Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் பொதுமக்களின் சொத்தை ஆக்கிரமித்து கட்டிய இராணுவத்தினரின் ஹோட்டலுக்கு சர்வதேச விருது

Featured Replies

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் இடங்களை  ஆக்கிரமித்து இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் தல்செவன ஹோட்டலுக்கு வர்த்தக முகாமைத்துவம், வியாபார உத்திகள் மற்றும் தரமான பெயர்சூட்டலுக்கான சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்ற 17வது “International Star for Leadership in Quality Award”  விருது வழங்கும் விழாவின் போதே இராணுவத்தின் தல்செவன ஹோட்டலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக 118 நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. பாரிசின் அரங்கில் Paris Etoile (Concorde La Fayette), Palais de Congress de Paris  நடைபெற்ற இறுதிச் சுற்றில் விருதுக்குத் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

விருதுக்குப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடுவர்குழுவில் 74 நாடுகளைச் சேர்ந்த பொருளாதார மற்றும் வர்த்தக நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

தல்செவன ஹோட்டலுக்கான விருதைப் பெறுவதற்காக அதன் முகாமையாளர் மேஜர் ரிச்சர்ட் விக்கிரமாரச்சி பாரிசுக்குப் பயணமாகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.http://www.dinaithal.com/tamilnadu/srilanka/16674-occupation-of-public-property-built-in-sri-lanka-for-the-international-award-of-the-hotel.html

  • கருத்துக்கள உறவுகள்

.முஸ்லீம் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் முளைத்த புத்தர் சிலையால் சர்ச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஜூலை, 2013 - 11:13 ஜிஎம்டி

Facebook Twitter Google+ பகிர்கநண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக .

தொடரும் புத்தர் சிலை சர்ச்சைகள்.....

மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

bbc செய்தி இதுக்கும் விரைவில் அவார்டு கிடைக்கும்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

 அப்பாவிகளை கொன்றால் அதற்கு ஒரு விசாரணை இல்லை.  மக்களுக்காக போராடிய இயக்கம் பயங்கரவாத இயக்கம்.  உள்நாட்டு போர் நடக்கும் 3ம் உலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று கோடி கோடியாக சம்பாதித்தால் அது பயங்கரவாதம் இல்லை. எண்ணையை எடுக்க பயங்கரவாத இயக்கத்துக்கு ஆயுதத்தை கொடுத்து அரசுக்கு அடிக்க சொல்லும் நாடுகள் விடுதலை இயங்கங்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் விசித்திரமான உலகில் வசிக்கிறோம். சிறு பிள்ளைகளை இயக்கத்தில் சேர்க்கிறார்கள் என அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்ட மேற்கு நாட்டு வல்லவர்கள் இன்று தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படும் போது எங்கே போனார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பரிசு கிடைக்கிற நாளில் பிரான்சு வாழ் தமிழர்கள் எதாவது கவனயீர்ப்பினைச் செய்யலாம்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.