Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Stroke - பக்கவாதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது.

முள்ளந்தண்டுப் பகுதியில் உள்ள மூளையின் நீட்டமான முண்ணானில் ஏற்படும் பாதக விளைவுகளாலும் இது ஏற்படக் கூடும்.

இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்தோடு உயர் மன அழுத்தமும் இதனை ஊக்குவிக்கிறது..!

மேலும் இந்தக் காணொளியை காணுங்கள்..

Edited by nedukkalapoovan

பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்தோடு உயர் மன அழுத்தமும் இதனை ஊக்குவிக்கிறது..!

மேலும் இந்தக் காணொளியை காணுங்கள்..

அதிதீவிர உடற்பயிற்சியும் காரணமா ? ஒருவித பயத்தை உருவாக்கிவிட்டீர்கள். ஒருநாளைக்கு இரண்டுமணிநேரம் உடற்பயிற்சி செய்தால் பக்கவாதம் வர சந்தர்ப்பம் உண்டா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாதுகாப்பு மற்றும் உடலியக்க இலகு வழிப்படுத்தல்.. வழிமுறைகளைப் பின்பற்றாத..தீவிர உடற்பயிற்சி மட்டுமல்ல.. கோப்பி அருந்துதல்.. தீவிரமாய் முக்கி மூக்குச் சிந்துதல்.. கூட பக்கவாதத்துக்கு வழி சமைக்கலாம். கடுமையாக முக்கி கக்கா (நம்பர் 2) போறது கூட ஆபத்தானது..! :)

Coffee, vigorous exercise and nose-blowing may trigger a stroke.

Drinking coffee, hard exercise and nose-blowing are the everyday activities most likely to raise blood pressure and cause a specific kind of stroke, doctors say.

http://www.guardian.co.uk/science/2011/may/05/coffee-exercise-nose-blowing-stroke

மிக்க நன்றி, இணைப்பை முழுமையாக வாசித்தேன். தீவிர உடற்பயிற்சி பக்கவாதத்துக்கு ஓர் காரணமா என்று கூகுளில் தேடிப்பார்க்க உள்ளேன். எதை செய்தாலும் அதில் ஒரு பக்கவிளைவு உள்ளது போல் இருக்கின்றது, இனிமேல் மீண்டும் காட்டுக்குள் சென்று வேட்டையாடி வாழவேண்டியது தான் :D .

எனது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான அங்கம் அதையும்விட போதை அல்லது வெறி என்று கூறலாம். கிழமையில் 7 நாட்களும் மாதத்தில் 30 நாட்களும் தொடர்ந்து செய்வேன். எனது அனுபவங்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றேன். ஒரு தனி திரி திறப்போம். எந்த காரணத்துக்காகவும் உடற்பயிற்சியை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

Edited by mampalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, இணைப்பை முழுமையாக வாசித்தேன். தீவிர உடற்பயிற்சி பக்கவாதத்துக்கு ஓர் காரணமா என்று கூகுளில் தேடிப்பார்க்க உள்ளேன். எதை செய்தாலும் அதில் ஒரு பக்கவிளைவு உள்ளது போல் இருக்கின்றது, இனிமேல் மீண்டும் காட்டுக்குள் சென்று வேட்டையாடி வாழவேண்டியது தான்.

நீங்கள் அதிகம் பயப்பிடுறீங்க. :)

மனதை இலகு படுத்தி வைத்துக் கொள்ளப் பழகுவதோடு.. நாளாந்த வாழ்க்கையையே உடற்பயிற்சி மிக்க ஒரு வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் நல்லது. உணவு வழக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் நன்று.

எம் முன்னோர்கள்.. தோட்டம் அது இதெண்டு இறங்கி.. நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ்ந்துள்ளனர். இன்றைய சனத்தொகையிலும் சில மக்கள் நாளாந்த வாழ்வில்.. சைக்கிள் ஓடுறது.. நடக்கிறது.. ஓடிறது.. வீட்டு வேலைகளை உபகரணங்களின் உதவி இன்று பெரும்பாலும் செய்து கொள்வது.. காரை கைவிடக் கூடிய தூரத்திற்கு நடையை வழக்கமாக்குவது.. என்று எத்தனையோ செய்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி.. வாழ்ந்து வந்தால்.. தீவிர உடற்பயிற்சியகங்களுக்குச் சென்று ஒரு மணித்தியாலம்.. வேர்த்து விறுவிறுக்க வேண்டிய அவசியம் வராது.

