Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது புதல்வர் மது அருந்த மாட்டார் – கெஹலிய ரம்புக்வெல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், விளையாட்டுத்துறை அமைச்சும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன? சஜீத்

Ramith1_CI.jpg

 

தமது புதல்வர் மது அருந்த மாட்டார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்திடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளாகக் குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை நிறுவனத்தின் அறிக்கையில் எந்தவிதமான விடயங்களும் தவறாக குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்கள் இந்த விடயத்தை பூதாகாரமாக்கி பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது புதல்வர் மது அருந்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் பிரதான கதவும், கழிவறையின் கதவும் அருகருகே அமைந்திருந்ததானால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது புதல்வர் தவறுதாக பிரதான கதவினை திறக்க முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமது புதல்வர் முதல் தடவையாக விமானத்தில் பயணம் செய்யவில்லை எனவும், பல தடவைகள் இலங்கை அணியுடன் விமானத்தில் பயணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை புதல்வருக்கு நன்றாகத் தெரியும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

விமானத்தின் கதவை திறக்க முயன்ற கிரிக்கெட் வீரர் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், விளையாட்டுத்துறை அமைச்சும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன? சஜீத் பிரேமதாச 

அண்மையில் லண்டனிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவன விமானமொன்றில் பயணித்த இலங்கை ஏ கிரிக்கட் அணியின் ரம்மித் ரம்புக்வெல்ல குடிபோதையில், விமானத்தின் பிரதான கதவை திறக்க முயற்சித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

 மதுபோதையில், கழிவறை கதவு என நினைத்து,  விமானத்தின் கதவை திறக்க முயன்ற கிரிக்கெட் வீரர் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், விளையாட்டுத்துறை அமைச்சும் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றன என்பதை அவதானித்து கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
இந்த கிரிக்கெட் வீரரின் நடத்தை குறித்தும் அவரது செயற்பாடுகள் பற்றியும் கிரிக்கெட் நிறுவனம் மாத்திரமின்றி முழு நாடும் அறிந்துள்ளது என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஜீத் கூறியுள்ளார்.
 
நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, பயணம் செய்த இந்த விளையாட்டு வீரர், 230 பயணிகளை ஏற்றிய விமானத்தில் தவறாகவும் ஒழுக்க விரோதமாகவும் நடந்து கொண்டமையானது முழு நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்வாறு பெரியவர்களில் பிள்ளைகள் எந்த ஒழுக்கமுமின்றி நடத்து கொள்ளும் போது, அவர்களுக்கு எந்த ஒழுக்க நெறி கோவைகளும் அறிமுகப்படுத்தப்படுவதில்லை.  ஆனால்  ஊடகங்களுக்கு ஒழுக்க நெறி கோவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் சஜீத் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். 
 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93625/language/ta-IN/article.aspx

மது அருந்தமாட்டார் .விளாசுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஒரு தமிழர் செய்திருந்தால் புலி என்று கத்தி இருப்பர் ரம்புக்கெல

  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்வல அண்டப்புழுகன் என்பது யாவரும் அறிந்ததே. அப்பனின் குடியை மகனும் தொடர்கிறார். அமைச்சரின் மகன் என்பதால் ஒரு தண்டனையும் இவருக்கு கிடைக்காது என நிச்சயமாக நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

விமானத்தின் பிரதான கதவும், கழிவறையின் கதவும் அருகருகே அமைந்திருந்ததானால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது புதல்வர் தவறுதாக பிரதான கதவினை திறக்க முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

அப்பனுக்கு... தப்பாமல் பிறந்த பிள்ளை.

தண்ணி அடித்தால்... இருவருக்கும், கதவால்தான் பிரச்சினை.

தகப்பன் அவுஸ்திரேலியா விடுதியில்... தண்ணி அடித்து விட்டு அறைக்கதவு என்று நினைத்து... பல்கனி கதவை திறந்து வெளியே சென்ற போது... இரண்டாம் மாடியிலிருந்து விழுந்து, முறிந்தார்.

மகன் விமானித்தின் கக்கூஸ் கதவு என்று நினைத்து, பிரதான கதவை திறக்க முயற்சிக்கிறார்.frusty.gif

  • கருத்துக்கள உறவுகள்

தற்ஸ் தமிழில்... தமிழகத் தமிழர் ஒருவர் எழுதிய கருத்து இது. :D

 

//chand •
 அப்பன் ஒரு பொறம்போக்கு .. புள்ள ஒரு பொழுது போக்கு .. ரெண்டும் போற போக்குல போகட்டும் விடுங்கப்பா//

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-02(14).jpg


தற்ஸ் தமிழில்... தமிழகத் தமிழர் ஒருவர் எழுதிய கருத்து இது. :D

 

//chand •
 அப்பன் ஒரு பொறம்போக்கு .. புள்ள ஒரு பொழுது போக்கு .. ரெண்டும் போற போக்குல போகட்டும் விடுங்கப்பா//

1592967902cartoon.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.