Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண ராசதானியின் சாவக, கலிங்கத் தொடர்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண ராசதானியின் சாவக, கலிங்கத் தொடர்புகள்

எழுதியது இக்பால் செல்வன்
 
 
women-of-jaffna-ceylon-in-their-finest-t

 

இலங்கை வரலாற்றைச் சிங்கள, தமிழ் ஆதிக்கச் சாதியினர் தமது சுயநலன்களுக்காக மறைத்தும் திரித்தும், அழித்தும் வந்துள்ளனர். ஒரு தேசத்தின் வரலாறு நிச்சயமற்ற நிலை ஏற்படும் போது இனங்களுக்குள் உண்டாகும் குரோதங்களும், பகைமைகளும் அதிகரிக்கும். இதனாலேயே ஒரு இனம் மற்ற இனத்தை அடக்கி ஆளவும் முற்படும். பண்டையக் காலம் போலில்லாமல் இன்றைய அறிவியல் யுகத்தில் திர்க்கப்பட்ட வரலாறுகளை மீளுருவாக்கம் செய்யவும், புனைவுகளை நீக்கி மெய்யான வரலாறுகளை மீட்டு எடுக்கும் ஒரு அற்புதமான சூழல் இருக்கின்றன. ஆனால் அத்தகைய வரலாற்றாய்வுகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பில்லாத நடுநிலையான ஆய்வாளர்களின் கடுமையான உழைப்புத் தேவைப்படுகின்றன என்பது மட்டும் நிச்சயம். 

 

 
இலங்கையில் வாழும் சிங்களவர்கள் பலரும் தாம் கலிங்கத்தில் இருந்து வந்த விஜயன் என்ற மன்னனின் வழித்தோன்றல்கள் என்ற கதை புனையப்பட்டுள்ளது. இதனைத் தமிழர்களும் ஏற்பதே மடைமையில் மடைமையான ஒரு நிலையாகவே உள்ளது. 
 
 
இலங்கையில் வீற்றிருந்த அனைத்து மன்னர்களும் ஒரு காலத்தில் தமது பரம்பரையை விஜயனோடு தொடர்பு படுத்திக் கொண்டனர். சொல்லப் போனால் யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் கூட விஜயனோடும், கலிங்கத்தோடும் தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டார்கள். 
 
 
பண்டைய தமிழ் பௌத்த இலக்கியங்களான மணிமேகலையில் இலங்கைக் குறித்துச் சில தகவல்கள் உண்டு. அத் தகவல்கள் பலவும் இன்றைய சிங்களவர்களின் புனித நூலான மகாவம்சத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கைக்குப் புத்தர் சென்றார் என்ற தகவலைக் கூறலாம். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகைக் குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, இதர இந்திய பவுத்த நூல்களிலோ காணப்படவில்லை. 
 
 
10-ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட நான்காம் மகிந்தா என்ற சிங்கள மன்னன் கலிங்க நாட்டு இளவரசியான சுந்தரியை மணந்து கொள்கிறான். அதன் பின்னரே இலங்கையின் மன்னர்கள் பலரும் கலிங்க நாட்டுத் தொடர்புகள் இருப்பதாகக் கூறத் தொடங்கினார்கள். அவர்கள் தம்மை விஜய குலிங்கை, ஆரிய குலிங்கை எனக் கூறத் தொடங்கினார்கள். அதாவது விஜயனின் வம்சாவளி எனவும், ஒரிய வம்சாவளி எனவும் பறைச்சாற்றிக் கொண்டார்கள். 
 
 
சோழர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க தம்மைத் தென்னாட்டோடு தொடர்பற்றவர்கள் என்ற பரப்புரை அவர்களுக்குத் தேவைப்பட்டது. கலிங்கர்கள் இந்தியா மட்டுமின்றித் தென் கிழக்காசிய நாடுகளில் கூடப் பெரும் மன்னராட்சிகளை உருவாக்கி இருந்தார்கள். இன்றைய இந்தோனேசியாவில் உள்ள சாவகத்தில் 20, 000 கலிங்கக் குடும்பத்தினரை கலிங்க மன்னன் குடியேற்றி தமது ஆதிக்கத்துக்குள் ஒரு அரசை அங்கு நிறுவி இருந்தான். அத்தகைய கலிங்கத்து வம்சாவளியில் தோன்றிய ஓர் இளவரசனே சந்திரபானு என்பவன். இவனை யாழ்ப்பாண வைபவமாலை உக்கிர சிங்க என்றழைக்கின்றது. 
 
