Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி - பொலிஸ் - அதிகாரங்கள் அற்ற மாகாண சபையால் தமிழருக்கு எதுவும் கிடைக்காது! - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணி - பொலிஸ் - அதிகாரங்கள் அற்ற மாகாண சபையால் தமிழருக்கு எதுவும் கிடைக்காது! - சுரேஷ் பிரேமச்சந்திரன்


வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் உட்பட்ட பல அதிகாரங்களைச் சட்ட ரீதியாக நீக்கிவிட்டு, புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தமிழருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட ஏனைய சிங்கள சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் 13வது திருத்தச் சட்டமூலத்தில் மேலும் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறானதொரு நிலையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்மைப்பு ஆராய்ந்தே முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போது நடைமுறையிலுள்ள 13வது திருத்தச் சட்ட மூலமானது 1989 இல் உருவாக்கப்பட்ட அசல் சட்டமூலமல்ல. காணி, பொலிஸ் மற்றும் நிதி போன்ற அதிகாரங்களை மாகாண சபைகள் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இந்தச் சட்டம் இன்று காணப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில், வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் உட்படலான பல அதிகாரங்களைச் சட்ட ரீதியாக நீக்கிவிட்டு, புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தமிழருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட ஏனைய சிங்கள சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் என்பது வெறும் அபிவிருத்தியை மட்டும் நோக்காகக் கொண்டதல்ல. முழுமையான அதிகாரத்தையும் கொண்டதாக அது அமைய வேண்டும். இந்த நிலையில், அதிலுள்ள சில அதிகாரங்களையும் சட்டப்படி பிடிங்கிவிட்டு வட மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அதில் பங்கேற்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்தே முடிவெடுக்கும்.

இதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ மயமாக்கலை இன்றைய அரசு துரிதப்படுத்தி வருகிறது. இது ஓர் ஆரோக்கியமான செயற்பாடல்ல. இதற்கு எதிராகத் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுவர் என்பதனையும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கூறி வைக்க வேண்டியுள்ளது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாக கொழும்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=2d42795f-2124-475b-ae60-47ec010cfdf0

எந்த 13-,13, 13+ எந்த திருத்தங்களாலும் தமிழருக்கு எதுவும் கிடைக்காது என்பதையும் சுரேஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே பொருள் இல்லாத வகையில் பாதுகாப்பு காரியதரிசியின் பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டாம். அவர் இங்கே கதைப்பதற்கு உரிமை இல்லாதவர் என்பதை மட்டும் மனோகனேசன் மாதிரி பொறுப்பான முறையில் அவருக்கு தெரியப்படுத்திவிட்டு சும்மா இருக்கவும். 

 

"வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் உட்பட்ட பல அதிகாரங்களைச் சட்ட ரீதியாக நீக்கிவிட்டு, புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் தமிழருக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட ஏனைய சிங்கள சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும்." இப்படி அந்த கேடிகளிடம் கெஞ்சவேண்டியத்திற்கு அப்பால் ஐ.நா பிரேரணை சென்றுவிட்டது. காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் போது தமிழர் எதிர்க்க வேண்டுமேயல்லாமல் இப்படிக் கெஞ்சி கோத்தா தருவதற்கு அவர் ஒன்றும் ஜனாதிபதி அல்ல. 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும்

douclas_a.jpgவடமாகாண சபையை அமைக்கும்போது மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த அதிகாரங்களை கையளிப்பது தொடர்பாக தெற்கில் கடுமையான கருத்துக்கள் வெயிடப்பட்டு வருவதால் தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்வரையில் இதனை நிறுத்தி வைக்கவேண்டும். என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறினார். அவர், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க விரும்பவில்லை. ஆனாலும், நான் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன்’.

‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் டெய்லிமிரருக்கு அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘வடமாகாண சபையை அமைக்கும்போது மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த அதிகாரங்களை கையளிப்பது தொடர்பாக தெற்கில் கடுமையான கருத்துக்கள் வெயிடப்பட்டு வருவதால் தமிழ், சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்வரையில் இதனை நிறுத்தி வைக்கவேண்டும்.

வன்முறை, அபிவிருத்தியின்மை, அரசியல் உரிமை மறுப்பு என்பன தமிழ் சமுகத்தை நீண்டகாலமாக வாட்டியெடுத்த பிரச்சினைகளாகும்.

இப்போது, பயங்கரவாதம் பூரணமாக ஒழிக்கப்பட்டுள்ளது. வடக்கில் துரித வேகத்தில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது.

நான் சூரியனையோ, சந்திரனையோ கேட்வில்லை. ஒரு தொடக்கமாக, தறபோதைய அரசியலமைப்பை செயற்படுத்துமாறுதான் கேட்கிறேன்’ என்றார்.

http://www.supeedsam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.