Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா?

முத்துக்குமார்

 

 

1226b463-6e96-4637-821b-0fe88f1d8a1f1.jp

13வது திருத்தம் பற்றிய அரசியல் தொடர்ந்து சூடான நிலையில் இருக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், 13வது திருத்தம் பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது. எல்லாத் தரப்பினையும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து 13வது திருத்தப் பக்கம் திருப்பியதில் மகிந்தர் வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 13வது திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக புதுடில்லி வரை சென்று வந்திருக்கின்றது.

அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில்லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்ததற்கெல்லாம் புதுடில்லிக்கு ஒடவேண்டிய நிலை அதற்கு. அங்குகூட எஜமான்கள் சொன்னதாக கூட்டமைப்பின் தலைவர்கள்தான் போட்டிபோட்டுக்கொண்டு அறிக்கை விடுகின்றார்களே தவிர, எஜமான்கள் பெரிதாக இன்னமும் வாய் திறக்கவில்லை. சிவசங்கர் மேனன் வரப்போகின்றார். பூரி சிறப்புத்தூதுவராக நியமிக்கப்படப்போகின்றார் என சீனவெடிகள் மட்டும் இடைக்கிடை கேட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்திய எஜமான்களுக்கு இது விடயத்தில் பாரிய அழுத்தம் எதுவும் கொடுப்பதற்கு விருப்பம் பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் கூட இருப்பதாகக் கூறமுடியாது. அயல் நாடெங்கும் பிரச்சனையை வளர்த்திருப்பவருக்கு அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கும். அழுத்தம் கொடுப்பது என்றால் முளையிலேயே கிள்ளி எறிய முனைந்திருக்கவேண்டும். வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்டபோதோ அல்லது மாகாணசபையின் அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் ஒவ்வொன்றாக உருவியபோதோ இந்த அழுத்தங்கள் வந்திருக்கவேண்டும். வட - கிழக்கு பிரித்த பின்னர்தான் இந்தியா போருக்கு பெரியளவில் உதவியது என்பது வேறு கதை. சீனாகூட போர் ஒத்துழைப்புக்கு கொடுப்பனவுகளைப் பெற்றபோதும் எந்தவொரு கொடுப்பனவையும் பெறாது இந்தியா உதவியிருந்தது.

போருக்குப் பின்னர் தன்னால் வழங்கப்பட்ட வீட்டு உதவித்திட்டங்கள் உட்பட பல திட்டங்கள் போரினால் பாதிக்கப்படாதவர்களுக்கு வழங்கப்பட்டபோதும் கூட இந்தியா பெரியளவிற்குத் தட்டிக்கேட்கவில்லை. தொடர்ந்தும் தொடர்ந்தும் இலங்கையை அணைப்பதிலேயே கவனம் செலுத்தியது. பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்குக்கூட இந்தியா தான் காரணம். தமிழக அரசின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியிலும் இலங்கை இராணுவ வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சியினை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தன்னுடைய நலன்கள் பேணப்பட்டதன் பின்னர் இந்தியா தமிழ்மக்களை கைவிட்டு விட்டது என்பதே நடைமுறை உண்மை.

இந்த உண்மை சாதாரண தமிழ்மக்களுக்கு எப்பவோ விளங்கியிருந்தாலும் சம்பந்தன் போன்றவர்களுக்கு விளங்காததுதான் மிகப்பெரிய சோகம். இன்றும்கூட இந்தியா தன்னுடைய நலன்களுக்காகத் தான் தமிழ் அரசியலையும், மலையக அரசியலையும் பயன்படுத்துகின்றது. ஆறுமுகம் தொண்டமான் குழுவினர் புதுடில்லிக்குச் சென்றபோது 13வது திருத்தத்தின் சில பகுதிகளை நீக்கும் மசோதாவிற்கு ஆதாரவாக வாக்களிக்கும்படி கூறியதாக ஒரு தகவல். முன்னர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கூறியதாக செய்திகள் வந்திருந்தன.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது இந்தியா எங்கிருக்கின்றது, என்ன செய்ய விரும்புகின்றது, என்பதெல்லாம் தெளிவாகத் தெரிகின்றது. இந்தியாவின் இலக்கு இலங்கை அரசினைப் பாதுகாப்பதே. அதன்மூலம் தான் தனது நலனை பாதுகாக்கலாம் என அது கருதுகின்றது. இலங்கை அரசு இசகு பிசகு பண்ணினால் மட்டுமே கறிவேப்பிலை போல தமிழ் மக்களையும், மலையக மக்களையும் பயன்படுத்த முனைகின்றது. இவ்வாறு பயன்படுத்தும்போது சிறிய அளவிலாவது தமிழ், மலையக மக்களின் நலன்களும் பேணப்படல் வேண்டும் என்பதில் அதற்கு அக்கறை கிடையாது. தமிழ், மலையக மக்களினது நலன்களை விலையாகக் கொடுத்தாவது தனது நலன்களைப் பேணல் வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கின்றது. சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் மலையக மக்களும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்மக்களும் இவ்வாறுதான் விலைகொடுக்கப்பட்டனர்.

