Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜ.தே.கவின் உத்தேச அரசியல் யாப்பு பற்றிய சுமந்திரனின் கருத்து தனிப்பட்டதே - யாழ்ப்பாணத்தில் மாவை!

Featured Replies

ஜ.தே.கவின் உத்தேச அரசியல் யாப்பு பற்றிய சுமந்திரனின் கருத்து தனிப்பட்டதே - யாழ்ப்பாணத்தில் மாவை!
30 மே 2013

 

 

tna.MSenadhirajah_CI.jpg

 

ஜக்கிய தேசியக்கட்சியின் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக அதனை வரவேற்று கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தெரிவித்தவை அவரது தனிப்பட்ட கருத்துக்களேயன்றி அது கூட்டமைப்பின் கருத்தல்ல என பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 

இன்று யாழ்.ஊடக அமையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பு  தலைமைகள் அடுத்த வாரம் ஒன்று கூடி ஆராய்ந்து குறித்த உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக தம்முடன் ஜ.தே.க தொடர்புகளை  கொண்டிருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜக்கிய தேசியக்கட்சியினால் குறிப்பிடப்படும் உத்தேச யாப்பில் பிரதானமாக சுட்டிக்காட்டப்படும் ஒற்றை நாட்டினுள் தீர்வெனும் சொற்பிரயோகங்களில் எமக்கு மயக்கமுண்டு. குறிப்பாக இத்தனை வருட ஆயுதப்போராட்டம் மற்றும் அகிம்சை போராட்டத்தின் பின்னும்; ஒற்றை நாட்டினுள் தீர்வெனும் விடயம் துல்லியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதே வேளை டெல்லியில் அடுத்து வரும் மாதங்களில் அழைக்கப்பட்டுள்ள மாநாட்டினை யார் நடத்த அழைக்கிறார்கள் என்பதை பொறுத்தே தமது பங்குபற்றுவதற்கான முடிவு எடுக்கப்படுமென மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் மாவை தெரிவித்தார். 

மத்திய அரசா அல்லது காங்கிரஸா இல்லை தனிநபர்களா என்பதைப் பொறுத்தே தமது நிலைப்பாடு அமையும். ஏற்கனவே மத்திய அரசிற்கு கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுதிட்டம் மற்றும் நிலைப்பாடு கூறப்பட்டுவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் எம்மிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி கேட்கவேண்டிய தேவையில்லை.

கடந்த டெல்லி மாநாட்டினை சுதர்சன் நாச்சியப்பனே ஏற்பாடு செய்திருந்தார். அவர் மத்திய அரசில் ஆளுமை மிக்கவரென கூறப்பட்டது. இம்முறையும் எமக்கு அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறிய மாவை ஆனால் பங்கெடுப்பது பற்றி சிந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். எனினும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றை இணைத்து இம்முறை டெல்லி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92347/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னது சுமத்திரனின் தனிப்பட்ட கருத்தா????இப்படியே ஒவ்வொருவரும் தனிக்கருத்துக்களைச் சொல்லிக் கொண்டேயிருங்கள். ஆமா அப்ப கட்சிக்கென்று பொதுக் கருத்து இலட்சியம் எதுவும் கிடையாதா??????

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலின் முடிவின் பின்னர் எல்லாமே ஒரு நன்கு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழேயே நடப்பது போலத் தான் உள்ளது!

 

மக்கள் வெறும் பார்வையாளர் நிலைக்குப் படிப்படியாகத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது வரையும் புரிகின்றது! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.