Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்க

Featured Replies

புலிகளின் இணக்கத்தை நிராகரித்து யுத்தத்தைத் தொடங்கியது சிங்கள அரசு

மாவிலாறு அணையின் மதகுகளைத் திறக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் இணக்கம் தெரிவித்திருந்ததை நிராகரித்து சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது.

சிறிலங்கா அமைச்சரும் அரச பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பிக்கு அளித்த நேர்காணல்:

பயங்கரவாதிகள் அணையைத் திறப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீர்ப்பாசனத் திட்ட பொறியாளர்கள்தான் அதனைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த வழியிலாவது நாங்கள் திறப்போம். நீர் ஒரு பேச்சுக்களுக்கான கருவியாக இருக்கக் கூடாது. நீர் விநியோதத் திட்டம் தொடர்பான எதனையும் நாங்கள் ஏற்கவில்லை என்றார் அவர்.

இராணுவப் பேச்சாளர் உபாலி ராஜபக்ச கூறுகையில், இன்று நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலானது மாவிலாறு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளை நிர்மூலமாக்கத்தான். கால்வாயில் நீர் போகவேண்டுமெனில் அது சிறிலங்கா அரசாங்க படைகளால்தான் செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளால் அல்ல என்றார் உபாலி ராஜபக்ச.

இந்நிலையில் மூதூர் கிழக்கில் சிங்கள இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது.

திருகோணமலை தளத்திலிருந்து இன்று மாலை 4 மணியளவில் பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூலம் உந்துகணைகளை வீசப்பட்டன.

ஆறு எறிகணை வீச்சுகளும் மூன்று சுற்று உந்துகணை தாக்குதல்களும் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டுள்ளன.

மேலும் மாவிலாறு மதகுகளைத் திறக்கச் சென்ற இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மீதும் எறிகணைத் தாக்குதலை சிங்கள இராணுவம் நடத்தியது. இதில் அனைவரும் உயிர் தப்பினர்.

சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்கள் தொடருமேயானால் அதனை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக கருதாமல் யுத்த பிரகடனமாகக் கருதி பரந்தளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்திருந்த நிலைமையில் மீண்டும் சிங்கள அரசு யுத்தத்தைத் தொடங்கியுள்ளது.

தகவல் புதினம்

செய்தி உண்மையாக இருந்தால்.... இப்போ புலிகள் வேண்டிய பதிலை குருவிகளுக்கு வளங்குவர் எண்று நம்பலாம்....!

  • கருத்துக்கள உறவுகள்

தல!

எருமை மாட்டிற்கு மழை பெய்தால் மட்டுமல்ல, சூடு போட்டாலும் சொறணை வராது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்க!

தல!

எருமை மாட்டிற்கு மழை பெய்தால் மட்டுமல்ல, சூடு போட்டாலும் சொறணை வராது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்க!

உண்மைதான்........ ஒருவேளை வந்திட்டாலும் எண்ட நப்பாசைதான்...! ம்ம்ம்ம்

புலிகள் பதில் சொன்னாலும் அதிலை ஒண்டை தூக்கிப்பிடிச்சு கொண்டு வருவார் எண்டதும் உண்மைதான்... சனம் சாகுது சண்டை எதுக்கு எண்டு முன்னர் போட்டார கூத்து அதுமாதிரி...!

  • தொடங்கியவர்

யாழ்களத்தில் கருத்தக்கணிப்பென்றவுடன் குருவிகள் எஸ்கேப். இனி திரும்ப வருவார் வெறொரு பிபீஸி செய்தியை தூக்கிப் பிடித்துக்கொண்டு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிறிலங்கா அரசின் தன்மானப்பிரச்சனை ஒன்று உண்டு. புலிகள் மூதூர் நகருக்குள் இவ்வளவு இலகுவாகத் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்று விட்டார்கள். ஆனால் 10மீற்றர் நடையை, இராணுவம் கடக்கமுடியவில்லையா என்று சிங்கள பேரினவாத மக்கள் மனதில் எழும் சஞ்சலங்களுக்காக நடத்தம் படும் நாடகம் இது!

