Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியத்தை மிரட்டும் ஜப்பானிய அரசு.........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை நிலைமைகள் தொடர்பில் மிக முக்கிய முடிவுகள்: ஜப்பானிய சிறப்புத் தூதுவர் அகாசி தகவல்

இலங்கை நிலைமைகள் தொடர்பில் சில நாடுகள் மேற்கொண்டிருக்கும் மிக முக்கிய முடிவுகள் போன்று ஜப்பானும் பரிசீலித்து வருகிறது என்று இலங்கைக்கான ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி தெரிவித்துள்ளார்.

இந்தோ-ஆசிய செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:

ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குச் செல்ல உள்ளேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்புகிறேன். அவர் "திடநம்பிக்கை கொண்ட மனிதர்". அவரால் மட்டுமே மிக கடினமான முடிவுகளையும் எடுக்க முடியும்.

ஜப்பானிய அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பது தொடர்பாக அவரிடம் விளக்குவேன். வேறு சில நாடுகள் முடிவு செய்திருப்பதைப் போன்று புலிகளுக்கு எதிரான காரிய சாத்தியமான நடவடிக்கைகளை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

அத்தகைய முடிவெடுப்பதற்கு முன்னதாக இலங்கைக்கான பயணத்தை நாம் மேற்கொண்டு நிலைமை அறிய உள்ளோம். போருக்குச் செல்லும் படுபாதாள நிலைமையிலிருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பிரபாகரனைச் சந்திக்க வேண்டும். அமைதி முயற்சிகள் குறித்த அவர்களது தற்போதைய எண்ணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை நிலைமை அச்சமூட்டுவதாகவும் மிகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது. மக்களுக்காக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்குத் திரும்ப வேண்டும்.

இலங்கை அமைதி முயற்சிகளை மீளச் சீரமைப்பில் இந்தியா பாரிய பங்காற்ற வேண்டும்.

இத்தகைய அமைதி நிலைமையை உருவாக்கிய நோர்வேயை பாராட்ட வேண்டும். இலங்கைப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினரும் இடையே மிக ஆழமான அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

1983ஆம் ஆண்டிலிருந்து பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே உள்ள ஒரு குறிப்பிட்ட சக்திகளால் இன்றளவும் தொடர்ந்து தமிழர்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரை காலக்கெடு விதித்திருக்கும் முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இல்லாத எந்த ஒரு கண்காணிப்புப் பணியையும் மேற்கொள்ளும் உத்தேசம் ஜப்பானுக்கு இல்லை. சிறிலங்காவையும் விடுதலைப் புலிகளையும் பொறுத்தே இலங்கை இனப்பிரச்சனையில் ஐ.நா. தலையீடு சாத்தியமானது. அதுவரையில் அந்தக் கேள்வியானது கற்பனையானதாகவே இருக்கும்.

இலங்கையில் அமைதியை எட்டுவதற்கு

- கண்காணிப்புக் குழுவினர் மீது மிகவும் நம்பிக்கை வைத்து 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டும். இதனை உடனேச் செய்தாக வேண்டும். இதில் இந்தியாவும் ஜப்பானும் ஒரே எண்ண அலைவரிசையைக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்சனையால் நீண்டகாலம் தொந்தரவடைந்திருக்கும் இந்தியாவுக்கு இது ஆதாயத்துடன் இணைந்த சுமையாக இருக்கும்.

