
அதனோடு பேரீச்சம்பழம், தேயிலைச்சாயம் சேர்த்து 6-10 மணித்தியாலங்கள் ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும்.
சீனி கரைந்ததும் அதனுள் முட்டையையும் ரின்பாலையும் சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஊறவைத்த சேர்வையை கசக்கி தனியாக அடித்து கொள்ளவும்.
பின்னர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். அன்னாசியையும் சிறு துண்டுகளாக்கி அதனுள் சேர்த்துக் கொள்ளவும்.கடைசியில் றவ்வை, பேக்கிங்பவுடர், வனிலா போன்றவற்றை தனியாக கலக்கிய பின்னர் அதனுள் சேர்த்து கொள்ளவும். அத்துடன் கயு, முந்திரியை வற்றல் என்பவற்றையும் சேர்த்து கலக்கிய பின்னர் 175 பாகையில் 30 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும்.

(குறிப்பு: இஞ்சியை அரைத்து தேயிலை சாயத்தினுள் ஊறவைத்து பின்னர் தும்பு இல்லாது வடித்து சாயத்தை எடுத்தும் பயன்படுத்தலாம்). 

 

 

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=3565:2011-10-12-21-33-05&catid=90:games&Itemid=455

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை இணைபுக்கு நன்றி சொல்லிறன் . ஒரு விசயம் கேக்கிறன் கோவியாதையுங்கோ 175 சீயோ (c  ) ?? ஃஎப் ஓ ( f ) ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=10888

 

இந்த இணைப்பிலும் ஒரு பேரீச்சம்பழக் கேக் செய்முறை உள்ளது.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி அலை ..................

 

.என் துணைவியார் குறிப்பெடுத்துள்ளார் ..............நாளைசெய்து தருவதாக கூறியுள்ளார் ....................எனக்கு பிடித்த பதார்த்தம் இது ...

சாப்பிட்டுவிட்டு மீதியை எழுதுகிறேன் :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டு விட்டு எங்க மீதிய எழுதிறது? அதுக்கெல்லாம் டைம் இருக்குமா? அரபிக் காரன் உத சாப்பிட்டு சாப்பிட்டு தானே..................:D :d

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.