Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கள உறவுகளின் கூட்டு முயற்சியில் மாணவர் எழுச்சிப்பாடலின் முழுமை வடிவம்'' .

Featured Replies

அனைவரின் கூட்டு முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள்.  மேலும் பல படைப்புக்களை வழங்க வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நான்றாக உள்ளது அனைவரது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ்சூரியன், புங்கையூரான், சுபேஸ் , ராஜீவ், துளசி  அனைவருக்கும் பாராட்டுக்கள். கூட்டுமுயற்றிக்கு கிடைத்த வெற்றி..... மேலும் முன்னேற வாழ்த்துக்கள்....
  • தொடங்கியவர்

 

http://www.youtube.com/watch?v=8YKe_03glDU&feature=youtu.be

 

பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

மீள்பதிவிற்கான காரணம் நிர்வாகத்தின் கவலையீனம்.
குமாரசாமி

 

எம்மை ,எமது கலைமுயற்சிகளை எப்போதும் தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் எம் மதிப்புக்குரிய குமாரசாமி அண்ணாவிற்கு இந்த குழு சார்பாய் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

பாராட்டுக்கள் அனைவருக்கும் 

கர்நாடசங்கீத இசை மேல் ஆழப்பற்றுகொண்டிருக்கும் மதிப்பிற்குரிய உடையார் அவர்களுக்கும் எமது குழுசார்பாய் நன்றிகளை தெரிவிக்கிறேன் .

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

 எமக்கெல்லாம் ஓர் உடன்பிறவா அண்ணானாக ,எப்போதும் ,எம் கலைஞர்களை ,எம் கலைகளை பெருமைக்கண்ணுடன் பார்த்து எங்களைப்போல கலைஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் மதிப்புக்குரிய விசுகு  அண்ணாவிற்கும் எமது குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

அருமை

பாராட்டுக்கள் அனைவருக்கும் 

இப்பாடலை எல்லோருக்கும் எல்லாஇடமும் கொண்டு செல்வது யாழ்கள உறவுகளின் பணி

 

 

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

மிக அருமையாக உள்ளது குழுவினரே.. இசை வேந்தன் தமிழ்சூரியனின் மெட்டமைப்பும், புலவர் புங்கையூரனின் :D வரிகளும், தேன்மதுரக் குரலோன் ராஜீவின் வழங்கலும், பாடலுக்குத் தேவையான உணர்வுகளைத் தந்துள்ளது..

"கட் அன்ட் பேஸ்ட் இளவல்" சுபேசின் :D கைவண்ணமும் பிரக்கிராசினி தூளசியின் ஒருங்கிணைப்பும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவை.. :D

யாழ்களத்தில் நான் உரிமையுடன் பார்க்கும் ஓர் இனிய நண்பர் ..........பல இசைக்கருவிகள் சம்பந்தமாய் அதி திறமை கொண்ட ஓர் அற்புதமான கலைஞன் ,எங்கள் இசைக்கலைஞன் .எப்போதும் எம் புதிய படைப்புக்களை தட்டிக்கொடுக்கும் உன்னதமான மனப்பாங்கு கொண்டவர் ...............எம் குழு சார்பாய் மிக்க நன்றிகள் நண்பரே..............

 
இசைவேந்தன் என்று கூறியது கொஞ்சம் ஓவர் ............... :D  :D
  • தொடங்கியவர்

இந்தப்பாடலின் சிந்தனையே இந்த இளம் கதாநாயகன் தான் அன்று திண்ணையில் இப்படி ஒரு திட்டத்தை முன் வைத்தவனும் இந்த சுண்டல் எனப்படும் எம் உடன்பிறவா தம்பி .உண்மையில் பல திட்டங்களை இந்த யாழ்களத்தின் ஊடாக நடாத்திக்காட்டி வெற்றியும் கண்டவன் ..............இவனும் இந்த குழுவில் இடம்பெற்று இருப்பதால் ..........எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .....

