Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டெம்பரில் வடக்கு மாகாண சபை தேர்தல் – அரசு உறுதி செய்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பரில் வடக்கு மாகாண சபை தேர்தல் – அரசு உறுதி செய்தது

 

npc.jpg?w=160&h=160-சந்துன் ஏ ஜயசேகர-

13 வது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பாக சில மாதங்களாக நீடித்த ஐயப்பாடு காரணமாக உறுதிப்படுத்தப் படாமல் இருந்த வடக்கு மாகாண சபை தேர்தல் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடக்கும் என அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், பெட்ரோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தேச வடக்கு மாகாண சபை தேர்தலை பின்போடும் எந்த நிலைப்பாடும் அரசுக்கு இல்லை என்று கூறினார். அத்துடன் 13 வது திருத்தச்சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது மாகாண சபைகளின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்கவோ அரசு எண்ணவில்லை என்றும் கூறினார்.

மாகாண சபை நடைமுறையில் உள்ள சட்ட அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என என்னால் உறுதிப்படுத்த முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாண சபை தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என தெளிவாக கூறியுள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள மாகாண சபை முறைமைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. 1978 ஆம் ஆண்டு மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டையே தீக்கிரையாக்கிய மக்கள் விடுதலை முன்னணி பின்னர் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கூட்டணி அரசில் உள்ள ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் யாப்பா கூட்டணி கட்சிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை கொடிருக்க உரித்துடையவை என்றார்.

13 வது திருத்தச்சட்டத்தை நீக்க பாராளுமன்றத்தில் தனியார் அங்கத்துவ பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க ஜாதிக ஹெல உறுமய எடுத்து வரும் முனைப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தனியார் அங்கத்துவ பிரேரணைகள் ஆரம்ப காலம் தொட்டே சமர்பிக்கப்பட்டு வருகின்றன. எனினும் 13 வது திருத்தச்சட்டத்தை நீக்க அரசு விரும்பவில்லை. குறித்த தனியார் அங்கத்துவ பிரேரணைகள் அந்த கட்சிகளின் நிலைப்பாடுகளே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் அல்ல எனவும் கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தவோ, அல்லது திருத்தங்கள் செய்யவோ அரசு உத்தேசித்தால் அவை சகல பங்குதாரர்களின் ஒப்புதலுடனேயே செய்யப்படும். அதிகாரப்பகிர்வு, மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றி கலந்துரையாடவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசு அமைத்துள்ளது.

துரதிஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பிரதிநிதிகளை இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இன்னும் பிரேரரிக்கவில்லை. அதிகாரப்பகிர்வு அல்லது அரசியலமைப்பு திருத்தம் என்பவற்றை முழுமையான அனைத்து கட்சிகளுடனான அரசியல் கலந்துரையாடல் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் ஒப்புதலுடனேயே மேற்கொள்ளப்படும்

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் பட்சத்தில் ஒன்றிணைந்த இலங்கை என்ற கோட்பாட்டை அந்த அமைப்பு ஏற்றுக்கொண்டதாக அரசு அதை மகிழ்வுடன் வரவேற்கும் என அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா கூறினார். (Dailymirror)

http://kattankudi.info/2013/05/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/#more-78504

 

  • கருத்துக்கள உறவுகள்

இஙுகு என்னதான் நடக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
1978 ஆம் ஆண்டு மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டையே தீக்கிரையாக்கிய மக்கள் விடுதலை முன்னணி பின்னர் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
1978 இல் மாகாணசபை இருந்ததா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.