Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தாக்குதல் - ஒருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_67762464_woolwich_rexfeatures.jpg

_67760592_woolwich_464.jpg

130522161047_woolwich_attack_304x171_bbc

 

லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது.

லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

  •  

இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை பார்ப்பதாக பிபிசியின் அரசியல் பிரிவின் தலைவர் தெரிவிக்கிறார்.

 

பயங்கரவாத தாக்குதல்

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வாள் போன்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்திய இருவர் மற்றொருவரை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அதன் பிறகு தாக்குதலுக்குள்ளானவரின் உடலை அருகில் இருக்கும் இராணவ முகாமுக்கருகே வீசிச் சென்றனர். கொல்லப்பட்டவர் ஒரு படை சிப்பாய் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடியே இரு நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இருவரையும் சுட்டுள்ளனர். அந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தென் கிழக்கு லண்டனில் உள்ள உலிச் என்ற பகுதியில் இந்த தாக்கதல் சம்பவம் நடந்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130522_londonattack.shtml

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தானவர்களை அடையாளம் காணாமல் எப்படித்தான் விட்டுவைத்தார்களோ தெரியவில்லை. கையில் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் நின்று அரசியல் வசனம் வேறு பேசினான் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தானவர்களை அடையாளம் காணாமல் எப்படித்தான் விட்டுவைத்தார்களோ தெரியவில்லை. கையில் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் நின்று அரசியல் வசனம் வேறு பேசினான் ஒருவன்.

 

 

ஏன் ராசா

எங்கடையளும்   இதைவிட பயங்கரமா  வெட்டுவினமே

திரிவினமே......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏன் ராசா

எங்கடையளும்   இதைவிட பயங்கரமா  வெட்டுவினமே

திரிவினமே......... :(  :(  :(

அப்படியா! அப்படியான மோடர்களை இன்னும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்.. ஆப்கானிஸ்தான்.. சிரியா.. மாலி.. என்று தினமும்.. பிணங்களை இந்த இளைஞர்களின் முன் சுட்டுப் போட்டவர்களே இதற்கு பதில் சொல்லனும்..???!

 

அந்த இளைஞன் பேசுகிறான்.. பெண்களே உங்கள் முன்னாடி இப்படிச் செய்ததிற்கு வருந்துகிறேன். இதைத்தான் எங்கள் பெண்கள் எங்கள் நாட்டில் பார்க்கின்றனர் என்று சொல்கிறான்...!!!

 

He added: "I apologise that women have had to witness this today, but in our land our women have to see the same. You people will never be safe. Remove your government, they don't care about you."

 

http://www.bbc.co.uk/news/uk-22630303

 

இதில் யாரைக் கண்டிப்பது..??! யாரை முதலில் தண்டிப்பது..???! பலமானவர்கள் செய்யும் மனிதக் கொலைகள்.. நியாயப்படுத்தப்படும் அதேவேளை பலவீனமானவர்கள் செய்வது வன்கொடுமையாக இனங்காட்டப்படுவது கூட பலமானவர்கள் தொடர்ந்து அநியாயம் செய்துவிட்டு போர்வைகளுக்குள் புகுந்திருக்க உதவுகிறது.

 

இதில் நாங்கள் வேற இவர்களை நோக்கி அவன் இவன் என்று கொண்டு......????! :icon_idea::rolleyes::(

 

நீதி என்பது எல்லோருக்கும் சமன் என்றிருந்தால்.. அந்த இளைஞன் கையில் இரத்தம் வந்திருக்குமா..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

நீதி என்பது எல்லோருக்கும் சமன் என்றிருந்தால்.. அந்த இளைஞன் கையில் இரத்தம் வந்திருக்குமா..???!

 

நீதி எப்போதும் சமனாக இருக்கப் போவதில்லை. இருந்ததாக வரலாறும் இல்லை.

அந்த அதி தீவிர முட்டாளின் செயலால் ஒரு பலனும் கிட்டப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.