Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் அரசுடன் பேச மறுக்கிறார் - ஜனாதிபதி மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் அரசுடன் பேச மறுக்கிறார் - ஜனாதிபதி மஹிந்த 
[Tuesday, 2013-04-23 10:06:17]
 
பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
  
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
 
புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்வு விடயத்தில் விருப்பம் கொண்டுள்ளார். ஆனால் அவரால் கூட பேச்சுக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது. அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி எத்தகைய இணக்கப்பாட்டிற்கு அவர் வந்தாலும், துரோகிப்பட்டமே அவருக்கு கட்டப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர் பேச்சுக்கு வருவதை தவிர்த்து வருகின்றார்.
 
கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எம்.பி. அடுத்த தலைமையை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகின்றார். அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன. கூட்டமைப்பினர் தீர்வினை இந்தியா பெற்றுத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், உள்ளனர். அது சாத்தியமற்ற விடயமாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினர் வருவார்களேயானால் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் கூட்டமைப்பினர் ஈழம்தான் தமக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது.
 
வடக்குத் தேர்தல்
 
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளாரை நாம் இன்னும் தெரிவு செய்யவில்லை. இவ்விடயம் தொடர்பில் பலதரப்பட்டவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி முதலமைச்சர் வேட்பாளர்களையும் ஏனைய வேட்பாளர்களையும் நாம் தெரிவு செய்வோம்.
 
மேதினக் கூட்டம்
 
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக்கூட்டம் கொழும்பிலேயே நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள், மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=81076&category=TamilNews&language=tamil

வர வர மகிந்தவும் சில யாழ் கள உறவுகள் போல பேச தொடங்கிவிட்டார்  :unsure:

 

  • கருத்துக்கள உறவுகள்

வர வர மகிந்தவும் சில யாழ் கள உறவுகள் போல பேச தொடங்கிவிட்டார்  :unsure:

 

மகிந்தர் மட்டுமல்ல.. எல்லாம் சிங்களப் பேரினவாதத் தலைவர்களும் இதையே தான் பேசினர். ஜே ஆர் சொன்னார்.. தமிழ் பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழித்து.. நாட்டை ஒருமைப்படுத்துவேன் என்று. சிங்களவர்களைப் பொறுத்தவரை பேரினவாதம் தான் அவர்களின் அரசியலே.

 

தமிழர்கள் சிலரைப் பொறுத்தவரை அந்தப் பேரினவாதத்திற்கு சாமரம் வீசுவதுதான் அவர்களின் வரலாறு.

 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தற்செயலாக பார்க்க நேரிட்டது.

 

அதில் நேயர்கள் வடக்குக் கிழக்கில்.. தற்போதைய குடித்தொகைப் பரம்பல் மாற்றம் குறித்துப் பேச கேட்கப்பட்டார்கள்.

 

அதில் ஒருவர் சொன்னார் 50 இலட்சம் கட்டி வெளிநாட்டுக்குப் போறதிலும் அதனை இங்கே முதலீடு செய்துவிட்டு குந்தி இருக்கலாம் என்று.

 

அதற்கு இன்னொரு உறவு சொல்லிச்சு 50 இலட்சம் இருந்து யாரும் வெளிநாட்டுக்குப் போகேல்ல.. 50 இலட்சத்தை கடனா வாங்கி அதை திருப்பி உழைச்சுக் கொடுப்பம் என்று தான் போகினம்.. ஊரில 50 இலட்சத்தை முதலீடு செய்திட்டு அதை எவன் திரும்பி வெளிநாட்டுக் கடனாளிக்கிக்கு கொடுத்திருக்கிறான்.. என்று... (அதில ஈபிடிபிக்கு இராணுவத்திற்கு இதர குழுக்களுக்கு எவ்வளவு கப்பமா கொடுக்கனுன்ன விபரத்தை அவர் சொல்லேல்ல.. காரணம் உங்களுக்குத் தெரியும் தானே..) அவரே மேலும் சொன்னார் ஊரை விட்டு போனாலும் சொத்துக்களை சிங்களவருக்கோ மற்றவர்களுக்கோ விற்கக் கூடாது என்று. மக்கள் ஊரில இல்லை என்பதற்காக அவர்களின் காணிகளை சிங்களவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றில்லைத்தானே என்று கொஞ்சம் துணிச்சலா பேசினார்.

 

அதற்கு ஒட்டுக்குழு தொலைக்காட்சிக்காரர் சொல்லுறார்.. முன்னரெல்லாம் வன்னியில் மக்கள் வாழேல்ல. படித்துவிட்டு வேலையற்றிருந்த.. யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு காணிகளை இலவசமா வழங்கி அங்கு அவர்களைக் குடியேற்ற முற்பட்டதாம் சிங்கள அரசு. அவர்கள் அந்தக் காணிகளை வாங்கி வைச்சுக் கொண்டு வெளிநாட்டுக்குப் போயிட்டினமாம். இப்ப அந்தக் காணிகளை வேறு மக்கள் கஸ்டப்பட்டு கழனி ஆக்கி வைச்சிருக்க அதை கேட்டு வெளிநாட்டில இருந்து வருகினமாம். அன்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு காணி வழங்கினது போலத்தான் இப்ப முள்ளியவளையிலும் பிற வன்னிப் பகுதிகளிலும் சிங்களவருக்கும் முஸ்லீம்களுக்கும் காணி வழங்கப்படுகிறதாம் என்ற தோறணையில்.. புலம்பெயர் தமிழர்களை குறை சொல்லிக் கொண்டு சிங்கள பேரினவாதத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்.