மலையகமக்களை முழுமையாக திருப்பி அழைத்திருக்கவேண்டும் அல்லது முழுமையாக இலங்கையில் விட்டிருக்கவேண்டும். ஒரு பகுதியை அழைத்து, ஒரு பகுதியை விட்டதன் மூலம் இலங்கையில் அவர்கள் பலவீனமாக்கப்பட்டனர். சுதந்திரமடைந்த காலத்தில் இரண்டாவது பெரிய இனமாக இருந்த மலையகமக்கள் இன்று நான்காவது இனமாக சிறுத்துப் போயுள்ளனர். நாவலப்பிட்டி, பலாங்கொடை என்பவற்றில்கூட பிரதிநிதித்துவத்தைப் பெற்றவர்கள் இன்று நுவரேலியா மாவட்டத்திற்குள்ளும் பதுளையின் சிறு பகுதிக்குள்ளும் குறுக்கப்பட்டுள்ளனர். அவர்களது இருப்பு நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாகி வருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தியாவின் செல்வாக்கின் கீழ் இருப்பதால் மலையகமக்களின் பிரச்சனைகள் பெரியளவிற்கு பேசுபொருளாக முன்னுக்கு வரவில்லை. ஆறுமுகம் தொண்டமான் வெளிக்குப் போவதென்றாலும் இந்தியத் தூதுவராலயத்தில் அனுமதிபெற்றே போய்வருகின்றார். ஒரு சில புலமைப்பரிசில்களையும், கட்டிடங்களையும் வழங்கி தான் ஏதோ மலையக மக்களுக்கு பெரிதாக செய்ததாக இந்தியா தம்பட்டம் அடிக்கின்றது. மலையக மக்களின் இருப்பிற்கு அடிப்படையாகவுள்ள நிலம் பறிக்கப்படுவது பற்றியோ நாளுக்கு நாள் அவர்களது பொருளாதாரமாகிய பெருந்தோட்டத்துறை பொருளாதாரம் அழிக்கப்படுவது பற்றியோ இந்தியாவிற்கு எந்தவித அக்கறையும் கிடையாது.

வட - கிழக்கில் சுயநிர்ணயத்திற்காக பல்வேறு தியாகங்களுடன் போராடிய தமிழ்மக்களை எந்தவித அதிகாரமும் இல்லாத 13வது திருத்தத்துடன் குறுக்கமுனைந்தது. அதற்கு புலிகள் இணங்காததினால் திட்டமிட்டு அவர்கள் அழிக்கப்பட்டனர். புலிகளுடன் சேர்த்து நாற்பதினாயிரம் தமிழ்மக்களையும் அழித்தமையிட்டு இந்தியாவிற்கு எந்தவித கவலையோ, குற்றவுணர்வோ கிடையாது.

ஏன், தனது சொந்தப் பிரஜைகளான தமிழகமக்கள் பற்றியும் அதற்கு அக்கறை கிடையாது. இலங்கை பாகிஸ்தான் பக்கம் அதிகம் சரிவதை தடுப்பதற்காக தமிழகத்திற்குச் சொந்தமான கச்சதீவினை இலங்கைக்குத் தாரைவார்த்தது. இதுவிடயத்தில் மரியாதைக்குக் கூட தமிழக அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இன்று தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கைப் படையினரால் தாக்கப்படுகின்றபோதுகூட மத்தியஅரசு பாராமுகமாக இருக்கின்றது. தமிழக சட்டசபை தீர்மானம் இயற்றியும் கூட மத்தியஅரசு திரும்பியும் பார்க்கவில்லை.

தற்போது இந்தியாவிற்கு இருப்பதெல்லாம் மூன்று கவலைகள் தான். அதில் முதலாவது 13வது திருத்தத்தையும் மகிந்தர் உருவிவிட்டால் தமிழ்அரசியல் அடுத்தகட்டத்திற்குச் செல்வதை தடுத்து நிறுத்தமுடியாதென்பதே. அவ்வாறு நிகழ்ந்தால் தானும் அந்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டிவரும். அதாவது சுயநிர்ணய போராட்டத்தை ஏற்கவேண்டிவரும். இப்போராட்டத்தை கூட்டமைப்பினால் முன்கொண்டு செல்லமுடியாதாகையால் தமிழ்அரசியலின் தலைமையும் கைமாறும். புதிய தலைமை இந்தியாவை எதிரியாகப் பார்க்காவிட்டாலும் எடுபிடியாக ஒருபோதும் இருக்காது. இது மீண்டும் தமிழ்அரசியல் இந்தியாவின் கையைவிட்டுப் போகின்ற நிலையை உருவாக்கும்.

