Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனும் அடிப்படைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் - சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
 
மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
 
இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை.  அவர்கள் வேறு நாடுகளிடம் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவே போரிட்டனர். 
 
மன்னர்கள் எதிரிகள் வரும் போது தாக்குதல்களை நடத்தினார்களே தவிர இனவாதத்தில் போதை ஏறி நாட்டில் உள்ள ஏனைய இனங்களையும் மத தலங்களை தாக்கவில்லை.  இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல மாதங்களை கொண்ட நாடு.  அவர்கள் அனைவரும் சகோதரத்துவதுடனும்,  சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு. 
 
எனினும் தற்போது ஒரு சிறிய தரப்பினர் முன்னெடுத்து வரும் அடிப்படைவாத வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே தொடர்ந்தும் சென்றரால் நாட்டின் பேரழிவுக்கும், சேதத்திற்கும் காரணமாக அமைந்து விடும். இவ்வாறான அடிப்படைவாதிகள் எழுச்சி பெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தலையிட்டு அதனை அடக்க வேண்டும். இது அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு.  இதனை விடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியை கொடுத்தும் கொள்கையை பின்பற்றினால் பாரிய அழிவே ஏற்படும். 
 
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் பாதிப்பு மிகவும் பாரியளவானது. ஏற்கனவே பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போல் நாட்டு மக்கள் என்ற வகையில் உரிமைகளும், கடமைகளும் உள்ளன.  பௌத்தர்கள் என்ற வகையில் நாம் அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை போன்ற உன்னதமான மனித பண்புகளை பேசும் மதங்கள் வேறு எதுவும் இல்லை. மத, இனவாத பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதம் பௌத்த மதம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91094/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்
நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை போன்ற உன்னதமான மனித பண்புகளை பேசும் மதங்கள் வேறு எதுவும் இல்லை. மத, இனவாத பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதம் பௌத்த மதம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐயோ மகே அம்மே....தாங்க முடியல்ல உங்களின் நகைச்சுவை......நீங்கள் எப்ப பெளத்தமதம் படிச்சனீங்கள்....உங்களின் அப்ப கிறிஸ்தவர் ஆச்சே....
  • கருத்துக்கள உறவுகள்

நாணத்தால் முகம் கவிழ்கின்றன,

போதி மரத்தில் தோன்றுகின்ற,

புதிய குருத்துக்கள்! :o

  • கருத்துக்கள உறவுகள்

//இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை.//

 

 

2500 ஆண்டுகளுக்கு முன்னம் "சிங்களம்" எங்கே இருந்தது? பௌத்தம் இருந்திருக்கலாம்.. அதனுடன் சிங்களத்தைச் சேர்த்து தங்கள் வரலாற்றைப் பெருப்பிக்கிறார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பர்மாவிலும், சிறிலங்காவிலும் நடக்கும் புத்த பிக்குகளின் வெறியாட்டத்தைப் பார்க்கும் போது....
இஸ்லாமிய தீவிரவாத்தால்.... முஸ்லிம்களுக்கு உலகம் குத்திய முத்திரை போன்று...  பௌத்தர்களுக்கும் கிடைக்கும் நாள்... அதிக தூரத்தில் இல்லை.

 



2500 ஆண்டுகளுக்கு முன்னம் "சிங்களம்" எங்கே இருந்தது? பௌத்தம் இருந்திருக்கலாம்.. அதனுடன் சிங்களத்தைச் சேர்த்து தங்கள் வரலாற்றைப் பெருப்பிக்கிறார்கள்..!

 

புத்தர், ஏசுநாதரை விட....
500 வயது மூத்தவர் என நினைக்கின்றேன். ஆனா படியால்.... 2500 வருடங்களுக்கு முன்பு, பௌத்தமும் இருக்கவில்லை. :D

ஆசை ஆரைத்தான் விட்டது. அதிகாரம் என்ற மது ஒரு தடவை குடித்தான் மீண்டும் மீண்டும் தேவைப்படும். கதிர்காமர், சரத் என் சில்வா போன்றவர்களை வைத்து தமிழருக்கு சரித்திரம் காணாத அழிவு செய்தவர்கள்.  தமிழருக்கு மட்டும் அல்ல சிங்கவர்களுக்கு கூட நல்ல ஆட்சி கிடைக்க கூடாது என்று ரணிலை பதவி நீக்கி மகிந்தாவை பிரதமர் ஆக்கியவர்.

http://www.dailynews.lk/2004/04/07/new02.html

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெடியளின்ர உதவியோட  பயங்கர வாதத்துக்கு முற்று புள்ளி வச்சாச்சு ....

போதுபலசேனா உதவியோட மத வாதத்துக்கும் அலுவல் நடக்குது ...

சந்திரிகா அம்மையார் வழி காட்டலில உந்த அடிப்படை வாத்துக்கும்

தீர்வு கொண்டுவா எண்டு கேக்கிறதுக்கு தானே இந்த்த திரி .....

சந்திரிகா அம்மையார் யாழ் பாக்கிரவ  தானே ...
தமிழரும் உதவி செய்யுறாங்க எண்டு  சந்தோச படுவா..... :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பெடியளின்ர உதவியோட  பயங்கர வாதத்துக்கு முற்று புள்ளி வச்சாச்சு ....

போதுபலசேனா உதவியோட மத வாதத்துக்கும் அலுவல் நடக்குது ...

சந்திரிகா அம்மையார் வழி காட்டலில உந்த அடிப்படை வாத்துக்கும்

தீர்வு கொண்டுவா எண்டு கேக்கிறதுக்கு தானே இந்த்த திரி .....

சந்திரிகா அம்மையார் யாழ் பாக்கிரவ  தானே ...

தமிழரும் உதவி செய்யுறாங்க எண்டு  சந்தோச படுவா..... :lol: :lol:

 

யோவ்... சந்திரிகாவுக்கு,

எத்தினை கண் இருக்கு, சொல்லும் பாப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்... சந்திரிகாவுக்கு,

எத்தினை கண் இருக்கு, சொல்லும் பாப்பம்.

 

  ஒன்னரை கண் ... :lol:

யோவ்... சந்திரிகாவுக்கு,

எத்தினை கண் இருக்கு, சொல்லும் பாப்பம்.

அவ பார்க்கிறது அரைக்கண்ணால். ஏன் என்றால் அவவுக்கு ஒருகண் மதிவதனங்கிலை :D அதுதான் அவர் அவவுக்கு புறத்தாலை பம்பரமாய் சுழல்கிறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.