Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி வன்னியன்...

இந்த இரயில் நிலையங்களின் ஆர்கிடெக்ட் நிறுவனங்கள் இந்திய (தமிழ்நாட்டு) நிறுவனங்களா?

 

தமிழ்நாட்டில் தமிழ் கருவோடு கட்டிடங்களை வடிவமைத்தால் இன்னும் நல்லது (கோயில் கோபுர சாயலில்) :)

 

முன்னறிய நாடுகளின் தொழில் நிறுவனங்களுடன் வேலை செய்யும் பொது இந்தியாவில் உள்ள தொழிலாளர்களும் பாதுகாப்பான முறையில் வேலை செய்ய முற்படுவார்கள்....

 

மும்பை விமான நிலைய நிர்மானிப்பை பற்றிய ஒரு படம் youtube  இல் உள்ளது..அதில் வேலை செய்யும் எந்த தொழிலாளரிடமும் பாதுகாப்பு கையுறை இல்லை...எல்லாரும் வெறும் கையால் தான் எல்லா வேலையும் (இரும்பை கையாளுதல்) செய்கின்றார்கள்...

 

இந்தியாவில் அளவு கூடிய மனித வலு..ஆகவே தான் அதற்க்கு மதிப்பு இல்லை....

 

பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு நிறுவனங்களே (JV).

 

அனைத்து ரயில் நிலையங்களும் கண்ணாடி தட்டுகளால் மூடப்பட்ட நவீன தோற்றம் கொண்டவைதான். இந்த விடயத்தில் தமிழ்நாட்டு கரு சார்ந்த வடிவமைப்பை செய்யவில்லை.

 

வேலையிடத்தில் தொழிளாலர்களின் பாதுகாப்பு விடயத்தில் மேலைநாடுகளின் அளவிற்கு கவனம் செலுத்தினாலும், தொழிளாலர்கள் அதை சிரத்தையாக பின்பற்ற வேண்டுமே?

 

சமீபத்தில் சைதாப்பேட்டையில் ராட்சத கிரேன் பளு தூக்கும்பொழுது நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஒரு தொழிலாளி இறந்தும், மற்றொருவருக்கு ஒரு கால் துண்டிக்கப்பட்டும் விட்டது. கிரேன் ஆப்பரேட்டரின் கவனக்குறைவால் இது நிகழ்ந்ததாக செய்தி வந்துள்ளது. :o

 

வத வதவென சனத்தொகை இருந்தால் மனிதனுக்கு மதிப்பிருக்காது தானே? :)

 

-17qgulnanz86b.jpg

 

 

  • Replies 224
  • Views 43.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

  • இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

  • குமாரசாமி
    குமாரசாமி

    இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரயில் நிலையங்களின் ஆர்கிடெக்ட் நிறுவனங்கள் இந்திய (தமிழ்நாட்டு) நிறுவனங்களா?

 

தமிழ்நாட்டில் தமிழ் கருவோடு கட்டிடங்களை வடிவமைத்தால் இன்னும் நல்லது (கோயில் கோபுர சாயலில்) :)

 

இந்த மாதிரிதான் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும். ஒரே மாதியாக இல்லாமல் ஒவ்வொன்றும் ஒருவித வடிவமைப்பில் இருக்குமாம். :)

 

 

 

Chennai-Metro-Rail-Alandur-Station.jpg

 

Alandur Station Model

 

 

13THMETRO_103767f.jpg

 

St.Thomas Mount Integrated Station.

 

 

மேற்கொண்டு படங்களை தேடி, பின்னர் இணைக்கிறேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது துபையிலுள்ள மெட்ரோ நிலையதின் படம்.

 

அனைத்து ரயில் நிலையங்களும் அச்சடித்தாற்போல் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை.

 

 

dm2.jpg

 

 

1024px-Dubai_Metro_Station_in_Bersha_nea

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிறுவனத்தின் கிளையும் அங்கே வேலை செய்கிறது.. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபை, அல் ரசீதியாவில் உள்ள அதிநவீன துபை 'மெட்ரோ பணிமனை'யில் ரயில் பெட்டிகள் தீவிர சோதனைக்கும், பராமரிப்பு பணிக்கும் உட்படுத்தப்பட்டபொழுது எடுத்த படம்.

 

162.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது நிறுவனத்தின் கிளையும் அங்கே வேலை செய்கிறது.. :wub:

 

Exact contract Value Please ! :icon_mrgreen:

 

இசை அது  URC not URS...

