Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படித்ததில் பிடித்த குட்டி கதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

அன்பான மனைவிக்கு,--குட்டி கதை!!!

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும்

பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.

 

:D

fb

இப்ப கடவுளும் ஒரு பாடம் படித்திருப்பார்!

 

இப்படிக் கொஞ்சப் பெண்கள் இருந்தால், உலகத்தில் ஆறுகளே இருக்காது! :icon_idea:

 

நன்றிகள்,அபராஜிதன்!

 

நன்றி அண்ணா உங்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு  :)

 

 

பெண்கள் எப்போதும் புத்திசாலிகள், ஆண்கள் கோட்டை விட வேண்டியது தான்...

 

நன்றி அக்கா வரவுக்கும் கருத்துக்கும் :D

  • Replies 82
  • Views 308.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.

 

:lol:  :D 

நன்றி  பதிவுக்கு.....

தொடருங்கள்.........

 

  • தொடங்கியவர்

விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து 'நீக்ரோ'வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி, போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.

அந்த அப்பாவி ஆபிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார். பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக, "முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது, விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்." என்று கூறி முடித்தாள்.

சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.

சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து, சார், தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள். விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின்தொடருமாக கேட்டுக் கொண்டாள். குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர்.

அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊளியர்களின் பார்வைக்காகவென்று அனுப்பி வைக்கப்பட்டது.

மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள் என்பதை மறந்து விடுவார்கள், என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள், ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்துவிட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்....!

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.

 

:lol:  :D 

நன்றி  பதிவுக்கு.....

தொடருங்கள்.........

 

 

 

நன்றி அண்ணா உங்களின்  ஆதரவுக்கு

  • தொடங்கியவர்

அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது – ‘உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.

வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது.

ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.

இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.

அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.

அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி

fb

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

 

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!

அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!

இந்தியா பூனை
பாகிஸ்தான் பூனை ஜெர்மனிபூனை ஆஸ்திரேலியா பூனை

இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

அமெரிக்கா பூனையல்லவா
பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!

கடைசி இறுதி சுற்று....
இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!

பார்வையாளர்களுக்கு வியப்பு!
சோமாலியா நாட்டு பூனை
நோஞ்சானாக மெலிந்து
நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி
முக்கி முணங்கி மேடையேறியது!

இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!

பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!

போட்டித்துவங்கியது!
அமெரிக்கா பூனை அலட்சியமாக
சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!

சோமாலியா பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!
அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள்
ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.
பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்!

சற்று நேரம் சென்றபின்,
மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு
ஒன்றுமே புரியவில்லை!

சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!

போட்டியில்
வென்றதற்காக சோமாலியா பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!

மெதுவாக எழுந்து
சோமாலியா பூனையின்அருகில் சென்று
இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது
எப்படி?
என்று கேட்டது அமெரிக்க பூனை!

அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நான் பூனையே இல்லை.!

புலி...டா...!

என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!

பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை தான் நுணா 😀

  • தொடங்கியவர்

ப. பி

மனைவி இறக்கும்போது,
*அவருக்கு வயது 45 இருக்கும்*.
உறவினர்கள்,
*நண்பர்கள்*
அனைவரும்
*அவரை*
*மறுமணம்*
செய்து கொள்ளுமாறு
வற்புறுத்தியும்,
*அவரால்*
*அதை ஏற்றுக்கொள்ள*
*முடியவில்லை* .

என் மனைவி,
*அவள் நினைவாக*
எனக்கு
*ஒரு மகனை*
விட்டு சென்றிருக்கிறாள்.
*அவனை வளர்த்து*
ஆளாக்குவது ஒன்றே
*இனி என் வேலை*.
அவன் சந்தோஷத்தில்
*அகமகிழ்ந்து*,
அவன் வெற்றியில் நான்
*திளைத்திருப்பது*
எனக்கு போதும்.
*அவனுக்காக*
*வாழ போகிறேன்*.

இன்னொரு துணை
*எனக்கு தேவையில்லை*
என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது.
மகன் வளர்ந்து
பெரியவனானதும்,
தன் வீட்டையும்,
வியாபாரத்தையும்
மகனிடம்
எழுதி கொடுத்துவிட்டு
ஓய்வு பெற்றார்.

