Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க் களமும் ஒட்டுக் குழு அரசியற் பிரசாரகர்களும்

Featured Replies

வணக்கம் கள உறவுகளுக்கு,

களத்திலே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,யாழ்க்களத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றியும் சிறிது பார்க்கலாம்.

முதலில இந்த ஒட்டுக் குழுக்கள் எண்டால் என்ன?இவற்றை ஏன் இப்படி அழைக்கிறோம்?இது பற்றி விலாவாரியான கட்டுரைகளை நான் அரசியற் களத்தில் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இருந்து இணைத்துள்ளேன், நேரம் உள்ளவர்கள் எமது தேசிய விடுதலை அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் சென்று படியுங்கள். நீங்கள் அரசியற் தெளிவு பெற வேண்டும் என்றால் இவற்றை அர்த்தம் விளங்கிப் படிக்க வேண்டும்.ஒரு முறை விளங்கா விட்டால் மீண்டும் ஆறுதலாப் படியுங்கள்.

நமக்கு ஏன் தேசிய விடுதலை வேண்டும் என்று இங்கு நான் எழுதத் தேவயில்லை என்று நினைக்கிறேன்.அதை உங்கள் சொந்த அனுபவங்களினூடாகவே நீங்கள் உணர்ந்திருபீர்கள். ஆனால் இன்று இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றி வெகு விளக்கமாக எழுத வேண்டிய நிலை உள்ளது.காரணம் யாழ்க் களத்தில் அண்மையில் இந்த ஒட்டுக் குழு அரசியல் வெகு சூட்சுமமாக கருத்துச் சுதந்திரம் பொழுது போக்கு என்ற ரீதியில் விதைக்கப்பட்டு வருகிறது.இன்று புலத்தில் இந்த ஒட்டுக் குழு அரசியலை நிர்வன ரீதியாக வெளிப்படையாக நடத்திக்கொண்டிருக்கும் டிபிசி உடன் தொடர்புள்ளவர்கள், சூட்ச்சுமமாக இந்த அரசியலை காவி வரும் பிபிசி தமிழோசையின் காவடிகள் இங்கே இந்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்கள்.

இந்த ஒட்டுக்குழு அரசியலின் அடிப்படைத் தந்திரோபாயம் என்ன?

இன்று நேரடியாகப் புலிகளோடு மோத முடியாமல் எம்மக்கள் மேல் சிறிலங்கா அரசு கடவுழ்த்துள்ள வன்முறைகளைக் காட்டி இவர்கள் என்ன சொல்கிறார்கள்.பாருங்கள் மக்கள் அழிகிறார்கள்,பாருங்கள் சொத்துக்கள் அழிகின்றன,என்ன செய்கிறார்கள் உங்கள் பாதுகாவலர்கள்? என்ன செய்கிறது உங்கள் தலமை? என்று வினாவுகிறார்கள்.இந்தக் கேள்விகளைக் கேட்பவர்கள் அடிப்படையில் எதனை மறுதலிகிறார்கள். இந்த வன்முறையை கட்டவுள்துள்ளது சிறிலங்கா அராசாங்கப் படைகள் என்பதை முதலில் மறுதலிகிறார்கள்.தமிழ் ஈழ தேசம் என்பது எங்களுடைய தேசம் என்பதை மறுதலிகிறார்கள்.அங்கே நிலை கொண்டுள்ள சிறிலங்காப்படைகள் ஆகிரமிப்பாளர்கள் என்பதை மறுதலிக்கிறாகள்.இந்த ஆகிரமிப்பளர்களை வெளியேற்றத் தான் எமது வன் முறையான போராட்டம் நடை பெறுகிறது என்பதை மறு தலிகிறார்கள்.எமது போராட்டாத்தால் தான் அவர்களை வெளியேற்றி எமது மக்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான வாழ்வை வழங்கலாம் என்பதை மறுதலிகிறார்கள்.அப்படியாயின

  • கருத்துக்கள உறவுகள்

83 இனக்கலவரத்திற்கு முன்னர், தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படவில்லை (தென்பகுதியில் இருந்தவர்கள்தான், காடையார்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்). தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழுவோம், சிங்களவருடன் அடிபடாமல், ஒற்றூமையாக வாழுவோம் என்று ஏன் அப்போது நினைக்கவில்லை?