தமிழ்அரசியல் களங்கள் என்பவை தாயகம், புலம், தமிழகம் ஆகிய மூன்றுமாகும். இந்த மூன்று களங்களும் ஒரே நேர்கோட்டில் வராமல் தடுப்பவை கூட்டமைப்பும் இந்தியாவுமே. 13வது திருத்தம் அகற்றப்பட்டால் அல்லது மேலும் மேலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டால் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை எவரும் தடுக்கமுடியாது. ஒன்றுமே இல்லாத மாகாணசபை என்கின்ற எலும்புக்கூட்டை வைத்துத்தான் இந்தியாவும், கூட்டமைப்பும் தமிழ்அரசியலை நடாத்தமுற்படுகின்றன. அதுவும் இல்லாவிட்டால் அவற்றினால் என்னதான் செய்யமுடியும்.

இதனால்தான் சிங்கள ஆய்வாளர் தயான் ஜயதிலக 13வது திருத்தத்தில் கைவைக்க வேண்டாமென மகிந்தர் அரசிற்கு எச்சரிக்கை விடுக்கின்றார். அதில் கைவைத்து இந்தியாவை மாற்றுத்தெரிவை நோக்கித் தள்ளவேண்டாம் எனக் கூறியிருக்கின்றார்.

இரண்டாவது தமிழகத்தில் ஏற்படும் எழுச்சியை தடுக்கமுடியாது என்ற கவலையாகும். தமிழக மக்களுக்கு தற்போதுதான் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் முழுமையாகப் புரியத்தொடங்கியுள்ளது. இந்திய மத்தியரசு என்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழகமக்கள் உட்பட முழு உலகத் தமிழர்களுக்குமே எதிரானது என்பதை அனுபவரீதியாக கண்டுகொள்ளத் தொடங்கியுள்ளனர். தமிழக மீனவப் பிரச்சனை அவர்களது புரிதலைத் தூண்டியிருக்கின்றது.

வளர்ச்சியடைந்த தமிழர் போராட்டத்தை தம்மால் பாதுகாக்கமுடியவில்லையே என்ற குற்றவுணர்வு அவர்களை வாட்டி வதைக்கின்றது. இதனால் தாயகமக்களைவிட அவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். மாணவர் எழுச்சி அதனையே வெளிக்காட்டியது. ஈழத்தமிழர் விவகாரம் தமிழக அரசியல்வாதிகளைத் தாண்டி தமிழக வெகுஜனங்களிடம் சென்றதை அந்த எழுச்சி காட்டியது. அரசியல்வாதிகளுக்கு அந்த எழுச்சிக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. திமுக-காங்கிரஸ் உறவையும் அந்த எழுச்சி முறித்திருந்தது. மனோ கணேசன் அந்ந எழுச்சியை 13வது திருத்தத்திற்கான போராட்டமாக குறுக்கமுனைந்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.

ஜெயலலிதா இந்த அரசியல் போக்கினை நன்றாகவே புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் தனது அணுகுமுறையினைக் கையாண்டார். சட்டசபைத் தீர்மானங்கள் தொடக்கம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியளிப்பதை தடுப்பதுவரை அவரது அணுகுமுறை நீண்டு சென்றது.

இலங்கையில் மகிந்தர் போல தமிழகத்தில் அசைக்கமுடியாத தலைவராக அவர் எழுச்சி கண்டுள்ளார். கருணாநிதி ரெசோவினைப் புதுப்பித்து பல முயற்சிகளைச் செய்தபோதும் ஜெயலலிதாவை மேவி மேலே வரமுடியவில்லை. இறுதியில் காங்கிரஸ் உறவினை முறித்தபோதும் கூட அவரது முயற்சிகள் பெரியளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இன்று கனிமொழியை ராஜ்யசபா உறுப்பினராக்குவதற்காக முறித்த உறவினை புதுப்பிக்க முனைகின்றார்.