எல்லாம் நாம் எம் வாழ்வை திட்டமிடுவதில் தான் தங்கியுள்ளது. அடுத்தவனுக்கு ஆடம்பரம் காட்ட வெளிக்கிட்டா விளைவு மோசமாகிடும்..! தனக்கு எது உகந்ததோ அதன் கீழ் மகிழ்வோடு வாழப் பழகிக் கொள்வதே சிறப்பு. இதனை மனிதர்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே போதும். வாழ்வு சிறக்கும். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான அங்கம் அதையும்விட போதை அல்லது வெறி என்று கூறலாம். கிழமையில் 7 நாட்களும் மாதத்தில் 30 நாட்களும் தொடர்ந்து செய்வேன். எனது அனுபவங்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றேன். ஒரு தனி திரி திறப்போம். எந்த காரணத்துக்காகவும் உடற்பயிற்சியை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

கிரமமான சீரான.. சந்தமான உடற்பயிற்சியால் பெரிய பாதிப்புக்கள் இல்லை. அவற்றால் நல்ல விளைவுகளே அதிகம் உடலில் தோன்றுகின்றது.

ஆனால் அதி தீவிர.. வேகமான.. மற்றும் கனத்த உடற்பயிற்சிகளும் அவற்றின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமையும் தான் பாதகத்தை உண்டு பண்ணுகிறது.

எங்கட சீனிய.. நண்பருக்கு நடந்தது. அவர் உடற்பருமன் கூடுது என்றிட்டு.. தீவிர உடற்பயிற்சியகம் ஒன்றில் இணைந்து தினமும் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். திடீர் என்று முதுகு வலி ஏற்பட்டது. பின்னர் அது காலுக்குப் பரவியது. சில வாரங்களில் அவரின் உடலின் ஒரு பகுதி செயலிழந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 23/4.

PE-SpinalFractures_Figure3.jpg

தீவிர பாரம் தூக்கும் உடற்பயிற்சியால்.. முள்ளந்தண்டில் உள்ள கசியிழையத் தகடுகளில் ஏற்பட்ட விலகலே அதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டு..தொடர் சத்திர சிகிச்சைகளின் பின் மீண்டும் தேறி மெது மெதுவாக நடக்கப் பயின்று கொண்டார். இதனால் அவரின் படிப்பும் பாழானது.

எதனையும் தகுந்த முற்காப்போடு அதற்கே உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடு செய்து வந்தால் பிரச்சனை இல்லை. எதிலும்.. crazy ஆக இருந்தால் தான் பிரச்சனை..! :)

Edited by nedukkalapoovan

நீங்கள் அதிகம் பயப்பிடுறீங்க. :)

மனதை இலகு படுத்தி வைத்துக் கொள்ளப் பழகுவதோடு.. நாளாந்த வாழ்க்கையையே உடற்பயிற்சி மிக்க ஒரு வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் நல்லது. உணவு வழக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் நன்று.

எம் முன்னோர்கள்.. தோட்டம் அது இதெண்டு இறங்கி.. நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ்ந்துள்ளனர். இன்றைய சனத்தொகையிலும் சில மக்கள் நாளாந்த வாழ்வில்.. சைக்கிள் ஓடுறது.. நடக்கிறது.. ஓடிறது.. வீட்டு வேலைகளை உபகரணங்களின் உதவி இன்று பெரும்பாலும் செய்து கொள்வது.. காரை கைவிடக் கூடிய தூரத்திற்கு நடையை வழக்கமாக்குவது.. என்று எத்தனையோ செய்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி.. வாழ்ந்து வந்தால்.. தீவிர உடற்பயிற்சியகங்களுக்குச் சென்று ஒரு மணித்தியாலம்.. வேர்த்து விறுவிறுக்க வேண்டிய அவசியம் வராது.

எல்லாம் நாம் எம் வாழ்வை திட்டமிடுவதில் தான் தங்கியுள்ளது. அடுத்தவனுக்கு ஆடம்பரம் காட்ட வெளிக்கிட்டா விளைவு மோசமாகிடும்..! தனக்கு எது உகந்ததோ அதன் கீழ் மகிழ்வோடு வாழப் பழகிக் கொள்வதே சிறப்பு. இதனை மனிதர்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே போதும். வாழ்வு சிறக்கும். :)

நீங்கள் கூறுவது சரியே ஆனால் அதே நேரம் உடற்பயிற்சி என்பது செய்பவரின் நோக்கத்திலேயே தங்கியுள்ளது, சிலபேர் மேலதிகமான கலோரிகளை எரித்து கொழுப்பு அற்று உற்ச்சாகமாக வாழ விரும்புவார்கள் அவர்களுக்கு நீங்கள் கூறியது பொருத்தமானதே. சிலபேர் உடலை பெரிதாகவும் கட்டுடனும் வைத்திருக்க விரும்புவார்கள் இவர்கள் மேலதிகமான கலோரிகளை உள்ளெடுத்து பின்பு அவற்றை உடற்பயிற்சி கூடத்தில் தேவைக்கு ஏற்றவாறு எரித்து தமக்கு தேவையான வடிவத்தை பெற்றுக்கொள்வார்கள். கட்டுடல் நீங்கள் கூறியவற்றால் பெற்றுக்கொள்ள முடியாது.

