Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிவடக்கு - வலிகிழக்கில் தமிழரின் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவத்தின் முதற்கட்ட நடவடிக்கை அரங்கேற்றம்: குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்-

vali%20north%20notice2_CI.jpg

யாழ்ப்பாணத்தின்;. வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கில் தமிழ் மக்களுடைய நிலங்களை இராணுவத் தேவைக்கென ஆக்கிரமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அந்த நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான துண்டுப் பிரசுரங்கள் இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  காணிகளில் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளில் முதல் கட்டமாக ஏழு கிராமசேவகர் பிரிவுகளில் இன்று காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல் சுவரொட்டிகள் கிராம சேவையாளர்களினால் ஒட்டப்பட்டது. முன்னதாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துக்கொண்ட பாதுகாப்பு தரப்பு வெளியார் எவரையும் உட்செல்ல அனுமதித்திருக்கவில்லை. குறிப்பாக ஊடகவியலாளர்கள் முற்றாக கண்காணிப்பு வளையத்தினுள் வைக்கப்பட்டிருந்தனர்.

vali%20Most.jpg

முற்றாக சீல் செய்யப்பட்ட நிலையில் எடுத்துவரப்பட்ட அறிவித்தல் சுவரொட்டிகள் வெளியாரது கண்களில் அகப்படாதவாறு கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இராணுவ பாதுகாப்புடன் அவர்கள் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அழைத்து செல்லப்பட்டனர். மக்கள் கடந்த 23 வருடங்களுக்கு மேலாக பார்வையிட அனுமதிக்கப்படாது முடக்கப்பட்டு இராணுவ முகாம்களாக்கப்பட்ட வலிவடக்கிலுள்ள அவர்களது வீடுகளில் அச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. குறிப்பாக படை முகாமிற்கு வீடுகளை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்புக்கள் உண்டாவென கேள்வியும் அச்சுவரொட்டியினில் கேட்கப்பட்டிருந்தது.

குறித்த நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல் அறிந்து நூற்றுக்ணக்கில் வலிவடக்கு மக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பதாக திரள அவர்களை படையினரும் பொலிஸாரும் விரட்டியடித்தனர்.

vali%20north%20notice1.jpg

வடக்கில் 5 மாவட்டங்களிலும் அண்மையில் காணி அமைச்சினால் காணி சுவீகரிப்பு அலுவலகம் திறக்கப்பட்டபோது இந்த திணைக்களத்தினால் காணிப் பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்படும் என கூறப்பட்டது. ஆனால் திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் கூட ஆகியிருக்காத நிலையில் 5 மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சுவீகரிப்பு என்ற பெயரில் இராணுவத்தினருக்காக ஆக்கிரமிக்கப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாக வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விழுங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இந்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மேலும் ஆக்கிரமிக்கப்படவுள்ள காணிகள் யாருடையவை என தமக்கு தெரியாது என்ற கருத்தும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் வலிகாமம் வடக்கில் 3ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் மட்டுமே படையினரிடம் இருப்பதாக யாழ்.இராணுவத் தளபதி கூறிவந்த நிலையில் இன்று சுவரொட்டி ஒட்டப்பட்ட ஏழு கிராமசேவகர் பிரிவுகளில் மட்டும் 6400 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதன்  மூலம் வலிவடக்கு மற்றும் கிழக்கில்; இராணுவத்தினரிடம் அகப்பட்டுள்ள நிலம் தொடர்பாக குறைத்து கூறும் உத்தியே அமுல்படுத்தப்பட்டமையும் உறுதியாகியுள்ளது..

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91019/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை! என்ன அக்கிரமம்! அப்பட்டமான ஆக்கிரமிப்பு!

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன.

தொடர்புடைய விடயங்கள்

துஷ்பிரயோகம், மனித உரிமை, மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம், போர்

இந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், 27 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு மீள்குடியேற்றம் அனுதிக்கப்படாத பகுதியிலேயே காணிகளைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார்.

வலிகாமம் வடக்கில் 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் வலிகாமம் கிழக்கில் 3 கிராம சேவகர் பிரிவுகளிலும் காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள், அங்கு காணிகளில் மீதமுள்ள சேதமடைந்த வீடுகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து 9 ஆயிரத்து 995 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரம் பேர் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பத்து நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் இன்னும் தஞ்சமடைந்துள்ளனர்.

தங்களை தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இந்த மக்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்திருக்கின்றனர். அத்துடன் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களையும் அவர்கள் நடத்தியிருக்கின்றனர்.

'நீதிமன்றம் மக்கள் மீள்குடியேற்றத்தைக் கோருகிறது'

அத்துடன் பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்ப்பொன்றில் இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களைப் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் கூறினார்.