 

ஏது உங்களது கம்பெனி? :)

இது போன்ற கட்டுமானங்கள் இந்தியாவிற்கு நல்லது...காரணம்...புதிய தொழிழ் நுட்பங்களை சீக்கிரமே பழகுவார்கள் (தொழிலாளர்கள்) பின் எப்படி IT துறையில் ஒரு இடத்தை பிடித்தார்களோ....அது மாதிரி கட்டுமானங்களிலும் முன்னேறி மற்ற நாடுகளுடன் போட்டியிடலாம்...

இந்தியாவில் அடுத்து பின்பற்றவேண்டியது எப்படி கட்டிடம், தெருக்களை காலாகாலத்திற்கும் பராமரிப்பது என்பதை....

எல்லா கட்டிடங்களிலும் பாசியும், வெடிப்புகளும்...

 

கோயில் கோபுரங்களில் வளரும் குருவிச்சை மரங்களை முதலில் பிடுங்க வேண்டும் :)

 

தற்போது இந்தியாவிற்கு பொய் வரும் நண்பர்கள் எல்லாம் சொல்லுவது ..ஒவ்வொருமுறை செல்லும் போதும் ஒவ்வொரு விடயத்திலும் முன்னேற்றம் காணபடுகிறது என்பது...அது ஒரு நல்ல விடயம்....

 

  • கருத்துக்கள உறவுகள்

இசை அது URC not URS...

ஏது உங்களது கம்பெனி? :)

அதுக்குமேல் எதுவும் சொல்ல முடியாது.. :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

சென்னை 'மெட்ரோ ரயில்' திட்டம் - இரண்டு (Phase-II)

 

 

metro_1781073f.jpg

 

அடுத்து வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில்(Phase II), மொத்தம் 76 கி.மீ. தூரத்திற்கு அனைத்து வழித்தடங்களும் பூமிக்கு அடியில் சுரங்க வழிப்பாதையாகவே அமையுமெனெ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைபெற்றுவரும் திட்டத்தில் (Phase I), அனைத்து பிரதான சாலைகளான அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலைகளின் வழியில் ரயிலுக்கான தடங்கள் அமைக்கப்பட்டுவிட்டதால் மேம்பாலம்(viaduct) வழியாக சென்னை மெட்ரோ ரயில் வழித்தடங்களை இனி நகரினுள் அமைய இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பால முறையில் வழித்தடங்கள் அமைக்க ஒரு கி.மீ. க்கு ரு.150 கோடியும், சுரங்க வழிப்பாதை மூலம் வழித்தடம் அமைக்க ஒரு கி.மீ க்கு ரு.500 கோடியும் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சென்ற சனவரி மாதம் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டிற்கான(Phase II) விரிவான திட்ட வரைவு (Detailed Project Report - DPR) தயாரிக்க  முடிவெடுத்தது.

 

தற்பொழுது மூன்று வழிதடங்கள் பரிசீலனையில் உள்ளன. அவை,

 

மாதவரம் - லைட்ஹவுஸ் (சாந்தோம்) - 17 கி.மீ

கோயம்பேடு - ஈஞ்சம்பாக்கம் (கிழக்கு கடற்கரை சாலை) - 27 கி.மீ

 

மாதவரம் - பெரும்பாக்கம் - 32 கி.மீ.

 

இவற்றிற்கு அரசு ஒப்புதலளித்தால் மேற்கொண்டு விரிவான திட்ட வரைவுப்பணிக்கான (DPR) வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்றும், அத்திட்டத்தை செயல்படுத்த 10 வருடங்கள் ஆகுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரு.36,000 கோடிகளாக இருக்கும்.

 

 

- 'செய்தி மூலம் 'இந்து'

 

http://www.thehindu.com/news/cities/chennai/no-elevated-corridor-in-metro-phaseii/article5761680.ece

 

.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

--------

இத்திட்டத்திற்கான மொத்த செலவு ரு.36,000 கோடிகளாக இருக்கும்..

 

தமிழகத்தையோ... இந்தியாவையோ... பொறுத்தவரையில்,

ஒரு சாதாரண அரசியல்வாதியே... லட்சக்கணக்கான கோடிகளில் புரளும் போது,

36,000 கோடி என்பது பெரிய தொகை அல்ல.