மிக அருமையாக உள்ளது குழுவினரே.. இசை வேந்தன் தமிழ்சூரியனின் மெட்டமைப்பும், புலவர் புங்கையூரனின் வரிகளும், தேன்மதுரக் குரலோன் ராஜீவின் வழங்கலும், பாடலுக்குத் தேவையான உணர்வுகளைத் தந்துள்ளது..

"கட் அன்ட் பேஸ்ட் இளவல்" சுபேசின் கைவண்ணமும் பிரக்கிராசினி தூளசியின் ஒருங்கிணைப்பும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவை..

 

 

 

 

Edited by தமிழ்சூரியன்

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள், அருமை அருமை.

இன்னமும் நிறையத்தூரம் நீங்கள் செல்லவேண்டியுள்ளது, உங்களால் முடியும்.

அன்புக்குரியவரே ..........உங்கள் பரந்துபட்ட பார்வையை சில நாட்களுக்குமுன் புரிந்துகொண்டேன் .நிச்சயமாக நாங்கள் தாண்டுவதற்கு நிறைய இருக்குது .....உங்களைப்போல தட்டிக்கொடுக்கும் ,சிந்தனைவாதிகள் எங்களுடன் பக்கத்தில் இருக்கிறார்கள் என்ற உரிமையுடன் மேலும் தொடர்வோம் ...........இந்த குழு சார்பாக இதயம் கலந்த நன்றிகள் .

  • தொடங்கியவர்

 பாடல் மிக நன்றாக இசையமைக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 உண்மையில் கலை சம்பந்தமான விடயங்களை உடனுக்குடன் ,நேருக்கு நேர் துணிவுடன்  கூறும் உங்களிடம் நாம் பாராட்டைப்பெற்றது மிக்க மகிழ்ச்சியே ...........நீங்களும் ஓர் சிறந்த பாடகி என்பதை நான் அறிவேன் .உங்கள் குரலில் பாடிய பாடலை எனக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள் .................அற்புதமான பாடல் .நான் ஏற்கனவே கூறியதுபோல நிச்சயம் சந்தர்ப்பம் ,சூழ்நிலை அமையும்போது இந்த அடியேனின் இசையில் உங்கள் பாடலையும் எம் உறவுகள் கேட்பார்கள் ............இந்தக்குழு சார்பாக இதயம் கலந்த நன்றிகள் அக்கா .

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அனைவருக்கும் ...

மிக்க நன்றிகள் ராஜீவ் ....ஒரு தடவையல்ல 3 தடவைகள் ஒலிப்பதிவு செய்தோம் ....இந்த மூன்று தடவையும் 150 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து சலிக்காமல் வந்து இந்த பங்களிப்பை செய்த உங்களுக்கு என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ...நன்றிகள் .

  • தொடங்கியவர்

பாடல் வரிகளும், படக் கலவை இணைப்பும், மென்மையான குரலும், இசையும்... நெஞ்சத்தை அள்ளியது.

இப் பாடல், யாழ் களத்து உறவுகளால்... தயாரிக்கப் பட்டது என்பதால் பெருமிதம் கொள்கின்றேன்.

அருமையான கூட்டு முயற்சிக்கு, ஒத்துழைத்த‌ அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். :)

என்றுமே எப்போதுமே தமிழே உயிரே என கருத்துக்களால் காட்டிநிற்கும் எம் இனிய, எம் எல்லோரையும் எப்போதும் கலகலப்பாக வைத்திருக்கும் சிறி அண்ணாவை பற்றி இங்கு நான் எதுவும் கூறத்தேவையில்லை .............ஒவ்வொருவருக்கும் அவரின் மாண்பு தெரியும். எமது ஒவ்வொரு முயற்சியையும் தட்டிக்கொடுக்கும் உன்னதமானவர் ...........எம் குழு சார்பாக மிக்க நன்றிகள் அண்ணா.

  • தொடங்கியவர்

பாடலின் உருவாக்கத்தில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை.

 

எழுத்தும் இசையும் குரலும் படக்கலவையும்

மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கின்றது.