நாளைக்கு புலிகள் திறந்து விட்ட, நீர் போய்ச் சேரும்போது, ரம்புக்கெல ஒரு அறிக்கை விடுவார் பாருங்கள்! வீரமிகு துட்டகைமுனுவின் பிள்ளைகள், வெற்றிகரமாக மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றி, தண்ணீரைத் திறந்து விட்டார்கள் என்று!

இதனால் சிங்களப் பேரினவாத சிந்தனையுள்ள மக்களின் எண்ணங்கள் குளிர்வடையும்! ஆனால் அது எப்படி தண்ணீர் வந்தது என்று அறியாமல் இருக்கும் வரை!

ஆனால், தாங்கள் திறந்து தான், தண்ணீர் விடவேண்டும், என ரம்புக்கெல பகிரங்கமாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஊடாகச் சவால் விட்டால், துட்டகைமுனுவின் பிள்ளைகள், பாடு ரெம்பக் கஸ்டம்!

விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாது என்று ரம்புக்கெல நினைக்கின்றால், இப்படித் தாடியை வளர்த்து வைத்த நிலையிலும்!

யாழ்களத்தில் கருத்தக்கணிப்பென்றவுடன் குருவிகள் எஸ்கேப். இனி திரும்ப வருவார் வெறொரு பிபீஸி செய்தியை தூக்கிப் பிடித்துக்கொண்டு

வரட்டுக்கும் இன்னும் இரண்டு வாரத்துக்கு எனக்கு லீவுதான்...! :wink:

! நாளைக்கு புலிகள் திறந்து விட்ட, நீர் போய்ச் சேரும்போது, ரம்புக்கெல ஒரு அறிக்கை விடுவார் பாருங்கள்! வீரமிகு துட்டகைமுனுவின் பிள்ளைகள், வெற்றிகரமாக மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றி, தண்ணீரைத் திறந்து விட்டார்கள் என்று!

திறந்துவிடும் நடவடிக்கை கண்காணிப்பளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளது எண்டு நினைக்கிறேன்....!

  • தொடங்கியவர்

மாவிலாற்றை கைப்பற்றும் வலிந்த தாக்குதலை படையினர் தொடங்கியுள்ளனர்-ரம்புவெக்கல

மாவிலாற்று அணைக்கட்டை மீளக்கைப்பற்றும் வலிந்த தாக்குதல்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.இன்று கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டைக் கூட்டிய சி்றிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் ரம்புவெக்கல விடுதலைப் புலிகளின் அழுத்தங்களிற்கு அரசு அடிபணியப்போவதில்லை எனவும் இவ் அணைக்கட்டை திறப்பதற்கான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்

சிறீலங்காவுக்கு போட்ட சூடு காணாது

  • கருத்துக்கள உறவுகள்

திரந்துவிடும் நடவடிக்கை கண்காணிப்பளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளது எண்டு நினைக்கிறேன்....!

ஆனால் புலிகளின் காய்நகர்த்தல், அரசியலிலும், இராணுவத்திலும் சிறப்பானவை!

**எம்மால் சிங்கள இராணுவத்துக்கு எதிராக மரபுவழியாகத் தோற்கடிக்க முடியும் என்று காட்டினார்கள்!

**போர்நிறுத்த விதிகளை மதிக்கின்றோம் என்பதற்காக விலத்திச் சென்றார்கள்!

**மானிதாபிமான எண்ணம் உண்டு என்று வெளிப்படுத்த தண்ணீரைத் திறந்து விடச் சம்மதித்தார்கள்!

ஆனால் இலங்கையரசு!

**300 மீற்றரை 10 நாட்களாகக் கடந்த கொண்டிருக்கின்றனர்!

**போர்நிறுத்தவிதிகளை மீறி புலிகளின் எல்லையை ஆக்கிரமித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்!

**இப்பொது மீண்டும் மாவிலாறு பிரச்சனையைப் புூதகரமாக்கப் பார்க்கின்றனர்!

ஒரு வெற்றி என்பது வெறுமனே, இராணுவரீதியோடு மட்டும் மறைந்து விடாமல் அரசியலிலும் செய்து காட்டிய பண்பு புலிகளின் வெற்றியை நியாயப்படுத்துகின்றது. கட்டாயம் சர்வதேசம், இவற்றைப் பதிவு செய்திருக்கும் என நம்பலம்!