 
சந்திரபானு பெரும் கடற்கொள்ளையனாக இருந்தான் எனவும், அவனிடம் சாவக, கலிங்க, கேரள வீரர்கள் பலவும் இருந்தன எனவும் மகாவம்சம் கூறுகின்றது. 1247-யில் இலங்கையில் வந்திறங்கிய அவன், இலங்கையின் மன்னர்கள் மீது போர்த் தொடுக்கத் தொடங்கினான். இலங்கைத் தீவின் பெரும்பாகத்தைக் கைப்பற்றியும் கொண்டான். பாண்டியர்களோடும் போர்த் தொடுத்து கடல் வாணிப வழியைத் தமது வசமாக்க நினைத்தான் சந்திரபானு. முதலில் பொலன்னறுவையில் தமது ஆட்சியை நிறுவிய அவன், சிங்கள மன்னர்களிடம் இருந்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்று எண்ணியதால் வடக்கே சிங்கநகரத்துக்கு மாற்றினான். இந்தச் சிங்க நகரம் தான் இன்றைய வல்லிபுரம் எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றார்கள். 
 
 
14-ம் நூற்றாண்டில் கோட்டை அரசாட்சியைக் கைப்பற்றிய குருகுல பராகிரமபாகு என்ற சிங்கள மன்னன் கூட, தாம் சந்திரபானுவின் பரம்பரை என அறிவித்துக் கொண்டான். சந்திரபானுவோடு வந்த சாவகர்கள், கேரளர்கள், கலிங்கர்கள் பலவும் இலங்கையின் வடக்கே குடியேறிக் கொண்டார்கள். இன்றளவும் கூட வடக்கு இலங்கையில் சில ஊர்ப் பெயர்கள் சாவக என்ற அடைமொழியோடு காணப்படுகின்றது. அத்தோடு வடக்கு இலங்கைத் தமிழர்களிடம் கேரள சார்புடைய பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் காணப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கக் கூடும். 
 
 
சந்திரபானுவை சடாவர்மன் சுந்தரப் பாண்டியன் தோற்கடித்துத் தமது அரசுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசனாக மாற்றியதாகவும், யாழ்ப்பாண ராசதானியை பின்னர் அவர்களது பரம்பரையே ஆண்டதாகவும் கூறப்படுகின்றது. 
 
 
Pandya_territories.png
சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்து வந்தான். இந்தக் காலக் கட்டதிலேயே மார்க்கோ போலோ என்ற வடக்கு இலங்கைக்குச் சென்றிருந்தார் என அவரது குறிப்புக்கள் கூறுகின்றது. சிங்கள மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் நீண்ட கால நட்புடையவர்கள். ஆகையால் சாவகன் மைந்தன் சிங்கள அரசின் மீது போர்த் தொடுக்க முனைந்த போது, பாண்டிய மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் அவனைக் கட்டுக்குள் கொண்டு வந்தத்தாகக் கூறப்படுகின்றது. சாவக மைந்தனின் ஆட்சிக்குப் பின் பாண்டியர்கள்  சாவக மைந்தனோடு போராட பாண்டியர்களால் அனுப்பப் பட்ட தளபதியே குலசேகரச் சிங்க ஆரியன் என மகாவம்சம் கூறுகின்றது. இவன் சாவக மைந்தனின் மகளை மணந்து கொண்டு, யாழ்ப்பாண அரியணை ஏற்றுக் கொண்டான் எனவும். இதன் பின்னரே இலங்கையின் முதல் தமிழ் மன்னராட்சி தொடங்கியது எனவும் வரலாறு கூறுகின்றது. இவனது ஆட்சிக் காலம் கிபி 1277–1284 என்பதாகும். 
 
 
இங்கு முக்கியமான் விடயமே பாண்டிய நாட்டில் இருந்த வந்திருந்த போதும் குலசேகரச் சிங்க ஆரியன் தனது பட்டத்தையும், வம்சாவளியையும் விஜயனோடும், கலிங்கத்தோடும் தொடர்பு படுத்திக் கொண்டனர். ஏற்கனவே கலிங்க வம்சாவளியைச் சேர்ந்த சந்திரபானுவின் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டமையும் ஒரு காரணமாக இருக்கலாம். 
 
 
அது மட்டுமில்லாமல் அவர்கள் சிங்க சின்னத்தையும், தமது பெயர்களில் சிங்க என்பதையும் கூடக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் சிங்க வம்சாவளியில் ஐந்து மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களில் கடைசியாக ஆட்சி செய்தவன் கனகசூரியா சிங்க ஆரியான் (1440-1450) என்பவன் ஆவான். 
 
 
யாழ்ப்பாணத்தில் இடைக்காலத்தில் ஆட்சி செய்த சம்புமால் குமரன், செண்பக பெருமாள் என்ற மன்னன், பிற்காலத்தில் கோட்டை நாட்டு மன்னனாகவும் இருந்தவனின் பூர்விகமும் குருகுலத்தார் எனப்படும் தமிழ்நாட்டு வம்சாவளி எனவும் கூறப்படுகின்றது. 
 
