Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொக்கத் தங்கம் உள்ளம் குளிர போராளிகளைத் தூற்றியவர் இன்று அவர்களைப் பலியிட்டுவிட்டு வீரவணக்கம் செய்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு''.. கருணாநிதி

சென்னை: ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்தோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில் வாசித்த அறிக்கை:

ஈழத் தமிழர்ப் பிரச்சனையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும்- தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும்- தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் குரலெழுப்பி வந்துள்ளது.

அண்ணா காலத்திலேயே 1956ம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம். செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.

 

தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ- மொழி வாழ- நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக- தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட- அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த- இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு- உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சனையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ- இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை- அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும். இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து- அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அதற்கு மாறாக இலங்கையும், அந்த இலங்கையின் "தொப்புள் கொடி" உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே "குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை"யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.

 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/19/tamilnadu-upa-government-trouble-dmk-pulls-out-171809.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானாகப் பாய்ந்தாரா, அல்லது தள்ளிவிடப்பட்டாரா என்பது தான் இப்போது கேட்கப்படவேண்டிய கேள்வி! :o

இனி என்ன  செய்தும் என்ன பயன்  ,எல்லாம் காலம் தாழ்த்திய செயற்பாடு. ஒன்றுக்கும் உதவாது.

வள்ளுவன் குறளுக்கு பொருள் எழுதிய உனக்கே விளங்கவில்லையா? 

 

செருப்பால் அடிக்கனும்  உடன்பிறப்புக்களுக்கு.

 

 

1. காங்கிரஸ் சிங்களத்துக்கு வால் பிடிப்பது பகிரங்கம்.
 
2. தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு தலைதூக்கியுள்ளது.
 
இந்த நிலையில் தி.மு.க. காங்கிரசோடு ஒட்டியிருந்தால் தன் சவப்பெட்டிக்கு தி.மு.க. தானே ஆணி அடிக்கிற வேலைதான்.
 
வெளிய பாய்வது தான் புத்தி.
  • கருத்துக்கள உறவுகள்

அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்கு யாரும் மறுப்பில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை நடாத்தி அதற்கு வரலாற்றில் கறையைப் பொறித்தவர் கருனாநிதி என்பதையும் யாரும் மறக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.