புலத்தில் பலகாலம் இருந்து, இங்குள்ள சுதந்திரத்தையும், மனிதரை மனிதராக மதிக்கும் பண்புகளையும் அனுபவிப்பவர்கள், கொழும்பிலும், பிற இடங்களிலும் தமிழர்கள் நன்றாக நடாத்தப்படுகின்றார்கள் என்று கற்பனை கொள்ளுகின்றார்கள்.

தமிழர்கள் எவ்வாறு இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவார்கள் என்று அறியவேண்டுமானால், புலத்திலுள்ள தூதரகங்களுக்குச் சென்று பாருங்கள் (ஒருவேளை ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ நீங்கள் சரளமாக உரையாடினால் நன்றாகக் கவனிக்கப்படலாம், ஆனால் நீங்கள் அக்க்கணமே தமிழராக இல்லை என்பதையும் கவனத்த்ல் கொள்ளவேண்டும்)

சிங்கள அரசுக்குத் துணைபோய், தமிழரின் போராட்டத்தை மழுங்கடிக்க நினைப்பவர்கள்/உதவுபவர்கள் எதோ ஒருவகையில் சிங்கள அரசிடமிருந்து அனுகூலங்களைப் பெறுகின்றார்கள்/பெற முயற்சி செய்கின்றார்கள்..

நாரதர் அங்கிள் நல்ல ஆழமான கட்டுரை

நீங்க சொல்லுற மாதிரி எங்களடன் ஒருவராக இருந்தே எமது போராட்டத்துக்கு துரோகம் செய்பவர்களை இனம் காண்பது சிரமம் தான் ஆனால் காலப்போக்கில் அவர்களது நடவடிக்கைகள் அவர்களை இனம்காட்ட உதவலாம்

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உண்மைதான்....!

ஆனால் வரலாறு எண்று ஒண்டு இருக்கு அது எங்களுக்கு தெரிந்த இந்தியாவிலேயே அதுவும் தமிழகத்திலேயே பார்த்தால் சொந்த மக்களையே கொண்றதுதானே.... அதைத்தானே நாங்கள் புதியபரணி எண்று கவிகளாக பாடுகின்றோம்...!

உண்மைதான்....!

ஆனால் வரலாறு எண்று ஒண்டு இருக்கு அது எங்களுக்கு தெரிந்த இந்தியாவிலேயே அதுவும் தமிழகத்திலேயே பார்த்தால் சொந்த மக்களையே கொண்றதுதானே.... அதைத்தானே நாங்கள் புதியபரணி எண்று கவிகளாக பாடுகின்றோம்...!

தல!

உங்களுக்குத் தெரியாதது இல்லை...

உலக வரலாறு இரண்டாம் உலகப்போருக்கு முன், போருக்கு பின் என்று இரண்டாக இருக்கிறது.... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான வரலாறு மனிதகுலத்தை நேயமுடன் பார்க்கிறது.... மனித இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகத் தானே உலக அளவிலான அரசியல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது....

அதை சில நாடுகள் உணராமல் அல்லது உணர்ந்தே தவறு செய்கிறது.... முன்பு அமெரிக்கா.... இலங்கை.... இப்போது புதியதாக இஸ்ரேல்....

தல!

உங்களுக்குத் தெரியாதது இல்லை...

உலக வரலாறு இரண்டாம் உலகப்போருக்கு முன், போருக்கு பின் என்று இரண்டாக இருக்கிறது.... இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான வரலாறு மனிதகுலத்தை நேயமுடன் பார்க்கிறது.... மனித இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதற்காகத் தானே உலக அளவிலான அரசியல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது....