அடுத்த திட்டத்தை, உடனே... ஆரம்பிக்க அடிக்கல் நாட்ட வேண்டியது தான். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்களை வரவேற்கும் அதே வேளை, இந்த சென்னை மெட்ரோ ரயில் வேலைகளினால் "சிங்காரச் சென்னை" தன் சிங்காரத்தை நாள்தோறும் இழக்கிறாள், பழமை விரும்பிகளுக்கு இது கவலை தரும் விடயம்தான்..!

 

 

 

oldripon.jpg

 

ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற பொழுது  "ரிப்பன்" கட்டிடம் (சென்னை மாநகராட்சி மாளிகை)

 

 

 

 

Ripon_Building_Chennai.jpg

 

சில ஆண்டுகளுக்கு முன்..

 

 

 

 

Photo0906.jpg

 

சிதைந்த நிலையில் தற்பொழுது

மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும் எங்கே தொடுக்க படுகிறது?

 

இப்போது ஓடும் மின்சார ரயில்களுக்கு (லைன்) என்ன நடக்கும்?

ஏதாவது திட்டம் உள்ளதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோனோ ரயிலும் மெட்ரோ ரயிலும் எங்கே தொடுக்க படுகிறது?

 

இப்போது ஓடும் மின்சார ரயில்களுக்கு (லைன்) என்ன நடக்கும்?

ஏதாவது திட்டம் உள்ளதா?

 

மோனோ ரயில் திட்டம், இன்னமும் திட்ட வரைவிற்கான ஒப்பந்தப்புள்ளி (RFP) கோரப்படும் நிலையிலேயே இருகின்றது. இத்திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (Madras Transport Corporation) செயல்படுத்தும் பொறுப்பை கொண்டுள்ளது. தற்பொழுது தேர்தல் நேரமாதலால் தேர்தல் ஆணைய விதிப்படி புதிய திட்டங்கள் தேர்தல் முடியும் வரை கிடப்பில் போடப்பட வேண்டும்.

 

கீழ்க்கண்ட தோராய வழித்தடங்கள் மோனோ ரயில் திட்டத்தால் செயல்படுத்தப்படும். இதுவரை மோனோ ரயில் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்குமான வெளிப்படியான தொடர்புகள், சந்திக்கும் ரயில் நிலையங்கள் பற்றி தெளிவான அறிக்கை இல்லை. அனைத்தும் வரைவு நிலையிலேயே (Drafting stage) இருக்கின்றன.

 

 

monorail-copy.jpg

 

சென்னை மோனோ ரயில் திட்ட வரைவு வழித்தடம்

 

 

 

chennai-metro-rail.jpg

 

சென்னை மெட்ரோ ரயில் அங்கீகரிப்பட்ட செயல் வழித்தடம்.

 

 

சென்னையின் மின்சார ரயில்களின் வழித்தடங்களும்(EMU), மெட்ரோ ரயில்(Metro) வழித்தடங்களும் இரு புள்ளிகளில் சந்திக்கின்றன.

ஒன்று -  சென்னை சென்ட்ரல்

மற்றொன்று - பரங்கிமலை (St.Thomas Mount)

சென்னை சென்ட்ரலுக்கு எதிர்புறமுள்ள பல கடைகள்  பலகட்ட வழக்கிற்குப்பின் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி இதற்காக இடிக்கப்பட்டு, அங்கே இரு முனைகளுக்கும் இணைப்பு பாலம் அமையப்போகிறது. (UG and skywalk platforms between existing Chennai Central station and Central Metro station)

பரங்கிமலை ரயில் நிலையம் மிக முக்கியமான ஒருங்கிணைந்த நிலையமாகப் போகிறது. இங்கே மூன்று அடுக்கு மாடி (Three levels) நடைபாதை மேடைகள் அமைகின்றன..

 

 

13THMETRO_103767f.jpg

 

 

தரை தளத்தில் சென்னை மின்சார மற்றும் சாதாரண ரயில் போகுவரத்து இருப்பு பாதைகள்.

முதல் தளத்தில் சென்னை பறக்கும் ரயில் பாதை (Madras Rapid Transit System - MRTS) நடைமேடை. இது சென்னை பீச் ரயில் நிலையம் தொடங்கி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலையில் இணையும் வழித்தடம்.

இரண்டாம் தளத்தில் சென்னை மெட்ரோ ரயில் (Metro Rail) நடைமேடை அமைகிறது.

 

 

 

Reason for edit: எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Photo0912.jpg

 

ஆதம்பாக்கம் அருகே தொங்கி நிற்கும் பறக்கும் ரயில் திட்ட வழித்தடம்

 

 

Photo0916.jpg

 

சென்னை பீச் - ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் திட்ட வழித்தடம்.

