Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னுமா உறக்கம்?......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா உறக்கம்?......

இன்னுமா....உறக்கம்?
இடியேறு உன்னில் விழ..
ஈழத்தில் உன்னினம் அழிப்பு.
இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு!

ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம்
ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு!

நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து
புல்லரிப்புப் பொங்குது! புூரிப்பாக் கிடக்குது!
புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு!
எல்லாம் முடிந்த பின்னால்எங்கே? ஏது பிழை?
ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே..
அதற்காக உறங்கு!

கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது
களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும்
இப்போது கண்ணுறங்கு!

பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும்
புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்!

முகட்டு வளை பார்த்து முனகிக் கிடக்கும் முதியோரே!
உமக்கென்ன முழுமதியா? முடங்கிப்போய் கிடக்கிறது.
இறப்புக்கு முன் ஒருகால் ஈழத்துமண் பதிந்து
சிறப்புப் பெற்றுவிட சிந்தையிலே நினைப்பில்லையோ?

உணர்வுூட்ட முடியாத ஊடகப் புழுக்களே!
தாலாட்டுப் பாட்டிருந்தால்
தொடர்ந்தின்னும் ஒலியுங்கள்! - கவனம்!
ஈழத்தமிழினம் விழித்தெழக்கூடாது.

குறுநில மன்னர்களே!
கொடி, குடை பிடிக்கக் கோமாளிக்கூட்டம்
கனடாவில நிறைய களிப்புற்றுக் கிடவுங்கள்!

வந்தவினை வெல்லாத வரட்டு மனிதர்களே!
முடிந்தால் இனம்வாழ முழங்குவீர்!
இல்லாவிடின் ஓசை எழுப்பி
ஓர்மத்தைச் சிதைக்காதீர்!

சிந்தனையே இல்லாச் செம்மறிக்கூட்டமா?
வந்தேறு குடிகளே! வந்தவழி மறந்தீரோ?
கந்தகத் துகள் சாய்த்த சொந்தங்கள் கண்டோரே!
சிந்தை திறந்தாற்றும் பணி உம்மை அழைக்கிறது.

வேகும் வாழ்நிலையில் வெம்பி வெம்பி நித்தம்
சாவின் விளிம்பினிலே சரம்சரமாய் எங்கள்சனம்
நோயுற்றுப் போனீரோ? நுடங்கிக் கிடப்பது ஏன்?

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேகும் வாழ்நிலையில் வெம்பி வெம்பி நித்தம்

சாவின் விளிம்பினிலே சரம்சரமாய் எங்கள்சனம்

நோயுற்றுப் போனீரோ? நுடங்கிக் கிடப்பது ஏன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகாறா,

நியாமான கோபத்தை நயமான கவிதையில் தந்திருக்கிறீர்கள்.

அன்புடன்

மணிவாசகன்

இப்பத்தான் அசல்.......

இதைத்தானே....வெளியே எடுக்க இந்தப்பாடு....

ஆதிவாசி பட்ட சிரமம் கொஞ்சமே.......

எத்தனைபேரின் பேச்சு முகச்சுழிப்பு......ம்......

இனிமேல் ஆதிவாசி எஸ்கேப் ஆகலாம்....

உங்களோட மட்டும் இந்தக் குமுறல் நிற்கக்கூடாது.......

ஒவ்வொரு தமிழரிடமும் வரவேணும்......

இடத்தைக் காலிசெய்யும் ஆதிவாசி

வணக்கம் வல்வைசாகாறா அவர்களே

உங்களின் கோபம் புரிகின்றது. மற்றவர்களுக்கு உணர்வு வரவேண்டும் என்பதற்காக மனிதர்களை ஒருமையில் விளிப்பதை தவிர்த்திருந்தால் உங்கள் எண்ணங்கள் இன்னும் கூடுதலாக மக்களிடம் போய் சேரும்.

அத்துடன் வல்வை சாகறா அவர்களே இப்படியே இணையத்தில் நின்று கவிதை வரிகளில் நெருப்பை அள்ளிக் கொட்டமால் நேரில் கதைத்து எதாவது ஆக்கபூர்வமாக செய்வதற்கு கனடா வாழ் தமிழர்களில் ஒரு 10 பேர் என்றாலும் கைகொடுப்போம். நீங்களும் சரி என்றால் அறிவியுங்கள். கலந்து ஆலோசித்து செய்வோம். :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரமா எங்கு எப்படிச் சந்திப்பது?........