தன் கைகளுக்கு வந்த ஈழத்தமிழர் விவகாரத்தை ஜெயலலிதா ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இதை கைவிடாமல் இருக்கும்வரை மத்தியரசுடன் நெருங்கிப் போவதற்கும் அவர் முனையப்போவதில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் ஏதாவது மாற்றங்கள் நிகழலாம். அங்குகூட தமிழர் விவகாரம் முன்னிலைக்கு வருவதற்கே வாய்ப்புக்கள் உண்டு. வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 பிரதிநிதித்துவமும் அவரது கூட்டிற்குக் கிடைக்கலாம். காங்கிரசும், திமுகவும் ஒரு சில ஆசனங்களைப் பெற்றாலே அவை பெரிய சாதனையாக இருக்கும். காங்கிரஸ் விஜயகாந்தின் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்தாலும் மாற்றங்கள் எதுவும் நிகழப்போவதில்லை.

தமிழகத்தின் எழுச்சி காங்கிரஸ் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல இந்திய அரசிற்கே நெருக்கடிகளைக் கொண்டுவரும். மத்தியரசாங்கம் எப்போதுமே கூட்டரசாங்கமாக அமைய வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு அதனால் நிலைத்து நிற்க முடியாது. வெளிவிவகாரக் கொள்கையில் மத்தியரசு மட்டும் முடிவெடுத்த காலம் காலாவதியாகிவிட்டது. இனிவரும் காலங்களில் மாநிலஅரசுகளும் இணைந்த வகையிலேயே முடிவுகளை எடுக்கவேண்டிவரும்.

அடுத்தது இந்தியஅரசு என்ற வகையில் தமிழகத்தை மையநீரோட்ட அரசியலுக்கு வெளியே தள்ளிவிடுவது ஆபத்தான நிலையினை உருவாக்கும். இன்று காஸ்மீரும், பஞ்சாப்பும், வட - கிழக்கு மாநிலங்களும் மையநீரோட்ட அரசியலுக்கு வெளியே தான் நிற்கின்றன. தமிழகம்கூட திராவிட இயக்கத்தின் எழுச்சியைத் தொடர்ந்து வெளியேதான் நின்றது. அண்ணாதுரை பெரும்போராட்ட இயக்கத்தை பாராளுமன்ற அரசியல் கட்சியாக கீழிறக்கியதினால் வெளியில் நின்ற தமிழகம் மையநீரோட்ட அரசியலுடன் சமரசம் செய்து கொண்டது. ஆனாலும் மையநீரோட்டக் கட்சிகளை ஆதிக்க நிலைக்கு வர திராவிட கட்சிகள் அனுமதிக்கவில்லை. இன்று ஈழத்தமிழர் விவகாரமும், தமிழக மீனவர் விவகாரமும் தமிழகத்தை மீண்டும் மையநீரோட்ட அரசியலுக்கு வெளியே கொண்டுவரப்போகின்றது.

காஸ்மீரும், பஞ்சாப்பும், வடகிழக்கு மாநிலங்களும் மையநீரோட்ட அரசியலுக்கு வெளியே நிற்பது இந்திய அரசுக்கட்டுமானத்திற்கு பெரிய பாதிப்பைத் தரப்போவதில்லை. ஆனால் தமிழ்நாடு வெளியே நின்றால் பாரிய நெருக்கடியைத்தரும். மேற்கு, வடக்கு, வடகிழக்கு என ஒரு வில்போல இந்தியாவிற்கு பாதுகாப்புப் பிரச்சனை இருப்பதால் அது தனது பாதுகாப்பு மையங்களை தெற்கிலேயே அமைத்திருக்கின்றது. முக்கியமான அனல்மின்நிலையங்கள், படைத்தளங்கள் தெற்கிலேயே இருக்கின்றன. இவற்றை உடனடியாக வேறு இடங்களுக்கு நகர்த்தவும் முடியாது. நகர்த்துவதற்கு வேறு பாதுகாப்பான இடங்களும் பெரியளவிற்கு இல்லை. புலிகளை இந்தியா அழிக்க முற்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணம்.

மூன்றாவது கவலை சுயநிர்ணயமுடைய அரசியல் தீர்வினை நோக்கி தமிழ் அரசியல் நகரப்போகின்றது என்பதாகும். சுயநிர்ணயமுடைய ஓர் அரசியல் தீர்வு இலங்கை என்ற அரச கட்டமைப்புக்குள் வருவதையோ, அல்லது அதற்கு வெளியில் வருவதையோ இந்தியா விரும்புவதில்லை. இந்தியாவிற்குள்ளும் அந்தக் கோரிக்கை வளர்ந்துவிடும் என்ற பயமே இதற்கு காரணம். இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடம். அங்கு தேசிய இனங்களை ஒடுக்கியே இந்திய அரசுருகவாக்கம் நிகழ்ந்துள்ளது.

மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டாலும், மாநிலங்களுக்கு அங்கு பெரியளவில் அதிகாரம் சட்டரீதியாகக் கிடையாது. மத்தியஅரசின் கட்டுப்பாடே அதிகம். மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கின்ற ஆளுநர் அதிக அதிகாரம் படைத்தவராக உள்ளார். ஆனால் மத்திய மட்டத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கு மாநிலக்கட்சிகளின் ஆதரவு தேவையாக இருப்பதனால் மத்திய அரசு தன்னுடைய அதிகாரங்களை சற்று அடக்கி வைத்திருக்கின்றது. அதாவது நெருக்கடியான சந்தர்ப்பங்கள் தவிர மற்றைய காலங்களில் அதனைப் பிரயோகிப்பதைத் தவிர்த்து வருகின்றது. இதனால்தான் மாநில அரசுகள் அதிகாரமுடையது போல தெரிகின்றனவே தவிர உண்மையில் சுயாதீன அதிகாரமுடையவையல்ல.

இந்த உண்மை ஆனந்தசங்கரிக்கு விளங்கியதோ என்னவோ. இந்திய மாதிரித் தீர்வு தேவை எனக்கூறி வருகின்றார். இந்திய மாதிரிபோலத்தான் மாகாணசபை முறையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு உருவாக்கப்பட்டது. இங்கு மத்திய அரசு என்பது சிங்கள அரசாக மட்டும் இருப்பதனால் மாகாணசபைகளின் அதிகாரங்களையெல்லாம் உருவி எடுத்துவிட்டது. எஞ்சியவைகூட மாகாண அமைச்சரவையிடம் செல்லாமல் ஆளுநரிடமே குவிந்திருக்கின்றது. மானியமுறை அரசில் நிலப்பிரபுக்கள் குறுநில மன்னர்களாக இருப்பது போல ஆளுநர்கள் குறுநில மன்னர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் சுயநிர்ணயக் கோரிக்கை வளர்ந்தால் இந்தியா ஒரு நாடாக இருப்பது கடினம்.

எனவே 13வது திருத்த நீக்கம் இந்திய அரசிற்குப் பெரிய நெருக்கடிகளைத் தரப்போகின்றது. இதனால் எப்பாடுபட்டாவது அதனைத் தடுக்கவே முயற்சிக்கும். 13வது திருத்தம் கோறையாகிப் போனாலும் பரவாயில்லை. அது முழுமையாக அழியக்கூடாது என்பதே இந்தியாவின் விருப்பம். எலும்புக்கூட்டைக் காட்டியாவது தமிழ் அரசியலை அதற்குள் முடக்கவே இந்தியா விரும்பும். எலும்புக்கூட்டை பெருப்பித்துக் காட்டுவதற்கு பேரினவாதிகள் எப்போதும் தயாராக இருப்பர். கூட்டமைப்பும், தமிழ்ஊடகங்களும் கூட அதை ஊக்குவிக்கும்.

மகிந்தர் அரசினைப் பொறுத்தவரை தோற்றப்பாட்டுத் தீர்வுகளைக்கூட சகிக்கும் நிலையில் அது இல்லை. அதனால்தான் 13வது திருத்தம் தொடர்பாக இவ்வளவு ஆராவாரம் பண்ணுகின்றது. சுயநிர்ணயத்திற்கான தமிழ் அரசியல் வளர்வதைத் தடுப்பதும் அதன் நோக்கமாக இருக்கலாம். தமிழ் அரசியல் மேலே வரக்கூடாது என்பதற்காகத்தான் அடிக்கடி புதுப்புதுப் பிரச்சினைகளை அது கிளப்பிவிடுகின்றது. முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கிளப்பிவிட்டமைக்கும் தமிழ் அரசியல் மேலே வரக்கூடாது என்பதுதான் பிரதான காரணம். தற்போது 13வது திருத்தப் பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கின்றது.

இறுதியில் 13வது திருத்தத்தில் உருவாக்கக் கூடியதையெல்லாம் உருவிவிட்டு மீதமுள்ள எலும்பக்கூட்டை சிரமப்பட்டுத் தருவதுபோல தந்துவிட்டுப்போகலாம். தெரிவுக்குழு தந்திரோபாயமும் இதன்அடிப்படையில் தோற்றம்பெற்றது போலவே தெரிகின்றது. அரசியல் தீர்வு தொடர்பாக இருந்த தெரிவுக்குழு இன்று 13வது திருத்தத்தினை ஆராய்வதற்காக கீழிறக்கப்பட்டுள்ளது. 26 வருடங்களாக அரசியல்யாப்பில் இருந்தவற்றை நடைமுறைப்படுத்தாததே மிகப்பெரிய தவறு. அரசியல் யாப்பினை துஸ்பிரயோகம் செய்தது குற்றம். அதனையெல்லாம் மறுதலித்துவிட்டு 13வது திருத்தத்தினை ஆராய ஒரு தெரிவுக்குழு என்ற விசித்திரம் இங்கு மேடையேறுகின்றது.