 

விகிதாச்சார முறையின் கீழ் தமிழர்களின் இனப்பரம்பல் குறைவடைவதால்.. தமிழர்கள் பலவற்றை இழக்க நேரிடுவதாகவும் அவரே நீலிக்கண்ணீரும் வடித்தார்..!!

 

விகிதாசார முறையை நீக்கச் சொல்லி எப்பவோ இருந்து தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் திட்டமிட்ட சிங்கள முஸ்லீம் குடியேற்றங்களுக்கு எதிராகவும் தான் தமிழர்கள் ஆயுதம் தூக்க வேண்டி வந்தது என்பதை எல்லாம் சுலபமாக மறந்துவிட்டு அல்லது மறக்கடிக்கச் செய்துவிட்டு.. இப்போ.. பழையபடி ஒன்றுபட்ட இலங்கை என்று மகிந்தரும்.. அவருக்கு சாமரம் வீசுபவர்களும் பேசிக் கொண்டு தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பதனால் தான் மகிந்தவின் வாய் இவ்வாறு எல்லாம் கண்டபடி உளறுது. இதே வாய் 2005 இல் எப்படிப் பேசியது என்பதையும் தமிழ் மக்கள் அவ்வளவு இலகுவாக மறந்திருக்கமாட்டார்கள்..!

 

மகிந்தவும் சிங்களவர்களும் நினைக்கிறார்கள் சிங்கள இராணுவத்தை தமிழர்களின் நிலத்தில் குந்த வைத்திருப்பதன் மூலம் நாடு ஒன்றுபட்டிருக்கு என்று. அவர்களின் நினைப்பு எவ்வளவு தவறு என்பதை இந்திய  இராணுவம் 1987 முதல் 1990 வரை குந்தி இருந்த வரலாறு காட்டி நிற்கும்..! இராணுவ இருப்புகளும் படுகொலைகளும் மக்களின் அரசியல் தேவைகளை பலாத்காரமாக.. முடிவுறுத்த முடியாது..! அதையும் கடந்தது தமிழ் மக்களின் தமிழீழ வேட்கை..!

 

சிங்களத் தலைமைகள் காலத்துக்கு நேரத்திற்கு ஏற்ப குரைக்கிறார்கள். அதனை எல்லாம் கருத்தில் எடுப்பதிலும் தமிழ் மக்கள் தமக்கான அரசியலை ஈழத்தீவில் நிலை நிறுத்தும் செயற்பாடுகளை காட்டிக்கொடுப்பாளர்களை ஒட்டுக்குழுக்களைத் தாண்டி செயற்படுத்துவதுதான் இன்றைய தேவை.  :icon_idea:

Edited by nedukkalapoovan

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தவறு என்று இலங்கை அரசியல் சட்டம் சொல்லும்போது மகிந்த பயங்கரவாதக் கும்பலுடன் எப்படிப் பேசுவது?

 

துரோகிப் பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்!- ஜனாதிபதி

Written by tharsan   // April 23, 2013   // Comments Off

 

mahinda_sampanthan-300x214.jpg

 

பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வர முடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-

புலம் பெயர்ந்த தமிழர்களுடன் இணைந்து ஈழம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் நிற்கின்றனர். இவ்வாறான நிலையில் எப்படி கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்.

யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒன்றுபடுத்தி ஒற்றுமைப்படுத்தியுள்ளேன். இந்த நிலையில் மீண்டும் பிரிவினைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தீர்வு விடயத்தில் விருப்பம் கொண்டுள்ளார். ஆனால் அவரால் கூட பேச்சுக்கு வரமுடியாத நிலை காணப்படுகின்றது.

அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி எத்தகைய இணக்கப்பாட்டிற்கு அவர் வந்தாலும், துரோகிப்பட்டமே அவருக்கு கட்டப்படும் என்ற அச்சத்தினாலேயே அவர் பேச்சுக்கு வருவதை தவிர்த்து வருகின்றார்.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் சுமந்திரன் எம்.பி. அடுத்த தலைமையை கைப்பற்றும் நோக்கில் செயற்படுகின்றார். அவருக்கு பல பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைக்கின்றன.

கூட்டமைப்பினர் தீர்வினை இந்தியா பெற்றுத்தரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், உள்ளனர். அது சாத்தியமற்ற விடயமாகும்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு கூட்டமைப்பினர் வருவார்களேயானால் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

ஆனால் கூட்டமைப்பினர் ஈழம்தான் தமக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

 

http://news.tamilstar.com/archives/32299#more

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பல சுற்றுக்கள் சனாதிபதியுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளுக்கு என்ன நடந்தது?. உங்களின் சுத்துமாத்தால் தான் கூட்டமைப்பினர் உங்களுடன் பேசுவது வீண்வேலை என நினைக்கிறார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.