Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருவ வயதக் காதலால் அரங்கேறிய செங்கலடி இரட்டைக்கொலை குறித்த உண்மைகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chenkalady-murder-seithy-20130417-150.jp

மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தனது சுய முயற்சியினால் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்து வந்த 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது அன்பு மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

  

செங்கலடி நகரைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் பொலிஸாரின் ரோந்து கண்காணிப்புக்குரிய நகர் என்று கூறமுடியும். அப்படியிருந்தும் இந்த படுகொலைச் சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்குப் புலப்படாமல் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செங்கலடியைச் சேர்ந்த விப்ராவை விரும்பி திருமணம் செய்தவர். இவர்களுக்கு வைஷ்னவி (வயது 21) தக்ஷனா (வயது 16) என இரு புதல்விகள் உள்ளனர். இந்த இரு பெண்மக்களையும் மிகவும் அன்போடு வளரத்து வந்தார்கள். ஆரம்பத்தில் சிறியளவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அவர் தனது மனைவியின் பக்கபலத்துடன் பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலைக் கொண்டது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் விதியின் விளையாட்டு சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வர்த்தகரும் மனைவியும் படுக்கையறையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். பொலிஸார் சற்று நேரத்திலேயே இவ்விடத்திற்கு விரைந்த போதிலும் கொலையாளிகள் தொடர்பான எந்தவொரு தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இக்கொலைகள் முன்மாதிரியைப் பின்பற்றி நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.

 

எனினும் குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துடுப்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்தனர். அதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை.

 

எவ்வாறிருப்பினும் பொலிஸார் முதலில் குடும்ப உறுப்பினர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் அதன் மூலமேனும் பொலிஸாருக்கு துப்புத் துலங்கவில்லை. பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் சிஐடி யினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புலனாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டார்கள். ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஞ்சன கொடகொம்பர தலைமையில் பொலிஸ் பரிசோதகர் கிரான் செனவிரெடன, சார்ஜனட்களான நஜிமுடீன், சறுக், ரபிக் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான தாஹிர், அனுராத, புருசோத்மன், நலிம், வன்னிநாயக, கிஸ்ஸானாயக்க மற்றும் விதான ஆகியோரைக் கொண்ட விஷேட பொலிஸ் குழுவொன்றும் விசாரணையில் ஈடுபட்டது அதனையடுத்து ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் இளைய மகளின் காதல் விவகாரம் கசியத் தொடங்கியது. இதையடுத்து காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்படார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

 

கொல்லப்பட்டவர்களது இளைய மகள் ரகு தலக்ஷனா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரே சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர். பொலிஸ் விசாரணையையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 24 ஆந் திகதி வரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் (பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால்) தனியான அறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். பாடசாலையிலும் ரியுசன் வகுப்பறையிலும் பழிதீர்க்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர். கடந்த சித்திரை மாதம் 7 ஆந் திகதி மாலை ரகு தனது மனைவி மக்களுடன் புத்தாண்டு உடு துணிகள் வாங்குவதற்காக மட்டக்களப்பு நகருக்குச் சென்றார். அந்த நேரம் தொடக்கம் இளைய மகள் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக எஸ்எம்எஸ் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார். காதலனும் நண்பர்களும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளைப் பெற்று இடித்துத் தூளாக்கி கைவசம் வைத்திருந்தனர். ரகு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டுக்குத் தேவையான உடு துணிகள் வாங்கவதற்குச் சென்ற பின்னர் மகள் தலக்ஷனா காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்திருக்கிறார்.

 

வீட்டின் திறப்பு சமையலறை யன்னல் ஓரத்தில் உள்ளது நீங்கள் வீட்டிற்குச் சென்று குசினியில் மீன்கறி சட்டியில் தூக்க மாத்திரைத் தூளைக் கலந்துவிடுமாறு கூறியிருக்கிறாள். காரியம் கச்சிதமாக முடிந்திருக்கிறது. அன்றிரவு 7 மணிக்குப் பின்னர் ரகுவின் குடும்பத்தினர் வீடு திரும்பியிருக்கிறார்கள். வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சிணை அறிந்திருக்கவில்லை. சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல அம்மம்மாவின் வீட்டிற்குச் தூங்க சென்றிருக்கிறாள். தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார். மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு "கசக்கிறது அம்மா" என்று உணவைத் துப்பியுள்ளார். தாயார் "உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்ர" என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.

 

அன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அத்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக இளைய மகள் தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை அழைத்து வீட்டின் முன் கதவை திறந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறாள் கொலையாளிகள் உள்ளே நுழைந்து படுக்கையறைக்குள் சென்று கைத்தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த விப்ராவை அடையாளங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலொருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள். அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார். அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது நபரொருவர் ஒடுவதை அவதானித்திருக்கிறார். அப்போது மகளின் வீட்டுக்கதவின் குறுக்குப் பொல்லு விழுந்த சத்தமும் கேட்டது. அவ்வேளை வீட்டில் படுத்திருந்த தலக்ஷனா "அம்மா அம்மா" என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும் சுந்தரமூர்த்தி "சத்தம் போட வேண்டாம் மகள் வந்து குசினி பக்க கதவ திற" என்றார் உள்ளே வந்து பார்த்தபோது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ணுற்றார். அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.

