Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாபயவை நெருக்கும் மாத்தளை மனித புதைகுழி

Featured Replies

சிறிலங்காவில் தற்போது விஸ்வரூபமாக வளர்த்து வரும் மாத்தளை புதைகுழி விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் 150 பேரின் மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை 1986 - 90 காலப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளவர்களின் சடல எச்சங்களே என்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜேவிபி கிளர்ச்சியின் போது, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சடலங்களே இவை என்று கருதப்படுகிறது.

மாத்தளை மருத்துவமனைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிக்கு சமீபமாக, சிறிலங்கா இராணுவத்தின் சித்திரவதைக் கூடம் ஒன்று 1989- 1990 காலப்பகுதியில் இயங்கியதை, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜேவிபி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாத்தளை விஜய வித்தியாலயத்தில் இயங்கிய இந்த சித்திரவதைக் கூடத்தை கஜபா றெஜிமென்டே இயக்கி வந்தது என்று ஜேவிபி முன்னாள் உறுப்பினரும், முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் செயலருமான புபுது ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்தக் காலப்பகுதியில் மாத்தளை மாவட்ட சிறிலங்கா இராணுவ இணைப்பதிகாரியாகவும், 1வது கஜபா றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரியாகவும் தற்போதைய பாதுகாப்புச் செயலரான லெப்.கேணல் கோத்தாபய ராஜபக்சவே பணியாற்றியிருந்தார்.

இந்தநிலையில், மாத்தளை மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டால், கோத்தாபய ராஜபக்ச சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், 1987 தொடக்கம் 1990 வரையிலான காலப்பகுதியில் தமது கட்சியின் உறுப்பினர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா கோரியுள்ளார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNTk4MDEy.htm#.UVuN5DeG2Qs

  • தொடங்கியவர்

கோத்தாவைக் காப்பாற்ற மாத்தளைப் புதைகுழியை மூடிமறைக்க முயற்சி.

 

1365248876.jpg

மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி பற்றிய நீதி விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.

மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து 154 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இவை 1987இற்கும், 1990இற்கும் இடைப்பட்ட காலத்தில் - ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிறேமதாச ஆ,ட்சிக்காலத்தில் - புதைக்கப்பட்டவை என்று தடயவியல் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த புதைகுழி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காண்பித்து வருகிறது.

மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், இது குறித்து அமைச்சரவையில் கூட விவாதிக்கப்படவில்லை என்றும் சிறிலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள மகிந்த ராஜபக்சவே இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை ரணசிங்க பிறேமதாசவின் மகனும் ஐதேகவின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாச, அந்தக் காலத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும், நீதிக்குப் புறம்பாக இடம்பெற்ற எல்லாப் படுகொலைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“1971ம் ஆண்டு கிளர்ச்சி தொடக்கம் இப்போது வரையான காலப்பகுதிகளில் இடம்பெற்ற, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐதேக, ஜேவிபி, விடுதலைப் புலிகளால் நிகழ்த்தப்பட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

விசாரணைகளின் நோக்கம் உண்மையைக் கண்டறிவதாகவும், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதைக் கண்டறிவதாகவும் இருக்க வேண்டும்.

மாத்தளை புதைகுழி பற்றி மட்டுமன்றி, ஏனைய இடங்களில் நடந்த படுகொலைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

வெளிப்படைத் தன்மையுள்ளதாகவும், தார்மீக அடிப்படையிலானதாகவும், நெறிமுறைகள் சார்ந்தாகவும், உயர்ந்த நீதித் தரத்தை உறுதிப்படுத்துவதாகவும், அரசியல் தலையீடுகளற்றதாகவும் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும்.“ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரண்டாவது கிளர்ச்சியின் போது, தமது 50 ஆயிரம் உறுப்பினர்களை ஐதேக அரசாங்கம் கொன்று விட்டதாக ஜேவிபி குற்றம்சாட்டி வருகிறது.

அதேவேளை, தமது கட்சியின் 6000 உறுப்பினர்களை ஜேவிபியினர் கொன்றதாக ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடத் தயக்கம் காணிபித்து வருகிறது.

மாத்தளைப் படுகொலைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த கஜபா படைப்பிரிவினது கட்டளை அதிகாரியாகவும், மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரியாகவும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக உள்ள கோத்தாபய ராஜபக்சவே பணியாற்றியிருந்தார்.

அதன்காரணமாகவே இந்தப் புதைகுழி குறித்த நீதி விசாரணைக்கு சிறிலங்கா அதிபர் தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.newsalai.com/details/Matale-graves-to-bury-save-kottavai.html#.UWCPgEqG2Qs

  • கருத்துக்கள உறவுகள்

1990 வாக்கில்.. மண்டைதீவில் 49 போராளிகளைப் படுகொலை செய்தது மேலும் அல்லைப்பிட்டியில் தமிழ் மக்களைக் கொன்றது என்று முள்ளிவாய்க்காலுக்கு முந்தைய பல குற்றங்களில் இவருக்குத் தொடர்புள்ளது.