நாம் எல்லோரும் என்றும் மதிக்கும் எமது மதிப்புக்குரிய வாத்தியார் . எப்போதுமே தனது பெயருக்கு ஏற்றதுபோல கருத்திடும் மாண்புமிக்கவர் .எமது ஒவ்வொரு முயற்சிக்கும் ஆக்கமும்,ஊக்கமும் தந்து துணை நிற்பவர் .எம் குழு சார்பாக நன்றிகளை பணிவுடன் கூறிக்கொள்கிறோம். 

ஒரு கணம் புதுவை அவர்களை கண் முன் காட்டி மறைத்தது !

மதுரம், அற்புதம் !!

பகிர்ந்தளித்த அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துகள் !!

ஓரிரு வார்த்தைகளில் ஆழமான கருத்துக்களை எமக்கு எடுத்துரைக்கும் மாண்புமிக்கவர் ,மதிப்புக்குரியவர். உண்மையில் உங்களைப்போன்ற என் மூத்தவர்கள் எம்மை பாராட்டி ஆக்கமும்,ஊக்கமும் தரும் வேளையில் ,எமக்கு புதிய பல உற்சாகங்கள் பிறக்கின்றது. உண்மையில் புதுவை அண்ணாவின் நினைவுகளை இந்த வரிகள் எனக்கும் உணர்த்தியது ..........எம் குழு சார்பாக இதயம் கலந்த நன்றிகள் .

  • தொடங்கியவர்

 

எழுத்தும் இசையும் குரலும் படக்கலவையும்

மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கின்றது.

 வாழ்த்துகள் !!

 

யாழ்களத்தில் இன்னொரு செயல்வீரன் ,அற்புதமான இசைக்கலைஞன் ,இசைத்துறை மட்டுமல்ல ,இன்று எமக்கெல்லாம் பெரிய சவாலாக அமைந்துள்ள எம் தேச விடுதலைப்பாதையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ,தடைகளை உடைத்தெறிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ,வீரன் ..............இவரது பணிகள் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ...............எம் குழு சார்பாக நன்றிகள் அன்பே.

  • தொடங்கியவர்

அண்ணலின் கால்கள் பட,

அகலிகை உயிர் பெற்றாள்!

 

அந்தச் சூரியனின் இசையில்,

அழகிய குரல் வளத்தால்,

சிலை வடித்திருக்கிறான்,

செங்குரலோன் ராஜீவ்!

 

இணையப் பெருங்கடலில்,

ஆணி முத்துக்களை மட்டும்,

அள்ளி எடுத்திருக்கிறான்,

அன்புத் தம்பி சுபேஸ்!,

 

இரவுக்கும், பகலுக்கும்,

இடை வெளி விடாது,

அயராமல் உழைத்திருக்கிறாள்,

அன்புத் தங்கை துளசி!

 

தளராத உழைப்போடு,

தளிர் துளிர்க்கின்ற,

இளங் குருத்துக்கள்,,

மலர்க் கொத்துக்களாகவே,

பூத்துக் குலுங்குகின்றன!

 

வானத்தின் எல்லை தொட,

வளம் பல காண்க என்று,

வளரும் கலைஞர்களை,

வாழ்த்திப் பணிகின்றேன்! :D 

வாழ்த்துவதற்கும் ,பேசுவதற்கும் வார்த்தைகள் இல்லவே இல்லை ................உண்மையில் தமிழ்தேசத்தின் , கவிஞர் ,எழுத்தாளர் என்று சுட்டிக்காடும் இன்னொரு அற்புதமான கலைஞன் ...........ஓர் கலைஞன் தமிழர்களின் தற்போதைய சூழலில்  எப்படி இருக்கவேணுமோ  அதற்கு புங்கையூரான் என்னும் அற்புதமான ,மாண்புமிகு இந்த உன்னதமான மனிதரே உதாரணம் .......................மிக்க நன்றிகள் அண்ணா .

மற்றவர்கள் இருவரின் திறமையும் நான் ஏற்கவே கண்டவை. புங்கையின் வரிகளும், சுபேசும் ஒளி அமைப்பும் அவர்கள் இருவரும் மாதிரியே திறமையாகவும், ஒன்றுடன் ஒன்று அருமையாக கைகோர்த்தும் செல்கின்றன. 