 
கோட்டை நாட்டு மன்னனாக இருந்த ஆறாம் பராக்கிரமபாகு என்பவனின் முதலமைச்சரும் ஒரு தமிழ் குருகுல மீனவ வம்சாவளி எனவும், அவனது பெயர் சிங்க சூரியா நாட்டுத் தேவர் என வன்னி ராஜவலியா என்ற சிங்கள ஓலைச் சுவடுவ்கள் கூறுகின்றது. ஆறாம் பாராக்கிரமபாகுவின் மகளான உலகுடை தேவியை மணந்த நல்லூரத்தான் என்ற இளவரசன் கூடக் கரவார் வம்சாவளி எனவும், அவன் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர் பரம்பரையினன் எனவும் கூறப்படுகின்றது. 
 
 
போர்த்துகேயே வரலாற்று ஆசிரியர் குவேரோஸ் என்பவரின் குறிப்புக்களின் படி யாழ்ப்பாணத்தில் நடுக்காலங்களில் வேளாள ஆதிக்கமற்ற ஒரு சாதியாக இருந்துள்ளனர். பெரும்பாலான வேளாளர்கள் நிலமற்றவர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் இருந்துள்ளனர். யாழ்ப்பாணத்து அரசர்கள் தமது படைக் காவலுக்கு வேளாளரை நிறுவியது இல்லை எனவும், தஞ்சாவூரில் இருந்து தெலுங்கு வடுகப் படையினரையே நிறுவிக் கொண்டார்கள் எனவும் கூறுகின்றார். 
 
 
இலங்கையின் இடைக்காலத் தமிழ் மற்றும் சிங்கள அரசக் குடும்பத்தினர் அனைவருமே பாண்டிய நாட்டு குலத்தைச் சேர்ந்தவர்களே என்பதை வரலாற்று ஊடாக அறிய முடிகின்றது. அது மட்டுமில்லாமல் இவர்கள் கலிங்க நாட்டு அரசக் குடும்பத்தோடு நெருங்கிய மணவுறவையும் பூண்டுள்ளனர். ஆனால் 19-ம் நூற்றாண்டில் எழுந்த தமிழ் வேளாள மற்றும் சிங்கள கோவிகம சாதிகளின் எழுச்சியால் இலங்கையின் அரச பரம்பரையினர் கொண்ட இந்திய தமிழ் தொடர்புகளையும், கரவா / கரையார் / குருகுலச் சத்திரியர் சாதிய தொடர்புகளையும் முற்றாக அழித்துவிட்டனர். 
 
 
தமிழர்களிடையே வேளாளர் ஆதிக்கத்தை நிலைநிறுத்த செய்தவர்களில் முக்கியமானவர்கள் ஆறுமுக நாவலர், பொன்னம்பலம், குமாரசுவாமி போன்ற ஆங்கிலேயே அரவணைப்புப் பெற்றவர்களே. இன்று பல வேளாளர்கள் தமது வம்சாவளியை யாழ்ப்பாண அரசோடும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுப் பழமையானது எனவும் கூறிக் கொள்கின்றனர். ஆனால் இலங்கை வரலாற்றில் ஒரு போதும் வேளாளர்கள் மன்னராட்சியில் ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. அது மட்டுமில்லாமல் பல வேளாளர்கள் சோழ ஆட்சி வீழ்ந்த பின்னர் அகதிகளாகவும், பஞ்சம் பிழைக்கவுமே யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். பிரித்தானியா ஆட்சியின் போதும், அமெரிக்க மிசனரிகளின் கல்வி வழங்கலின் போதுமே வேளாளர்கள் ஆங்கிலக் கல்வி மூலமாக அதிகார வட்டத்துக்குள் நுழைந்தனர் என்பது தனிக் கதை.
 
 
தெளிவுப்படுத்தல்கள் : 

இலங்கையில் முதல் தமிழ் மன்னராட்சி பாண்டியத் தளபதியான குலசேகர சிங்கை ஆரியன் என்பவனால் 13-ம் நூற்றாண்டில் தொடங்கியது.  

 

இலங்கையின் இடைக் கால மன்னர்கள் கரவா / கரையார் / குருகுலத்தார் எனப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  கரவா / கரையார் / குருகுலத்தார் சமூகத்தினருக்கும் பாண்டி நாட்டு மன்னர்கள், மக்களுக்கும் நீண்ட கால தொடர்புகள் உண்டு.  

 

உண்மையில் சிங்கள, தமிழ் மன்னர் பரம்பரையும், சத்திரியர்களும் மட்டுமே கலிங்கத்து தொடர்புடையவர்கள். ஏனையோர் அனைவரும் இலங்கையின் பூர்விக மக்களும், தமிழ்நாட்டில் இருந்து வந்து கலப்புற்றவர்களே ஆவார்கள்.  