**போர்நிறுத்தவிதிகளை மீறி புலிகளின் எல்லையை ஆக்கிரமித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்!

இதை முக்கிய காரணமாக சொல்லித்தான் புலிகள் பிடித்த இடத்தில் இருந்து வெளியேறினர்....!

இப்போ புலிகள் இன்னுமோர் இடத்தில் சண்டையை தெடக்கினால் குண்டு வீச விமானங்கள் போதாது... தற்செயலாக வன்னியில் சண்டை தொடங்கியது எண்டு வச்சுக்கொள்ளுங்கோ ஆட்லறிகளும் போதாது...!

யாழ்களத்தில் கருத்தக்கணிப்பென்றவுடன் குருவிகள் எஸ்கேப். இனி திரும்ப வருவார் வெறொரு பிபீஸி செய்தியை தூக்கிப் பிடித்துக்கொண்டு

யாழ் களத்தில் கருத்துக் கணிப்பை நடத்துவதும் சரி...கிணற்றுத் தவளைகளிடம் கருத்துக் கேட்பதும் சரி..! இவற்றிற்கெல்லாம்...எவரும் பயப்பிடுவினமோ..!

புலிகளின் இணக்கத்தை சிங்கள அரசு நிராகரித்து போருக்கு தயாராகிவிட்டது. அப்போ..மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் மனிதாபிமான இராணுவத் தாக்குதல்...என்பது அரச படையெடுப்பை நிறுத்தத் தவறிவிட்டது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது..! :idea:

ஐயோ இந்த நோயாளியை (மன) பாருங்கள் நாங்கள் கிணற்றுத் தவளையாம் இவர் ரம்புக்கவெலவின்ரை ஐரோப்பிய பேச்சாளர். செக்குமாடு சுத்தி வரலாம் ஊர்போய் சேராது. என்பதையறியாதவர்.

புலிகளை ஏமாற்றிய அரசுகள்...

சிறீலங்கா அரசு மீண்டும் அதே கோசத்துடன் தாக்குதல் ஆரம்பித்தது....! :roll: :?: :idea:

Sri Lanka forces attack reservoir

Sri Lankan government forces have launched fresh attacks on a reservoir, hours after Tamil Tiger rebels agreed to let it be reopened, reports say

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5249884.stm

  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளேயாழ்கள உறுப்பினர் எல்லாம் அப்ப கிணத்து தவளை என்கிறீர்களா?? சரி அப்படியாயின் குளத்து தவளை நீர் ஏன் இங்கு நிண்டு கத்துறீர் ?? வேறை வேலையில்லாமல் மோகன் எண்டொரு தவளை நோர்வே கிணத்துக்கை இருந்து இந்த தளத்தை நடத்துது வேலை மினகெட்ட மற்ற நாட்டு தவளைகளும் இங்கை வந்து கத்தி கொண்டு இருக்குது

தொப்பி வீசி இருக்கு அளவானவை அவையவைக்கு ஏற்ற வகையில போட்டுக்கிறது. மிச்சவை அரசியல் பேசுங்கோ..! அநாவசியமா குருவிகளை வம்புக்கு இழுத்தா இப்படித்தான் ஆகும்..! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

குருவியை வம்புக்கு இழுத்து யாருக்கு இங்கு இப்ப என்ன ஆகி விட்டது யாழ்களம்தான் இடை நிறுத்தியாகி விட்டதா???அல்லது அதில் கருத்து எழுதியவர்கள்தான் பயந்து ஓடிவிட்டனரா??இல்லை யாரும் உமக்கு பதில் கருத்து எழுதாமல் பயந்து ஒதங்கி விட்டனரா?? மற்றவர்களிற்கு தொப்பி வீச முதல் உமது காற்சட்டை கழண்டு போகாமல் கவனமாய் காத்து கொள்ளும் அன்புடன் சாத்திரி

  • தொடங்கியவர்

தொப்பி வீசி இருக்கு அளவானவை அவையவைக்கு ஏற்ற வகையில போட்டுக்கிறது. மிச்சவை அரசியல் பேசுங்கோ..! அநாவசியமா குருவிகளை வம்புக்கு இழுத்தா இப்படித்தான் ஆகும்..! :idea:

உம்மட தொப்பி உமக்கு தான் அளவாயிருக்கு. நீர் தான் நேரத்துக்கு ஒன்று சொல்லிக்கொண்டு மனநோயாளி மாதிரி புலம்புறீர். உம்மட வண்டவாளம் வெளிய வந்திடும் என்று பயந்து மற்றவர்களை கிணற்றுத்தவளையென்கிறீர்.

