Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட, கிழக்கு இணைப்பு அவசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எதிர்காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக் கூடிய ஆட்சியை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கு சுயதொழில் வாய்ப்புகள் மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் எங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யப் பழகிக் கொண்டோமானால் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசத்தை,  மாவட்டத்தை , மாகாணத்தை நாங்களே ஆளக் கூடிய சகல உரிமைகளையும் பெற்று வாழக் கூடிய நிலையை உருவாக்கலாம் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். 
 

ஏறாவூரில் இடம்பெற்ற சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்த கருணாகரம் மேலும் கூறுகையில் ; 
இந்த நாட்டின் அரசாங்கம் வடக்கு, கிழக்கை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கின்றார்கள். முஸ்லிம் பிரதேசங்கள் துரிதகதியில் அபிவிருத்தியடைகின்றன. இந் நாட்டில் ஏனைய இனங்கள்  வாழும் பிரதேசங்கள் பாரிய  அபிவிருத்தியடைந்து வருகின்றன. எங்கள் பகுதிகளில் உருவாகும் விளைச்சலைக் கொண்டு ஏனைய பிரதேசங்கள் தான் அபிவிருத்தி கண்டு வருகின்றன.  
நாங்கள் எதிர்காலத்தில் சுயநிர்ணய உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஆட்சியை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்குச் சுயதொழில் வாய்ப்புகள் மிக முக்கியமானவை. ஒவ்வொருவரும் எங்கள் குடும்பங்களை அபிவிருத்தி செய்யப் பழகிக் கொண்டோமானால் எதிர்காலத்தில் எங்கள் பிரதேசத்தை , மாவட்டத்தை , மாகாணத்தை நாங்களே ஆளக் கூடிய சகல உரிமைகளையும் பெற்று வாழக் கூடிய நிலையை உருவாக்கலாம். 
 

கடந்த முப்பது வருட கால ஆயுதப் போராட்டத்தாலும் அதற்கு முன்னரான முப்பது வருட கால அகிம்சைப் போராட்டத்தாலும் தமிழ் மக்களாகிய நாங்கள் பெரும் இழப்புகளைச்  சந்தித்திருக்கின்றோம். அரசியல் தலைவர்கள், போராளிகள், பொது மக்கள், சொத்துகள் , கல்வி போன்ற அனைத்தையும் இழந்திருக்கின்றோம். இந்த நாட்டில் நாங்கள் அநாதைகளாக , அகதிகளாக வாழும் நிலை தான் உருவாகியிருக்கின்றது. 
இருபத்தாறு வருடங்களாக நடத்தப்படாதிருந்த வடமாகாண சபைத் தேர்தலை வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக தற்போது நடத்த அரசு உத்தேசித்திருக்கின்றது. வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தமிழ் மக்கள் அதிகாரத்தைப் பிடித்துவிடுவார்கள். அதன் மூலம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட மாகாண சபை அதிகாரங்களைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதற்காகவே பேரினவாத சக்திகள் 13 ஆவது  திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டுமெனக் கூக்குரலிடுகின்றன.
 எமது அயல்நாடான இந்தியா அழுத்தங்களை கொடுத்ததன் விளைவாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவித மாற்றங்களுமின்றி வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் விரும்பினால் இணைந்து செயற்படலாம் என்ற ஒரு சரத்து இருக்கின்றது. அதை நீக்குவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கின்றது.  
 

கிழக்கு மாகாணம் இன்று ஒரு தனி மாகாணமாக திருகோணமலையை தலைநகராக் கொண்டு ஆட்சி நடத்துகின்றது. கிழக்கு மாகாணத்தில் அறுபது வருடங்களுக்கு முன்பு அறுபத்தைந்து வீதமான தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று மூன்றில் ஒரு வீதம் தமிழ் மக்களும், மூன்றில் ஒரு வீதம் சிங்கள மக்களும், மூன்றில் ஒரு வீதம் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றார்கள். இன்னும் சில வருடங்களில் முஸ்லிம் மக்களின் சதவீதம் ஐம்பதை தாண்டும். தமிழ் மக்களின் சதவீதம் இருபதிற்கு வீழ்ச்சியடையும். 
 

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டார்கள். வடக்கும்,கிழக்கும் இணைந்திருப்பது அவசியமற்றதென சிலர் கூறலாம். ஆனால், போராட்ட காலத்தில் வடக்கு மக்களுக்கு கிழக்கு மக்களின் உதவி தேவைப்பட்டது. கிழக்கு மக்கள் தான் கூடுதலானளவு போராடினார்கள். வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தால் தான் தமிழ் மக்கள் சகல உரிமைகளையும் பெற்று அடிமைத்தனமின்றி ஒரு தமிழ் முதலமைச்சரின் கீழ் வாழ முடியும். கிழக்கு மாகாண  தமிழர்களின் வீதத்தைப் பார்க்கின்ற போது எதிர்காலத்தில் தமிழ் முதலமைச்சர் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை. எனவே தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்து சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்றார்.

