Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற முடிவால்அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு சம்பந்தன் ஐயா உதவுகின்றாரா?

Featured Replies

கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற முடிவால்அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு சம்பந்தன் ஐயா உதவுகின்றாரா?

sivaskthi%20aananthan.jpg

 

கட்சி அரசியலைக் கைவிட்டு செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற தீர்மானத்தை எடுப்பதன் மூலம் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தலைவர் இரா சம்பந்தன் ஐயா விழுந்துவிடப் போகின்றாரா என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். தமிழர்கள் பெரும் அவலங்களுக்குள்ளாகியிருக்கும் இந்த நிலையில் கட்சி அரசியலைக் கைவிட்டு பொது நலனின் அடிப்படையில் செயற்படுவதற்கு சம்பந்தன் ஐயாவும், தமிழரசுக் கட்சியினரும் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யும் விவகாரத்தில் தற்போது உருவாகியிருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கும் சிவசக்தி ஆனந்தன், கடந்த 12 வருடகாலமாக இணைந்து செயற்படும் கூட்டமைப்பைப் பதிவு செய்வது என்பது ஒரு பிரச்சினையேயல்ல, தலைவர் சம்பந்தன் நினைத்தால் இதனை ஒரு மணி நேரத்துக்குள் செய்துவிட முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும ;தெரிவிக்கப்பட்டுள்தாவது,

~~போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றார்கள். அவர்களுடைய இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் அவர்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழர்சொந்த இடங்களிலிருந்துவெளியேற்றப்படுகின்றார்கள்.மீளக்குடியமர்வுமுழுமையாகவில்லை.மாகாணங்களுக்கான அதிகாரங்கள பறிக்கப்படுகின்றன. இராணுவ மயமாக்கலும் திட்டமிட்ட குடியேற்றங்களும் தொடர்கின்றன.. தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, காணாமற்போனோர் கதிபற்றி தெரியவில்லை.  இவை அனைத்துக்கும் எதிராக பலம்வாய்ந்த முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கையறு நிலையில் உள்ளது.

இதற்குத் தேவையான உள்ளகக் கட்டமைப்புக்கள் எதுவும் கூட்டமைப்பில் இல்லை. தமிழர்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கோ, அவர்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கோ தேவையான நீண்ட கால, குறுகிய காலத் திட்டம் என எதுவும் கூட்டமைப்பிடம் இல்லை. இதற்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்; சட்டபூர்வமாக ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யுங்கள், அதற்குத் தேவையான கட்டமைப்புக்களை உருவாக்குங்கள் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றோம். தமிழ் மக்கள் பெரும் அவலத்துக்குள் உள்ள இந்த நிலையில் பலம்வாய்ந்த ஒரு அமைப்பு அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க அவசியம். இவ்வளவு காலமும் செயற்பட்டுவந்தது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட முடியாது.

கடந்த தேர்தல்களில் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி மட்டும் ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.அதில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஏனைய நான்கு கட்சிகளுக்கும் பொதுவாக ஐந்துபேர் போட்டியிட்டு நால்வர் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்து எமது மக்கள் எங்களை எவ்வளவு தூரம் ஜனநாயகரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. இதேபோன்று ஏனைய தேர்தல்களிலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி தமிழ்மக்கள் வாக்களித்திருக்கவில்லை.
இன்றைய நிலையில் எமது மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறுவது மாபெரும் வரலாற்றுத் தவறாகவே இருக்க முடியும். இந்த அவலமான நிலையில் தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலாவது தனிப்பட்ட கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல், கூட்டமைப்பைப் பலப்படுத்தி பொது நலனின் அடிப்படையில் செயற்படுவதற்கு சம்பந்தன் ஐயா அவர்களும் தமிழரசுக் கட்சியினரும் முன்வருவார்களா என்பதுதான் நாம் எழுப்பும் முக்கியமான கேள்வி!
கூட்டமைப்பைப் பதிவதால் தமது கட்சியும் கொடியும் பறிபோய்விடும் என்று தமிழரசுக் கட்சியின் தலைமை அஞ்சவேண்டியதில்லை. மேலும், கூட்டமைப்பைப் பதிவு செய்வதென்ற தேவை தேர்தல் காலங்களில் தோன்றியதல்ல. தொடக்கக் காலத்திலிருந்தே பதிவு முயற்;சிகள்பற்றிப் பேசப்பட்டும் அதன் உறுப்புக்கட்சிகளால் ஒத்துக்கொள்ளப்பட்டும் வந்தவையே.

அத்துடன், தேர்தல்காலக் கூட்டுக்காக கூட்டமைப்பு உருவாகியிருக்கவில்லை. எமது மக்களின் நிரந்தர அரசியல்தீர்வு நோக்கியே உறுப்புக் கட்சிகள் ஐக்கியப்பட்டன. இதன் உருவாக்கத்தின் பின்னால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், போராளிகளின் உயிரிழப்புக்கள் மட்டுமின்றி அங்கமிழந்தவர்கள், உளப்பாதிப்படைந்தோர், சொத்துக்களைப் பறிகொடுத்தோர் அனைவரும் அத்திவாரமாக உள்ளனர்.

இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிசெய்வதாக சம்பந்தன் ஐயா அவர்களே கூறியிருக்கின்றார். சம்பந்தன் ஐயா விரும்பினால் கூட்டமைப்பைப் பதிவு செய்து ஒரு பலமான அமைப்பாக அதனைக் கட்டியமைக்க முடியும். அதன்மூலமாக மட்டுமே கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும். அவரால் ஒரு மணி நேரத்துக்குள் இதற்கான தீர்மானத்தையும் திட்டங்களையும் வகுத்துக்கொள்ள முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல், கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவது என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் அவர் விழுந்துவிடக்கூடாது என்பதே எமது விருப்பமாகும்.

கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக உருவாகியவை, அவற்றுடன் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என தமிழரசுக் கட்சியினர் கருதினால் அது தவறானது. இலங்கை - இந்திய உடன்படிக்கையின் மூலம் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாததல்ல. அதனால் அதில் சட்டப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அத்துடன் எமது அமைப்புக்களை கடந்த இரண்டு தசாப்த காலமாக அரசியல் கட்சிகளாக பதிவு செய்து தேர்தல்களிலும் நாம் போட்டியிட்டிருந்தோம். மக்களுடைய ஆதரவையும் நாம் பெற்றிருந்தோம் என்பதை தமிழரசுக் கட்சியினரால் மறுக்க முடியாது. அதனால், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாது எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமாகத் தெரியவில்லை.

ஆக, தமிழ் மக்களுடைய விருப்பப்படி ஒரு பலம்வாய்ந்த அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு தமிழரசுக் கட்சியினர் எதற்காக முன்வருகின்றார்கள் இல்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை. கட்சி அரசியலைக் கைவிட்டு பொது நலன்களின் அடிப்படையில் செயற்படவேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலை உருவானபோது தந்தை செல்வா தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை இடை நிறுத்திவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். கட்சி அரசியலைக் கைவிட்டு கூட்டணியைப் பலப்படுத்தவே அதன் பின்னர் அவர் உழைத்தார். எம் அனைவருக்கும் அவரது அந்த தீர்க்கதரிசனம் ஒரு முன்னுதாரணம்.

ஈழத் தமிழர்கள் வரலாற்றில் முக்கியமான ஒரு திருப்புமுனையில் உள்ள இன்றைய கால கட்டத்தில் தந்தை செல்வா அன்று எடுத்ததைப்போல தீர்க்க தரிசனமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியவராக சம்பந்தன் ஐயா அவர்கள்  உள்ளார். ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் முக்கியமான  கட்டத்தில் மிக முக்கியமான  தீர்மானத்தை எடுக்க வேண்டிய நேரமிது.  அவலமான வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் தமிழர்கள் அவரது முடிவைத்தானஎதிர்பார்த்துள்ளார்களஇவ்வாறு சிவசக்திஆனந்தன்தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=20739:2013-05-07-09-04-47&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

Edited by மல்லையூரான்

ஓர் இனத்தின் கண்ணீரில் நீச்சலடிக்க துடிக்கிறார் ஐயா சம்பந்தன்.
இவருக்கும் மண்வியாபாரி டக்கிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதாவது இருப்பது போல் தெரியவில்லை .
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இதனை சுமந்திரனை உள்ளிளுத்து.. மற்றையவர்களை வெளியேற்றிய போதே செய்ய ஆரம்பித்து விட்டார். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓர் இனத்தின் கண்ணீரில் நீச்சலடிக்க துடிக்கிறார் ஐயா சம்பந்தன்.
இவருக்கும் மண்வியாபாரி டக்கிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதாவது இருப்பது போல் தெரியவில்லை .

 

 

 

டக்ளஸ் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி 

 

சம்பந்தர் மத்தியில் இணக்க அரசியல் மாநிலத்தில் தனக்கு அரசியல்    

 

கடந்த தேர்தல்களில் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி மட்டும் ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.அதில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். ஏனைய நான்கு கட்சிகளுக்கும் பொதுவாக ஐந்துபேர் போட்டியிட்டு நால்வர் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்து எமது மக்கள் எங்களை எவ்வளவு தூரம் ஜனநாயகரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. இதேபோன்று ஏனைய தேர்தல்களிலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி தமிழ்மக்கள் வாக்களித்திருக்கவில்லை.

 

திருகோணமலையை எடுத்துகொள்ளுங்கள் EPRLF சுரேஷ் அணிக்கு வேட்பாளரை 

தெரிவுசெய்ய முடியவில்லை ,PLOT ஐ எடுத்து கொள்ளுங்கள் வேட்பாளரே இல்லாமல் 
கடைசியில் தமிழரசுக்கட்சிக்கு வேட்பாளராக விண்ணப்பித்த ஒருவரை தங்கள் 
வேட்பாளராக ஆக்கினார்கள் .ஆனந்தசங்கரியை எடுங்கள் புன்சிநிலமேக்கு பின்னால் 
திரிந்த ஊழல் வாதியை வேட்பாளர் ஆக்கி இவரை கடைசியில் ஆள்கடத்தல் வழக்கில் 
கைதுசெய்து TNA ஐ பலவீனப்படுத்த சிங்கள அரசு முயற்சித்தது இதற்கு யார் கரணம் ?
 
திருமலையில் வென்ற முவரும் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் 

 

 

அம்பாறையில் TELO வின் வேட்பாளர் தான் முதன்மை (தலைமை )வேட்பாளர் ,அங்கு 
வென்ற இரண்டுபேரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் .

 

Edited by Gari

 

ஓர் இனத்தின் கண்ணீரில் நீச்சலடிக்க துடிக்கிறார் ஐயா சம்பந்தன்.
இவருக்கும் மண்வியாபாரி டக்கிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதாவது இருப்பது போல் தெரியவில்லை .

 

 

டக்ளஸ் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி 

 

சம்பந்தர் மத்தியில் இணக்க அரசியல் மாநிலத்தில் தனக்கு அரசியல்    

 

சம்பந்தன் இதனை சுமந்திரனை உள்ளிளுத்து.. மற்றையவர்களை வெளியேற்றிய போதே செய்ய ஆரம்பித்து விட்டார். :icon_idea:

 

இந்த மூன்று கருத்துக்களும் யதார்த்தத்தை உணர்த்துகின்றன.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.