அத்துடன், அந்த உத்தரவு தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபருக்கும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இடைக்கால உத்தரவில் உள்ள அந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தக் காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி ஏ.சிவஸ்வாமியின் கையெழுத்துடன் ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களில், இராணுவத்தின் யாழ்ப்பாண பாதுகாப்பு பட்டாலியனின் தலைமையகம் அமைப்பதற்காகவும், பலாலி மற்றும் காங்கேசந்துறை இராணுவ தளங்களின் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகவும் இந்தக் காணிகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130422_valikadamam.shtml

இன்னும் இன்னும் புலி எதிர்ப்பும் தொடரும் வசைபாடலும்....இணக்க அரசியல் என்று சொல்லி திரிபவர்களும் ஒரே நாடு ஒரே மக்கள் என்று கூக்குரல் இடுபவர்களும்.......என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்? தமிழன் காலம் காலமாக பாரம்பரியமாக வாழ்ந்த வழமான மண் 6300 ஏக்கர் சொச்சம் காணிகள் பகல் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கு.....இது ஆரம்பம் மட்டுமே......

  • கருத்துக்கள உறவுகள்
130422134603_palali_army_land_jaffna_304

பலாலி மற்றும் காங்கேசன்துறை இராணுவ

தளங்களின் தேவைக்காக காணிகள்

சுவீகரிக்கப்படுகின்றன

இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
 
1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தன.
 
இந்தப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், 27 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
 
இவ்வாறு மீள்குடியேற்றம் அனுதிக்கப்படாத பகுதியிலேயே காணிகளைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார்.
 
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1990-ம் ஆண்டில் வலிகாமம் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தன
 
130422134802_palali_army_land_jaffna_304

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1990-ம்

ஆண்டில் வலிகாமம் பிரதேசத்திலிருந்து

இடம்பெயர்ந்தன

வலிகாமம் வடக்கில் 24 கிராம சேவகர் பிரிவுகளிலும் வலிகாமம் கிழக்கில் 3 கிராம சேவகர் பிரிவுகளிலும் காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள், அங்கு காணிகளில் மீதமுள்ள சேதமடைந்த வீடுகளின் சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்தப் பகுதிகளில் மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து 9 ஆயிரத்து 995 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரம் பேர் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பத்து நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் இன்னும் தஞ்சமடைந்துள்ளனர்.
 
தங்களை தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இந்த மக்கள் தொடர்ச்சியாகக் கோரி வந்திருக்கின்றனர். அத்துடன் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களையும் அவர்கள் நடத்தியிருக்கின்றனர்.
 
'நீதிமன்றம் மக்கள் மீள்குடியேற்றத்தைக் கோருகிறது'
 
அத்துடன் பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்ப்பொன்றில் இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றி மக்களைப் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் கூறினார்.
அத்துடன், அந்த உத்தரவு தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபருக்கும் அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
இடைக்கால உத்தரவில் உள்ள அந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தக் காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு அதிகாரி ஏ.சிவஸ்வாமியின் கையெழுத்துடன் ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களில், இராணுவத்தின் யாழ்ப்பாண பாதுகாப்பு பட்டாலியனின் தலைமையகம் அமைப்பதற்காகவும், பலாலி மற்றும் காங்கேசந்துறை இராணுவ தளங்களின் உயர் பாதுகாப்பு வலயத்திற்காகவும் இந்தக் காணிகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
 
ஒரு சிலரின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். இந்த திரியில் எழுத மாட்டார்கள் போல. அவர்களின் வீடுகள் காணிகள் யாழ்ப்பாணத்தில் இல்லையோ என்னவோ. அல்லது தமிழரின் நிலங்கள் என்பதற்கு பதிலாக தமிழ் தேசிய நிலங்கள் என்றால் தான் பதில் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

நடுநிலை என்பது எந்த பக்கம் குற்றம் இழைத்தாலும் சுட்டிக்காட்டுவது தான். அதுவும் கடந்த கால அரசியல் பிழைகளுக்கு குரல் கொடுப்பதை விட  நிகழ்கால அரசியல் வன்முறைக்கு குரல்கொடுப்பது தான் உங்களின் உண்மை நிலையை எங்களுக்கு காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதற்கும் கடந்த கால பிழைதான் காரணம் என்று குழந்தைப்பிள்ளை அரசியல் பாடம் எடுக்காதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணி வெடி அகத்தி போட்டாங்களோ???

எடுத்த பிறகு ....

அசம்பாவிதம் நடந்தா லும் ..... அதுதான் ..... :lol: :lol:

கூட்டமைப்பும் மக்களும் ஏதோ ஒருவழியில் போராடியே ஆகவேண்டும். காரணம் - நாளை வீட்டுகுள்ளேயே  குடியேறம் நடக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.