Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை

Featured Replies


இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து  கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அத்துடன் மாகாணசபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுபவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார்.

அவ்வாறான முறையே எதிர்வரும் தேர்தலும் இடம்பெறவுள்ளது. மேலும் யுத்தத்தின்போது காணாமற்போனோர் தொடர்பில் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழு எவரது தலையீடும் இன்றி சுதந்திரமாக செயற்படும்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்தவும் தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://goldtamil.com/?p=3421

வடமகாணத்தில் காணி, நீதி அதிகாரங்கள் அதிக பலனை கொடுக்காது. ஆனால் மேல் மாகாணம், மத்திய மாகாணம் போன்ற மாகணங்களில் அதை அடக்கு முறை அரசுக்கெதிராக நன்றாக பாவிக்க முடியும். எல்லாத் திருடர் கூட்டமும் மேல் மகாணம் வந்தே ஆக வேண்டும் என்பதும், நல்ல வழக்கறிஞர்கள் இருக்கும் மாகாணம் அது என்பதாலும் வருங்காலத்தில் அரசர் கூட்டத்தை கையாள பயன் படுத்தப்படும் மாகாணமாக அது அமையும். வடக்கோ அல்லது கிழக்கு அந்த நிலையை அடைய கன காலம் தேவைப்படும்.

Edited by மல்லையூரான்

ஹிந்திய அரசியல் கில்லாடிகளின் மூடத்தனத்துக்கு இந்த நிலை நல்ல உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய அரசியல் கில்லாடிகளின் மூடத்தனத்துக்கு இந்த நிலை நல்ல உதாரணம்.

 

ஸ்ரீலங்கா அரசிடம், இந்தியா... அரசியலில், நிறைய "ரியூசன்" எடுக்க வேண்டும். :D

கோழிக் குஞ்சுதான் முட்டையை உதைத்து வெளியே வர வேண்டும். ஆனால் சிங்களவர் மாறாக தமிழரை அழிப்பத்தாக நினைத்து அந்தப் பக்கத்து வாசலுக்கும் கல்லை வைத்து மூடி தம்மைத்தான் சிறையில் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்தான் இனி தமக்கு விடிவு தேட வேண்டும்.

 

இரண்டு முறை சுதந்திரம் இனாமாக வந்தது. இனி மூன்றாவது தடவை வர வேண்டும். இந்தியா வெற்றிகரமாக மாகாண சபைகளை இலங்கையில் கொண்டு வந்தால் சிங்களவருக்கு 1948 தொடக்கம் அது மூன்றாவது சுதந்திரம்.  முதலில் வெள்ளைகளிடமிருந்து, 1989ல் இந்தியாவிடமிருந்து, இனி மகிந்தாவிடமிருந்து. 

 

ரணில் முட்டாள், மகாண சபையை எதிர்க்கிறார். இன்றைய நிலையில் அதை இந்தியாவிடம் அவர் கேட்டுப் பெற வேண்டும். இப்படி ஒரு சர்வாதிகாரம் நாட்டை இறுக்கி கழுத்து நெரிக்கும் போது, அதிகாரமுள்ள மாகாண சபைகள் இருந்திருந்தால் சிங்கள மக்கள் சுவாசிக்க நிறைய இடம் இருந்திருக்கும். மோடைய ரணில் இலங்கையில் ஒரு கோட்டில் ஒரு நீதி பெறமுடியாமல் மாட்டியிருக்கிறார். இதைத்தான் சந்திரிக்கவும் உணரவேண்டும். மாகாண சபை தமிழ் மக்களுக்கு 10% உபயோகமானதாக இருந்தால் அது சிங்கள மக்களுக்கு 110% உபயோகமானதாக இருக்கும். எமக்கு ஐ.நா எதாவது செய்து தந்தால் உண்டு. ஆனால் சிங்கள மோடையக்களுக்கு மாகாணசபை இன்றைய இக்கட்டில் நல்லதொரு இடவசதியாக இருந்திருக்கும். மோடைய அரசியலில் பண்பு அது.  தமிழரை பார்க்க வெறுத்த்தால் தங்கள் கண்களை குத்தி தங்களைத் தாங்கள் குருடாக்கியிருக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.