அதை சில நாடுகள் உணராமல் அல்லது உணர்ந்தே தவறு செய்கிறது.... முன்பு அமெரிக்கா.... இலங்கை.... இப்போது புதியதாக இஸ்ரேல்....

நான் அதை சும்மா வேடிக்கைக்காகத்தான் சொன்னனான்....

வல்லரசுகள் தங்களுக்கு ஒரு நியாத்தை வைத்திருந்து மற்ரவருக்கு ஒரு நியாயம் வைத்திருப்பதும் அந்த இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் இருந்துதான்... அதுவும் அமெரிக்க முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு பிறகு...

இதை வேற இடத்தில விவாதிப்பம்.... மட்டூஸ் வரமுன்னம் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்.... :wink:

ஒருவர் என்னடான்னா.......

50 தமிழ் மக்கள் பலி என்று செய்தி வந்தால்...............

அது வந்து - வயலுக்கு நீர் பாய்ச்சி... வாய்க்கால் உடைஞ்சு ...........கட்டி வைச்சு .............வலுக்கட்டாயமா..

அட ஒண்ணுமே ஒழுங்கா வரல்ல அவசரத்துக்கு................

என்னமோ எடுத்து விடுவன். எதையாவது பொறுக்கிங்க ..என்பார்!

அடுத்தவர் என்னடானா............

எனக்கும் தமிழ் நல்லா தெரியும் என்னு காட்ட...

ஆரம்பிப்பார்..........

மக்கள் தெளிவு பெற....

தேசியத்தை மட்டும் நம்பி பயன் இல்ல- என்னோட கருத்தை - வெரி இம்போற்றன்டா - எடுத்துக்கொண்டாதான் .......

நீங்க கிணத்தை விட்டு குளத்துக்க வரலாம் ..............

அப்பிடீன்பார்.......

அது ஒண்ணுமில்ல .................

ஆனந்தசங்கரி ஸ்டைல்!

எப்பவோ நான் இங்க இணைன்சன் - இவங்க எனக்கு - புத்தி சொல்லவான்னு.......ஈகோ!!

எப்பவோ வாசிச்ச நியாபகம் - 'நான் நினைச்சிருந்தா - மோகன் அண்ணாகிட்ட கேட்டு எப்பவோ மட்டுறுத்தினராகி இருப்பன்''

கடைசில பார்த்தா- சிந்தனையும் போச்சு-

வாணவேடிக்கையும் போச்சு-

இழுத்து வெளியில விட்டுட்டாங்க இல்ல....................

இவ்ளோகால - கருத்தாடல் அனுபவம்.

பூச்சியத்தில ..போய் முடின்சிருக்கு!!

இனியாவது -ஏதாச்சும் வெட்கம் - வருமா?

இன்னமும் பணிவுதான் - .

நீங்க குட்டுவாங்கினதில - ஒரு பெரிய துள்ளி குதிப்பும் இல்ல......

நாங்க - சார்ந்த - நியாயம் - வென்றது - என்பதற்காகவும் அல்ல...

செத்துக்கொண்டு இருக்கு எம் இனம் - அதுக்கு முன்னால .

வாண வேடிக்கைகளூக்கு இடமில்ல - என்பதை - கள நிர்வாகM - கருத்தில் எடுத்தால்!!

ஒரு விளக்க கட்டுரையை - எழுதிய - நாரதருக்கு - நன்றி!!

சம்பந்தப்பட்டவையள் களையெடுக்க இன்னும் ஏன் தயங்குகினம். :roll:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உமக்கு ஒரு விடயத்தைச் சொல்ல நினைக்கின்றேன். எதுவுமே அறியாத உம் பெற்றோர்கள், சகோதரங்கள், வெளியாரல் பாதிக்கப்படும்போது மனிதாபிமானம் பற்றி உம்மால் கதைக்கமுடியுமா?