 

சிங்களவர் மட்டுமல்ல தமிழர்களில் ஒரு பிரிவினரும் கலிங்க நாட்டு தொடர்புடையவர்கள். சிங்களவர் தம்மை ஆரியர் என்றழைத்தால் தமிழர்களும் அழைத்துக் கொள்ளலாம். 

 

இலங்கையின் வேளாள சமூகம் இடைக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய, ஆண்ட பரம்பரை என்பது எல்லாம் கட்டுக்கதைகள். பலரும் சோழ நாட்டில் இருந்து குடியேறியவர்கள். எந்தெந்த குடும்பம் எந்தெந்த ஊரில் இருந்து வந்தார்கள் என யாழ்ப்பாணச் சரித்திரம் தெளிவாக கூறுகின்றது. 

 
 
 
 
உதவியவை:
 
 
  • Ariyapala M. B. 1968 Society in Mediaeval Ceylon Ministry of Cultural Affairs Sri Lanka
  • Cosme da Silva O. M. 1994 Fidalgos in the kingdom of Jafanapatam, Colombo
  • Paranavitana Felicitation Volume 1965 Colombo
  • Perniola Fr. S. J. The History of the Catholic Church - Portuguese period
  • Rasanayagam Mudaliyar C 1926 Ancient Jaffna
  • The Singhe Dynasty of Jaffnapatam Chevalier Dr. St John Puvirajasinghe K.S.G. Jaffna
  • Kallidaikurichi Aiyah Nilakanta Sastri (1929). The Pāṇḍyan kingdom from the earliest times to the sixteenth century. pp.176
  • Kunarasa, K (2003). The Jaffna Dynasty. Johor Bahru: Dynasty of Jaffna King’s Historical Society. p. 122.
  • Gnanaprakasar, Swamy (2003). A Critical History of Jaffna (review of Yalpana Vaipava Malai). New Delhi: Asian Educational Services. p. 122.
  • Coddrington, H. W. (1994). Short History of Ceylon. New Delhi: AES. p. 290..

http://www.kodangi.com/2013/04/blog-post.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரையின் முடிவு தலைப்போடு சம்பந்தம் இல்லாமல், வேளாள சமூகத்தை குறிவைத்து எழுதப்பட்டுள்ளது

 

வடிவாய் ஆராய்ஞ்சு. பாருங்கையா முழுத் தமிழரும் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இலங்கை தீவில் வயித்துப் புளைப்பிட்காய் குடியேறி இருப்பார்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவரும் முஸ்லிம்களுமாக. இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாட்டிலும் அங்கு ஆட்சிசெய்யும் அரசனுக்கு ஏற்றபடி மக்கள் வாழ்க்கையும் மாறுபடும். சரித்திரங்கள் கூட மாற்றி எழுதப்படும். இலங்கையில் இன்று மாற்றி எழுதப்படும் மகாவம்சத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் சரி, தவறுகளுக்கப்பால் மக்களும் தங்கள் தீர்மானத்திற்கு ஏற்றபடி வாழ்வதற்கும், சரித்திரங்கள் படைப்பதற்கும் இன்றைய ஜனநாயகமும் அதில் உள்ள ஓட்டைகளும் பெரிதும் துணைபுரிகின்றன. அந்தவகையான ஒரு பதிவாகவே இந்தப்பதிவையும் நோக்கலாம். அரசர்கள் ஆண்ட காலத்தில் இத்தகய ஒரு பதிவு தவறென அரசனுக்கு உணர்த்தப்பட்டால் பதிந்தவர் பாடையில் போகவேண்டியதுதான். உலகத்தில் இயற்கையினால் ஏற்படும் மாற்றங்கள் நீண்டகாலத்திற்கு அழியாத பதிவுகளை பதிந்துவிடும். அந்தவகையில் கடற்கோள் ஒன்று பரதகண்டத்தைப் பிரித்து இலங்கைத்தீவை உருவாக்கிய நிகழ்வை எவரும் மாற்றிஎழுத முடியாது. இன்றைய இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்ததை மறுக்கமுடியாதபடி கடல்கொண்ட குமரிக்கண்டத்தை இயற்கை பதிவாக வைத்துள்ளது. அந்த நிலப்பரப்பில் இருந்தவர்களே இன்றைய தென் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ளனர். அந்த மக்கள் எல்லோரும் எந்த இனம் என்ன மொழி பேசினார்கள் என்பதெல்லாம் ஆராச்சியாளர்களின் முடிவுகளிலும் அதன் நம்பிக்கையிலும் தங்கி உள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கிருபன்

கட்டுரையாளர் நல்ல விபரமாகத்  தகவல்களைச் சேகரித்து எழுதியிருக்கின்றார் :D   

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர், கதை எழுதினால், இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.