தமிழ்த்தரப்பின் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைதான் இங்கு மிகவும் மோசமானது. அது இந்தியாவிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இது இலகுவான அரசியல். பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு ஜொலி அரசியல் நடாத்துவதற்காகவா தமிழ்மக்கள் இவர்களைத் தெரிவுசெய்து அனுப்பினார்கள? வெள்ளை வேஸ்டி அரசியல் என்பது இதுதானோ!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அகரீதியான வேலைத்திட்டமும் இல்லை. புறரீதியான வேலைத்திட்டமும் இல்லை. அகரீதியான வேலைத்திட்டம் மக்களை அறிவூட்டி அமைப்பாக்குவதுடன் தொடர்புபட்டது. புறநிலை வேலைத்திட்டம் தமிழர் அரசியலை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்குவதுடன் தொடர்புபட்டது. இந்த இரண்டையும் முன்கொண்டு செல்லும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இல்லை.

இந்த இரண்டு பணிகளையும் மேற்கொள்வதற்கு இலக்கு, கொள்கை, வேலைத்திட்டம், அமைப்புப் பொறிமுறை, அர்ப்பணிப்புள்ள தலைமை என்பன அவசியம். கூட்டமைப்பிடம் இவை எதுவும் கிடையாது. எதிர்காலத்திலாவது இவற்றை உருவாக்கிக் கொள்ளும் என நம்பிக்கை வைப்பதற்கும் இடமில்லை.

தம்மை ஒரு மாற்று எனக்காட்ட முற்படுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இலக்கு, கொள்கை, என்பன தெளிவாக உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அங்கு அமைப்புப் பொறிமுறையோ, வேலைத்திட்டங்களோ இல்லை. அவை இல்லாதவரை வரலாற்றை நகர்த்த அதனாலும் முடியாது.

தந்தை செல்வா கூறியது போல 'தமிழ்மக்களை இனிக்கடவுளிடம்தான் ஒப்படைக்கவேண்டுமா'?

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=1226b463-6e96-4637-821b-0fe88f1d8a1f

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இந்தியாவால், சிறிலங்காவின் சுட்டு விரலைக்கூட அசைக்க முடியாது!

 

அதற்கான 'ஆழுமை' இப்போதைய இந்தியாவிடம் இல்லை!

 

முடவர்கள், கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது! :o

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா தமிழ் இயக்கங்களுக்கு பயற்சி அளித்ததன் காரணம், கையை மீறி ஓட முயன்ற ஜெயவர்த்தனவினை மடக்கி வைக்க தான்.
 
இந்தியாவின் திட்டத்தில், புலிகள் பெரும் தடையாக இருந்ததால், அவர்கள் தோற்கடிக்க முடியாத கொரில்லா இயக்கத்தில் இருந்து, தோற்கடிக்க கூடிய மரபு ராணுவ அமைப்பாக மாறும் வரை 19 ஆண்டுகள், (1987 ல் வன்னி காடுகளில் ஒதுங்கி போராடிய புலிகள் 2009 ஓட முடியாத பெரு வளர்ச்சி அடையும் வரை) காத்திருந்தது.
 
ஆரம்பத்தில் சிங்களத்தினை அடக்க, தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து நின்றது இந்தியா.
 
பின்னர் இந்தியாவை வீழ்த்தி வெளி அனுப்ப, சிங்களத்துடன் சேர்ந்தனர் புலிகள். 
 
பின்னர் புலிகளை வீழ்த்த, சிங்களத்துடன் சேர்ந்தது இந்தியா.
 
இடையே காலம் அதன் பாட்டுக்கு வேகமாக ஓடிச் செல்ல இப்போது, நிலைமை மீண்டும் முதலாவது சதுரத்துக்குள் வந்து நிற்கின்றது.
 
அதே ஜெயவர்த்தன காலத்து நிலை: கையறு நிலையில் தமிழர், கூடவே தமிழ் பேசும் இஸ்லாமியர். கையை மீறும் சிங்களம். அன்று ஜெயவர்தனே அமெரிக்க சார்பு என்றால் இன்று மகிந்த சீன சார்பு.
 
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் வேறு. அரசியல் வாதிகள் வேறு. 
 
முதலாமவர்கள் நிரந்தரமானவர்கள். இரண்டாமவர்கள் இன்று வந்து ஐந்து ஆண்டுகளில் ஓடிப்போய் விடுபவர்கள். எனவே வரும் தேர்தலில் காங்கிரஸ் அரச தோல்வி எமக்கு பெரிதாக எதுவும் செய்யப் போவதில்லை.
 