"எவனொருவன் தன்னை அதிபுத்திசாலி என்று நினைக்கிறானோ.

அவன்தான் அடிமுட்டாளாகின்றான்"

தொப்பி வீசி இருக்கு அளவானவை அவையவைக்கு ஏற்ற வகையில போட்டுக்கிறது. மிச்சவை அரசியல் பேசுங்கோ..! அநாவசியமா குருவிகளை வம்புக்கு இழுத்தா இப்படித்தான் ஆகும்..! :idea:

கருத்துக்கு கருத்து சொல்ல முடியாதவன் சொல்லும் நொண்டிச்சாக்கு இது...

மரமண்டைக்குள் ஏதாவது இருக்காதவந்தான் சிறு தொகை கொண்ட நீ சொல்வதுதான் உண்மை எண்று பினாத்தும் மனநோயாளி...! உண்மை நேர்மை தனித்துவம் எண்று உயர்ந்த புலிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முயல்பவனை வேறு எப்படி சொல்ல முடியும்....???? :idea:

மன நோயளிகளுக்கு உகந்த இடம் யாழ்களம் அல்ல....!

புலிகளை ஏமாற்றிய அரசுகள்...

சிறீலங்கா அரசு மீண்டும் அதே கோசத்துடன் தாக்குதல் ஆரம்பித்தது....! :roll:  :?:  :idea:  

Sri Lanka forces attack reservoir  

 

Sri Lankan government forces have launched fresh attacks on a reservoir, hours after Tamil Tiger rebels agreed to let it be reopened, reports say  

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/5249884.stm

புலிகளாய் சண்டையை தொடக்கவேண்டும் எண்று நீண்டகாலமாக ஒட்டுக்குழுக்கள் மூலமாக பாடுபட்ட அரசு தனது நடவடிக்கை மூலம் புலிகள் இனி எது செய்தாலும் சரியானது எண்று நினைக்கு மாறு நடந்து கொள்கிறது...

இதை புலிகள் தேற்றவர்களாய் காட்ட முனையும் மனநோய்த்தனத்துக்கு சமன்.... இவ்வளவுகாலமும் பலவீனப்படாத புலிகள் இப்போ பலவீனப்பட்டவர்களாய் காட்ட முனையும் இதை வேறு விதமாக சொல்ல முடியவில்லை.....!

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பி வீசி இருக்கு அளவானவை அவையவைக்கு ஏற்ற வகையில போட்டுக்கிறது. மிச்சவை அரசியல் பேசுங்கோ..! அநாவசியமா குருவிகளை வம்புக்கு இழுத்தா இப்படித்தான் ஆகும்..! :idea:

என்ன ஆகிடுத்து? நீர் ஒரு பேடி என்பது தெளிவாயிற்று அவ்வளவுதான். :P :P

குறைகுடம் தளும்பும் என்று சும்மாவா சொன்னார்கள்.. :wink: :arrow:

உம்மட தொப்பி உமக்கு தான் அளவாயிருக்கு. நீர் தான் நேரத்துக்கு ஒன்று சொல்லிக்கொண்டு மனநோயாளி மாதிரி புலம்புறீர். உம்மட வண்டவாளம் வெளிய வந்திடும் என்று பயந்து மற்றவர்களை கிணற்றுத்தவளையென்கிறீர்.

"எவனொருவன் தன்னை அதிபுத்திசாலி என்று நினைக்கிறானோ.

அவன்தான் அடிமுட்டாளாகின்றான்"

இது இதைத்தான் நானும் சொல்கிறேன்....!

இப்போ யாழ்களத்தவர் ஒற்றுமையை விரும்பாமல் எல்லாரும் கிணற்று தவளை எனும் இவன்.... நாளை தமிழீழம் அமைந்து மக்கள் மகிழ்வாய் வாழவிடாமல் குளப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாக இருப்பான்... அது மட்டும் நிதர்சனமான உண்மை....!