- ஐக்கிய கட்டமைப்பில் பிளவுபடாத இலங்கைக்குள் இறுதித் தீர்வு காண்பதற்காக சுருக்கமான ஒரு வரைவுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். புதிய அரச அமைப்பு முறைக்காக தேவையான அரசியல் யாப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

- இறுதித் தீர்வை நோக்கி நகர்கின்ற போதும் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் சுயாட்சி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா மீதான நம்பிக்கையின்மை அதிகரித்து வருவது பற்றி கூற வேண்டுமானால் நான் முழுமையாக திருப்தியடைந்திருக்கிறேன் என்று சொன்னால் நேர்மையற்றவனாவேன். ஆம். அமைதி முயற்சிகள் குறித்து நாம் அதிருப்தியடைந்துள்ளோம். அதன்பின்னர் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம். அனைத்து சம்பவங்களுக்குமே விடுதலைப் புலிகளை காரணம்காட்ட முடியாது. ஆனால் அரசாங்கத் தரப்பை விட விடுதலைப் புலிகள் அதிக வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாரதூரமான குறைபாடுகள் உள்ளன. விடுதலைப் புலிகளிடமிருந்து விலக்கப்பட்ட கருணாவுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் தொடர்பிருப்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சந்தேகிப்பதால் இருவருமே இணைந்துதான் நிலைமையை சீராக்க வேண்டும் என்றார் அகாசி.

ஆனால் எந்த நாடுகள் எத்தகைய முடிவுகளை மேற்கொண்டுள்ளன என்பதை அகாசி தெரிவிக்கவில்லை என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி புதினம்

மிரட்டல் --> கெஞ்சல், இது வழமைதானே

ஐரோப்பியயுனியன் வரிசையில் இப்ப அகாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னய்யா எங்கட மக்கள் சமாதானமா வாழ வேணும் என்டுறதில தமிழர்களையும், புலிகளையும் விட இவங்களுக்கு அதிகமா இருக்கு???

என்னுடைய கணக்கு அடுத்தாக ஜப்பானும் புலிகளைத் தடைசெய்யும். அதைத் தொடர்ந்து சிறீலங்காவும் தடை செய்யும். அதன்பின்னரே முழு அளவிலான, வெளிப்படையான போர் ஒன்றை சிறீலங்கா தொடங்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா புலிகளை இன்னும் தடைசெய்யவில்லையா??? :)

எதிர்பார்த்த ஒன்று தான், அமெரிக்காவின் செல்லப்பிள்ளை யப்பான் ஆச்சே, யப்பான் என்ன செய்ய முடியும்.

"திடநம்பிக்கை கொண்ட மனிதர்". அவரால் மட்டுமே மிக கடினமான முடிவுகளையும் எடுக்க முடியும் = இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கு செப்ரெம்பர் 1 ஆம் நாள் வரை காலக்கெடு விதித்திருக்கும் முடிவு.

:lol: :wink: :):) போக... போக... என்னம்... இவ்நவீன உலகம் தமிழரிடம் கற்றுக்கொள்ளும்.... :lol: 8) :)

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை யப்பான் தலைவரைச் சந்திக்க அனுமதி கேட்டது. உண்மையில் நோர்வையைப் புறம் தள்ளி விட்டு, தான் அந்த சமாதத் தூதுவர் பதவியைப் பிடிக்கும் நிலையைத் தான் யப்பான் விரும்பியிருந்தது.

பொதுவாக, இந்தப் பேச்சுவார்த்தைக்காலத்தில், ஜப்பான் எப்படி உள்நுழைந்தது? இலங்கையரசோ, புலிகளோ அழைக்காத போது ஏன் மூக்கை நுழைத்தது என்றால், தன்னை இணைத்துக் கொள்வதற்கே!

இந்த மறை ஜகாசியைத் தலைவர் சந்திப்பாரா இல்லையா, என்பது வேறு விடயம். ஆனால் இப்படியான மிரட்டலைக் கொடுத்தால், புலிகள் ஏதும் இழகிய முடிவுகளை எடுத்து யப்பானையும் அனுமதிக்க வேண்டும் என்ற நப்பாசை தான ;காரணமாகத் தோன்றுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் தடுத்து முடிஞ்சுது, இப்ப ஜப்பான்காரனும் தடுத்துவிட்டால் இனி சோனி T.V.க்கு எங்கே போவது? இதுதான் எங்கள் தமிழீழத்திற்கு முக்கியம்! நோர்வேயை புறம்தள்ளும் நோக்கில் அமரிக்காவின் தூண்டுதலாலேயே ஜப்பான் மூக்கை நுழைத்தது. இப்பவும் அதே தூண்டுதலிலேயே எம்மை தாங்களும் தடைசெய்ய முனைகிறது! லெபனன் நாட்டு மக்கள் படும்பாட்டை இன்னும் ஜப்பான் கவனிக்கவில்லையோ!