அரசியல் வாதிகள் ஊழல் மிக்கவராக இருப்பதனால், கொள்கை வகுப்பாளர்களின் கையை மீறுவது அவர்களது இருப்புக்கு ஆப்பு வைக்கும் என்பதால் ஆமாம் சாமி போடுவார்கள்.
 
கருணாநிதி ஒரு உதாரணம். ஜெயலலிதாவும் அதே நிலைமைக்கு உள்ளாகலாம்.
 
மாறாக, ரணில், சந்திரிகா, சம்பந்தர் போன்ற இந்திய சார்பு தலைவர்கள் டெல்லியால் ஆதரிக்கப்படுவார்கள்.
 
அதேவேளை மீறித் துடிக்கும் மகிந்தர் ஏதோ வகையில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். 
 
இந்தியாவிற்கு, குறிப்பாக அதன் புலனாய்வு அமைப்புகளுக்கு பெரிதும் வேலை இல்லாமல் மகிந்தர் மெதுவாக தனக்குத் தானே பெரும் குழியினை வெட்டுகின்றார். மேற்குடன், ஐ நாவுடன் முட்டாள் தனமாக முரண் படுகின்றார். 
 
இந்த முரண்படுதல், புலிகள், உலகமே, குறிப்பாக அமெரிக்க அரசு, தீவிர வாதிகளின் விமானத் தாக்குதலினால் மிரண்டிருந்த போது, தமது விமானப் படையினை வெளிப் படுத்திய முட்டாள் தனத்துக்கு ஒப்பானது.  
 
இந்தியா, முள்ளும் உடையாமல், சேலையும் கிளியாமல், மெதுவாக ஆனால் தீர்க்கமாக நகரும் என்று தோன்றுகின்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி.. விமானப்படை வெளிப்பட்டவுடன் இந்தியக் கடலோரத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று ஒரு செய்தி வந்தது ஞாபகம் இருக்கலாம்.. அதன்பிறகு இந்தியா ரேடார் கொடுத்ததும், கொழும்பில் தனது தூதரகத்தின் பாதுகாப்புக்கென ஆயுதப்பாதுகாப்பை வழங்கியதும் நடந்தது.. :rolleyes:

ஆகவே இதெல்லாம் ஏன் நடந்தது என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னவோ.. புலிகள் உள்ள விட்டு தேள் வடிவில் அடிக்கப் போகிறார்கள் என்ற எமது பந்தி எழுத்தாளர்களின் கெட்டித்தனத்தை தான் நினைவூட்டுது..! :rolleyes::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னவோ.. புலிகள் உள்ள விட்டு தேள் வடிவில் அடிக்கப் போகிறார்கள் என்ற எமது பந்தி எழுத்தாளர்களின் கெட்டித்தனத்தை தான் நினைவூட்டுது..! :rolleyes::lol:

 

 

அது  சரி ஆளைக்காணவில்லையே

(இறுதித்தகவல் GTVயை தேள் வடிவில் வளைத்துள்ளதாக)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அது  சரி ஆளைக்காணவில்லையே

(இறுதித்தகவல் GTVயை தேள் வடிவில் வளைத்துள்ளதாக)

 

அப்பிள் தனது இயங்குதளத்துக்குள் ஊடுருவல் செய்யும் மென்பொருளை எழுதுபவர்களைத் தேடிப் பிடித்து வேலை வழங்கிச்சாம். ஏன்னா.. உதுகள் வெளில இருந்தால் தனக்குத் தலையிடின்னு..! உள்ள இருந்து தொலையிட்டுன்னு. அதனால அப்பிளுக்கும் நன்மை. அவர்களுக்கும் நன்மை.

 