 

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடுத்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச்சடங்கிற்கு வந்த பலரும் அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர். இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தக்ஷனா (தற்போது சந்தேக நபர்களில் ஒருவர்) சாட்சியமளிக்கையில் "ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க மட்டக்களப்பிற்குச் சென்று அன்றிரவு 7 மணிக்கு பின்பு வீட்டிற்கு வந்தோம்.

 

அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா "உனக்கு இதுதான் கத" என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு "ஓம் கசக்கிறதுதான்" என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம். அத்தினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது நுளம்பு வலைக்குளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிடடேன் அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார் திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்" என்றார். இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்;

 

"சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மின்விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது. நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன. திறந்து "என்ன அம்மப்பா" என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

 

உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவிலலை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். அங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்கள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும்" என்றார். மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸார் உறவினர்கள், அயலவர்கள் பாடசாலை சமூகம் மற்றும் சக மாணவர்கள் என பலரையும் விசாரணைக்குட்படுத்தியதாகவும் இருவர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இந்த விசாரணைகளின் படி பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலின் பிரகாரம் புத்தாண்டிற்கு முதல் நாள்; 13 ஆந் திகதி குமாரசிங்கம் நிலக்சன் என்பவர் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கித்துள் பிரதேசத்தில் அவரது வீட்டிலிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் இளைய மகள் அவரது காதலன் மற்றும் நண்பர் என சந்தேக நபர்கள் புதுவருட தினமன்று கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாக பொலிஸார் கூறினர். இக்கொலை தொடர்பாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வருவதாவது:

 

கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். "பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்" என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்கப்பட்டிருந்தன.

 

இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வெவ்வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது. தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.

 

ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டமொன்று இருந்தது. அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. எனினும் தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள்; செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எது எவ்வாறிருப்பினும் செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை இக்காலகட்டத்தில் அனைவரது உள்ளங்களையும் உலுப்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

murder-batti-seithy-1-20130419-400.jpg

 

 

murder-batti-seithy-2-20130419-400.jpg

 

 

murder-batti-seithy-3-20130419-400.jpg

 

 

murder-batti-seithy-4-20130419-400.jpg

 

 

Batticalloa-merder-victimes-180413Report

 

 

Batticalloa-merder-victimes-180413Report

 

 

Batticalloa-merder-victimes-180413Report

 

 

Batticalloa-merder-victimes-180413Report

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80815&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முன்னேற்றம்தான்.. தமிழில் பெயர் வைக்காமல் தலக்கனா என்று பெயர் வைத்ததால் தலையணையைக்கொண்டு கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார் மகள்.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை காகித ஆலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ரகுவின் தந்தையான சிவகுரு. இன்று மிகுந்த நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் உள்ளார். புல்லை மிதித்தாலும் புல்லுச் சாகாது என்று சொல்வார்களே அப்படி மென்மையான ஒரு அழகான மனிதர். அதிகம் படிக்கவில்லை என்றாலும் இயந்திரங்களை இயக்குவதில் ஆலை முகாமையாளர் கூட அவரிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு அதி திறமைவாய்ந்தவர். விருந்தோம்பலுக்கு மட்டக்களப்பை உதாரணம் சொல்வார்கள். அந்த உதாரணத்திற்கு ஒரு உதாரணமாக அவரது குடும்பத்தைச் சொல்லலாம். இப்படிப்பட்ட குடும்பத்திலா தக்ஷனா என்று ஒரு பெண் பிறந்தாள் என்பதை நம்பவே முடியவில்லை. சிவகுரு பிறந்த ஊரில்தான் கருணாவும் பிறந்தான். சிவகுருவின் குடும்பத்தில் ஒருவேளை கருணாவின் காற்றுப்பட்டதோ தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது
இந்த பாடசாலையில் நான் 1965 -- 1971 கல்விகற்றேன் அப்பொழுது ஆரம்பகல்வி மட்டும்தான் இருந்தது...உயர் கல்வி இருக்கவில்லை.....
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் பெயர் காதலா. காதல் என்பது ஒரு மென்மையான உணர்வு. அது கொலை செய்து தான் வாழனுன்னா.. அதைத் தூக்கி வீசிடனும் அசிங்கப்படுத்தக் கூடாது. இது.. கொலைவெறி..! :(:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆளை பார்த்தால் இப்பத்தான் வாயில இருந்து பால் போச்சியை எடுத்த மாதிரி இருக்கு ஆனால் கொலைகூட செய்திருக்குதுகள் :rolleyes: .

ஆகமிஞ்சினால் கூட்டிக்கொண்டு ஓடியாவது இருக்கலாம் அதைவிட்டுட்டு பெத்து வளத்த தகப்பன் தாயை கொலை செய்திருக்குது உந்த பிள்ளையும் சேர்ந்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உள்ள சிறுவர்களை ஒரு 20 வருடத்திர்ற்கு முந்திய சிறுவர்  சமூகம் என்ன செய்தது என்பதை வைத்து ஒப்பிட முடியுமோ என்று தெரியவில்லை. அவர்கள் பல விடயங்களில் முந்திய சந்ததிகளை விட "முன்னேறி " இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கிற வசதிகளும் வாய்ப்புகளும் 20-30 வருடதிற்ற்கு முந்தைய சந்ததிக்கு கிடைத்தது போன்றது அல்ல. அதனால் நன்மைகளும் தீமைகளும் கலந்து வந்திருக்கிறது. அவர்களை முறையாக  வழி நடத்த வேண்டிய பொறுப்பு அனைவரையும் சாரும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.