நீங்கள் அதிகம் பயப்பிடுறீங்க. :)

மனதை இலகு படுத்தி வைத்துக் கொள்ளப் பழகுவதோடு.. நாளாந்த வாழ்க்கையையே உடற்பயிற்சி மிக்க ஒரு வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் நல்லது. உணவு வழக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் நன்று.

எம் முன்னோர்கள்.. தோட்டம் அது இதெண்டு இறங்கி.. நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ்ந்துள்ளனர். இன்றைய சனத்தொகையிலும் சில மக்கள் நாளாந்த வாழ்வில்.. சைக்கிள் ஓடுறது.. நடக்கிறது.. ஓடிறது.. வீட்டு வேலைகளை உபகரணங்களின் உதவி இன்று பெரும்பாலும் செய்து கொள்வது.. காரை கைவிடக் கூடிய தூரத்திற்கு நடையை வழக்கமாக்குவது.. என்று எத்தனையோ செய்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி.. வாழ்ந்து வந்தால்.. தீவிர உடற்பயிற்சியகங்களுக்குச் சென்று ஒரு மணித்தியாலம்.. வேர்த்து விறுவிறுக்க வேண்டிய அவசியம் வராது.

எல்லாம் நாம் எம் வாழ்வை திட்டமிடுவதில் தான் தங்கியுள்ளது. அடுத்தவனுக்கு ஆடம்பரம் காட்ட வெளிக்கிட்டா விளைவு மோசமாகிடும்..! தனக்கு எது உகந்ததோ அதன் கீழ் மகிழ்வோடு வாழப் பழகிக் கொள்வதே சிறப்பு. இதனை மனிதர்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே போதும். வாழ்வு சிறக்கும். :)

நீங்கள் கூறுவது சரியே, உடற்பயிற்சி செய்வதில் கடைப்பிடிக்கவேண்டிய பழக்கவழக்கங்கள் உணவு உட்கொள்ளும் முறைகள் உடற்பயிற்சி செய்யும் சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. நான் பலபேரை பார்த்திருக்கிறேன் உடற்பயிற்சி கூடத்துக்கு வந்து இரண்டு மாதத்தில் தமக்கு எந்த மாற்றமும்  வரவில்லையே என்று கவலைப்படுவார்கள் :) . கட்டான உடற்பயிற்சி செய்யும் ஒருவர் ஒருநாளைக்கு குறைந்தது 6000 கலோரிகளை உள்ளடுக்க வேண்டும் ஆனால் இவர்கள் உண்பதோ வெறும் ஒன்று இரண்டு பெகர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, இணைப்பை முழுமையாக வாசித்தேன். தீவிர உடற்பயிற்சி பக்கவாதத்துக்கு ஓர் காரணமா என்று கூகுளில் தேடிப்பார்க்க உள்ளேன். எதை செய்தாலும் அதில் ஒரு பக்கவிளைவு உள்ளது போல் இருக்கின்றது, இனிமேல் மீண்டும் காட்டுக்குள் சென்று வேட்டையாடி வாழவேண்டியது தான் :D .

எனது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான அங்கம் அதையும்விட போதை அல்லது வெறி என்று கூறலாம். கிழமையில் 7 நாட்களும் மாதத்தில் 30 நாட்களும் தொடர்ந்து செய்வேன். எனது அனுபவங்களை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றேன். ஒரு தனி திரி திறப்போம். எந்த காரணத்துக்காகவும் உடற்பயிற்சியை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

உங்கள் அனுபவங்கள் நிச்சயம் பலருக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன். நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளின் படங்களோடு அவற்றின் தேவைகளை விளைவுகளை பாதுகாப்பான செய்முறைகளை சுருங்க விளக்கமாக எழுதினீர்கள் என்றால் பலருக்கும் உதவும் தலைப்பாக அது மாறி நிற்கும். அதைப் பகிர்ந்து கொள்வதால்.. உங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தி கிட்டும். :)

கனடாவில் ஊட அதிகம் கொல்லும் விடயங்களாக மாரடைப்பும் பக்கவாதமும் உள்ளன. அண்மையில் மரணமான பிரபல 'சூப்' கடைகளின் உரிமையாளர் இரவி கூட பக்கவாதத்தால் இறந்திருந்தார்.

குடும்ப வைத்தியரிடம் முறையான வருடாந்த இலவச பரிசோதனைகளை செய்வதும் இவற்றை அடையாளம் காண உதவும். ஆனால் பலரும் அந்த பொன்னான  நேரத்தை ஒதுக்குவதில்லை.

