Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமுதினி படுகொலையின் நினைவு நாள் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது.

 

1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்.

 

இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குமுதினிப்படுகொலை வரலாற்றுப் பதிவு

 

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். 

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

 

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.

 

சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. 

 

ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

 

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

 

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

 

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. 

 

கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

 

நேரில் கண்டவர் கூறியதாவது:

 

"எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது."

கிட்டத்தட்ட 45 நிமிடங்களின் பின்னர் கண்ணாடியிழைப் படகு அங்கிருந்து புறப்பட்டது[

]    

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91779/language/ta-IN/article.aspx

 

 

இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களிற்கெதிராக நடத்தப்பட்டஅக்கிரமங்கள் அனைத்தும் வரலாற்று பதிவாக ஆக்கப்பட வேண்டும். ஏனெனில்    உருவாக்க போராட்ட காலத்த்தில் இடம்பெற்ற சில தவறுகளை பூதாகரபடுத்தி தமிழ் புதிய தலைமுறையினரிடம் தமழர்களின் போராட்டம் தொடர்பாக   ஒரு குற்ற உணர்வை உருவாக்க தமிழ் நடுநிலையாளர்கள் என்று கூறுபவர்களின் ஒத்துழைப்புடன் காரியங்கள் நடைபெற்று வருகிறது. பி.பி. சி போன்ற சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் இலங்கை தமிழர்கள் கூட புதிய அரசியற் சூழ்நிலையில் தம்மை நல்லவர்களாக காட்ட அல்லது ஏதோ ஒரு தமக்கு ஒரு சொந்த அனுகூலங்களை (Benifit) பெற்றுகொள்வதற்காக  இவ்வாறான காரியங்களை ஆற்றிவருகிறார்கள். இவ்வாறான பதிவுகளை ஆதாரங்களுடன் உருவாக்குவது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த துயர நிகழ்வு எனக்கும்  ஞாபகம் இருக்கிறது,,..சிறுவனாக இருந்தபோது நடந்தது,..நண்பர் ஒருவர் facebook இல் குமுதினி படம் போட்டிருந்தார்..like பண்ணி ஏதும் எழுதவம் என்று யோசித்தால்..; -மற்றயவர்கள் போல சோலிக்கு போகாம இருப்பம் என்கிற மனநிலைதான் வந்தது..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.