Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெளிவான செய்தியைக் கூறிவிட்டோம்! சிவ்சங்கர் மேனன்

Featured Replies

Menon_Mahinda.jpg

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான இந்தியாவின் தெளிவான செய்தியை இலங்கையிடம் எடுத்துக் கூறிவிட்டதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும் 13இல் சில திருத்தங்கள் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, சிவ்சங்கர் மேனனிடம் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கருத்தானது 13ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படும் என்ற செய்தியை இந்தியாவிற்கு இலங்கை கூறியுள்ளதாகவே நோக்கப்படுகிறது.

 

தொடர்ந்து வாசிக்க..http://tamilworldtoday.com/?p=21454

  • கருத்துக்கள உறவுகள்

shiv-shankar-menon.jpg

13வது திருத்தச்சட்டம் தொடர்பான தெளிவான செய்தியை சிறிலங்காவிடம் எடுத்துக் கூறிவிட்டதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், காலையுணவுச் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் சிவ்சங்கர் மேன்ன். இந்திய ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்துப் பேசினார். 

அப்போதே அவர், 13வது திருத்தச்சட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு குறித்த தெளிவான செயதியை சிறிலங்கா தரப்பிடம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார். 

“நல்லிணக்கத்துக்கும், அரசியல்தீர்வுக்கும் மிகவும் சாதகமானது என்று நாம் பார்க்கும் – 13வது திருத்தச்சட்டம் குறித்த எமது கருத்துகளை தெளிவாக கூறிவிட்டோம். 

அவர்கள் தமது திட்டங்களை எடுத்துக் கூறினர். நண்பர்கள் என்ற வகையில், நெருக்கமான அண்டைநாடுகள் என்ற வகையில், கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். 

எல்லா சமூகங்களும் சிறிலங்காவை தமது சொந்த வீடாக உணர்கின்ற வகையில், அவர்கள் ஒரு தீர்வைக் கட்டியெழுப்புவார்கள் என்பது எமது நம்பிக்கை. 

அதற்காக சிறிலங்காவில் உள்ள எல்லா நண்பர்களுடனும் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்றும் சிவ்சங்கர் மேனன் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130710108638

தமிழர் சுய நிர்ணயம் கேட்டால் அதை சிங்களவனிடம் சொல்லி விட்டோம் என்கிறார்...   எப்ப வேண்டுமானாலும் புடுங்கி கொள்ள கூடிய மாதிரி பொம்மை ஒண்றை தீர்வாக குடுத்து விட்டு இப்போகாதை புடுங்க வேண்டாம் என்பதுதான் மேனன் சொன்னது... 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சுய நிர்ணயம் கேட்டால் அதை சிங்களவனிடம் சொல்லி விட்டோம் என்கிறார்...   எப்ப வேண்டுமானாலும் புடுங்கி கொள்ள கூடிய மாதிரி பொம்மை ஒண்றை தீர்வாக குடுத்து விட்டு இப்போகாதை புடுங்க வேண்டாம் என்பதுதான் மேனன் சொன்னது... 

 

மேனன்  கூறியது எமது தெளிவுக்காக  என்பதும்

சிங்களம் கூறியது  மேனனது  தெளிவுக்காக என்பதும் புரிகிறது

அப்படியிருக்க

சர்வதேசத்திடம் கிடந்த பந்தை சிங்களத்தின் பக்கம் எடுத்துக்கொடுத்து

எதிரணி  இல்லாது வைத்து விளையாடு என்று தான் சொல்லிச்செல்கிறார்

இந்தியத்தேர்தல் வரை கோல் போடாமல்  இரு என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம்

சோனியா, பிளேக்  மாதிரி, அரசியலில் புதிதாக ஈடுபடுபவர்கள் 150,000...200,0000 தமிழ் மக்களில் அரசியல் படிக்கிறார்கள். இது பூனைக்கு விளையாட்டு. சுண்டெலிக்கு சீவன் போகுது.

 

சிவசங்கர் மேனன் திருமண பந்ததாலோ, சிதம்பரம் தொலிபேசிக்கம்பனிகளில் முதலீடுகளாலோ இலங்கையை  அவ்வளவு இலகுவில் சுத்தலாம் என்று நினைக்கிறார்கள். 

 

ஆனால் சீனாவுக்கும்  ஒன்று தெரிய வேண்டும்.இலங்கையின் கணனிகளை குழப்பி இலங்கையிடமிருந்து நுரைச்சோலையை பறிக்கலாம்.  இந்திய வடமாநிலங்களில் கிழமைக்கு ஒருக்கால் நொட்டி பிரட்டு இந்தியாவை இலங்கையில் தலையிடுவதில் இருந்த்து மிரட்டாலம். ஆனால் இது எல்லா நாடுகளுக்கும் பொருந்ததாது.

 

சீனாவின் இந்த வீரத்தை வைத்து சிங்களமும் தொடர்ந்து தமிழரை அடிமைப்படுத்த முடியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.