எங்கட சீனிய.. நண்பருக்கு நடந்தது. அவர் உடற்பருமன் கூடுது என்றிட்டு.. தீவிர உடற்பயிற்சியகம் ஒன்றில் இணைந்து தினமும் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தார். திடீர் என்று முதுகு வலி ஏற்பட்டது. பின்னர் அது காலுக்குப் பரவியது. சில வாரங்களில் அவரின் உடலின் ஒரு பகுதி செயலிழந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 23/4.

PE-SpinalFractures_Figure3.jpg

தீவிர பாரம் தூக்கும் உடற்பயிற்சியால்.. முள்ளந்தண்டில் உள்ள கசியிழையத் தகடுகளில் ஏற்பட்ட விலகலே அதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டு..தொடர் சத்திர சிகிச்சைகளின் பின் மீண்டும் தேறி மெது மெதுவாக நடக்கப் பயின்று கொண்டார். இதனால் அவரின் படிப்பும் பாழானது.

அதிக எடையுள்ள  squat & dead lift செய்திருப்பார்போல  :( 

  • கருத்துக்கள உறவுகள்

. திடீர் என்று முதுகு வலி ஏற்பட்டது. பின்னர் அது காலுக்குப் பரவியது. சில வாரங்களில் அவரின் உடலின் ஒரு பகுதி செயலிழந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 23/4.

PE-SpinalFractures_Figure3.jpg

தீவிர பாரம் தூக்கும் உடற்பயிற்சியால்.. முள்ளந்தண்டில் உள்ள கசியிழையத் தகடுகளில் ஏற்பட்ட விலகலே அதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டு..தொடர் சத்திர சிகிச்சைகளின் பின் மீண்டும் தேறி மெது மெதுவாக நடக்கப் பயின்று கொண்டார். இதனால் அவரின் படிப்பும் பாழானது.

முள்ளந்தண்டு விடயமாக எழுதியபடியால் கேட்கின்றேன்

முள்ளந்தண்டு விலகினாலோ அல்லது வளைந்தாலோ

(மேலிருந்து கீழாக ஓரளவு அடிப்பகுதியில் ) 

அதைக் குணப்படுத்த முடியாது என்ற நிலை வருமா?

அப்படியானவர்கள் திண்ம உணவுகளை உட்கொள்ளும்போது

முள்ளந்தண்டில் அல்லது அடிவயிற்றுப் பகுதியில்  வலி அதிகமாவது ஏன் ?

அந்த வலிக்கு வழங்கப்படும் மாத்திரைகளினால், அவற்றை  

அதிகளவில் பாவிக்கும்போது ஈரல் பாதிப்படையச் சந்தர்ப்பம் இருக்கின்றதா ?

நேரம் இருந்தால் உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்  நெடுக்ஸ்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில், காலையில் எழுந்ததும் எடுக்கும் இரத்த அழுத்த வாசிப்பு மற்றைய நேரங்களை விட கூடுதலாக இருந்தால் அவர்களுக்கு பக்க வாதம், மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறுகிறார்கள்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது (முக்கியமாக வேகப் பயிற்சிகள்) அவரவரின் வயதிற்குரிய இதயத் துடிப்பு அளவைத் தாண்டாதவாறு செய்வது நல்லது. இதயத் துடிப்பு உயர் எல்லைக்கு வந்ததும் சிறிது நேரம் (2,3 நிமிடங்கள்) ஓய்வெடுத்த பின் பயிற்சியைத் தொடர்வது நல்லது. 

உங்கள்  வயது, பருமன் அல்லது வேறு நோய்கள் உள்ளனவா என்பதற்கேற்ப  எவ்விதமான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதை குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெறுவது நலம். 

முள்ளந்தண்டு விலகினாலோ அல்லது வளைந்தாலோ

(மேலிருந்து கீழாக ஓரளவு அடிப்பகுதியில் ) 

அதைக் குணப்படுத்த முடியாது என்ற நிலை வருமா?

தெரிந்த ஒருவர் (பல் பொருள் அங்காடியில் இரவில் பொருட்களை அடுக்கும் வேலை செய்பவர்) முள்ளந்தண்டு விலகி சென்ற வருடம் சத்திர சிகிச்சை செய்து, சில கால ஓய்விற்குப் பின் மீண்டும் வேலைக்குச் செல்கிறார்.