 

சரத் பொன்சேகா.. மற்றும் சந்திரிக்கா போன்றோர் செம்மணிப் புதைகுழி குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அந்தப் போர்க்குற்றங்களும் இனப்படுகொலைகளும் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டுள்ளன.

 

சிறீலங்கா சிங்கள ஆட்சியாளர்கள்.. தமிழர்களுக்கு எதிராகவும்.. சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும் பல மோசமான மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர்.

 

தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் மற்றும் இனப்படுகொலைகள்.

 

சிங்களவர்கள் மீது 1971 இல் சுமார் 15,000 ஜே வி பி இளைஞர்களை சிறீமாவோ அரசு கொன்று தள்ளி.. எரித்தது..புதைத்தது.

 

அதேபோல் 1987-89 இல் பிரேமதாச தலைமையில்.. உடுகம்பொல.. உட்பட பலரால் சுமார் 7,000 வரை சிங்கள இளைஞர்கள் கொன்று எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் இருந்தனர்.

 

இவர்கள் எவருமே சர்வதேசத்தால்.. இந்தப் படுகொலைகளுக்காக தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் தொடர்ச்சியே இன்றைய மனிதப் பேரவலங்கள் இலங்கைத் தீவைச் சூழ்ந்திருக்கக் காரணம். இதில் சர்வதேசமும் ஐநாவும் திட்டமிட்டு மூடி மறைப்புக்களையும் சமரசங்களையும் செய்து கொடும் சிங்கள ஆட்சியாளர்களை தொடர்ந்து காத்து வருகின்றனர். குறிப்பாக 1971 படுகொலைகளில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். அதன் பங்களிப்பு 1987 இல் நேரடியாகவும் பின்னர் 2009 வரை மறைமுகமாகவும் தமிழர்கள் மீதான படுகொலைகளிலும் இருந்துள்ளது.

 

சிறீலங்கா ஆட்சியாளர்கள் இவ்வளவு ஈவிரக்கமற்றுச் செயற்பட இந்திய மத்திய அரசில் இருந்தவர்களும் வல்லாதிக்க சக்திகளும் அமெரிக்கா.. ரஷ்சியா.. சீனா போன்றவை அவற்றிற்கு துணை நின்றதும் நிற்பதும் ஒரு காரணமாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SL President Hide His Crimes And Orders Probe Into Marxist Killings Of 90s.

http://transtamils.com/sl-president-hide-his-crimes-and-orders-probe-into-marxist-killings-of-90s/

  • தொடங்கியவர்
மாத்தளை மனித புதைகுழிகளுக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு: சிங்களத் தாய் சாட்சியம்.
 

கொழும்பு: சிங்களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்கள பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.

 

மாத்தளைபகுதியில் மருத்துவமனை கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டோரதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அப்பகுதியில் லெப்டினன் கேணலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. இதனால் அவர்தான் இந்தப் படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

10-matale-mass-grave1-600.jpg

இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.

 

அவர் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

 

1989ம் ஆண்டு டிசம்பர் 13ந் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலய என்னும் பள்ளிக்கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக்கொண்டு இருந்தேன். வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்தமாக இழுத்துக்கொண்டு சென்றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர். இராணுவத்தின் வாகனத்துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகாமிற்குள் செல்வதனை பார்த்தேன்.

 

மீண்டும் மறுநாள் அவர் சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன்றாடினேன். ஆனால் முகாமுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதியான எக்கநாயக்கவை தொடர்புகொண்டேன். அவர் தனது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்துவிட்டு, லெப்டினன் கேணல் கோத்தபாயவிடம் பேசிவிட்டதாகவும் இனி நீங்கள் உங்கள் மகனை பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.

 

10-matale-mass-grave2-600.jpg

இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டிருக்கலாம். தற்போது கண்டெடுக்கப்பட்ட 150 எலும்புக்கூடுகளுக்குள் மகன்களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது.அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

10-matale-mass-grave3-600.jpg

 

1989ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கே கிரீன் காட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அரசியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

10-matale-mass-grave4-600.jpg

http://tamil.oneindia.in/news/2013/04/10/srilanka-another-true-story-that-resurfaced-matale-mass-grave-173192.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த கூட்டத்தைப் பாதிக்கும் என்றால் ஏன் செய்தியை வெளியில் விடுகிறார்கள்? இதில் ஐ.தே.கட்சிதான் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என்று மகிந்தகூட்டம் கணக்குப்போடுவதாக நினைக்கிறேன்..

இதுவும் கருணா  சொல்லித்தான் பாலச்சந்திரனை சுட்ட கதை போல் தான்......

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் பிரேமதாசா காலத்தான், இப்ப கிண்டி எடுபடுது. அதுக்கு தான் இவ்வளவு வியாக்கியானங்கள்.

1989...
2009...
இலங்கை தான் ஒரு நாடு தனது எல்லா இனத்தையும் பாகுபாடு காட்டாது கொன்று ஒழிப்பதற்கு பின்னிற்பது இல்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.