அமெரிக்கா தலைமையில் அப்ப உலகமே தனிமைப்படுத்த முனையுது என்றியள்..! ஜப்பான் தான் சிறிலங்காவைப் பொறுத்த வரை முக்கிய உதவி வழங்கும் நாடு. கடந்த காலங்களில் கூட உதவிகளைக் கட்டுப்படுத்தி சிறிலங்கா அரசை..பேச்சுக் கொண்டுவர ஜப்பான் முன்வந்திருந்தது. இருந்தாலும்..தற்போதைய ஜப்பானின் நிலைப்பாடும் புலிகளின் தலைமை இதற்கு எந்த வகையில் பதிலளிக்கப் போகிறது என்பதும்..அத்துணை முக்கியமாகத் தோன்றாவிடினும்....நெருக்கடிகள

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாதம் அகாசி வருகிறார் பிரபாவை சந்திக்க விருப்பம்

* விடுதலைப் புலிகளுக்கு எதிராக `விளைவுகளை உணரக்கூடியதான' நடவடிக்கை எடுப்பது குறித்து ஜப்பான் ஆராய்வதாகத் தகவல்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக விளைவுகளை உணரக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஜப்பான் தீவிரமாக சிந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, அதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நான் பிரபாகரனை சந்திக்க விரும்புகிறேன். அவர் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள மனிதர். மிகவும் கடினமான முடிவுகளை அவரால் மாத்திரமே எடுக்க முடியும்.

ஜப்பான் அரசாங்கம் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தறுவாயில் உள்ளதாக நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன்.

ஏனைய அரசாங்கங்கள் எடுத்துள்ளது போல் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்கின்றோம்.

எனினும், இவ்வாறான முடிவினை எடுப்பதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளேன். முழுமையான யுத்தத்தை நோக்கிச் செல்வதிலிருந்து விலகி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியுமா என சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆராய்வதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளேன்.

ஜப்பான் இலங்கை குறித்து ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளது. மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் வன்முறைகளிலிருந்து மீளவேண்டும் என ஜப்பான் விரும்புகின்றது.

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக இந்தியா அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும். நோர்வே இதுவரை ஆற்றிய பங்களிப்பிற்காக அதனைப் பாராட்ட வேண்டும்.

டோக்கியோவில் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடு விடுதலைப் புலிகளுக்கான சமாதான பொறியல்ல. சில வகையான பொறி என்பது எமது நோக்கமல்ல.

பெருமளவு நம்பிக்கையை அளித்த யுத்த நிறுத்த உடன்படிக்கை திசை மாறியதற்கு இரு தரப்பிற்கும் இடையில் காணப்படும் பரஸ்பர நம்பிக்கையின்மையே காரணம்.

1983 ஜூலை இனக்கலவரத்தினால் உண்டான இன வன்முறையின் தாக்கத்திலிருந்து பெருமளவு தமிழர்கள் இன்னமும் மீளவில்லை. எனினும், கடந்த கால வரலாறுகளிலிருந்து ஏதோ ஒரு கட்டத்தில் விடுபட வேண்டும்.

யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் விலக்கப்பட வேண்டும் என்ற தமது முடிவை விடுதலைப் புலிகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து கண்காணிப்பாளர்களின் பணி எதனையும் ஆற்றும் எண்ணம் ஜப்பானிற்கு இல்லை. ஐக்கிய நாடுகள் இல்லாமல் ஜப்பான் அதனை செய்யாது.

இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவென்பது ஐக்கிய நாடுகளுக்கு வெளியே ஏற்படுத்தப்பட்டது.