தகவலுக்கு நன்றி தப்பிலி

சத்திர சிகிச்சையின்போது  ஏதாவது தவறுகள் நடைபெற்றால்

ஆளே நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் அல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளந்தண்டு விடயமாக எழுதியபடியால் கேட்கின்றேன்

முள்ளந்தண்டு விலகினாலோ அல்லது வளைந்தாலோ

(மேலிருந்து கீழாக ஓரளவு அடிப்பகுதியில் ) 

அதைக் குணப்படுத்த முடியாது என்ற நிலை வருமா?

அப்படியானவர்கள் திண்ம உணவுகளை உட்கொள்ளும்போது

முள்ளந்தண்டில் அல்லது அடிவயிற்றுப் பகுதியில்  வலி அதிகமாவது ஏன் ?

அந்த வலிக்கு வழங்கப்படும் மாத்திரைகளினால், அவற்றை  

அதிகளவில் பாவிக்கும்போது ஈரல் பாதிப்படையச் சந்தர்ப்பம் இருக்கின்றதா ?

நேரம் இருந்தால் உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன்  நெடுக்ஸ்

1806_l_a0d95ead8707d43e.jpg

நடுத்தர வயதினரில் முள்ளந்தண்டு டிஸ்க் பிரச்சனை வந்தால் அதனை சத்திர சிகிச்சை மூலம் சரி செய்ய முயற்சிப்பார்கள். பிரச்சனை என்னவென்றால்.. டிஸ்க் விலகி முண்ணானில் இருந்து வரும் நரம்புகளை தேசப்படுத்தி இருப்பின் அது உடலுறுப்பு இயங்கா நிலைக்கு குறிப்பாக கால்கள் அல்லது இடுப்புக் கீழ் இயங்கா நிலைக்கு கொண்டு செல்லலாம்.

அந்த வகையில்... சிறிதளவு.. முதுகு வலி.. கால் வலி.. கை வலி ஏற்படும் போதே உங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஆலோசனை பெற்றுக் கொள்வதும் அதற்கான காரணங்களை கண்டறிந்து ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதும் இதற்கு நல்ல தீர்வாகும்.

spinedark.jpg

குறிப்பாக வயதானவர்களில் தைரொக்சின் பிரச்சனை காரணமாக எலும்புகள் தேய்மானம் அடைவதால் இந்தப் பிரச்சனை வர அதிகம் வாய்ப்புள்ளது. அதனை சீர்செய்வது கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும்..! எனவே தைரொக்சின் மற்றும் கல்சியம் குறைபாடு உள்ளவர்கள் இதில் அவதானமாக இருப்பது அவசியம். தைரொக்சின்.. மற்றும் கல்சியம் பிரச்சனைகளை அறிய இரத்தப் பரிசோதனை அவசியம். உங்கள் குடும்ப வைத்தியரிடம் உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் மற்றைய கூறுகளோடு இவற்றையும் பரிசோதிக்க பரிந்துரைப்பார்கள்.

back-pain-relief-1.jpg

மேலும் அதி பார எடை தூக்கி.. வேலைகள் செய்வோரும் இதில் கவனமாக இருத்தல் வேண்டும். தொடர்ந்து கணணியின் முன்னால் வளைந்து அல்லது குனிந்து கொண்டிருப்பதும் கூட ஆபத்தான விளைவுகளை உண்டு பண்ணலாம்.

வலி அல்லது நோ என்பது நரம்புகள் தொடர்ந்து அழுத்ததுக்கு உள்ளாகும் போது தூண்டப்படும் மின் அலைத்தாக்கத்தின் விளைவாக.. தசைகள் தொடர்ந்து சுருங்குவதால்.. ஏற்படுகின்றன. திண்ம உணவுகள் உணவுக் கால்வாய் சுவரில்.. கூடிய அழுத்தத்தை பிரயோகிப்பதால் அழுத்தப்படும் நரம்புகள் அதிகம் தூண்டப்படுவதால் அப்போது வலி அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.!

நீங்கள் பாவிக்கும் மருந்தின் தன்மை அளவைப் பொறுத்தது பக்க விளைவு. பொதுவாக நோவுக்கு பெயின் கில்லர் அல்லது நோவு நீக்கிகள் தான் தருவார்கள். அவை நரம்புகளின் தொழிற்பாட்டில் செல்வாக்குச் செய்வதால்..  நோயாளிகள் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்படலாம்.

ஈரல் என்பது எமது உடலில் உள்ள இரசாயனத் தொழிற்சாலை. நஞ்சுகளை அகற்றுவது. உள்ளெடுக்கும்.. மதுபானத்தை அழிப்பது.. இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்துவது.. யூனியா உற்பத்தி என்று.. நிறையத் தொழில்களைச் செய்கிறது.

