Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவராம் படுகொலை வழக்கு விசாரணை எட்டு ஆண்டுகளுக்கு பின் இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் படுகொலை வழக்கு விசாரணை எட்டு ஆண்டுகளுக்கு பின் இன்று ஆரம்பம்

sivaram-150x150.jpgஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.  2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.

 

சிவராம் கொலை தொடர்பில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற நபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊடகவியலாளர் குசல் பெரேரா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.  தர்மரத்தினம் சிவராம் கடத்திச்செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக குசல் பெரேரா தெரிவித்தார்.

 

கறுப்பு நிற பஜிரோ வாகனத்தில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றதாகவும் அவர்களை அடையாளம் காணமுடியாமல் போனதாகவும் சாட்சியாளர் குசல் பெரேரா கூறினார்.   சிவராம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறமுடியாது என்றும் குசல் பெரேரா நீதிமன்றில் தெரிவித்தார். கூறினார்.

 

வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபரான புளொட் இயக்கத்தை சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

http://www.thinakkathir.com/?p=50031

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை சிவராம் ஆதரிக்கவில்லை: ஊடகவியலாளர் சாட்சி

 

-ரீ.பாருக் தாஜுதீன்
 

சுதந்திய ஊடகவியலாளரான தர்மரத்னம் சிவராமை விடுதலை புலிகளின் ஆதரவாளர் என சிலர் முத்திரை குத்தினாலும் அவர் விடுதலை புலிகள் இயக்கத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று சுதந்திர ஊடகவியலாளரான குசல் பெரேரா சாட்சியமளித்தார்.
 
சிவராம் படுகொலை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். 
 
சிவராம் கொல்லப்பட்டு எட்டு வருடங்களின் பின் இந்த படுகொலை வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று ஆரம்பமானது.
 
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆறுமுகம் ஸ்ரீகந்தராசா என்பவர் ஒரு தமிழ் கட்சியுடன் சேர்ந்திருந்த துணைப்படை தலைவர் ஆவார். இவர் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
அதனடிப்படையிலேயே இந்த வழக்கு நீதிபதி லலித் ஜயசூரிய முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

"தனக்கு ஊடகவியலாளர் சிவராமை பல வருடங்களாக தெரியும். அவர் படுகொலைச்செய்யப்பட்ட 2005 ஏப்ரல் 26 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் நான் சிவராமை சந்தித்தேன். சிவராம் தன்னுடனும் இன்னொரு ஊடகவியலாளருடனும் சேர்ந்து மதுபானசாலையில் மது அருந்தினார்.
 
மது அருந்திவிட்டு தாங்கள் பிரிந்து சென்றபோது சிவராமை பலவந்தமாக ஒரு சாம்பல் நிற பஜீரோ ஜீப்பினுள் இருவர் இழுத்து தள்ளியதை தான் கண்டேன். எனினும், குறித்த இருவரையும் தன்னால் அடையாளம் காண முடியாது  என்பதுடன் அன்று இரவே சிவராம் கொல்லப்பட்டதை தான் அறிந்தேன். சிவராம் தமிழ் நெட் எனும் இணையத்தளத்தை நடத்தி வந்தார்.
 
தர்மரத்னம் சிவராம் 'தராக்கி' எனும் பெயரில் எழுதினார். அவர் விடுதலை புலிகளை ஆதரிக்காத போதும் அவரின் உடல் விடுதலை புலிகளின் மரியாதையுடன் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவருக்கு விடுதலை புலிகள் மாமனிதர் எனும் கௌரவத்தையும் வழங்கியது" என்றார். 

இந்த வழக்கு விசாரணை யூன் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67070-2013-05-13-16-10-41.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நுனாவிலான்....இந்த சிங்களவர் அவுஸ்ரேலியாவுக்கு வந்தவர்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.