கொழும்பும், விடுதலைப் புலிகளும் விரும்பினால் மாத்திரமே இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பங்களிப்பு செய்ய முடியும். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த மூன்று கட்ட அணுகு முறைகள் முக்கியம்.

முதலில் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்த வேண்டும். மேலும் நம்பிக்கை மிகுந்த யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் உதவியுடன் தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையை பலவீனமாக்குவது தூரநோக்கற்றது.

ஐக்கிய அல்லது பிரிபடாத இலங்கைக்குள் அரசியலமைப்பிற்கு அவசியமான மாற்றங்களுடன் புதிய வகை அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முழுமையான சமாதான திட்டமொன்றை உருவாக்க வேண்டும்.

மூன்றாவது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சில வகையான சுயாட்சி நிலவ வேண்டும். அதேவேளை இறுதித் தீர்விற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதலாவது யோசனைக்கு உடனடி வடிவம் கொடுக்க வேண்டும்.

இலங்கை விவகாரம் குறித்து இந்தியாவும் ஜப்பானும் ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டுள்ளன. புதுடில்லி இணைத் தலைமை நாடுகளுடன் மேலும் தன்னை உறுதியாக இணைத்து கொண்டால் சமாதான முயற்சிகள் மேலும் வலுவடையும்.

நான் முழுமையாக திருப்தியடைந்துள்ளேன் என சொன்னால் நான் நேர்மையானவனாக இருக்கமாட்டேன். சமாதான முயற்சிகளின் வேகம் குறித்து நாங்கள் அதிருப்தியடைந்துள்ளோம். துயரமான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். சகல சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளை குற்றம் சாட்ட முடியாது. எனினும் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தை விட அதிகளவு மீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க தரப்பிலும் பல மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அகாசி சொன்னது - 'விடுதலைப் புலிகளுக்கு எதிராக `விளைவுகளை உணரக்கூடியதான' நடவடிக்கை எடுப்பது குறித்து ஜப்பான் ஆராய்வதாகத் தகவல்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக விளைவுகளை உணரக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஜப்பான் தீவிரமாக சிந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, அதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்'

தாங்களாக மூக்கை நுளைத்த யப்பானானும் அமெரிக்காச்சொல் கேட்டு குழைக்குது. உவையும் இனி தடை செய்யப்போகினம். அதுக்கு முன்னால் ஒரு கருத்து வெளியிடினம். உவையை நம்பியே நாங்கள் போராட்டத்தை ஆரம்பிச்சினம். உந்த நாட்டில் உள்ள மக்களே எமக்கு பங்களிப்புச் செய்தினம்.

ம்.. அடுத்தது யப்பான்..

கவலையில்லையப்பா.. செப்ரெம்பர் முதலாம் தேதியளவிலை சர்வதேசம் என்ன சொல்லுதெண்டு பார்த்து அதுக்குப்பிறகுகூட சகாதேவனிட்டைப்போய் நல்லநாள் கேட்டு வேள்வி குடுத்து பிறகும் சர்வதேசம் என்ன சொல்லுமெண்டு நிறுத்துப்பார்த்துத்தான் சண்டையாக்கும்..

சர்வதேசத்தைப்பற்றி கவலையில்லையப்பா.. அவங்கள் கிடக்கிறாங்கள்.. பின்லாடனை பார்த்தால் போதும்..

:P

தாங்களாக மூக்கை நுளைத்த யப்பானானும் அமெரிக்காச்சொல் கேட்டு குழைக்குது. உவையும் இனி தடை செய்யப்போகினம்.

ம்.. அடுத்தது யப்பான்..

கவலையில்லையப்பா.. செப்ரெம்பர் முதலாம் தேதியளவிலை சர்வதேசம் என்ன சொல்லுதெண்டு பார்த்து அதுக்குப்பிறகுகூட சகாதேவனிட்டைப்போய் நல்லநாள் கேட்டு வேள்வி குடுத்து பிறகும் சர்வதேசம் என்ன சொல்லுமெண்டு நிறுத்துப்பார்த்துத்தான் சண்டையாக்கும்..