துளசியின் சேவைக்கும் பாராட்டுகள்.  :)

இன்றைய தமிழர்களின் அரசியலை காலத்தின் தேவை கருதி  ஆழமாக தெரிந்து கருத்திடும் ஓர் அரசியல் ஆய்வாளர் ,வண்டின் கண்ணில் ஆடும் பூ என்னும் ஒரு பாடல் மூலம் தனது கவித்திறமையையும் எமக்கெல்லாம் காட்டிய அற்புதமான கவிஞன் ..................உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு எம் குழு சார்பாக நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன் மல்லை .

  • தொடங்கியவர்

.உங்கள் கூட் டு முயற்சிக்கு என் பாராட்டுக்கள். 

இசையின் மேல் நாட்டம் கொண்டவர் ,ஒருமதிப்புக்குரிய  ஆசிரியை ,அப்ப ப்போ எனது இசை முயற்சி சம்பந்தமாய் தனிமடலிலும், கருத்துக்களாலும் ஆக்கமும் ஊக்கமும் தந்துகொண்டிருக்கும் எமது இனிய அக்கா ,நிலா அக்கா ....................எம் குழு சார்பில் இதயம் கலந்த நன்றிகள் அக்கா .

  • தொடங்கியவர்

புங்க்ஸ் அண்ணா, தமிழ்சூரியன் அண்ணா, ராஜீவ் அண்ணா, சுபேஸ் அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :)

சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் வார்த்தைகள் இல்லை ................வயதில் மிக குறைந்த ஒரு ஆழுமை கொண்ட ஓர் வீரத்தமிழிச்சி ...............இந்தப்பாடலின் முழுமையின் வெற்றி இந்த தங்கையையே சாரும். உண்மையில் இந்தப்பாடலின் பல வடிவங்களை புங்கை அண்ணாவிற்கும்,காதல் [துளசி] இக்கும் அனுப்பினேன் .குறைகளையும் ,நிறைகளையும் அப்பட்டமாய் சொல்லி இதை கட்டாயம் திருத்தவேண்டும் என்று தனது ஆழுமையையும் காட்டியவர் .இப்படி பாடினால் நன்றாய் இருக்கும் என்று தனிமடலில் காட்டமுடியாது என்று வீடியோ தொலைபேசியில் வந்து துணிவாய் கூறியவர் .................என் வாழ்க்கையில் நான் இன்றும் பயப்படுவது,கோபப்படுவது  எனது இரு சொந்த தங்கைகளுக்கு மட்டுமே .................அப்படியே இந்த மூன்றாவது தங்கைக்கும் என் உணர்வு இருந்தது ...............உண்மையில் இந்தப்பாடல் சிறப்பாக அமைந்ததென்றால் ...........இந்த உடன்பிறவா உறவின் ஆழுமையான ஒருங்கிணைப்பே ..................மிக்க நன்றிகள் தாயே...........

  • தொடங்கியவர்

நேரப்பற்றாக்குறையால்  மிகுதியை நாளை தொடர்கிறேன் .நன்றிகள்  :rolleyes:  :) 

சொல்லுவதற்கும் எழுதுவதற்கும் வார்த்தைகள் இல்லை ................வயதில் மிக குறைந்த ஒரு ஆழுமை கொண்ட ஓர் வீரத்தமிழிச்சி ...............இந்தப்பாடலின் முழுமையின் வெற்றி இந்த தங்கையையே சாரும். உண்மையில் இந்தப்பாடலின் பல வடிவங்களை புங்கை அண்ணாவிற்கும்,காதல் [துளசி] இக்கும் அனுப்பினேன் .குறைகளையும் ,நிறைகளையும் அப்பட்டமாய் சொல்லி இதை கட்டாயம் திருத்தவேண்டும் என்று தனது ஆழுமையையும் காட்டியவர் .இப்படி பாடினால் நன்றாய் இருக்கும் என்று தனிமடலில் காட்டமுடியாது என்று வீடியோ தொலைபேசியில் வந்து துணிவாய் கூறியவர் .................என் வாழ்க்கையில் நான் இன்றும் பயப்படுவது,கோபப்படுவது  எனது இரு சொந்த தங்கைகளுக்கு மட்டுமே .................அப்படியே இந்த மூன்றாவது தங்கைக்கும் என் உணர்வு இருந்தது ...............உண்மையில் இந்தப்பாடல் சிறப்பாக அமைந்ததென்றால் ...........இந்த உடன்பிறவா உறவின் ஆழுமையான ஒருங்கிணைப்பே ..................மிக்க நன்றிகள் தாயே...........

