Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்காது : இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர்களுக்கு, இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர் என்று, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழுவில் அங்கம் வகித்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய எம்.பி.,க்கள் குழு, அண்மையில் இலங்கைக்கு வந்து இந்தியா சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

 

இந்நிலையில், இலங்கை பயணம் முடித்து, இந்தியா திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், அவர்களது விஜயம் குறித்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

 

இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில், சற்று சுறுசுறுப்பு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட்டம் இருந்தது. இருப்பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது. இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.

 

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை, மாறிக் கொண்டே வருகிறது. தமிழர் பகுதிகளில்,சிங்களக் குடியேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல்லாம், சிங்களவர்கள் கைப்பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம். ஓரளவு கட்டிக் கொடுத்துள்ளனர். மற்றப்படி, சொல்லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

இலங்கையில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க்கும் போது, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அரசாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.

 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. செப்டெம்பர் வரை, அந்தத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.

 

பொலிஸ் அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர்களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண்டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது.

 

தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்றனர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாகவும் அவர்கள் குறை சொல்கின்றனர்.

 

அங்கு நடந்த போரின்போது இடம்பெற்ற அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை. இலங்கையில், தமிழ்த் தலைவர்களான சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம்.

 

நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரையும் சந்தித்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3983

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் இத்தனை அவலத்திற்கும் காரணம் இந்தியாதான் என்பதை மைபோட்டுப் பார்க்கவேண்டியதில்லை. ஓநாயின் வால் என்றாலும் அதனால் தடவப்படும்போது ஒரு இதம் ஏற்படத்தான் செய்கிறது.

 

இந்த செய்தியின் ஆங்கிலப் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் சபை, அம்னெஸ்டி, ICG, பொதுநலவாய நாடுகள், அமெரிக்க ராஜாங்க அமைச்சு எல்லாவற்றுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.  சம்பந்தப்பட்ட புலம் பெயர் அமைப்புக்கள் இதில் கவனம் செலுத்தவும்.

Edited by மல்லையூரான்

இந்தியாவும் அமேரிக்கா போன்று உதவிகளை குறைக்க வேண்டும் !

தனி மனித தாக்குதல் கூடாது என்று யாழ் இணையத்தின் விதிமுறையில் இருக்கு! இங்கு மதிவனங் என்பவர் ஒட்டு மொத்த தமிழினத்தையுமே கேலி பேசுவது நிர்வாகத்துக்கு புரியவில்லையா? புரிந்தும் இரட்டை வேடம் போடுறீங்களா? மோகன் அண்ணா நடத்திய யாழ் களத்துக்கும் இப்போ வேறு சிலர் நடத்தும் யாழ் களத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு...! அதனாலேயே நான் கருத்து எழுதுவதை தவிர்த்தே வருகிறேன். இருந்தாலும் சிலர் எழுதும் கருத்து என்னை எழுதவைக்குது... தொடர்வேன்....

 

சில உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி. மனித உரிமைகள் நிலைமை, பெண்களின் பாதுகாப்பு பற்றியும் உண்மைகளைக் கூறியிருக்கலாம்.  

மேற்குவங்காளத்தில்  பலர் தமிழரின் பிரச்சினைகளை விளங்கி தமிழர் சார்பாக இருந்து வந்துள்ளனர்.

ஆனால் இந்தக் குழுவிலுள்ள ஏனையவர்கள் வெறும் பொருளாதார நோக்கொடு மட்டுமே சிந்திப்பதாக தெரிகிறது. அவர்களிடத்தில் மானிடம், மனித உரிமை பற்றிய உணர்வுகள் உள்ளதா அல்லது கைக்கூலிகளாக அவர்களை தெரிவு செய்து அனுப்பியவர்களுக்கு விசுவாசமாக இருந்து தாங்கள் வெறும் ஜடங்கள் என்பதை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.