சர்வதேசத்தைப்பற்றி கவலையில்லையப்பா.. அவங்கள் கிடக்கிறாங்கள்.. பின்லாடனை பார்த்தால் போதும்..

:P

ம்.. நாரதர் விலாசப்படி செப்ரெப்பரிலை தொடங்குறினமாம்.. அது மட்டும்தான் எனக்குத்தெரியும்.. யப்பானியனோ அமெரிக்கனோ என்ன செய்யப்போறானெண்டு சாத்திரியைத்தான் கேக்வேணும்.. பின்லாடன் அமெரிக்காவிலை கைவைக்கவே திசை மாறின..மாறுற ஈழப்போராட்டம் சர்வதேச சப்போட்டில்லாமல் நடக்குமாம்..நடக்குதாம்.. யாருக்கப்பா மிளகாயரைக்கிறாங்கள்?

அமெரிக்கா.. பிரித்தானியா.. யப்பான்.. இந்தியாவெண்டு சாட்டாத நாடுகளில்லை.. மாறி மாறி சாட்டு சொன்னதைத்தவிர வேறென்னத்தை கண்டாங்கள்.. ஒண்டா இருக்கத்தெரியாது.. ஊருலாப்பு போறாங்களாம் கேரளாவுக்கு.. இஞ்சையிருந்து சனம் சிகிரியா.. கண்டி.. நுவரெலியா பாக்கப்போகுது.. ஏன் யாழ்ப்பாணம் போகேல்லையோ எண்ட கேட்டால்.. :idea:

அதையேன் சொல்லி எழுதினதையும் தூக்கப்பணணுவான் என்டு விடுறன்.. :P

அப்ப அமெரிக்கன் வன்னில பொழியப் போறான் என்றீங்களோ...! சும்மா கதை விடாதேங்கோ தாத்தா...! அதுதான் சொல்லிட்டனமெல்லே..புலிகள்..ஒர

குருவீஸ் மதீஸ் நீங் கள் இருவரும் சிறந்த யாழ் கள கோமாளிகளாக உங்களை அடையாளப்படுத்தி வருகிறீர்கள் தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை.

clown3rr3.gif

ஏன் இப்ப குருவீஸை இதுக்க இழுக்கிறியள்..!

ஏமாளிகள் அல்லாத கோமாளிகள்...! :P :idea:

குருவீஸ் மதீஸ் நீங் கள் இருவரும் சிறந்த யாழ் கள கோமாளிகளாக உங்களை அடையாளப்படுத்தி வருகிறீர்கள் தொடருங்கள் உங்கள் நகைச்சுவையை.

clown3rr3.gif

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P :P

:P :lol: :!: :idea: :?:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே அகாசியின் பயணம் சாத்தியம் ஜப்பானின் சிறப்புப் பிரதிநிதி யசூசி அகாசியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே அடுத்த மாதம் யசூசி அக்காசி இலங்கைக்கு வருவார் என்று ஜப்பானிய தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய சிறப்புப் பிரதிநிதியைச் சந்திப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் மறுப்பாராயின் விடுதலைப் புலிகளின் நிதிசேகரிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்தல் மற்றும் ஜப்பானில் இருக்கும் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்குதல் பற்றிய தீர்மானத்தை ஜப்பானிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானிய தூதுவருடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஜப்பானிய தூதரகம் விரைவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ளும் என்றும் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பயணத்தின் போது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திப்பதற்கும் அகாசி திட்டமிட்டுள்ளார்.

எனினும் விடுலைப் புலிகளின் செயற்பாட்டிலேயே அனைத்தும் தங்கியுள்ளன என்றும் அகாசி ஏற்கனவே விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய தலைவர்களையும் சந்தித்துள்ளார் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் நோக்குடன் யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கடந்த வாரம் இராஜதந்திரிகள் தெரிவித்திருந்தனர்.

http://www.eelampage.com/?cn=27841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.