அதேபோல்.. சில மருந்துகள் ஈரலால் செயலிழக்கச் செய்யப்படும் போது ஈரல் கலங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இப்போ மது அருந்துபவரின் அற்ககோல்.. ஈரலில் தான் பெரிதும்..அழிக்கப்படும். அதனால் தான் மது அருந்துவோரின் ஈரல் கலங்கள் கூடிய அளவு பாதிக்கப்படுகின்றன. இந்தப் பாதிப்பு கூட பிற நோய்களுக்கு அல்லது குறைபாடுகளுக்கு மக்களை இட்டுச் செல்லலாம்.

எனவே தீர்க்கமாக சொல்வதானால்.. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை நீங்கள் உள்ளெடுக்கும் மருந்து வகைகள்.. அவற்றின் அளவைப் பொறுத்தே ஈரலின் பாதிப்பு பற்றி தெளிவாகக் கூற முடியும். மற்றும்படி பொதுப்படையாகத் தான் கருத்துச் சொல்ல முடியும் வாத்தியார்.

வருமுன் காப்போம். உடல் நலம் பேணுவோம்..! மகிழ்வான வாழ்வை தரிசிப்போம். :wub::)

{இந்தக் காணொளியில் 5:00 இருந்து பாருங்கள்...}

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்தில் இருக்கும் எனது நண்பருக்கு இப்படியான பிரச்சனை இருக்கின்றது.

எப்படி முள்ளந்தண்டு விலகியது எனத் தெரியவில்லை .

ஆனால் அவருக்கு தொடர்ந்தும் ஒரே வலியாக இருக்கும் .

ஒல்லாந்தில் மருத்துவ வசதிகள் குறைவு என்றும் மருத்துவர்கள்  நோயாளிகளுக்கு 

விரைவான சிகிச்சைகளை அளிப்பதில்லை என்று கேள்விப்பட்டதுண்டு .

சத்திர சிகிச்சையால் குணப்படுத்தமுயற்சி செய்யும்போது  ஆபத்தான 

நிலைக்கு அவர் தள்ளப்படலாம் என எனது நண்பர் அஞ்சுகின்றார்.

ஒல்லாந்து நாட்டு மருத்துவர்கள் சத்திர சிகிச்சை தான் ஒரேவழி எனக் கூறினாலும் 

அவருக்கு இன்னும் அது நடக்கவில்லை . அவர் பயத்தினால் சத்திரசிகிச்சைக்கு 

 சம்மதிக்கவில்லையா அல்லது மருத்துவர்கள் இழுத்தடிக்கின்றார்களா எனத் தெரியவில்லை.

அவரால் எந்த விதமான திண்ம உணவுகளையும் உண்ணமுடிவதில்லை 

எப்போதும் திரவ உணவுகள் தான் .அதையும் கூடிய அளவு சாப்பிட்டால் 

வலி அதிகமாகிவிடும் 

வலி காரணம்மாக அதிகமான மருந்து வில்லைகளை பாவிக்கின்றார். 

அதனால்தான் கேட்டேன் 

உங்கள் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றிகள் நெடுக்ஸ்  

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

முள்ள‌ந்த‌ண்டு வ‌ளைவ‌து/முறிவ‌து (fracture) என்ப‌து திடீரென‌ ஏற்ப‌டும் மோத‌ல் விப‌த்துக‌ளில் தான் அனேக‌மாக‌ ந‌ட‌க்கும். நெடுக்கு குறிப்பிட்ட‌ அளவுக்க‌திக‌மான‌ ப‌யிற்சிக‌ளின் போது ஏற்ப‌டும் முள்ள‌ந்த‌ண்டுப் பாதிப்பு உண்மையில் எலும்புப் ப‌குதியில் பாரிய‌ சேத‌ம் இல்லாம‌ல் முள்ள‌ந்த‌ண்டுக‌ளின் இடையே "அதிர்வு தாங்கியாக‌"‌ (shock absorbance) வைக்க‌ப் ப‌ட்டிருக்கும் க‌சியிழைய‌த் த‌ட்டுக‌ள் (discs)  நெரிப‌டுவ‌தால் ஏற்ப‌டும். இந்த‌த் த‌ட்டுக‌ளின் ந‌டுவே ஜெலி போன்ற‌ ப‌தார்த்த‌ம் இருக்கும். த‌ட்டுக‌ள் ஏதாவ‌து கார‌ண‌த்தால் சேத‌மானால், அந்த‌ ஜெலி போன்ற‌ ப‌தார்த்த‌ம் பிதுக்க‌ப் பட்டு வெளி வ‌ந்து முள்ள‌ந்த‌ண்டினுள் க‌ற்றையாக‌ ஓடும் முண்ணான் ந‌ர‌ம்புக‌ளை அழுத்தும். இதுவே ந‌ர‌ம்புக‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டு வ‌லியும், தாக்க‌த்தின் உச்ச‌த்தில் இய‌க்க‌ செய‌லிழ‌ப்பும் ஏற்ப‌ட‌க் கார‌ண‌ம். உங்க‌ள் கேள்வி இந்த‌ க‌சியிழைய‌த் த‌ட்டு வில‌க‌ல் ப‌ற்றிய‌தெனில்,