 

 

பரங்கிமலை ரயில் நிலையத்தோடு இணைக்கப்டவேண்டிய சென்னை பீச் - ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் சாலைத் திட்டம் வேளச்சேரி வரை முடிந்துள்ளது.

 

அதன் விரிவாக்கமாக வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு மேம்பாலம் வழியாக ரயில் பாதை அமைக்கும் பணி பல வருடங்களாக நிலம் கையகப்படுத்தும் பொழுது ஏற்பட்ட நில ஆர்ஜித வழக்குகளால், திட்டம் பரங்கிமலை ரயில் நிலையத்தருகே 500 மிட்டர் தூரத்தில் தொங்கி முடங்கியுள்ளது.

 

சென்னை மெட்ரோ ரயில் பரங்கிமலையோடு இணைந்தவுடன் பறக்கும் ரயில் பாதையும் அதோடு இணைந்து ஒருங்கிணைந்த ரயில் நிலையமாக பரங்கிமலை மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திட்டங்கள் அரசியல் கயமைத்தனத்தில் அலங்கோலப் படக்கூடாது...!

சென்னை இப்படி  வளருவதில் எல்லாருக்கும் பெருமை....பிற்காலத்தில் தமிழகத்திலேயே செட்டில் ஆகலாம்

:)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை இப்படி  வளருவதில் எல்லாருக்கும் பெருமை....பிற்காலத்தில் தமிழகத்திலேயே செட்டில் ஆகலாம் :)

 

நன்றி, தமிழர்களை வரவேற்கிறோம்! groups_cuddle.gifsmiley-with-glasses32.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தடை செய்யப்பட வேண்டிய முதலாவது விடயம் விளப்படப் ”போஸ்டர்”கள். நகரையே அலங்கோலம் செய்கின்றன. இரண்டாவது முக்கியமாகச் செய்யப்பட வேண்டியது கழிவுநீர் வாய்க்கால்கள். இது இல்லாமல் நிறையப் பிரச்சனைகள். தண்ணீர் தேங்கி நிற்றல், ஆற்றுநீர் மாசுபடுதல்... உற்பட பல. பல உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கழிவுகளை ஆற்றில் கலக்க இதுவே காரணமும் ஆகும்.
 


மேற்கு நாடுகளில் இவ்வளவு அநியாயத்துக்குப் புல் வளர்க்கின்றார்கள். அழகுக்காக இப்படிச் செலவளிக்க வேண்டுமா என்று யோசித்ததுண்டு. ஆனால் உண்மையில் கழிவுநீர் வாய்க்கால்களில் சேறு கலக்காமல் இருக்க புல் வளர்ப்பது பெரும்பங்கு வகிக்கின்றது. அத்தோடு புற்கள் நிலத்தடி நீரை உறுஞ்சாமல் இருப்பதும் ஒருவகையான நன்மையானதே. மரங்கள் வளர்ப்பதைக் காட்டிலும் புற்களின் தேவை, நல்லது என்றே நினைக்கின்றேன்.

தமிழ்நாடு இந்தியாவில் ஒரு தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும். பொருளாதாரரீதியாகத் தமிழர்கள் உயர்வடைந்தால் எவனாலும் எங்களை ஏவல் செய்ய முடியாது.

பெற்றோலியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, ஒரு காலத்தில் பணம்படைத்தவர்கள் மட்டுமே வாங்கும் நிலை உருவாக்கும். அப்போது உலகத்தின் பொருளாதரம் ஒருசில நாடுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அப்போது நம்மவர்கள் தொடர்ச்சியாக இப்படி மானியம், இலவசம் என்ற சொற்களின் அர்த்தங்கள் மறந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்க எங்களின் வருவாய்களை உயர்த்த வேண்டும்.

 

தண்ணீர் பஞ்சத்திற்கும்..அங்குள்ள ஏழை மக்களையும் பாதுகாக்கும் திட்டங்கள் இருந்தால் ஒரு குற்ற உணர்வு இல்லாமல்அங்கு சந்தோசமாக இருக்கலாம்....அந்த இரண்டையும் எதிர்நோக்கும் மன துணிவு இல்லை..

ஆனால் எனது நண்பர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு (தமிழ்நாட்டிற்கு) செல்கின்றார்கள்...ஒவ்வொரு முறையும் அதற்க்கு முந்தின முறையிலும் பார்க்க முன்னேற்றம் என்றே சொல்லுகிறார்கள்...அது ஒரு நல்ல விடயம்.....