 

இது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சி. வீர தமிழச்சி என்பது போராடிய போராளி பெண்களுக்கே பொருந்தும். சாதாரண எமக்கெல்லாம் பொருந்தாது. ஒருவர் கதைக்கும் கதையிலும், எழுதும் எழுத்துகளிலும் வீரம் தங்கியில்லை. :)

நிச்சயமாக இந்த பாடலின் வெற்றி என்னை சாராது. பாடலில் பங்குபற்றிய உங்கள் அனைவரையுமே சாரும். :)

ஒவ்வொரு இசை மாதிரியிலும் சில புதிய இசைகளை சேர்த்திருந்தீர்கள். அவற்றில் எது நன்றாக இருப்பதாக எனக்கு தெரிந்ததோ அவற்றை சுட்டிக்காட்டினேன். மற்றபடி இறுதி முடிவெடுத்தது நீங்கள் தான். :)

ராஜீவ் அண்ணா முதல் பாடிய பாடல் இதை விட நன்றாக இருந்தது. ஆனால் அதில் பாடல் வரிகளில் சில பிழை இருந்ததால் திரும்ப record செய்ய சொன்னேன். இந்த பாடலும் நன்றாக உள்ளது. ஆனால் இதில் கொஞ்சம் குரலில் நடுக்கம் உள்ளது. சரியாக பாட வேண்டும் என நினைத்து பயத்துடன் பாடியிருப்பார் என நினைக்கிறேன். :D 150, 200 km தாண்டி வந்து பாடியமைக்கு நன்றி. :) ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் இருப்பதும் பிரச்சினை. ஒரே இடத்தில் என்றால் உடனேயே குறை, நிறைகளை கலந்தாலோசிக்கலாம்.

 

இப்பிடி பாடினால் நல்லா இருக்கும் என்று ஒரு 2 வரிக்கு சொன்னதை முக்கியப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். மற்றவர்களை சந்தோசப்படுத்தி பார்க்க உங்களுக்கு ஆசை போலிருக்கு. :D எனக்கு இசையை பற்றி அவ்வளவாக தெரியாது. உங்கள் இசையை அப்படியே வைத்துக்கொண்டு இடையில் ஓரிடத்தில் கொஞ்சம் உயர்த்தி எடுத்தால் நல்லா இருக்கும் என்று சொன்னேன். அதையெல்லாம் இங்கு சொல்லிக்காட்டிக்கொண்டு... :D

 

நான் பெரிதாக யாருடனும் video call கதைக்க செல்வதில்லை. உங்களுக்கும் voice call தான் எடுத்தேன். கதைப்பது கேட்கவில்லை என சொன்னதால் தான் video call க்கு வர சம்மதித்தேன். என்னை பார்த்தால் யாருக்கும் பயம் வராது. முதல் முதலாக பயந்தது நீங்கள் தான். :lol: என்னை குழந்தைப்பிள்ளை என்று சொல்லாத முதல் ஆளும் நீங்கள் தான். :icon_idea:

 

நிச்சயமாக இந்த பாடலில் உங்களுக்கு நிறைய சிரமம் தான் கொடுத்திருக்கிறேன். அனைத்தையும் பொறுத்துக்கொண்டமைக்கு நன்றி. :)

 

இப்பாடலில் மறைமுகமாக சம்பந்தப்பட்ட ஏனையோர் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். அவர்களுக்கும் நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122678&p=897884

 

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

யாழ்களத்திற்கு அடிக்கடி வராவிட்டாலும் வாழ்த்தி உற்சாகம் அழிக்கவேண்டிய நேரத்தில் வந்து எமக்கெல்லாம் உற்சாகம் அழிக்கும் உங்களுக்கு எம் குழு சார்ந்து நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் ........