மகனுக்கு திருமணமும்
செய்து வைத்து,
அவர்களுடனேயே
தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது.
ஒரு நாள்
வழக்கத்துக்கு மாறாக,
கொஞ்சம்
சீக்கிரமாக
காலை உணவு உண்ண,
*மருமகளிடம்*
ரொட்டியில் தடவ
*வெண்ணெய்
தருமாறு கேட்டார்.
*மருமகளோ* ,
*வெண்ணை*
*தீர்ந்துவிட்டது*
*என்று சொல்லி விட்டாள்*.

மகன்
அதை கேட்டுக் கொண்டு,
தானும் உணவருந்த உட்கார,
தகப்பன் வெறும்
ரொட்டி துண்டை
உண்டு விட்டு நகர்ந்தார்.

*மகன்*
உணவருந்தும் போது,
*மேஜையில்*
*வெண்ணை*
கொண்டு வந்து
வைத்தாள் *மனைவி*.
ஒன்றும் பேசாமல் ,
*மகன்*
தன் வியாபாரத்துக்கு
புறப்பட்டான்.
*அந்த வெண்ணையை*
பற்றிய சிந்தனையே
*அந்நாள் முழுதும்*
அவன் எண்ணத்தில்
*ஓடிக்கொண்டிருந்தது*.

மறுநாள்
காலையில்
தன்
தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள்
நாம் வக்கீலை
பார்த்துவிட்டு
வருவோம் என்றான்.
ஏன் எதற்காக
என்று தகப்பன் கேட்க...

நானும்
என் மனைவியும்
வாடகை வீட்டுக்கு
குடி போகிறோம்.
என் பெயரில்
எழுதிய அனைத்தையும் ,
உங்கள்
பெயருக்கே
மாற்றி கொள்ளுங்கள்.

இந்த வியாபாரத்திலும்
இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம்
சம்பளம் வாங்கும்
சராசரி
தொழிலாளியாக
இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..

ஏன்
இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா
*உங்கள் மதிப்பு*
என்னவென்று
*என் மனைவிக்கு*
உணர்த்த வேண்டிய
*கட்டாயம் வந்துவிட்டது*.

*சாதாரண வெண்ணைக்காக*
நீங்கள் கையேந்தும்
*நிலை வரக்கூடாது*.
ஒரு பொருளை
பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
*அவள் உணர வேண்டும்*.
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...

 

**********************

பெற்றவர்களை
புறக்கணிக்காதீர்கள்.
அவர்கள் இல்லாமல்
உங்களுக்கு
அடையாளம் என்பதே இல்லை .................

 

ப.பி 

Facebook

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திரம் அழிவைத்தரும்

ஆத்திரம் அழிவைத்தரும்ஆத்திரம் அழிவை தரும்ஆத்திரம் அழிவைத்தரும்

 
ஆத்திரம் அழிவை தரும்
 



ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரக்காரன் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ,அல்லது கோபம் உடையவனாக.
இருப்பான்..

அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும்.மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு யோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான்.

அதனால் அவ் வேளையில் அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறாகவே போகும்.

மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார்.செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளி கழுகை ஏந்தி இருந்தார்.

அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்ப்பட்டது.
தாகம் எடுத்தது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழைபோல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.

ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருக சென்றார்.

ராஜாளி வேகமாக பாய்ந்து சென்று குவளையைத்
தட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.

ராஜாளியின் அடாவடி. இந்த இரண்டாலும்
செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது.
வாளால் ராஜாளியை வெட்டினார். ராஜாளி துடி துடித்துக் கொண்டு     இருந்தது.

மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார். துடி துடித்துக் கொண்டு இருந்த ராஜாளி மறுபடியும் பாயந்து வந்து குவளையை தட்டி விட்டது.

செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத கோபம் பீறிட்டெழுந்தது. ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார்.

இப்போது மேல் இருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது. கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் யூகித்தார்.

குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால் அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது.

அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்தான் உணர்ந்து கொண்டார்.

கீழே இறங்கி வநத செங்கிஸ்கான், செத்துக்கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார்.

இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளை இட்டார்.

செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவு அமைக்கப்பட்டது.

அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப் பட்டது.

மற்றொரு சிறகில், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.

ஆம்.,நண்பர்களே..

எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் புத்திசாலிதனமாக ஈடுபட்டால் எதிலும் வெற்றிதான் .

அதே சமயம் அழிவுக்கு காரணம் அவசரமும் , ஆத்திரப்படுதலே ஆகும் .

எல்லாமே நன்றாக அமைய ஆத்திரப்படாமலும் அவசரப்படமாலும் இருந்தால்நல்லது.💐💐💐💐💐💐

http://puthagasalai.blogspot.com/2020/02/blog-post_97.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.