Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தையில் இளம் பெண்ணின் மண்டையோடு - எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

Featured Replies

பாலியல் வலுறவுக்கு பின்னான கொலையா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

earing_CI.jpg

 

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு  வாதரவத்தைப் பகுதியில் பெண் ஒருவருடையதென நம்பப்படும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதி எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட மனித மண்டையோடு மற்றும் எலும்புக்கூட்டு எச்சங்களிலிருந்து அது இளம் வயது யுவதி ஒருவருடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. அவர் இறுதியாக அணிந்திருந்த பாதணி தோடு மற்றும் அணிந்திருந்த ஆடைகளது பகுதிகள் பரவலாக அப்பகுதிகளிலெங்கும் பரவி கிடந்த நிலையினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி சுமார் ஒரு மாத காலப்பகுதியினுள் படுகொலை செய்து வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த வண்டில் பாதையோரமாகவுள்ள பற்றைப்பகுதியிலிருந்தே மனித எலும்புக் கூட்டுத்தொகுதி எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. பாதணிகளில் ஒட்டிக்காணப்படும் செம்மண் தடயங்கள் குறித்த யுவதி வேறு எங்கேனுமிருந்து அழைத்து வரப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. அத்துடன் ஆடைகள் சிதறியிருந்தமை பாலியல் வல்லுறவின் பின்னரே படுகொலை இடம்பெற்றிருக்கலாமென்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

குறித்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதி எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியிலேயே 2006ம் ஆண்டு காலப்பகுதியில் வீதியால் பயணித்த ஜந்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டுமிருந்தனர். 

அப்படுகொலையை அரங்கேற்றியதாக கூறப்படும் படைமுகாம் மேஜர் தர அதிகாரி சகிதம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மாதகல் பகுதியினில் மலகூட குழியிலிருந்து இரண்டு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் தலையெழுத்து.

 

இத்தனை மனித உரிமை மீறல்களையும் செய்த செய்கின்ற சிங்களப் படைகளையும் அரசையும் புகழ்ந்து திரியும் எம் அரசியல்வாதிகள் தான் இவற்றின் நீட்சிக்கு முக்கிய காரணம்.

 

இவர்களை எல்லாம் ஏன் போட வேண்டி வந்தது என்பது இப்போ இன்னும் வெளிச்சமாகியுள்ளது..! இப்படி அப்பாவிகளை பலியெடுக்க எதிரிக்கு உதவியதால் ஆகும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு படுகொலைகள், பலாத்காரங்கள் என்பனவற்றை கொழும்பில் குந்தி இருக்கும் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தூதுவரலாயங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.பாராளுமன்ற விவாதத்தில் தேனீரையும், வடையையும் சாப்பிட்டு விட்டு வராமல் எப்படி உங்களோடு சமாதானமாக இருக்க முடியும் என சிங்கள அரசை பார்த்து கேட்க வேண்டும்.ரவிராஜ் போன்றவர்கள் இருந்திருந்தால்  மக்கள் எதற்கு பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அதனை செவ்வனே செய்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் தவறு உள்ளது.இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் முன்பு ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கும் மூன்று  மைல் வித்தியாசம் இடையில் ஒரு ஊரே இருக்கிறது.இதில் இராணுவத்தின் பின்னணி இருக்கலாம்.ஆனால் இந்த இடம் குடிமனை அற்ற பனங்கூடல்.இது தற்போது காதலர்கள் காமத்தை அரங்கேற்றும் இடமாக உள்ளது.ராணுவ முகாமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.