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி சுவி, தூயவன் மற்றும் நான்தான்.

 

 

மேலதிக திட்ட முன்னேற்ற படங்கள்:

 

சென்னை நுழைவாயிலுள்ள முக்கியமான "கத்திப்பாரா" சந்திப்பு மேம்பாலத்தின் மீது இடையூறு இல்லா போக்குவரத்திற்காக சாலையின் இருபுறமும் சமநிலை தொங்குபால தூண்கள் (Balanced Cantilever) அமைக்கப்பட்டு அவைகளை இணைக்கும் பணியும் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளது. இரு தூண்களுக்கும் இடையான தூரம் 75 மீட்டர்களாகும். சாதாரணமாக இத்தகைய வடிவமைப்பு பாலங்கள் ஆழமான குறுகிய நதியோடும் பள்ளத்தாக்குகளின் இரு கரைகளை இணைக்கும் இடங்களில் வடிமைப்பு பொறியாளர்கள் திட்டமிட்டு கட்டுவார்கள். இப்பாலத்தின் பலவேறு திட்ட நிலைகளின் முன்னேற்ற படங்களை கீழே காணலாம்.

 

 

670px-French-Kiss-Step-2.jpg

 

(ஆங்கிலத்தில் ஃப்ரன்ச் கிஸ் - French Kiss என்று சொல்வார்களே அந்த மாதிரியான சந்திப்பு இந்த இரு தூண்களின் சங்கமம்) :rolleyes:

 

 

1958515_783441375002389_110739079_n.jpg

 

 

559009_783441388335721_614791683_n.jpg

 

 

10001318_783441358335724_99487542_n.jpg

 

 

1904123_783441468335713_985610754_n.jpg

 

 

1960097_783441385002388_987154836_n.jpg

 

 

10003172_783441465002380_677269203_n.jpg

 

 

1011464_783441425002384_1997903563_n.jpg

 

 

Source: CMRL FB.

 

Edited by ராசவன்னியன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலந்தூர் - கத்திப்பாரா சந்திப்பு தாண்டியவுடன் பிரியும் கிண்டி நோக்கிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ வழித் தடத்தில், கிண்டி குதிரைப் பந்தய மைதானமருகே குறுக்கே வரும் மின்சார இருப்புப் பாதைக்கு மேலாக சுமார் 100 மீட்டர் (Span) அகல மேம்பாலம், கடின இரும்புத்தகடுகளால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. இந்த இரும்பு மேம்பாலம் அமைந்தவுடன் அதன் மீதி சீமந்து பலகைகள் (Concrete slabs) மேவப்பட்டு தண்டவாளம் அமைக்கப்படும்.

 

அதன் படங்களை கீழே இணைக்கிறேன்.

 

 

 

IMG_8325.jpg

 

 

 

IMG_8331.jpg

 

 

IMG_8336.jpg

 

 

IMG_8340.jpg

 

 

1111.jpg

 

 

IMG_8287.jpg

 

 

 

படங்கள் உதவி: தினகரன்.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Update:

 

 

chennaiMetroRail1.jpg

 

 

'கோயம்பேடு - எழும்பூர்' இடையேயான சுரங்கப் பாதையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னையில் ரூ.14,600 கோடி செலவில் இருவழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக, வரும் அக்டோபர் மாத இறுதியில் கோயம்பேடு  - ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.

 

அதுபோல கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் அடுத்த ஆண்டு இறுதியில் முதலாவது மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கோயம்பேடு - எழும்பூர் இடையே நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய 7 மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

சுரங்கப் பாதையைப் பொருத்தவரை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக தனித்தனியாக இரண்டு டன்னல்கள் (Tunnels)  அமைக்கப்படுகின்றன. பூந்தமல்லி நெடுஞ்சாலையில், எழும்பூர் நேரு பூங்கா இடையேயும், ஷெனாய் நகர் அண்ணாநகர் டவர் இடையேயும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது.

