Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோவின் விசமக் கருத்து

Featured Replies

சோ ஒரு நல்லவர் - வல்லவர் - அருமையானவர்........

எப்பிடியா?

நான் புலிக்கும் ஈழத்தமிழனுக்கும் - எதிர் எங்கிறத -

வெளிப்படையாவே - ஒப்புக்கொள்ளும் - ஒரு - பிராணி!

பயமில்ல - அது புல்லுக்குள் படுத்திருக்காத -பாம்பு !

விலத்தி போகலாம் - அல்லது விட்டுத்தள்ளலாம்!

எங்களுள் சிலர் - அப்பிடியா?

என்னமோ - புலி க்கு ஆதரவுன்னு காட்டவும் ஆசை ......

அதே நேரம் - கூட இருந்து கழுத்து அறுக்கவும் - ஆசையோ ஆசை!

சோ இப்பிடித்தான்னு - கண்டு பிடிக்க - அவர் எந்த கஸ்டத்தையும் தரல்ல - எமக்கு!

ஆனா -சந்தடி சாக்கில -சிந்து பாடுறவங்களையும் -

சகலகலாவல்லவன் நானுன்னு - காட்ட ..........

இனம் படுறபாட்டை.......

எங்களுக்குள்ளையே இருந்துகொண்டு .......

இழுத்து வீதிக்கு விடுறவங்களை - சமாளிக்கிறதே -

பெரும்பாடாய் போகுது - பல இடங்களில் - ஒவ்வொருநாளும் - இங்க!

இணைப்புக்கு - நன்றி!! 8)

அறியாதவர்களுக்காக ஒரு உதிரிச் செய்தி

சோ ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தவர்(கறுப்பு வெள்ளைப் படங்களில்)

சோ... இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? :lol:

சோ... இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? :lol:

:lol::D:D

:lol::D:D

§º¡ ¦º¡ýÉÐìÌ ÌÕÅ¢ Å¢Çì¸õ(Å¢ÇìÌÁ¡Õ «Ê Å¡í¸¢É¡Öõ) ¦º¡øÖÅ¡÷ :P

சோ... இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? :lol:

சோ, சோ சொல்லுறதைக் கேட்டு நல்லாக் கெக்கட்டம் விட்டுச் சிரிச்சாப் போதும். அதுதான் அவற்றை தொழிலுக்கு நாங்கள் குடுக்கிற மரியாதையா இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறியாதவர்களுக்காக ஒரு உதிரிச் செய்தி

சோ ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தவர்(கறுப்பு வெள்ளைப் படங்களில்)

துக்ளக் ஆசிரியர். ஜெய்சங்கர் நடிக்கும் படங்களில் அவருக்கு நண்பராக நடித்தவர். பொதுவாழ்வில் சோவிடம் அடிக்கடி அலோசனை பெறுபவர் நடிகர் ரஜனிகாந்த்

ஜெயலலிதாவின் முக்கிய அரசியல் ஆலோசகராக இருந்தவர் சோ..... இப்போது இல்லை போல் இருக்கிறது.... ஒருவேளை செருப்பால் அடித்து துரத்தினாரோ என்னவோ?

சோ மற்றும் சுப்பிரமணிய சுவாமி சொல்வதை எல்லாம் கணக்கில் எடுக்க கூடாது. இப்படி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி தான் தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்கிறார்கள்.

இந்து ராம் கூட இலங்கை விடயத்தில் தமிழர்களுக்கு எதிராக கூச்சல் போடுவதில் வல்லவர்.ஆனால் இவரின் கருத்துக்கள் இந்து பத்திரிகை மூலம் இந்தியாவில் பலரை சென்றைய வாய்ப்பிருக்கின்றது :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்! - இளங்கோ (இலண்டன்)பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.

இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.

தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை.

நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது.

தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.

கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.

சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது.

-வெப்பீளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.