1. இத‌ற்கு சிகிச்சை உண்டு. அனேக‌மாக‌ தாக்க‌த்தைப் பொறுத்து சிகிச்சை இருக்கும். ச‌த்திர‌ சிகிச்சை ப‌ல‌னைத் த‌ர‌க்கூடிய‌ சிகிச்சை. பாதிக்க‌ப் ப‌ட்ட‌ க‌சியிழைய‌த் த‌ட்டை எடுத்து விட்டு மேல் கீழ் முள்ள‌ந்த‌ண்டெலும்புக‌ளை உட‌லின் வேறு ப‌குதியில் இருந்து எடுத்த‌ எலும்புத் துண்டொன்றைப் பாவித்து ஒட்டி விடுவார்க‌ள். இத‌னால் பாரிய‌ பின் விளைவுக‌ள் ஏற்ப‌டாது. நோயாளியின் வ‌ய‌தைப் பொறுத்து சிகிச்சைக்குப் பின்ன‌ர் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும்.

(சிகிச்சை செய்ய முடியாத‌‌/அது ப‌ல‌ன‌ளிக்காத‌ நிலைமை வ‌ருமா என்ப‌தை நோயாளியைப் ப‌ரிசோதித்த‌ ந‌ர‌ம்பிய‌ல் ச‌த்திர‌ சிகிச்சை நிபுண‌ர் ஒருவ‌ர் ம‌ட்டுமே சொல்ல‌ முடியும்)

2. அடி வ‌யிற்று வ‌லி ஏன் என‌த் தெரிய‌வில்லை. இடுப்பில் க‌சியிழைய‌த் த‌ட்டுப் பிர‌ச்சினையெனில் இரைப்பையின், குட‌லின் அசைவுக‌ள் வ‌லியோடு தொட‌ர்புடைய‌தாக‌ இருக்குமோ? ஒரு வைத்திய‌ர் தான் சொல்ல‌ முடியும்.

3. பாவிக்கும் வ‌லி நிவார‌ண‌ ம‌ருந்துக‌ளைப் பொறுத்து ஈர‌ல் பாதிக்க‌ப் ப‌ட‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌ம் உண்டு. இண்டோமெத‌சின் (Indomethacin), டைக்லொஃபெனாக் (diclofenac) போன்ற‌ ம‌ருந்துக‌ள் உட‌லில் இருந்து அக‌ற்ற‌ப் ப‌ட‌ ஈர‌ல் அதிக‌ம் வேலை செய்ய‌ வேண்டும். என‌வே நீண்ட‌ கால‌ப் பாவ‌னையினால் ஈர‌லுக்குப் பாதிப்பு ஏற்ப‌ட‌லாம் என்ப‌து உண்மை.

(பிற்குறிப்பு: உங்க‌ள் கேள்விக‌ள் ஒரு உண்மையான‌ நோயாளியைப் ப‌ற்றிய‌தாக‌த் தெரிகின்ற‌ன‌. ஒரு ந‌ர‌ம்பிய‌ல் ச‌த்திர‌ சிகிச்சை நிபுண‌ரிட‌ம் நேர‌டியான‌ ஆலோச‌னை பெற வேண்டும் என்ப‌தே என் க‌ருத்து!)    

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாதுகாப்பு மற்றும் உடலியக்க இலகு வழிப்படுத்தல்.. வழிமுறைகளைப் பின்பற்றாத..தீவிர உடற்பயிற்சி மட்டுமல்ல.. கோப்பி அருந்துதல்.. தீவிரமாய் முக்கி மூக்குச் சிந்துதல்.. கூட பக்கவாதத்துக்கு வழி சமைக்கலாம். கடுமையாக முக்கி கக்கா (நம்பர் 2) போறது கூட ஆபத்தானது..! :)

மனுசர் என்னத்திலையெண்டு தான்... அவதானமாக இருக்கிறது.

வர, வர.... மனுச வாழ்க்கையே.... வெறுத்துப் போகுது. பேசாமை மிருகங்களாக பிறந்திருக்கலாம்.

அதுகள் முக்கி மூக்குச் சீறுதுகளா, முக்கி கக்கா போகுதுகளா....

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ். :)

  கடுமையான இடைவிடாத உடற்பயிற்சியினால் தனக்கு பக்க வாத நோய் வந்ததாக பிரித்தானிய  பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளர் 'அன்ரூ மார்' கூறியுள்ளார்.

