Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடைப் பயணத்தின்போது வைகோ மயங்கி வீழ்ந்தார்! பயணம் தொடர்கிறது!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தற்போது தமிழகத்தில், நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று நடைப்பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்தார். கடும் வெயிலின் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகி, மயக்கம் அடைந்தார் என தெரியவருகிறது.

மயக்கம் அடைந்த நிலையிலும் நடைப் பயணத்தை கைவிடாது, டாக்டர்கள் சிகிச்சைக்குப்பின், மீண்டும் நடைபயணத்தை தொடர்ந்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரது மூன்றாம் கட்ட நடைபயணம், நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து தொடங்கியது.

முதல் நாளில் 20 கி.மீ., பயணம் மேற்கொண்ட வைகோ, கோட்டூரை அடைந்தார். அன்று இரவு கோட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பின், இரவு அங்குள்ள ம.தி.மு.க. பிரமுகர் வீட்டில் தங்கினார்.

அதன்பின் நேற்று காலை நடைபயணத்தை தொடக்கிய அவர், 5 கி.மீ. தொலைவு நடந்தார். மஞ்சநாயக்கனூரை அடுத்த பூபாலபருத்திக்கு அருகே சென்ற போது, கடும் வெயிலின் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகி, மயங்கினார்.

 

உடனடியாக அவரை தொண்டர்கள், அருகிலிருந்த தோட்டத்து வீட்டுக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

சிறிது நேரம் ஓய்வுக்குப்பின், வைகோ மீண்டும் நடைபயணத்தை தொடக்கி விட்டார். நேற்று இரவு உடுமலை அருகில் உள்ள தேவனூர்புதூரை அடைந்த வைகோ, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். மதியம் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து குறிப்பிட்டு பேசினார்.

பின்னர் கரட்டுமடத்தில் உள்ள தொண்டர் வீட்டில் நேற்றிரவு தங்கினார். அவரது நடைபயணம், இன்று உடுமலை பகுதியில் தொடர்கிறது.

வைகோவின் நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்ட போது,  திருப்போரூரில் இருந்து, சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பாதையில் சென்ற முதல்வர் ஜெயலலிதா, காரில் இருந்து இறங்கி, “உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்திருந்தார்.

தற்போது வைகோவுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையிலும் அவர் நடைப் பயணத்தை தொடர்வது, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு கவலையையும், அதே நேரத்தில் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

http://www.naamthamilar.ca/?p=115634.html

 

 

 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்களின் தொடர் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும்..! தமிழக மக்களும் திமுக, அதிமுக என்று சுற்றிச் சுழலாமல் மக்களுக்கான தலைவர்களை இனங்கண்டுகொள்ள வேண்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்களின் தொடர் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும்..

 

அத்துடன் அவர் நீடூழி  வாழணும்

தமிழீழத்தை அவர் கண்ணால் பார்க்கணும்

வைகோ  அவர்கள் தனது உடல் நலத்தில்  கவனமாக இருக்கவேண்டும்.

 

வைகோ செல்ல  போன்ற தலைவர்களை அவர்களின் நேர்மைகளை நியாயத்தை மக்கள் மத்தியில் கொண்டு ஊடகங்கள் உதவவேண்டும்.

வைகோ அவர்களின் தொடர் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும்..

அத்துடன் அவர் நீடூழி வாழணும்

தமிழீழத்தை அவர் கண்ணால் பார்க்கணும்

  • கருத்துக்கள உறவுகள்
வைகோ அண்ணன் அவர்களின் தொடர் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும்..
 
தமிழ் ஈழக்கொடி வானில் பறக்கும்போது அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் எமது மண்ணில் இராணுவமரியாதையுடன்  அவர்க்கு செங்கம்பள வரவேற்ப்பு வழங்கி கௌரவிக்க வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

 

 வைகோ மேற்கொண்டுள்ள நடைப் பயணத்தின் நோக்கம் நன்றாக இருந்தாலும்... இப்போது அவரின் வயதுக்கு, ஒரு நாளைக்கு... 20 கிலோ மீற்றர் என்பது அதிகம். வைகோ தனது உடல் நலத்திலும்... அக்கறை செலுத்த வேண்டும்.  

வைக்கோ  தனது உடல் ஆரோக்கியத்தைப் பேணவேண்டும். வயதுக்கு அதிகமாகஉழைப்பை செய்வது மனக் கஷ்டமாக உள்ளது.

சொகுசாக நோகாமல் அரசியல் நடத்தும் சம்பந்தன் போன்றவர்கள் வைக்கோவை பார்த்து கொஞ்சமாவது திருந்துவார்களா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.