யாழ்க் களத்தில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் இணைந்து

செயலாற்றலாம்.....

விபரங்களைத் தாருங்கள்....

தயவு செய்து யாழிற்கு வருகை தரும் கனடிய உறுப்பினர்களே!

இந்தப்பகுதியில் ரமா கூறிய விடயத்தை செயலாற்ற (கனடாவில்)

ஒரு குழு அமைக்கலாமா? உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

வல்வை சகாறா

கட்டயமாக எனது ஆதரவு உண்டு. மற்ற கனடிய நண்பர்களும் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்றா நம்பிக்கையும் உண்டு.

ஒரு நாள் காத்திருந்து விட்டு அதற்குரிய ஆயத்தங்களை செய்யலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வைசாகாறா அவர்களே

உங்களின் கோபம் புரிகின்றது. மற்றவர்களுக்கு உணர்வு வரவேண்டும் என்பதற்காக மனிதர்களை ஒருமையில் விளிப்பதை தவிர்த்திருந்தால் உங்கள் எண்ணங்கள் இன்னும் கூடுதலாக மக்களிடம் போய் சேரும்.

அத்துடன் வல்வை சாகறா அவர்களே இப்படியே இணையத்தில் நின்று கவிதை வரிகளில் நெருப்பை அள்ளிக் கொட்டமால் நேரில் கதைத்து எதாவது ஆக்கபூர்வமாக செய்வதற்கு கனடா வாழ் தமிழர்களில் ஒரு 10 பேர் என்றாலும் கைகொடுப்போம். நீங்களும் சரி என்றால் அறிவியுங்கள். கலந்து ஆலோசித்து செய்வோம். :roll:

சென்ற வாரம் ரொரன்ரோ மத்திய பகுதியில் இடம்பெற்ற (55 யோன் ஸ்ரீட்)

'சொல்லப் படாத உண்மைகள்" நிகழ்வுக்கு நீங்கள் வரவில்லை

போலும்......

வந்திருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள்

இப்படிக்கு வல்வை சகாறா

ரமாவுடன் சண்டை என்றாலும் ....

ரமா களத்தில் நிற்கிறபோது.....நான் ஒதுங்குவனா?

நானும் ரெடி......

8) 8) 8)

ரெடியான ஆதிவாசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரமா, ஆதிவாசி உங்களைப்போல் மற்றவர்களும்

இங்கு தங்கள் கருத்தைப் பதிவார்கள் என்று நம்புகிறேன்..

வல்வை சகாறா

சென்ற வாரம் ரொரன்ரோ மத்திய பகுதியில் இடம்பெற்ற (55 யோன் ஸ்ரீட்)

'சொல்லப் படாத உண்மைகள்" நிகழ்வுக்கு நீங்கள் வரவில்லை

போலும்......

வந்திருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கமாட்டீர்கள்

இப்படிக்கு வல்வை சகாறா

வேலையில் லீவு எடுக்க முடியாத நிலையில் அங்கு வரமுடியவில்லை. ஆனாலும் உங்கள் கவிதை வரிகளை ஒருவர் நினைவு கூர்ந்தார்.

ரமாவுடன் சண்டை என்றாலும் ....

ரமா களத்தில் நிற்கிறபோது.....நான் ஒதுங்குவனா?

நானும் ரெடி......

8) 8) 8)

ரெடியான ஆதிவாசி

என்னுடன் சண்டையா? பார்த்திர்களா எம் மக்களுக்காக நீங்கள் வரவில்லை. எனக்காக தான் வருகின்றீர்கள் போலை.

ரெடியான ஆதிவாசியை காண ஆயத்தமாகும் ரமா :D

ரமா எங்கு எப்படிச் சந்திப்பது?........ யாழ்க் களத்தில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் இணைந்து செயலாற்றலாம்..... விபரங்களைத் தாருங்கள்....