ம்.. ஒரு கிழமைக்குள்ளை இரண்டாம்தரம் யுத்தநிறுத்தம் ரத்தாகியிருக்கு..

உங்கடைதான் செப்ரெம்பர் முதல் தேதியிலை ரத்தாகுதே.. பிறகு என்ன பிரச்சனை?

:?:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தாக்குதல்- ஒரு யுத்தப் பிரகடனமே: சு.ப.தமிழ்ச்செல்வன்

சிங்கள இராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியிருப்பதானது "யுத்த பிரகடனம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு செய்மதி தொலைபேசியூடாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

சிறிலங்கா இராணுவத்தின் விமானக் குண்டுவீச்சை யுத்தப் பிரகடனமாகவே நாம் கருதுகிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

-புதினம்

Sri Lanka rebels call shelling "declaration of war" By Peter Apps

Sun Aug 6, 1:02 PM ET

TRINCOMALEE, Sri Lanka (Reuters) - Sri Lankan rebels said on Sunday that government shelling of rebel territory amounted to a declaration of war, but they had not yet decided whether to retaliate.

http://news.yahoo.com/s/nm/20060806/wl_nm/.../srilanka_dc_55

The Tigers' political wing leader told Reuters they had not yet retaliated to the heaviest artillery and rocket fire since fighting broke out 12 days ago, but may if shelling continued.

"We consider this a declaration of war and strongly condemn the attitude of the government," S.P. Thamilselvan said through a translator via satellite phone from the northern rebel stronghold of Kilinochchi.

"We may have to take a defensive position if the shelling continues. It is not decided yet," he added. He said there was still space for discussion while Norway's special peace envoy Jon Hanssen-Bauer was in Kilinochchi. He is expected to leave on Monday.

The rebel statement came the same day that 15 local aid workers helping with relief after the 2004 tsunami were found executed in a town caught up in fighting.

Well over 800 people have been killed so far this year in escalating attacks and military clashes and dozens more since the fighting intensified two weeks ago.

A pro-rebel website blamed government forces for the killings of the aid workers in Mutur, scene of days of fierce fighting that forced most of the population to flee. But the Consortium of Humanitarian Agencies (CHA) said they did not know who was responsible.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) are furious at President Mahinda Rajapakse's rejection of their demand for a separate homeland for ethnic Tamils in the north and east.

The government insists it is committed to the 2002 truce, but analysts fear more clashes are in store.

REBEL TERRITORY POUNDED

Sri Lankan artillery pounded Tamil Tiger territory hours after the rebels offered to give in to a key government demand to open a sluice gate providing water to government territory.

The closure of the gate last month prompted the first ground fighting since the 2002 ceasefire.

The Tigers said they would re-open it but as the head of the unarmed Nordic-staffed ceasefire monitoring mission, retired Swedish Major General Ulf Henricsson, headed toward the sluice south of the northeastern port of Trincomalee, army artillery opened fire.

"(The government) have the information that the LTTE has made this offer," said Tommy Lekenmyr, chief of staff for the Sri Lanka Monitoring Mission (SLMM).

"It is quite obvious they are not interested in water. They are interested in something else. We will blame this on the government."

The political situation remains deadlocked. The government said the Tigers must leave the area of the sluice gate, which officially lies in army territory but which military sources said was in an area effectively controlled by the rebels.

"The Tigers must vacate the area and let the irrigation engineers come in as they have done before," head of the government peace secretariat Palitha Kohona told Reuters. "The Tigers have caused complete mayhem with their illegal actions."

Earlier in the day, after meeting peace envoy Hanssen-Bauer in Kilinochchi, Thamilselvan said the Tigers would unblock the sluice gate if fighting stopped and the government increased development in rebel areas.

Hours later, a Reuters witness saw and heard the heaviest military artillery and multi-barrel rocket barrage for days fired from military bases in Trincomalee toward rebel territory. Smoke rose from a whole section of the horizon and the ground shook.

So far, fighting has been restricted to a areas of the east near Trincomalee, where 21,000 displaced have been registered so far from Mutur alone. But analysts fear it could spread.

(additional reporting by Joe Ariyaratnam in KILINOCHCHI and Simon Gardner in COLOMBO)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.