Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மயமாக்கப்படும் கிளிநொச்சி – வரலாறு காணாத வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

buddha.jpg

இம்முறை கிளிநொச்சியில் வரலாறு காணாத வகையில், மிகப்பெரியளவில் வெசாக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு சிறிலங்காப் படையினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். 

சிறிலங்காவில் வெசாக் வரும் 24ம் நாள் கொண்டாடப்படவுள்ளது. 

இதையொட்டி கிளிநொச்சியில் பிரமாண்டமான வெசாக் பந்தல் மற்றும் அலங்காரங்களை மேற்கொள்வதற்கு சிறிலங்காப் படையினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மௌரியப் பேரரசரான அசோகரின் மூத்த மகனான மகிந்த தேரர் 2319 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு வந்ததாகவும், அதனை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு பெருமெடுப்பில் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். 

சிறிலங்கா இராணுவம், விமானப்படை, காவல்துறை என்பன இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பாரிய பந்தலை அமைக்கப்பட்டு வருகிறது. 

இது வரும் 24ம் நாள் தொடக்கம் 31ம் நாள் வரை காட்சிக்காக திறக்கப்பட்டிருக்கும். 

இதற்காக சிறிலங்கா படையினரிடம் மட்டுமன்றி, சிறிலங்கா முழுவதிலும் இருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது. 

அசோகரின் தத்துவங்களை வெளிப்படுத்தும் வகையில், அமைக்கப்படவுள்ள இந்த அலங்காரப் பந்தல் 38 அடி உயரத்தையும், 42 அடி நீளத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் 30 ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்படும் என்றும் சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தப் பிரமாண்ட அலங்காரப் பந்தலை அமைக்கும் பணியில் சிறிலங்கா இராணுவப் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் ஏ9 வீதியில், மாங்குளம் சந்தி தொடக்கம், கொக்காவில் வரையான பகுதியை பௌத்த கொடிகள், வெசாக் கூடுகளால் அலங்கரிக்கவும் சிறிலங்காப் படையினர் தயாராகி வருகின்றனர்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130511108240

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள்...சிங்கள பவுத்த இனமே....வல்லாரை வதைப்பது நல்லதற்கல்ல.....அதை உணர்ந்து கொண்டால் சரி...

  • கருத்துக்கள உறவுகள்

பல முனைகளில் தமிழர்களை நசுக்க அலுவல்கள் மிக வேகமாக நடாத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.

 

அதிகாரங்களை பறித்த பின்னரே வடக்கு தேர்தல்; ஜனாதிபதி மஹிந்த இரகசியத் திட்டம்

 

ja1.jpg

மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பறித்தெடுத்த பின்னரே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமாக அறியவந்தது.

 
இன்னும் மூன்று வாரங்களுக்குள் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவருவதற்கான திட்டம் முன்வைக் கப்படும் என்றும், அதன் பின்னரே வடக்குத் தேர்தலுக்கான கட்டளையை ஜனாதிபதி பிறப்பிப்பார் என்றும் தெரியவருகின்றது.
 
அரசமைப்பில் 13 ஆம் சரத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் காணி அதிகாரங்களை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், பொலிஸ் அதிகாரங்களில் முக்கியமானவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பான வரைவுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு பரிந்துரைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.
 
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்திலிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்காது வடமாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தினால், அரசுக்கான ஆதரவு விலக்கப்படும் என அரசின் கடும்போக்குடைய பங்காளிக் கட்சிகளும், சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக மிரட்டி வருகின்றன.
 
அதேவேளை, ஆறு வருடங்களாகவுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கவும் மூன்று வருடங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் வழிவகுக்கும் வகையிலும் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படவுள்       ளது.
 
இவை அனைத்தும் அரசமைப்பின் 19ஆவது திருத்தமாகக் கொண்டு வரப்படவுள்ளன. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர, "பொலிஸ், காணி அதிகாரங்களைப் பறித்தெடுத்த பின்னரே, வடக்குத் தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுப்பார் என எமக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.'' என்றார். 
 

http://onlineuthayan.com/News_More.php?id=591312015411887304

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.