தயவு செய்து யாழிற்கு வருகை தரும் கனடிய உறுப்பினர்களே! இந்தப்பகுதியில் ரமா கூறிய விடயத்தை செயலாற்ற (கனடாவில்) ஒரு குழு அமைக்கலாமா? உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன். வல்வை சகாறா

வணக்கம் வல்லவைசகாறா

உங்கள் கோவத்தை காலத்தின் தேவை கருதி கவிதையாக வடித்துள்ளீர்கள்.

நீங்கள் கேட்ட மாதிரி செயலாற்ற கனடாவில் குழு அமைக்கலாம்

எனது ஆதரவு நிச்சயமாக உண்டு. குழு ஆரம்பிக்கிறது சுகம் ஆனால் அதை

முறையாக செயற்படுத்த வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் விபரமாக

சொன்னால் நான் நிச்சயம் சமூகமளிக்கிறேன். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்,.,

நன்றி

கோபத்தில் வெளிப்பட்ட கவி நன்று வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரசிகை, இலக்கியன்...

தொடரும் கருத்துக்களைக் கொண்டுதான் எதையுமே சிந்திக்கலாம்.

ஏற்கனவே இங்கு நிறையப் பிரிவுகள்...

ஒற்றுமையாகச் செயல்பட...... முடியாமல் ஆளுக்கு ஒரு திசையாகச் சிதறிக்கொண்டு நிற்கிறார்கள்.....

நிறைகுடம் வைத்து அழைத்தால் மாத்திரமே......செயல்படுவார்கள்!!

!! :!: :!: :!:

:roll: 'வழிகாட்டிகளின் அலட்சியத்தன்மை எங்கள் இனத்தின் விடியலை

ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிடுமோ?.." :roll:

என்ற ஐயப்பாடு என்மனதில் விசுபரூபம் எடுத்துச் சிரிக்கிறது.

தொடரும் மற்றையோரின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்து

எதையுமே தீர்மானிக்கலாம்.

நாங்களும் தயாராக இருக்கின்றோம் கருத்துக்கள் தாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாரா கவிதை அருமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை சகாரா கவிதை அருமை

கவிதை நன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ரசிகை, இலக்கியன்...

தொடரும் கருத்துக்களைக் கொண்டுதான் எதையுமே சிந்திக்கலாம்.

ஏற்கனவே இங்கு நிறையப் பிரிவுகள்...

ஒற்றுமையாகச் செயல்பட...... முடியாமல் ஆளுக்கு ஒரு திசையாகச் சிதறிக்கொண்டு நிற்கிறார்கள்.....

நிறைகுடம் வைத்து அழைத்தால் மாத்திரமே......செயல்படுவார்கள்!!

!! :!: :!: :!:

:roll: 'வழிகாட்டிகளின் அலட்சியத்தன்மை எங்கள் இனத்தின் விடியலை

ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிடுமோ?.." :roll:

என்ற ஐயப்பாடு என்மனதில் விசுபரூபம் எடுத்துச் சிரிக்கிறது.

தொடரும் மற்றையோரின் கருத்துகளையும் கவனத்தில் எடுத்து

எதையுமே தீர்மானிக்கலாம்.

இப்படிக்கு வல்வை சகாறா

மன்னிக்க வேண்டும் வல்வை சகாரா அவர்களே! ரமா அவர்கள் சந்திக்கலாமா? தீர்மானிப்போமா? என்று கேட்டதுக்கு, நீங்கள் கடுமையாக யோசிப்பதாய் தெரிகின்றது. கனடாவில் நீங்கள் சந்திப்பதற்க்கு யாழ் களத்திலிருக்கு ஐரோப்பிய நண்பர்களின் கருத்து தேவையில்லை. கனடாவிலிருக்கும், நண்பர்கள் தயாரெனில், நீங்கள் சந்தித்து சதகமான முடிவுகள் பற்றி சிந்திக்கலாமே! உங்கள் கருத்துக்கள், கருத்துக்களை செயற்பாட்டில் கொண்டு வர உங்களுக்கு இருக்கும் சிறு தயக்கத்தை எடுத்து காட்டுகின்றது. குதர்க்கமாக கருத்து வைக்க வேண்டும் என்பதற்காகவோ, ஏதாவது கருத்தை சொல்லி உங்களை குழப்ப வேண்டும் என்பதோ எமது நோக்க மல்ல.

ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து பல்லாயிரம் உறுப்பினர்களை கொண்ட பல அமைப்புக்கள் கனடாவிலிருந்து என்ன செய்தன என்பதுயும் சிந்தித்து பாருங்கள். ஆதி வாசி அவர்களுடன் நேரடியாக, கனடா தமிழர்கள் பற்றி கருத்தில் முரண்பட்ட நான், அதே அவரது கருத்தை இவ்விடத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலையே கனடாவில் தற்போது காண முடிகின்றது.

நீங்கள் நால்வர் கூடி முடிவுகளை எடுக்கலாம். அந்த முடிவுகளை செயற்ப்படுத்த பலர் இருக்கின்றனர். நான் ரொரன்ரோவிலிருக்கின்ற பல இளைஞர்களுடன் பேசினேன். அவர்கள், சொல்வது, சிறந்த நெறிப்படுத்தப்பட்ட எந்த போராட்டங்களும் இங்கு இது வரை நடைபெறவில்லை என்பதே. வெறுமனே, கணனிப்பெட்டிக்குள் கருத்து எழுதுவதை விட கருத்தை செயலாற்றி, காலத்தை வென்று, எமது கடமையையும் நிறைவேற்றுவோம்.

நேற்றைய நாட்களில் எவ்வளவோ விடயங்கள் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. மறுக்கக்கூடாது...

ஊடகப்பிரிவினர், கலைஞர்கள், தொண்டர்கள் என்று எல்லாத் திசைகளும்

புரிந்துணர்வுடன் செயல்ப்பட்ட காலங்கள் வேற்றினங்களுக்கு முன்னிலையில்

எம்மினத்தை தலை நிமிர்த்தி வைத்திருந்த நிலையை அவ்வளவு

சீக்கிரம் மறந்துவிடக் கூடாது.... ஆனால் இன்று?

எம்மினம் மற்றைய மக்களுக்கு மத்தியில் தலை நிமிரமுடியாமல்

திணறிக் கொண்டிருக்கிறது.

எல்லோருக்கும் இனப்பற்று புூரணமாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது

ஏன் அதனை வெளியே காட்ட மறுக்கிறார்கள்?

கனடா நாட்டின் சட்டம் எம்மக்கள் தாயகத்தில் படும் இன்னல்களை எடுத்துச் சொல்வதற்கு தடை போட்டதாக

நான் அறியவில்லை.

அடுத்து இங்கு கருத்துக்கேட்டது கனடா உறுப்பினர்களைத்தான்..

எனக்குத் தெரியும் கனடாவிலிருந்து ஒரு இளைய சமுதாயம்

யாழ்க்களத்தில் இணைந்திருக்கிறது அவர்கள் கருத்து என்ன

என்று அறிந்து மேற்கொண்டு எதையும் தீர்மானித்து நாங்கள்

நேரடியாக மற்றவர்களை (கலைஞர்கள் , ஊடகத்துறையினர், தொண்டர்கள்) அணுகி ஒரு புதிய பலப்பான நிலைக்கு

எம்மவர்களை அணிசேர்க்கலாம்.

இத்தகைய ஒரு முயற்சி எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஓரிருவரால் முடியாது. செயலாற்றுத்திறனுள்ள தொண்டர்கள்

வேண்டும். எத்தனைபேர் இணைவார்கள்?

தயவு செய்து கனடா உறுப்பினர்களே!

உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள்.

வல்வை சகாறா.

உஸ்.......

இன்னும் சட்டப்பிரச்சினை புரியேல்லை....

நுணுக்கமாகத்தான் செயற்படவேணும்......சலசலத்து பிரயோசனம் இல்லை.

பரப்Gரைத் தேகத்தில எங்கே வருத்தம் கண்டு பிடிக்க

நல்ல டொக்டரை வையுங்கோ....

blue_04_blue_06_over.gif

அலட்டலென்று அப்பால தூக்கிப்போட்டாலும் திரும்பத் திரும்பக்

தொணதொணப்பேன்.....

தொணதொணக்கும் ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.