Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; மூவர் வைத்தியசாலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடல் எல்லையை மீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 11 இலங்கை மீனவர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் எட்டுப் பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்க‌ை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காக்கிநாடா கடலோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோத‌ாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய நிலையில் இரவு மின் துண்டிக்கப்பட்டதை அடுத்து காற்று வாங்குவதற்காக இலங்கை மீனவர்கள் வெளியே வந்துள்ளனர்.

அப்‌பொழுது அந்தப் பகுதியில் உள்ளவர்களுடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டதால் பொது மக்கள் இலங்கை மீனவர்களை தாக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

இது குறித்து பொலிஸார் கூறுகையில்,‌ பொதுமக்கள் தாக்கியதில் 3 இலங்கை மீனவர்கள் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
 

http://onlineuthayan.com/News_More.php?id=279092017906101449

 

தவறான  தகவல் . சம்பவம்  நடந்த  இடம்  காக்கிநாடா  ஆந்திரா  மாநிலத்தில்  உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டிப்போட்டிருக்க வேண்டும் 

 

தவறான  தகவல் . சம்பவம்  நடந்த  இடம்  காக்கிநாடா  ஆந்திரா  மாநிலத்தில்  உள்ளது .

 

ஓம்

 

உதயன் தலைப்பினை அப்படியே இங்கும் இட்டதால் தவறான தகவலாக அமைந்து விட்டது. தலைப்பை திருத்து விடுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா குல்ட்டி பசங்க எதுக்கு வன்முறையை ஆயுதமாகப் பாவித்தார்கள்? :(:D

மீன் பிடிக்க  போனவர்கள் ஏன் ஆந்திராமானிலத்து மொழியில் முரண்பட்டார்கள்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.