Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐ.தே.க நிராகரிப்பு

Featured Replies

தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐ.தே.க நிராகரிப்பு
17 மே 2013

 

daya%20master_CI.jpg

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணைத்து பல்வேறு சேறு பூசல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பாரியளவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் வரையில் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களுடன் தேர்தல் தொடர்புகளைப் பேணுவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91870/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

அரசு விடும் இழிதனமான சேட்டைகள்  என்பது மிக மிக நகைப்பிக்கிடமானது.

 

இந்த மாதிரி கிடலர் கூட நடந்துகொண்டிருக்கமாட்டர்.  சிறையில் இருப்பவர்களை இப்படி எல்லாம் துன்புறுத மகிந்த சிந்தாந்தம் சொல்வது, புத்த சமையத்தையே அரச கூட்டம் வேடிக்கைப் பொருள் ஆக்கியிருக்கிறது  என்பதைத்தான் சொல்கிறது.

 

இப்படியான அரசுக்கு துணை போய் மேற்கு நாடுகள் தமிழரை அழித்திருப்பதை பார்த்தால் நிச்சயம் மேற்கு நாடுகளில் மகிந்தாவோ, கிட்லரோ திரும்ப பிறந்தால் ஆச்சரியப்பட தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த்க் கோமாளிகளின் செய்திகளையும்..இந்த புனித நாட்களில்  பார்க்க வேண்டியிருக்கிறதே...

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி அனேகமாக பொய்யாக தான் இருக்கும்.அரச கட்டுப்பாட்டில் இருக்கும் தயா மாஸ்டர் எப்படி ஐ.தே.க வில் போட்டியிட கேட்டிருப்பார்?? ஊடகங்களின் புனை கதையாக இருக்கலாம்.

 

  • தொடங்கியவர்

ஐ.தே.கட்சி சொல்கிறது. தயாமாஸ்டர் வெளியே அறிவித்தல் விட முதல் ஐ.தே.கட்சி சொல்லிவிட்டது,

 

ஊடகங்களுக்கு சுதந்திரம் கிடைக்காதவரையும் ஊடகங்கள் பொய் சொல்கிறார்களாக இருக்கும்.

 

ஆனால் அரசு தயா மாஸ்டருக்கு போனை டயல் பண்ணிக்கொடுத்து பேசு என்றால் பேசத்தான் வேண்டும்.

இது சிலவேளைகளில் மஹிந்த -கோத்தா வின் முயற்சியாக இருக்கலாம் .
UNP முலமாக அவர்களது வாக்குகளால் வெல்லவைத்து ?,பின்பு மஹிந்த கட்சிக்கு 
மாறுவதன் முலம் ஒரு பிரதிநிதியை செலவில்லாமல் பெற்றுக்கொள்ளும் 
முயற்சியாக இருக்கலாம் .இப்படித்தான் ரங்கா MP ஐ உள்வாங்கினார்கள்

  • தொடங்கியவர்

வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்

[Monday, 2013-05-20 17:51:40]
thaya-master-seithy-2-150.jpg

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது பேச்சுவார்த்தை நடாத்த தம்மை அழைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரையோ அல்லது வேறு உறுப்பினர்களையோ தாம் சந்திக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தயா மாஸ்டர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=83116&category=TamilNews&language=tamil

 

ஐ.தே.க நல்ல பாடம். இன்னமும் அரசை சரியாக கையாளத்தெரியாமல் அரசுக்கு விளம்பரம் கொடுத்த முட்டாள்கள். வெளிநாடுகளுக்கு, அரசு  தான் புலிகள் எல்லோருக்கும் புனர்வாழ்வளித்து அவர்களில் சிலர் தங்கள் அரசியல் அபிலாசைகளில் தேர்தல் கேட்கிறார்கள் என்று படம் காட்ட முயல்கிறது. அதே நேரம் அவர்களில் சிலரை வலோற்கார படுத்தி வடமாகாண தேர்த்லை குழப்ப முயல்கிறது.  இரண்டாவைத வெளிநாடுகள் சந்தேகமடாமல் இருப்பதற்காக அரசுக்கு முதலாதை ஐ.தே.க வைத்து நடித்துக்காட்டியிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.