நல்லவேளையாக ஜி ரி வியும் அதே தந்திரத்தைக் கைக்கொண்டுள்ளது. அதனால் ஒரு பேப்பர் போல அதுவும் எனி தப்பிடும். ஏன்னா.. இவர்கள் வெளில இருந்து உள்ளதை நாசம் பண்ணி விளம்பரம் தேடிறது எப்படின்னு தான் சிந்திப்பார்கள். அதே விளம்பரத்தை உள்ள இருந்து செய்யவிட்டால் ஜி ரி விக்கும் இலாபம்.. சனத்திற்கும் பெரிய தலையிடி தீர்ந்த மாதிரி... அவர்களுக்கும் நல்ல விளம்பரம். அதுதானே அவர்களின் நோக்கமே..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இலங்கையை மட்டுக்குள் வைத்திருக்க இயக்கங்களுக்கு ஆதரவுகொடுத்து பயிற்சியும் கொடுத்ததுமுதல் எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆப்படிக்கிறம் என்று முள்ளிவாய்கால் அவலத்துக்குத் துணைநின்றார்களோ அத்துடன் எல்லாம் கை நழுவிப்போய்விட்டது. இனிமேல் இந்தியா இலங்கைத்தீவு விடையத்தில் ஒரு துரும்பைத்தன்னும் கிள்ளிப்போடமுடியாது கையாலாகாத, காலாவதியானநாடாகி வெகுநாட்கள் ஆகிவிட்டன. கூத்தமைப்பு இந்தியாவுக்குக் காவடி எடுப்பதை விட சீனாவுக்குக் காவடி எடுப்பது சிலநேரம் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் (அப்பிடியெண்டு நினைக்கிறீங்களா) மாடு தறிகெட்டு ஓடுவிட்டது வெறும் கடிவாளத்திக் கையில் வைத்து என்ன பண்ணுவது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தியா சார்பானவன் அல்ல. ஆனால் சில யதார்த்தங்களைப் பார்கின்றேன்.

 

இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாவிட்டால், சீனா வந்து செய்திடுமா? அல்லது வேறு எந்த நாடு வரும் என நினைகின்றீர்கள்?

 

இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது என நினைகின்றோம் அல்லது நினைக்க விரும்புகிறோம்: காரணம் எமது கையறு நிலை.

 

நாம் நினைப்பது போல் இல்லாது, பக்கத்து நாடுகளான சீனாவும், இந்தியாவும் 'வியாபார' நண்பர்கள். சரியான முறையில் ஒப்பிட்டால் பக்கத்து நாடுகளான கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள 'வியாபார நட்பே' இவை இரண்டுக்கும்.

 

இந்த வியாபார நட்பு இன்னும் பெரிதாக விரிவடையப் போகின்றது.

 

இந்தியாவின் சந்தை 1.3 பில்லியன் சீனாவின் சந்தை 1.4 பில்லியன். சீனாவின் தீவிர குடும்ப கட்டுப்பாடுக் கொள்கையினால், இந்தியா விரைவில் முதலிடம் பெறும்.

 

இப்போது மேற்கு சந்தையினை குறி வைத்து இருக்கும் இவ்விரு நாடுகளும், விரைவில் தம்மிடையே ஒருவரது சந்தையினை அடுத்தவர் குறிவைத்து 'நட்பு' பாராட்ட, ஒண்டுமே இல்லாத இலங்கை காரணமாக இந்தியாவும், சீனாவும் முறுகிக் கொள்ளும் என்பது ஏற்புடையது அல்ல.

 

தமிழர்களைப் பொறுத்தவரை மகிந்த அரசு ஒரு விலையில்லா வரப் பிரசாதம். ஏனெனில் அவரும் அவரது தம்பிமாரும் செய்யும் வேலைகளினால் தான் எமது பிரச்சனை சர்வதேசம் கண்டுகொள்கின்றது. இதே இடத்தில் ரணில் இருந்தால், எமது பிரச்சனை ஊத்தி மூடப் பட்டிருக்கும்.

 

வன்னியில் திருநாவுக்கரசு என்னும் ஒரு பத்திரிகையாளர் இருந்தார். போர் வீச்சத்துடன் தொடங்கும் முன்பே, அவர் ஒரு கருத்தினை ஆணித்தரமாக புலிகள் தொலைகாட்சியில் சொல்லி இருந்தார்.: எமது இறுதி தீர்வுக்காண சாவி  துப்பாக்கியில் அல்ல, பக்கத்தில் தமிழ் நாட்டில் தான் இருக்கிறது. தமிழ் நாடு மனது வைத்தால், டெல்லி அசையும். டெல்லி அசைத்தால், சர்வதேசம் அசையும்.

 

பீகிங், எமது சார்பில் அசையப் போவது இல்லை. சிங்களம் சார்பில் நியாயம் இல்லாது அசைந்தால், சர்வதேசம் கண்டுகொள்ளாது.

 

தமிழ் நாடு அசைகின்றது என்பது தெரிகின்றது. நியாயமான கோரிக்கையான 'சுய நிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு' குறித்து பேசுகின்றது. இது சிங்களத்தினை, குறிப்பாக கோத்தபாய, ஜெயலலிதா குறித்த அச்சம் வெளியிடும் வகையில் உள்ளது.

 

தமிழ் நாட்டின் கோரிக்கைகள் 'தனிநாடு பிரித்துக் கொடு' என்ற ரீதியில் இல்லாது, இது போன்ற ஜனநாயக ரீதியிலான 'தந்திரமான' கோரிக்கைகளாக இருக்கும் வரை எமக்கு நன்மையே.

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.