Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோ மீது தாக்குதல்; பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mano(71).jpg

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்துகொண்டபோதே கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்றம் நிலவியது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் தலைவர்கள்,முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இரண்டு பிரிவினரும் தங்களுடைய ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்நிலையில்,அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்ததாக மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்  குற்றஞ்சாட்டினர்.

தங்களுடைய ஆதரவானவர்களை பஸ்களில் இருந்து இறங்கவிடாமல் தடுத்ததாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவானவர்களை மட்டுமே பஸ்களில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே  மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன்- நுவரெலியா வீதியில் மூன்று மணிநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/64576-2013-04-21-07-23-23.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மனோ கணேசன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாட்டில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்று கொடுக்கப்பட்ட சம்பள உயர்வை எதிர்த்து கொட்டகலை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

protestffffffffff.jpg

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4098

மகிந்த பயங்கரவாதத்தின் இன்னுமொரு ஈனச்செயல்.

மனோ மக்களுக்காக துணிந்து நியாயமாக குரல் கொடுக்கும் அரசியல்வாதி.

மனோகனேசன் நலம் பெறட்டும்.  தொண்டமான் அடுத்த தடவை தமிழ் நாடு போனால் அங்கே கவனிப்பார்கள். 

மனோ கணேசன் தரப்பினர் மீது தாக்குதல்

 

130421102047_mano_ganeshan__304x171_bbc_

 

இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான அண்மைய சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து, 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் இந்தக் கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு குழுவொன்று கொட்டகலை நகரில் போராட்டம் நடத்த முனைந்ததாகவும், அந்தக் குழுவினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்த தான் உள்ளிட்ட மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.

இதேவேளை, கொட்டகலையில் நடந்த தாக்குதல் காரணமாக தமது போராட்டம் இறுதியில் பத்தனை நகரில் நடத்தப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130421_manoattacked.shtml

 

வடபகுதியில் இருந்து சிங்கள அரசபயங்கரவாதம் மலையகத்துக்கும் பரவி உள்ளது என்பதினையே இத்தகைய தாக்குதல்கள் உணர்த்தி உள்ளது

 

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

 

 

 

 

 

தொண்டமான் அரச கூட்டணியில் இருப்பதால் அரசு இவரை ஏவி விட்டு தாக்குதலை நடாத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கு தொண்டமான் தாக்கியதாகவே செய்தி போகும்.
 
சொந்த இனத்துக்கு ஒன்றும் கிடைக்க விடாமல் செய்யும் தொண்டமானை அடுத்த முறை பாராளுமன்றம் போகவிடாமல் மக்கள் செய்ய வேண்டும்.
 
மிகவும் கீழ்தரமான தாக்குதலை தனது சகோதர கட்சிக்கு செய்ததை மன்னிக்க முடியாது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்களின் தமிழீழ ஆதரவுக்கு .... மலையக தமிழர் களின் பங்களிப்பு எண்டு வந்திருக்க வேணும் .... உந்த தோட்டமான் குழு வந்து கெடுத்து போட்டுது ..... :lol:

இரத்தினபுரியில் தொண்டமான் வெல்லட்டும் என்று ஜயநாயக மக்கள் மன்னணி தொழிலாளர் காங்கிரசுடன் போட்டிகளை தவிர்த்திருந்தது. இது கெரியின் சமாதன முன்னெடுப்புகளுக்கு நல்ல முன்னுதாரணம். "நீங்கள் பணிந்து போகலாம் நாங்கள் மாறமாற மாட்டோம்" என்பதுதான் இலங்கை அரசு. தேர்தல் வென்ற கையோடு அடித்து முறித்திருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.