Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த அரசாங்கம் தயாரில்லை ;கெஹெலிய

Featured Replies

வட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த அரசாங்கம் தயாரில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"சுமார் 30 ஆண்டுகள் நாட்டை பீடித்திருந்த யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இன்று நாட்டில் குண்டு வெடிப்பதில்லை. நாட்டின் நாலாபுரத்திற்கும் செல்ல முடியும். ஆனாலும் சர்வதேச மட்டத்தில் இன்னும்  பிரிவினையை முன்னெடுக்க சில சக்திகள் தீவிரமாக உழைத்துக்கொண்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேரதல்கள் மூலம் நாம் சர்வதேசத்திற்கு எமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

அதனால் வட மாகாண சபை தேர்தல் எமது நாட்டுக்கு மிக முக்கியமானதாகும். சர்வதேசத்தில் எமது நாட்டிக்கு எதிராக செயற்படுபவர்கள் பல கனவுக் கோட்டைகளை கட்டியுள்ளனர். முப்பது வருட கால யுத்ததால் பெற முடியாது போன பிரிவினையை அரசியல் பலத்தின் மூலம் செய்ய அவர்கள் திட்டமிடுகின்றனர்.

எமது மக்கள் உயிர் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை மீண்டும் துண்டுபோடுவதற்க அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது.

வட மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கி முப்பது வருடம் யுத்தம் செய்து ஆயுதத்தால் பெற முடியாது போன பிரிவினையை மீண்டும் அரசியல் வடிவில் கொண்டு வர அரசாங்கம் ஒரு போதும்  இடமளிக்காது.

அதே போன்று ஜனாதிபதியும் அதற்கு ஒரு போதும்; இடமளிக்கமாட்டார். மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் எமக்கு எவ்வித சவாலும் இல்லை. நாங்கள் வெற்றிப் பாதையிலேயே சென்று கொண்டுள்ளோம். எதிர்க்கட்சி என்று ஒன்று இன்றில்லை. பரவலாக மாகாண சபைத் தேர்தல்களில்தான் வாக்குகள் மிகவும் குறைவாக பாவிப்பது. எனவே இம்முறை வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை 65-70 சத வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

http://goldtamil.com/?p=4547

நாட்டை பிரித்து போடுவார்கள் என்று அல்ல இவர்கள் பயப்படுவது. வடக்கில் 200,000 ஆமி நவீன சீன ஆயுதங்களுடன் இருக்கு.  ஆனால் நீதி அதிகாரத்தை வெளியேவிட்டால் அடிச்சட்டியை வழித்து நக்கிக்கொண்டிருக்கும் நஜீப் மஜீத்தினதும், மகிந்தாவின் காலை நக்கும் கக்கீமினதும் அதிகாரம் செல்லும் கிழக்கை தவிர மற்றய எல்ல மாகாணங்களும் அரச குடும்பங்களையும், அமைச்சர்கள் குடும்பங்களை பங்கு போட்டு பிரித்து எடுத்துத்தான் உள்ளே தள்ளிவிடுவார்கள்.  இதஏ நிலைதான் கணி அதிகாரத்திலும் நடக்கும். அரச குடும்பமும், அமைச்சர்களும், சீனாவும், இந்தியாவும் பல காணிகளை திருப்பி கொடுக்க வேண்டிவரும்.

உதை வந்த வங்கதேசத்துக்கு சென்று சொல்லலாம்!

இலங்கையில பௌத்தத்துக்கும், சிங்களத்துக்கும் இடமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.