ஏன் இந்தியா மக்கள் பாகிஸ்தான்; குண்டுவீச்சால் சாகும்போது, பதிலுக்கு பாகிஸ்தானியர் சாகும்போது அது குறித்து நீர் கவலைப்படுவீரா?

அது தான் நாமும் சொல்கின்றோம். எம் மக்களின் மரணத்தின் போது நடுநிலமை என்ற கருத்து எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும். வெறுமனே இந்தியாவைப் பற்றி நாம் கதைத்தபோது சாதாரணமாகவே உமக்கு பொறுக்கமுடியவில்லை. அது போலத் தான் இதுவும்!

சிங்கள மக்களின் மரணம் எமக்கு தேவையில்லாதது. ஆனால் தமிழர் சாகும்போது அதை நாம் கணக்கில் ஏன் எடுக்கவேண்டும். இன்று வரைக்கும் தமிழரின் மரணத்துக்காக சிங்களவனில் ஒருவன் கூட கண்ணீரே வடிக்கவில்லை. ஏன் என்றால் அவனின் பிறப்பில் அவன் தூய்மையானவன். எங்களில் சிலர் தான் உந்தக் கபடப்புத்தி!

  • தொடங்கியவர்

வெறுமையாக பரிதாப்படுவது போல் எழுதுவது மனிதாபிமானம் ஆகிவிடாது, வெறுமனே நான் ஒரு மனிதாபிமானி கவலைப் படுகிறேன் என்று சொல்லி விட்டு செல்வதோ எழுதுவதோ செய்தி சொல்வதோ மனிதாபிமானம் இல்லை.அது பச்சோந்தித் தனம்.அதற்காக என்ன செய்தாய் என்பது தான் உண்மையான மனிதாபிமானம்.இவ்வாறான செயல்கள் இனி நடை பெறாமற் செய்வது தான் மனிதாபிமானம், அப்படிச் செய்தவன் தான் உண்மயான மனிதாபிமானி.இந்த மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்தவே எமது மக்கள் பாதுகாப்பாக இருக்கவே நாம் போராடுகிறோம்.அந்தப் போராட்டத்தை மனிதாபிமானம் என்கின்ற பொய்யான காட்சிகளாய் அர்த்தமற்றதாக்க முயல்பவர்களையே மேலே சுட்டிக் காட்டி உள்ளேன்.லக்கி லுக் உங்களுக்கு சில விடயங்கள் புரியாது, ஏனெனில் எமது போராட்டமும் அதன் எதிரிகள் பற்றியும் எங்களுக்கு இருக்கும் புரிதல் உங்களுக்கு இருக்காது, இங்கே மனிதாபிமானம் என்ற வேடத்தோடு ,இந்த மனிதாபிமானமற்ற செயல்கள் தொடர்வதற்கான பிரச்சாரமே நடை பெறுகிறது, அதனைத் தான் நான் சுட்டிக் காட்டி உள்ளேன்.எவ்வாறு இந்த வேடதாரிகள் நாடகமாடுகின்றனர் என்பதைத்தான் எழுதி உள்ளேன்.

உண்மையான மனிதாபிமானி எமது போராட்டத்துடன் என்றும் ஒன்றிணைந்து இருப்பான் அதனைக் காட்டிக் கொடுத்து அதன் அரசியற் பலத்தை நியாயத்தை உடைப் பதற்காக மனிதாபிமானம் என்று வேடம் போட மாட்டான்.

வேடம் இடுபவர்களை நாங்கள் இலகுவில் கண்டு பிடித்து விடுவோம், எமது போராட்டம் அந்த அரசியல் முதிர்ச்சியை எமக்குத் தந்து உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம், மாற்றுத் தலைமை, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற சொற்களுக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார்? காட்டிக் கொடுத்தோர்/கொடுப்போர், கப்பம் பெறுவோர், கொள்ளையர்கள், திருடர்கள். எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்குத்தான். இவர்களில் எவர் மக்கள் நலனை முன்நிறுத்தி போராட்டம் செய்பவர்கள்? புலத்திலாவது மக்களைத் திரட்டி போராட்டம் நடாத்தலாமே, அல்லது விளக்கங்கள் கொடுக்கலாமே. இவர்களால் முடியாது, எங்காவது ஒரு மூலையிலிருந்து இணையத்தில் கட்டுரைகள் எழுதத்தான் முடியும்.