Andrew Marr says he's lucky to be alive after stroke

Andrew Marr says he's lucky to be alive after stroke

Broadcaster Andrew Marr has appeared on television for the first time since suffering a major stroke, saying he feels "lucky to be alive".

Speaking on his own programme, BBC Two's Andrew Marr Show, he said he had been "heavily overworking" in the year before the stroke, which was sparked by an intensive rowing machine session.

The 53-year-old presenter, who fell ill in January, said he was doing "a lot of physio" to help with his walking.

He added he would be returning to work.

'Mostly my own fault'

Appearing in a pre-recorded interview on Sunday's programme, the journalist and television presenter took part in a discussion on the legacy of Margaret Thatcher before talking about his illness.

He told guest presenter Sophie Raworth: "I had a major stroke - I'm frankly lucky to be alive.

"I had been heavily overworking - mostly my own fault - in the year before that. I'd had two minor strokes it turned out, in that year, which I hadn't noticed."

Marr explained he had fallen into the "terrible" trap of believing what he read in newspapers, which encouraged people to "take very intensive exercise in short bursts - and that's the way to health".

He went on: "I went onto a rowing machine and gave it everything I had, and had a strange feeling afterwards - a blinding headache, and flashes of light - served out the family meal, went to bed, woke up the next morning lying on the floor unable to move.

"Beware rowing machines, or at least beware being too enthusiastic on rowing machines would be my message to the nation," he said.

Marr said the stroke had not impaired his voice or memory but had affected "the whole left hand side of my body, which is why I'm still not able to walk fluently".

"I do a kind of elegant hobble is the best I can manage - my left arm isn't much good yet and I've got a lot of physio still to do," he said.

'Coming back'

However, the presenter added that, after concentrating on a period of "intensive physio", he planned to return to work.

"I'm certainly coming back. I've got a lot more to say about it all, but I'm going to wait until I've gone through the physio to do so."

Born in Glasgow, Marr began his career in journalism on the Scotsman newspaper in 1981, later moving to London to become its political correspondent.

He was part of the team which launched the Independent in 1986, later becoming its editor.

He joined the BBC as political editor in May 2000.

Marr has also presented a number of history programmes along with his politics show and has had five books published.

He is married to journalist Jackie Ashley and has three children.

His programmes, the Andrew Marr Show and Radio 4's Start The Week, continue to be broadcast with guest presenters in his absence.

http://www.bbc.co.uk/news/uk-22141372

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் பாரம் தூக்கி இயந்திரங்களை முன் பின் இயக்கிய அனுபவமின்மையால் இருந்து கொண்டு அளவுக்கதிகமாக பாரம் தூக்கி L4 L5 டிஸ்க் விலகினமையால் நீண்ட நாள் சிகிச்சை ஓய்வு என்று இருந்து இப்போதும் இந்த நோவால் மிகவும் கவனமாக இருக்கிறேன்.இதை நன்று அலசி ஆராய்ந்தபடியால் நிறையவே அனுபவம் இருக்கிறது.இன்றும் வீட்டை விட்டு வெளிக்கிடும் போது பாரம் தூக்கும் போது அணியும் பெல்ற் உள்ளுக்கு போட்டு தான் புறப்படுவேன்.

அதே மாதிரி 98இல் சிறிய மாரடைப்பு என்று 2 ஸ்ரென்ந் வைத்தார்கள்.அன்று வரை பிரச்சனை இல்லாமல் இருக்கிறேன்.(வீட்டுகாரி அவ்வளவோ கவனம்).இந்த ஸ்ரென்ந் வைத்த ஆஸ்பத்திரியில் தான் எம் ஜீ ஆர் சிகிச்சை எடுத்தார் ஆனபடியால் அந்த நேரம் எனக்கு சந்தோசமாக இருந்ததே தவிர எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படவே இல்லை.

இப்போது இரண்டிலுமே ஏறக்குறைய டாக்ரர் தான்.(அவ்வளவோ அனுபவம்)

மிகவும் பயனுள்ள தகவல்களை தந்த நெடுக்ஸ்க்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

(பிற்குறிப்பு: உங்க‌ள் கேள்விக‌ள் ஒரு உண்மையான‌ நோயாளியைப் ப‌ற்றிய‌தாக‌த் தெரிகின்ற‌ன‌. ஒரு ந‌ர‌ம்பிய‌ல் ச‌த்திர‌ சிகிச்சை நிபுண‌ரிட‌ம் நேர‌டியான‌ ஆலோச‌னை பெற வேண்டும் என்ப‌தே என் க‌ருத்து!)    

உங்கள் விரிவான பதிவிற்கும் விளக்கத்திற்கும்  நன்றிகள் ஜஸ்ரின்

உங்கள்  பதிவிற்கும்   நன்றிகள் ஈழப்பிரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.