Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுக்கு நேரில் சென்று தீபமேற்றியது கூட்டமைப்பின் இளைஞர் அணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்கு நேரில் சென்று தீபமேற்றியது கூட்டமைப்பின் இளைஞர் அணி!
 

 

0dcea8f4-ba14-4051-bb8f-ecfda4afc2391.jp

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியொன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு முதல் தடவையாக நேரடியாகச் சென்று இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

 

படையினரின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமாகிய எம்.எம்.ரதன் தலைமையிலான இளைஞர் அணி, முள்ளிவாய்க்கால் பிள்ளையார் ஆலயம், முள்ளிவாய்க்கால் கடற்கரை, தமிழ் உறவுகள் கூடுதலாகக் கொல்லப்பட்ட இடங்களான கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் மலர் தூவி - விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளது.

 

இன்று சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின் 4ஆம் ஆண்டை தமிழர் தாயகமெங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் நினைவுகூரவுள்ள நிலையில், தாம் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு நேரடியாகச் சென்று இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்று கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

'முள்ளிவாய்க்கால் பிள்ளையார் ஆலயத்திலும், ஜோர்தான் நாட்டு கப்பல் தரித்திருக்கும் கடற்கரையிலும், வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலும், கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் கற்பூரம் கொளுத்தி, விளக்கேற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் அஞ்சலி செலுத்தி இறுதிக்கட்டப் போரில் உயிர்நீர்த்த தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்துள்ளோம்.

 

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுதான் எமது போராட்டத்தின் மற்றுமோர் ஆரம்பம். இறந்துபோனவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை. இதனது வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு நேரடியாகச் சென்று எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

 

வடக்கு, கிழக்கு இணைந்த எமது தமிழர் தாயகத்திலும் மற்றும் தமிழகத்திலும், புலம்பெயர்ந்து எமது மக்கள் வாழும் பல நாடுகளிலும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு சனிக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், நேரடியாக அதே மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணியினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது விசேட அம்சமாகும்.

 

கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக பேராடி வருகின்ற நாம் முப்பது வருடம் அஹிம்சை வழியிலும் அதன் பின்னர் முப்பது வருடகாலமாக ஆயுதவழியிலும் போராடி எமது விடுதலையின் வீச்சுகளை அதிகரித்தோம். ஆயினும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதவழியிலான போராட்டம் அடக்கப்பட்டது. அந்த இறுதிக்கட்டப் போரில் உயிர்நீத்த எமது உறவுகளின் கனவுகள் மெய்ப்படவேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தி வணங்குகின்றோம்.

 

எமது உறவுகளை இறுதிக்கட்டப் போரில் கொன்றுகுவித்த அரச படைகள் அதன் மமதையில் யுத்த வெற்றிவிழாவைத் தமிழர்களின் மனங்களை மேலும் துயரப்படுத்திக் கொண்டாடுவது வேதனைக்குரியதே. ஆயினும், நாம் அதனைக் கருத்திற்கொள்ளாது எமது விடுதலை நோக்கி மேலும் போராடுவோம் என முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகள் மீது சத்தியம் செய்வோம்.

 

எமது போராட்ட வடிவங்கள் மாறின. ஆனால், இன்னும் இலட்சியங்கள் மாறவில்லை. இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களைப் போரிலே காவுகொடுத்த நாம் தொடர்ந்தும் ஜனநாயக வழியில் - இராஜதந்திர ரீதியில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் நிலைப்பாட்டில் பயணிப்போம்.

 

இதேவேளை, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அந்த மண்ணிலேயே நினைவுத்தூபி அமைத்து அஞ்சலி செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே அஞ்சலி செலுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்.

 

இவ்வாறு கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் ரதன் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=0dcea8f4-ba14-4051-bb8f-ecfda4afc239

  • கருத்துக்கள உறவுகள்

873654131vav.jpg

வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு

 

 
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 

வவுனியா சமளங்குளம் என்னுமிடத்தில் மனித உரிமை அமைப்பு ஒன்றினால் கடந்த 2010 ஆம் அண்டு அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சிலைக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கும், அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் நினைவு வணக்க கூட்டமும் நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தபோதிலும் நேற்று இரவு அத்தூபி இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டிருந்தது. 

கட்சியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார் மற்றும் மாவட்ட அமைப்பாளர் வசந்தறூபன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் உடைத்து சேதமாக்கப்பட்ட நினைவுக்கல் அருகில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் மாற்று இடம் ஒன்றில் அஞ்சலி செலுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு திட்டமிட்டபடி காலை 11 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமாரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (சட்டத்தரணி), இளைஞர் அணித் தலைவர் இ.சத்தியசீலன், உட்பட கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மரணமான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

  • கருத்துக்கள உறவுகள்

சோர்வடைந்த மனங்களுக்கு உத்வேகம் தரும் ஒரு நிகழ்வானாலும், ஆட்டுக்குட்டிகள் பாலருந்துமட்டும் ஒநாய்கள் பார்த்திருக்குமா என்ற சந்தேகமும் எழாமலில்லை. எங்கோ, எதற்கோ திரை போடப்படுகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.