Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் பாராம்பரியத்தின் அடையாளம் பறை -அதனை சொல்லும்போதே உடலில் ஏற்படும் அதிர்வை விவரிக்க முடியாது

Featured Replies

இது ஒரு ஆவணப் பட்ம் - நிட்சயம் பார்வையிடவேண்டியது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94799/language/ta-IN/article.aspx

இணைப்புக்கு நன்றி!

ஒவ்வொரு தமிழரும் பாதுகாக்க வேண்டிய பொக்கிசங்களில் ஒன்று!

 

கோவில்களில் காவடி விழாவின் போது பறைமேளம் அடிக்கும் போது ஏற்படும் உற்சாகம், உத்வேகம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதவை!

 

அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆவணப் படம் கீழே தரப்பட்டுள்ளது.

 

 

         .

 

Edited by Sayani

நான் பார்க்க மாட்டன். எனக்கு பறைச் சத்தம் கேட்டாலே முந்தி சரியான பயம்!

ஈழத்தில் செத்தவீட்டிலும் வைரவர் கோயில்களிலும் பறை அடிப்பார்கள். 

Edited by கா ளா ன்

ஈழத்தில் செத்தவீட்டிலும் வைரவர் கோயில்களிலும் பறை அடிப்பார்கள். 

 

நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்பதை விளங்க  "Folk Drums and Dance/ Tappattam" என்பதில் சொல்லப்படும் கருத்துக்களை கவனியுங்கள்!

 

நான் பார்க்க மாட்டன். எனக்கு பறைச் சத்தம் கேட்டாலே முந்தி சரியான பயம்!

 

பயந்துதான் வட அமெரிக்கா வரை ஓடிவிட்டீர்களோ அக்கா? இப்ப கேட்டுப் பாருங்கள்!II

காவடி, கரக ஆட்டங்களுக்கு பறை தான் சரியான இசை...

தமிழன் இசை வாழ்க 

பறை என்பது "சொல், அறிவி, தெரிவி" என்ற பொருள் கொண்ட பழைய சொல். அதனுள் சாதி ஒன்றும் இல்லை. முரசம் அறிவிப்பது அரசர்களுக்கு இராஜகாரியம். அப்போது இது இசைக்கருவியும்  பறை,சுடலை இரண்டும் சிவனோடு தொடர்புடையவை. பறையில் இன்னொரு வகை,உடுக்கு. இதுவும் சிவனது.  பறைக்கு மாட்டுத்தோல் தேவையானது. உடுக்கு உடும்பு தோலோடு கட்டத்தக்கது. இதனால் அதற்கு சாதி கற்பிற்கப்படவில்லை. 

 

இறப்பின் போது அடிப்பதால் அல்ல அது இழிவானது. பறை கட்டுவதற்கு இறந்த மாடுகளை ஆரம்பம் தொடக்கம் பாவித்தார்கள். தோல்பதனிடும் இடம் சுடலை. இதனால் கட்டுபவர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அடித்தவர்கள் இன்னொரு கூட்டம்.

 

சிந்து வெளியில் இவை களிமண்ணால் செய்யப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆரியப்படை எடுப்பிற்கு பின்னர் அது இசைக்கருவி என்ற தரத்தை இழந்தது.(இசைப்பார் இருக்க வில்லை. மக்கள் நாடோடிகளானார்கள்). இதனால் சிலர் மட்டும் அடித்தார்கள் போலிருக்கு. இதனால் கட்டுவோரே அடித்தார்கள். இவர்கள் சுடலைக்கு ஒதுக்கபட்டதால் பறை, சாதிச் சின்னமானது.

 

http://youtu.be/Vj-ykJ89ga4

 

(இந்த பாடலைப்பற்றி, பறையையும் சிந்து வெளியையும் பற்றி, இன்றைய மர( பிளாஸ்டிக்) பறையின் நாதம் ஆரம்பகால களிமண் இசைக்கே இன்றும் மெருகூட்டி எடுக்கப்படும் இயல்பயையும், பறைக்கும் சிவனுக்கும் இருக்கும் தொடர்பையும்  வைத்து எப்பவோ எழுத ஆரம் பித்த விவரணம் ஒன்று முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டத்து. முடிந்தால் எப்போதாவது இதில் பதிவேன்.)

(இந்த பாடலைப்பற்றி, பறையையும் சிந்து வெளியையும் பற்றி, இன்றைய மர( பிளாஸ்டிக்) பறையின் நாதம் ஆரம்பகால களிமண் இசைக்கே இன்றும் மெருகூட்டி எடுக்கப்படும் இயல்பயையும், பறைக்கும் சிவனுக்கும் இருக்கும் தொடர்பையும்  வைத்து எப்பவோ எழுத ஆரம் பித்த விவரணம் ஒன்று முடியாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டத்து. முடிந்தால் எப்போதாவது இதில் பதிவேன்.)