 

 

தினக்குரல்

 

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு கிழக்கு இணைவது பற்றி கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எப்பொழுதும் கருத்து தெரிவிப்பதில்லை.
 
கிழக்கில் கூட்டமைப்புடன் முஸ்லிம் கட்சிகள் இணைய வேண்டும் என சில முற்போக்கு சக்திகள் குரல் கொடுத்து இருந்தார்கள்.இவர்களுக்கு கூட்டமைப்பு தமது நேசக்கரத்தை நீட்ட வேண்டும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வடக்கு கிழக்கு இணைவது பற்றி கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எப்பொழுதும் கருத்து தெரிவிப்பதில்லை.
 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் அதன் கூட்டுக் கட்சிகளும்

இப்படியான நிலையில் இருக்க ஒரு மாகாண  சபையின் உறுப்பினர் உணர்வு பூர்வமாக

வடக்குக் கிழக்கை இணைப்பது பற்றிக் கருத்துத் தெரிவித்தது வரவேற்கப்பட வேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கை இணைப்பற்கு முன்னர்...
முதலில், அங்கு குடியேறிய.... முஸ்லீம்களை மேற்குக்கும், தெற்குக்கும் அனுப்ப வேண்டும்.

வடக்கு, கிழக்கை இணைப்பற்கு முன்னர்...

முதலில், அங்கு குடியேறிய.... முஸ்லீம்களை மேற்குக்கும், தெற்குக்கும் அனுப்ப வேண்டும்.

 
(y)

JVP யின் கோட்டு வழக்குக்கு கிடைத்த தீர்ப்பு ஒரு வகை செய்முறை விபரம் சார் வெற்றியே.  தேர்தல் நடத்தி இணைப்பை அரசு ஊர்ஜிதம் தெய்திருக்க வேண்டியம் காலம் கடந்துவிட்டதாகதான் தீர்ப்பு கொடுத்திருந்தது கோடு. சம்பந்தர் பின்னாளில் வடக்கையும் கிழக்கையும் மீள இணைத்து வைத்து கால அவதியாக முன்னர் தேர்தலை நடத்த சொல்லிக் ஜனாதிபதியைக் கேட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி அதை செய்யாமல் முள்ளிவாய்க்கலை நடத்தி முடித்திருந்தார்.

 

சம்பந்தர், JR செய்தது போல, ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பாவித்து, வடக்கு கிழக்கை இணைக்கும் படி கேட்டார் என்பதால் தான் மகிந்தா தனது அந்த அதிகாரத்தை மந்திரி சபையிடம் கூறி விலக்குவிக்க் முயன்றுகொண்டிருக்கிறார்.

 

இதில் என்னுமொரு சிக்கல் இருக்கிறது. 13ம் திருத்தம் தமிழ் மக்களின் இருப்பை நிச்ச்சயம் செய்யத்தக்க மாதிரி திருத்தப்பட்டால், ஊவாமாகாண, மத்திய மாகாண, சபிரக மூவா மாகாண பகுதிகளையும் வடக்கு கிழக்குடன் இணைப்பதால் மலையக பிரச்சனையையும் தீர்க்க முடியும். இது மலையக மக்களுக்கு இன்று இருக்கும் ஒரு தத்துவார்த்த தீர்ப்பு. இதை நிகழ வைக்க, தமிழருடன் வடக்கு கிழக்கில் இணைய விருப்பம் இல்லாமல் இருக்கும் முஸ்ளிம் களின், சிங்கள மக்களின் பகுதிகளை விட்டுக்கொடுத்து மலைய தமிழ் பகுதிகளை கேட்டுப் பெறலாம். அதற்கு:

1). 13ம் திருத்தம் திருத்தப்பட்டு, நடைமுறை சரத்துகள் சேர்க்கப்படவேண்டும்.

2). மலையகத்தில் அதிகாரத்தை கையில் எடுக்கத்தக்க கட்சி தோன்ற வேண்டும். களுத்தை அறுக்கும் தொண்டமான் போக வேண்டும். 

3). சிங்கள அரசு பேச்சு வார்த்தைகளில் உண்மையாக நடக்கத்தொடங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

3). சிங்கள அரசு பேச்சு வார்த்தைகளில் உண்மையாக நடக்கத்தொடங்க வேண்டும்.

 

இன்னும்... பத்தாயிரம் வருடம் போனாலும், சிங்களவன் திருந்த மாட்டான்.

இந்தியன் திருந்தினால்... சிங்களவனில், மாற்றம் ஏற்பட சந்தர்ப்பம் உண்டு, என்றாலும்.... சீனன் விடான், சீனன் விட்டாலும்.... முஸ்லீம் விடாது. சுவிங்கம் மாதிரி.. ஒட்டிக் கழுத்தறுக்கும்.

 

ஒட்டுக் குழுக்கள், தமிழருக்கு தந்த பரிசு இது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.