Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் – தயா மாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் – தயா மாஸ்டர்

24 மார்ச் 2013


 
 

விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்-


 


Thaya%20Master_CI.jpg

 


தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.


யுத்தம் இடம்பெற்ற காலத்தல் இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவை தொடர்பில் தற்போது விசாரணை நடாத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கைத் தமிழர்களுக்கு யார் அதிகமாக குரல் கொடுத்தோம் என்பதனை நிரூபிக்கும் போட்டியொன்றே தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழக அரசியல்வாதிகள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


தீக்குளிப்பு, பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் போன்ற சகல விதமான செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


எனினும், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


வீடுகளை நிர்மானித்தல், ரயில் பாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் மத்திய அரசாங்கம் பங்கெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


சில வேளைகளில் மாநில அரசாங்கங்களினால் நேரடியாக வேறும் நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறெனினும், தமிழக அரசியல் கட்சிகள் சிங்கள மக்களுடன் எங்களுக்கு முரண்பாடுகளை ஏற்படுத்து முனைப்புகளில் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் n;தாடாபில் எந்தவொரு ஊடகமும் வெளிப்படுத்தவில்லை எனவும், அனைத்து ஊடகங்களும் இலங்கை இராணுவம் தொடர்பிலேயே கவனம் செலுத்தி வந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


யுத்தம் தொடர்பிலான பின் விசாரணைகளினால் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


யுத்தம் காரணமாக 200000 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


புலம்பெயர் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.


சில நாடுகளில் தீய நோக்கங்களுக்காக தொடர்ந்தும் பணம் திரட்டப்பட்டு வருவதாக உறவின, நண்பர்களின் மூலம் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.


பெருமளவிலானவர்கள் இங்கு காணப்படும் தமிழீழ விடுதலைப் புலி சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்காகவே பயன்படுத்துவதாகவும், பொது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச சமூகம் அபிவிருத்திப் பணிகளில் பங்களிப்பு செய்வதுடன் தங்களது பணிகளை வரையறுத்துக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் மற்றும் மக்கள் எங்களது அரசியலை தீர்மானிக்க அனுமதியளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.


கடந்தவை கடந்து விட்டன, இரண்டு தரப்பினரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனவும், அது தொடர்பில் விசாரணை நடாத்துவதில் என்ன பயன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மூன்று தசாப்த கால யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் பூர்த்தியாகியுள்ளதாகவும், அபிவிருத்திப் பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்னமும் பல தேவைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹிந்துஸ்தான் டைம்ஸ் - விசேட தமிழாக்கம் - குளோபல் தமிழ்ச் செய்திகள்-

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90023/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் – தயா மாஸ்டர்

 

உங்களைப் போன்றவர்கள் சிங்களவனுக்கு கழுவுறதுக்கு அவங்களோட கூடி கூத்தடிக்கிறதுக்கு தமிழக அரசியல்வாதிகள் இடைஞ்சல் பண்ணிகினமோ ? 

உங்களைப் போன்றவர்கள் சிங்களவனுக்கு கழுவுறதுக்கு அவங்களோட கூடி கூத்தடிக்கிறதுக்கு தமிழக அரசியல்வாதிகள் இடைஞ்சல் பண்ணிகினமோ ? 

 

அவர் என்ன சுதந்திரமா இருந்து கொண்டா பேட்டி கொடுக்கிறார், அவர் ஒரு கைதி அவரை நினைத்து கோபப்ப்படுவதிலும் பரிதாபமும் அவரை இந்த இழி நிலையில் இருந்து எப்படி மீட்க்லாம் என்ற எண்ணமுமே தோன்ற வேணும், சுதந்திரமாக இருந்த மனிதன் இப்போது இப்படி உயிரை காப்பாற்ற பேசும் போது அவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.

ஹிந்தி வெறியர்களின் கையுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறன செய்திகளைத் தான் தேடியெடுத்துப் போடும்!

ஹிந்தி வெறியர்களின் கையுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறன செய்திகளைத் தான் தேடியெடுத்துப் போடும்!

இவ்வாறு தேவை வருமென்றே இவர்களை உபயோகிக்கிறார்கள்.. இது ஒரு எதோ ஒரு செய்தியல்ல பின்னணியில் பெரிய ஒரு நீண்டகாலத்திட்டத்தின் தேவையுண்டன் தான் இப்படியான செவ்விகள் பதியப்படுகின்றன. 

 

தயாமாஸ்டர் புலிகளின் பேச்சாளரா? எப்போதில இருந்து? 

 

பத்திரிக்கை மொழிபெயர்ப்பாளர்கள் எல்லாரும் பெச்சாலர்கலாயிட்டா பிறகேன் பேசுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

தயாமாஸ்டர் புலிகளின் பேச்சாளரா? எப்போதில இருந்து?

 

நமக்கு மறதி  இருக்கா என்று செக் பண்ணுகிறார்கள்

இன்னும் கனக்க வரும்

தயாராக இருங்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.