 

நன்றி மல்லை அண்ணா!

 

நேரம் கிடைக்கும் போது உங்கள் ஆவணத்தை முடித்து இணையுங்கள்!

 

பறை, உடுக்கு,மேளம் எல்லாமே தோல் கருவிகள் தானே ..
பறையை செத்த வீட்டுக்கு அடித்தது தான் பிழை....
ஊருக்கு ஒருவர் இறந்த செய்தியை சொல்லுவதற்காக பறை அடிக்கவெளிகிட்டிருக்கலாம்

 

பின் செத்தவீட்டுக்கு போய் வந்தவன் என்று வெளியில் நிற்க சொல்லி..

அதுவே பின் பறையையும் அடிப்பவனையும், சொந்ததையும் வெளியில் விட்டிருக்கலாம் ....

Edited by naanthaan

நன்றி மல்லை அண்ணா!

 

நேரம் கிடைக்கும் போது உங்கள் ஆவணத்தை முடித்து இணையுங்கள்!

 

ஆவணம் அல்ல. கதை மாதிரி ஒரு விவரண சித்திரம்.

பறை, உடுக்கு,மேளம் எல்லாமே தோல் கருவிகள் தானே ..

பறையை செத்த வீட்டுக்கு அடித்தது தான் பிழை....

ஊருக்கு ஒருவர் இறந்த செய்தியை சொல்லுவதற்காக பறை அடிக்கவெளிகிட்டிருக்கலாம்

 

பின் செத்தவீட்டுக்கு போய் வந்தவன் என்று வெளியில் நிற்க சொல்லி..

அதுவே பின் பறையையும் அடிப்பவனையும், சொந்ததையும் வெளியில் விட்டிருக்கலாம் ....

சிந்து வெளிக்காலத்தில் கலியாண வீடே கொண்டாப்பட்டிருக்காது. பறை மட்டும்தான் கோவில்களில் இருந்திருக்கலாம். அதன் சத்தம், துறவு, Holyness யை பிரதி பலிப்பதல்லாமல் மங்களகரத்தை பிரதி பலிபத்தல்ல.

 

சிந்து வெளிநாட்களில் கலியாணம் சடங்ககாக இருந்ததா என்பது கண்டுபிடிக்கபட்ட வேண்டும். இந்து (தமிழ்) சமயத்தின் அடிப்படை இயல்பு இறப்பு மட்டும்தான் கொண்டாடியிருக்க சந்தர்ப்பம். சமயம் இறப்பை வைத்துத்தான் கட்டி எழுப்பப்பட்டது.  குருமார் சனத்தை துன்புறுத்தாமல் நகரின் ஒதுக்கு புறங்களில் சமயம் வளர்த்தார்கள். (இதனால்த்தான் சிந்து வெளியில் கோவில்கள் மற்றய கட்டிடங்கள் மாதிரி மாடமாளிகைகள் மாதிரி பெரிதாக இல்லை. ஆனால் அது வல்ல பிற்கால நாகரீகம். கோவில்கள் கொண்டாட்டங்களுக்கா பெருத்துவிட்டன. வாழ வேண்டிய வீடுகள் சிறுத்துவிட்டன. 

 

ஆரியர் படை எடுப்பின் பின்னர்தான் கலியாணம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சாதிகள் பிரிக்கப்பட்டது. ஆரிய பெண் உறவு வைக்கமுதல் பெரியவர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் உருவானது. திராவிட பெண்ணுக்கு அந்த கட்டுப்பாடு இருக்கவில்லை. இது பாரத நடந்த காலம் வரைக்கும் இதே சட்ட திட்டம்தான். பாரதத்தில் குந்தி அதையேதான் தொடர்கிறாள். இது ஆரிய இராணி காந்தாரிக்கு மிக பெரிய சிக்கலாக அமைகிறது. அவளின் பக்கம் போயிருக்க வேண்டிய அரசுரிமையை, குந்தி, எல்லொரும் அறிய importantன பாண்டுவுக்கு பிள்ளை பெற்றதாக நடித்து பறித்துவிட்டாள்.  