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள்.மிளிர்கிறது எல்லோர் திறமையும்.

திடீரென களத்திற்கு வந்தாலும் புதியவர் என்ற கூச்சம் இல்லாமல் ,குறைகளையும்,நிறைகளையும் முகத்திற்கு முகம் சுட்டிக்காட்டும் நண்பரே உங்கள் தட்டிக்கொடுப்புக்கு எம் குழுசார்பாய் மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

  • தொடங்கியவர்

என்றோ ஒருநாள் எம்மினம் நிமிரும். அருமை.... தமிழனாண்ட தஞ்சையிலிருந்து தமிழினவிடியலின் தொடருந்து நகர்கிறது...

பாடலாக்கிப் பதிவாக்கிய களஉறவுகளே பாராட்டுகளும் நன்றிகளும்.

இந்தக் கூட்டிணைவு அனைத்திலும் தொடரவேண்டும்.

அன்றிலிருந்து இன்றுவரை தாயக உணர்வுடன் களமாடும் உங்கள் சிந்தனைக்கமைய நாம் கூட்டாக இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ளுவோம் என உறுதி கூறிக்கொள்கிறேன் நண்பரே .........நிச்சயம் தமிழனாண்ட தஞ்சையில் தோன்றிய அக்கினி தொடர்ந்து தமிழன் வாழும் தேசம் எல்லாம் தடைகளை உடைத்தெறிந்து பரவும் .............குழு சார்பாக இதயம் கலந்த நன்றிகள் .

  • தொடங்கியவர்

 

கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பங்கு பற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் இது போன்ற முயற்சிகள் யாழ் மூலமாக தொடர வேண்டும் என்பதே எனது அவா

 

இந்த களத்தில் நான் கண்ட புதுமைப்பெண் நீங்கள் ..........உங்கள் கருத்துக்களை துணிவுடன் முகம் பார்க்காமல் நேருக்கு நேர் வைப்பவர் ....உண்மையில் உங்கள் கருத்துடன் பலமுறை நானும் மோதிக்கொண்டுள்ளேன் .........ஆனால் அவற்றிற்கு மேலால் உங்களிடம் உள்ள அந்த உயர்வான தட்டிக்கொடுக்கும் பண்பு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது ரதி அக்கா ...........உங்களுக்கு இந்த குழு சார்ந்து இதயம் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

  • தொடங்கியவர்

அனைவரின் கூட்டு முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள்.  மேலும் பல படைப்புக்களை வழங்க வாழ்த்துக்கள். 

தற்போதைய யாழ்கள நிலவரத்தில் பெண்கள் எல்லோரும் ஒதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில் துணிவாக யதார்த்தமான கருத்துக்களை முன்வைக்கும் உங்கள் துணிவு பாராட்டத்தக்கது .........எம்மை தட்டிக்கொடுத்த உங்களுக்கு என் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

பாடல் நான்றாக உள்ளது அனைவரது கூட்டு முயற்சிக்கும் பாராட்டுக்கள்

என்றுமே கொண்ட கொள்கையுடன் கருத்தாடும் நீங்கள் தமிழீழ கலைஞர்களை என்றுமே தட்டிக்கொடுப்பவர் ........அந்தவகையில் உங்களுக்கு எம் குழு சார்பாக இதயம் கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

  • தொடங்கியவர்

 

தமிழ்சூரியன், புங்கையூரான், சுபேஸ் , ராஜீவ், துளசி  அனைவருக்கும் பாராட்டுக்கள். கூட்டுமுயற்றிக்கு கிடைத்த வெற்றி..... மேலும் முன்னேற வாழ்த்துக்கள்....

 

மிக்க நன்றி நண்பரே நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை இசைமேல் நாட்டம் கொண்ட உங்களுடன் தனிமடலில் சில தடவை தொடர்பு கொண்டுள்ளேன் .நீங்கள் கூறியதுபோல உங்களுடன் இணைந்து பல இசை முயற்சிகளை செய்யவும் காத்திருக்கிறேன் .........எம் குழு சார்பாக இதயம் கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.