மனிதாபிமானம், மாற்றுத் தலைமை, ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்ற சொற்களுக்குள் ஒளிந்திருப்பவர்கள் யார்? காட்டிக் கொடுத்தோர்/கொடுப்போர், கப்பம் பெறுவோர், கொள்ளையர்கள், திருடர்கள். எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்குத்தான். இவர்களில் எவர் மக்கள் நலனை முன்நிறுத்தி போராட்டம் செய்பவர்கள்? புலத்திலாவது மக்களைத் திரட்டி போராட்டம் நடாத்தலாமே, அல்லது விளக்கங்கள் கொடுக்கலாமே. இவர்களால் முடியாது, எங்காவது ஒரு மூலையிலிருந்து இணையத்தில் கட்டுரைகள் எழுதத்தான் முடியும்.

நேரடியாக மக்கள் முன் ஒரு பொதுவான இடத்தில் அவர்களால் இப்படி மாற்றுக்கருத்து பேசும் துணிவு இருக்குறதா..??

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியாக மக்கள் முன் ஒரு பொதுவான இடத்தில் அவர்களால் இப்படி மாற்றுக்கருத்து  பேசும் துணிவு இருக்குறதா..??

இவர்களுக்குத் துணிவிருந்தால் குறைந்த பட்சம் பைபிள்வாதிகள் போல் வீடு வீடாய் ஏறிப் பிரச்சாரம் செய்யலாமே.. அவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. தேவை தமிழர்களின் பெயரில் காசு பார்க்கும் வழிகள்தான்.

மிகவும் பயனுடைய கட்டுரை.

மனிதாபிமானம் என்பது பேச்சளவில் இல்லாது செயல்களிலும் இருக்கவேண்டும். ஆனால் இன்று பலர் பேசி பேசியே மற்றவர்களின் மனிதாபினமானத்தையும் புரிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

தகவலுக்கு நன்றிகள் நாரதர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஈழம் கிடைத்த பின் எல்லாவற்றிற்கும் பதில் உண்டு

உண்மையான மனிதநேயம் என்பது இருதரப்பிலும் இழக்கப்படும் சாமானிய உயிர்களுக்கு பரிதாபப்படுவதே.... அவ்வாறு பரிதாபப்படுபவர்களை தமிழெதிரி என்று கூறுபவர்கள் மனிதகுலத்துக்கே எதிரிகள்.....

உங்களுக்கு எட்டப்பன். காக்கைவன்னியன் பற்றி தெரியுமா? :roll: :idea: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு மனிதாபிமானம் இருப்பதனால்தான், இன்று வரை சிங்களவன் தன் பகுதியில் இன்னும் நிறைவுடன் வாழ்கிறான். புரிந்தால் சரி!

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வெள்ளைக்காரன்

ஜனநாயகம் பார்த்திருந்தால்

மனிதாபிமானம் பார்த்திருந்தால்

கருத்து சுதந்திரம் பார்த்திருந்தால்

அவனுக்கு இன்று

அவுஸ்திரெலியா இல்லை

அமெரிக்காவும் இல்லை

ஆங்கில மொழி உலகமொழியகவுமில்லை

அன்று அவன் பார்க்கவில்லை

கிடைத்தது வெற்றி

இன்று அவன் சந்ததி பொதிக்கிறது

ஜனநாயகம் ,மனிதாபிமானம்

சுதந்திரக்காற்றை சுவாசித்து

சுதந்திரமாக வாழ என்னும்

கடற் தொழிலாளி கந்தனுக்கும்

விவசாயி விசுவனுக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.