 

ஆனால் திருதுராஸ்டிரனுக்கு கண் குடுடாக இருந்தும் காந்தாரி அவனை ஏய்க்காமல் ஆரிய முறைப்படி அவனுடன் வாழ்ந்தாள். ஒரு வேளை அவள் மலடியாக இருந்திருக்க சந்தர்ப்பம். அதனால் திருத்துராட்டிரன், தருமன் பிறந்தபின்னர், அரண்மனை பெண்களுடன் உறவு வைத்து 100 பிள்ளைகள் பெற்றான். அவன் குருடன் என்பதால் அதிகம் வெளியே போய் இருக்கமாட்டான். அவனுக்கு புதிய பெண்கள் கிடைத்ததில் திராவிட குந்தியை ஒதுக்க சதி போட்ட மந்திரி பிரதானிகளின் ஆலோசனையும், உதவியும் இருக்கு.   அதே நேரம் திராவிட அரசன் கிருஸ்ணன் 16,000 பெண்களை வைத்திருந்தான். கட்டயமாக இதில் பலர் அரண்மனையில் வேலை செய்த திராவிட மனைவிகள்(குடும்ப பெண்கள்), வேலை செய்தவர்களின் மனைவிகள் எல்லாம் அடங்கும்.  கர்ணபரம்பரை கதையான பாரதம் வியாசர் அதை  எழுத்தில் போட்ட பின்னர்  பின்னர் அதன் உண்மையான அடையாளத்தை இழந்துவிட்டது. இனி கதையை வைத்து ஆராய முடியாது. புதைபொருள் ஆராசியைத்தான் நம்ப வேண்டும்.

 

இதன் பினனர் தான் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்படும் கலியாணச் சடங்கு உருவானது. இந்த ததிங்கினதோம் அட்டகாசங்கள் சிந்து வெளியில் இருந்திருக்க இடமில்லை. இறப்பை இடித்து இடித்து நினைவூட்டி, துறவை மையப்படுத்தி கட்டி எழுப்பட்டிருந்த இந்து(சிவ-தமிழ்) சமயத்தில் கலியாண மந்திரங்கள் இருந்திருக்கவில்லை.  பொதுமக்கள் மததை பின பற்றவில்லை. கொஞ்சம் பழைய நாளைய இலங்கை புத்த மதம் மாதிரி. கிராமப்புறத்து சனத்துக்கு மஞ்சள் புடவை கட்டிய ஆமதுறு ஒரு நூதன காட்சிப் பொருள். அவரை காண்பது அவர் மாதத்தில் எப்போதாவது ஒரு தடவை தண்ட வரும் பொதுதான். 

 

எனவே பறை இசைக்கருவியாக கண்டு பிடிக்கப்பட்டாது. பின்னர் அதன் இசை துறவை முதன்மையாக்கிய சிவ சமயத்தினரால் கோவில்களில் உள்வாங்கப்பட்டது. அரசுகளில் ஆலோசகர்கள், மந்திரிகளாக இருந்த இவர்களேதான் இதை அரச கருமங்களுக்கும் எடுத்து சென்றது. ஆரியம் முன்னேற இது ஒதுக்குப்பட்டதுராதி முறையான சிவப்பிராம்ணர் கோவில்களால் மெல்ல மெல்ல ஒதுக்குப்பட்டு கோவில்களில் ஆரிய பிராமணர் தோற்றம் கண்ட பின்னர்  இவர்கள் கோவில்களால் ஓட்டபட்டார்கள். இன்றும் பழைய வைரவர், ஐனார் கோவில்களில் இது அடிக்கப்படுவதும், அவர்கள் இருவரும் சிவனின் கிளைகளே என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

சிந்து வெளிக்காலத்தில் கலியாண வீடே கொண்டாப்பட்டிருக்காது. பறை மட்டும்தான் கோவில்களில் இருந்திருக்கலாம். அதன் சத்தம், துறவு, Holyness யை பிரதி பலிப்பதல்லாமல் மங்களகரத்தை பிரதி பலிபத்தல்ல.

 

சிந்து வெளிநாட்களில் கலியாணம் சடங்ககாக இருந்ததா என்பது கண்டுபிடிக்கபட்ட வேண்டும். இந்து (தமிழ்) சமயத்தின் அடிப்படை இயல்பு இறப்பு மட்டும்தான் கொண்டாடியிருக்க சந்தர்ப்பம். சமயம் இறப்பை வைத்துத்தான் கட்டி எழுப்பப்பட்டது. 

 

இதனால் தானாக்கும் தமிழ்நாட்டில் சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு போகும் போது பூ எறிந்தும் , நடனம் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கடற்கரையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பறையின் ஒலியுடன் (03:40 முதல்) ஆரம்பமான நிகழ்வுகள்.

 

http://www.youtube.com/watch?v=WcFh8c6-zBM

 

 

மல்லை அண்ணாவின் தகவல்களுக்கு நன்றிகள்.

சென்னை கடற்கரையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பறையின் முழக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வுகள்.

 

http://www.youtube.com/watch?v=pIk4c4y4caQ

 

   .

http://www.youtube.com/watch?v=R0oMABOHDi4

   .

 

 

http://www.youtube.com/watch?v=rflf4iQQWlE

 

 

இந்த video இன் தலைப்பு தான் ஒரு மாதிரி...ஆனால் சாதாரண cinema குத்து dance

Edited by naanthaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.