இங்கு சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராட்சத டன்னல் போரிங் மிஷின்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இப்போது இரண்டு டன்னல் போரிங் மிஷின்கள் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஷெனாய் நகரை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது. வேறொரு இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மற்றொரு டன்னல் போரிங் மிஷின் நேரு பார்க்கை நோக்கி சுரங்கம் தோண்டுகிறது.அதுபோல அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலத்தை நோக்கி இரண்டு டன்னல் போரிங் மிஷின்கள் மே முதல்வாரத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்படும். அதையடுத்து 4 மாதங்களில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு டிசம்பரில் கோயம்பேடு - எழும்பூர் இடையே சுரங்கப் பாதையில் முதலாவது மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் மற்றொரு பகுதியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் தரையில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் என்பதாலும், இரண்டு அடுக்கு சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்படுவதாலும், மொத்தம் 100 அடி ஆழத்தில் 25 அடிக்கு பாறைகள் இருப்பதாலும் இந்த ரயில் நிலையம் அமைப்பது சவாலான பணியாக இருக்கிறது. இருப்பினும், 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5893475.ece

முண்டகண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் இன்னும் திறக்கவில்லை என்று ஒரு blog பதிவு இருந்தது..அது எதற்கு? மின்சாரரயிலுக்கா?

அந்த ரயில் நிலையத்தின் வெளிப்புறம் ஒரே சாக்கடையாக இருந்தது....இந்த ரயில் நிலையங்களும்...அப்படியாகாமல் இருக்க கடவுளை வேண்டுவோம்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முண்டகண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் இன்னும் திறக்கவில்லை என்று ஒரு blog பதிவு இருந்தது..அது எதற்கு? மின்சாரரயிலுக்கா?

அந்த ரயில் நிலையத்தின் வெளிப்புறம் ஒரே சாக்கடையாக இருந்தது....இந்த ரயில் நிலையங்களும்...அப்படியாகாமல் இருக்க கடவுளை வேண்டுவோம்....

 

TH16_mrts_new_eps_1238532f.jpg

 

 

மேலேயுள்ள வரைபடத்தில் வெள்ளை நிற வழித்தடத்தை(MRTS) பார்த்தால் புரியும்.

 

முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையம், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) வழித்தடத்தில் வரும் புதிய ரயில் நிலையமாகும். இது திருமயிலை (மயிலாப்பூர்) ரயில் நிலையத்திற்கும், லைட் ஹவுஸ் ரயில் நிலையத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையம்.

 

இது மின்சார ரயில் பாதையாகும்.

317703_553706877996437_1471925865_n.jpg

 

 

சென்னை சென்ரலிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கோவளம் வரை அக்காலத்தில் ஆங்கிலேயர்களால் படகுப் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

 

அக்கால்வாயில் படகு சவாரி மூலம் மக்களும்,, காய்கறி சணல் போன்றவைகளும் எடுத்துச்செல்லப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா? :o

 

சுதந்திரம் பெற்ற பின் படிப்படியாக வந்த அரசுகள் எவையும் தொலை நோக்கில் நகரின் வளர்ச்சிக்கேற்றவாறு இருக்கும் இயற்கை சூழலை பாதுகாக்கவில்லை.

 

விளைவு?

இன்று பக்கிங்காம் கால்வாய் கழிவு நீருக்கான சாக்கடையாக சிதைந்து உருமாறிவிட்டது.. அக்கால்வாய் தான் நீங்கள் குறிப்பிடும் முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையத்தை ஒட்டிச் செல்கிறது.

இப்பொழுது கூவத்தின் நடுவே தூண்கள் என காரணம் கூறி சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டத்தை தடுக்கும் அரசு, அப்பொழுது சென்னை பறக்கும் சாலை ரயில் திட்டத்தில் பல இடங்களில் பக்கிங்காம் கால்வாய் நடுவே தூண்கள் எழுப்பியபோது கள்ள மெளனம் சாதித்தன என்பது வேடிக்கை. :huh:

 

 

Pc0020500.jpg

 

சென்னை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை கடற்கரையிலிருந்து வேளைச்சேரி வரை முதல் இரண்டு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டது.  அதன் விரிவாக்கமாக (Phase III) வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை மூன்றாம் கட்ட திட்டம் நிறைவேற்றுகையில் வழக்கம் போலவே நில ஆர்ஜித வழக்குகளால் இத்திட்டம் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தூரத்தில் நிறைவேறாமல் தொங்கி நிற்கிறது.

 

 

 

malaimalar28oct2010.png

 

 

டிஸ்கி:

 

பரவாயில்லையே.., யாழ் களத்திலும் சில சீவன்கள் அக்கறையாக தமிழ் நாட்டின் வளர்ச்சி பற்றியும், திட்டங்கள் பற்றியும் கேட்கிறார்கள். நன்றி!

இத்திரியை வாசிக்கும் அனைவருக்கும் நன்றி. :rolleyes:

Edited by ராசவன்னியன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.