Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ரக்பி நடுவர்கள் விரக்தியால் ஓய்வுபெறுகின்றனர்'

Featured Replies

'இலங்கை ரக்பி நடுவர்கள் விரக்தியால் ஓய்வுபெறுகின்றனர்'
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 மே, 2013 - 15:13 ஜிஎம்டி
130531151041_rohitha_rajapakse_srilanka_

ரோஹித்த ராஜபக்ஷ(22) நடுவரைத் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்

இலங்கையில் ரக்பி போட்டி நடுவர்கள் பலரும் தொழில்களிலிருந்து ஓய்வுபெற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கம் கூ றுகிறது.

இதனால் அடுத்துவரும் கழக மட்ட போட்டிகளின்போது பணியாற்றுவதற்கு கூட நடுவர்கள் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரக்பி நடுவர்கள் சங்கத்தின் தலைவர் ஓவில் பெர்ணான்டோ பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஆனால் சம்பவம் தொடர்பில் இலங்கை ரக்பி விளையாட்டுச் சங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்த முக்கிய நடுவர்கள் அழுத்தம் காரணமாக தொழிலிருந்தே ஓய்வுபெற்றுச் செல்வதாகவும் ஓவில் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.கடந்த மார்ச் 5-ம் திகதி நேவி எதிர் பொலிஸ்கழகங்களுக்கு இடையிலான போட்டியொன்றில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன், 22 வயதான ரோஹித்த ராஜபக்ஷ திமித்ரி குணசேகர என்ற நடுவரை தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எதிர்வரும் ஒருமாத காலத்தில் மூத்த நடுவர்கள் நால்வர் ஓய்வுபெற்றுச் செல்வதாகவும் ரக்பி நிர்வாக சபை நடவடிக்கை எதுவும் உருப்படியாக எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என்றும் ஓவில் பெர்ணான்டோ கூறினார்.

வேறொரு போட்டி தொடர்பில் நடவடிக்கை

இதனிடையே, ரோஹித்த ராஜபக்ஷவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நடுவர் திமித்ரி குணசேகர மீது, வேறொரு போட்டியொன்று தொடர்பில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரும் இன்னொரு நடுவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோயல் எதிர் இசிபத்தனை கல்லூரிகளுக்கு இடையில் நடந்த போட்டியொன்றின்போது போட்டியை உன்னிப்பாக அவதானிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், அவர்களுக்கு ஒருமாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர இன்னொரு மூத்த நடுவருக்கு ஓராண்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நடுவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். மொத்தமாக 4 நடுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை மட்டப் போட்டி ஒன்று தொடர்பில் நடுவர் திமித்ரி குணசேகர மீது போட்டித் தடை விதிக்கப்பட்டமைக்கும், அவர் ஜனாதிபதியின் மகனால் ஏற்கனவே கழக மட்ட

போட்டியொன்றில் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என்றும் ஓவில் பெர்ணாண்டோ கூறினார்.

ஜனாதிபதியின் மகனால் ரக்பி நடுவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிய விசாரணைகளின் நிலை என்னவென்று இலங்கை ரக்பி சங்கத்தின் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.

http://www.bbc.co.uk/tamil/sport/2013/05/130531_rugbyreferee.shtml

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு மேவின்தான்

 

  • தொடங்கியவர்

மோடைய தனத்தை ராஜதந்திரம் என்று சிங்கள பொட்டைகளை கூட்டியந்து ஆலாத்தி எடுக்கவைச்சு இந்திய மேற்கு நாட்டு இராஜதந்திரங்களுக்கு வித்தாச்சு.

 

அரச குடும்பத்தையும் சீனாகரனையும் தவிர ஓடி ஒடி விற்றவர்களும் விழுந்தடித்துக்கொண்டு வந்து வாங்கியவர்களும் இப்போது தங்கள் புண்களை நக்குகிறார்கள்(Licking their wounds).

 

தமிழ் நாடு சிங்கள வீரர்களை வெளியே தள்ளிவிட முயன்ற போது யாழ் உறவு அர்ச்சுனும் மற்றும் சிலரும் யாழ் புழுக்க "விளையாட்டில் அரசியலா" என்று இரவு பகலாக டமாரம் அடித்தார்கள்.

அங்கே அத மிஞ்சிய ஊழல், மெய்யப்பன் குடுபம், கருணாநிதி-மாறன் குடுமபங்களால்  சூதிலும் அரசியல் அதிகார தோறணையிலும் வெளிப்படுத்துகிறது. 

இங்கே அத மிஞ்சிய ஊழல் அரச குடும்பத்தால் வெற்றியை கையாக் பண்ணி மாற்றுவதிலும், அரசியல் அதிகாரத்திலும் வெளிப்படுத்துகிறது.

 

ஒரு கிழமை போக இப்படி திரி ஏதும் வந்தால் அரிச்சுன் திரும்பவந்து "யாழ் புலிகள் அரசியல் ஆதயம் தேடுகிறார்கள். அவ்வளவுதான்" என்று ஒற்றை வரி நக்கல் அடிப்பார். 

 

மேர்வின் சில்வாவின் மகன் இராணுவ அதிகாரியை தாக்கி முடிய இராணுவ அதிகாரி மீதி பல குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டது நினைவுகூரத்தக்கது.

 

இதியெல்லாம் ராஜதந்திரம் என்றும் அழைக்காலாம், வெறுமனே தந்திரமான சீவியம் என்றும் கூறலாம்.

Edited by மல்லையூரான்

உங்கள் தலிவரின் மகன் வன்னியில் மக்களுக்கு கொடுக்காத அலுப்பா ?

  • தொடங்கியவர்

உங்கள் தலிவரின் மகன் வன்னியில் மக்களுக்கு கொடுக்காத அலுப்பா ?

தலிவரின் மகன் வன்னியில் சிங்களவருக்கு கொடுத்த அலுப்பால் அதை மாற்றி கொழும்பில் தமிழ் மக்களுக்கு மட்டும் அலுப்பு கொடுக்க தக்க வகையில் இளவரசரை நியமித்திருக்கிறார்கள் சிங்களவர்கள்.

 

இதுவும் அவர்களின் ராஜதந்திரத்தின் தொடர்ச்சியோ?

 

:lol:  :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.