Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் சகல உரிமைகளிலும் சர்வதேச சட்டங்கள் புறக்கணிப்பு - சரவணபவன் எம்.பி

Featured Replies

ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற ஜனாதிபதியின் கோஷம் உண்மையானால் தமிழரின் நில உரிமை, தொழில் உரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்  தெரிவித்தார்.  

நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற, வடக்கு, கிழக்கில் தற்போது இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:  

30 ஆண்டு கால போர்ச்சூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது வெற்றிவிழாவின் போது ஜனாதிபதி ஒரே தேசம், ஒரே மக்கள் எனப் பிரகடனம் செய்தார். நாமும் உரிமையுடன் கூடிய இந்த நாட்டின் அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் பங்குகொள்ளும் இத்தேசத்தின் மக்களாகவே வாழ ஆசைப்படுகிறோம். இலங்கையின் பாரம்பரிய இனங்களில் ஒன்று என்ற அடிப்படையில் அந்த உரிமையும் அது தொடர்பான கடமையும் எங்களுக்கும் உண்டு.   

ஆனால், தமிழ் மக்களாகிய நாம் ஒரே தேசத்தின் ஒரே மக்களாக நடத்தப்படுகிறோமா என்பதை இச்சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும் நியாயபூர்வமான முறையில் தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்கும்படி விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.   

ஒவ்வொரு மனிதனதும் குடிவாழும் உரிமை என்பது அடிப்படையானது. அவன் தனது சொந்த மண்ணில் தான் பிறந்து  வளர்ந்து ஓடியாடிய மண்ணிலேயே குடிவாழ விரும்புகின்றான். அவனது பாரம்பரிய வரலாறும் அடிப்படை அபிலாஷைகளும் அந்த மண்ணுடனேயே சங்கமமாகிக் கிடக்கின்றன. இதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.  

இலங்கை அரசமைப்பின் 14(ஏ), உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 13(1), சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகள் வரையறையின் 12(1), இடப்பெயர்வின் சர்வதேச வழிகாட்டி விதிகள் என்பன நடமாடும் சுதந்திரத்தையும், விரும்பும் இடத்தில் குடியேறும் உரிமையையும் மிகத் தெளிவாகவே வலியுறுத்தியுள்ளன.   

அதேவேளை, மீளக் குடியமர விரும்புபவர்களை அவர்களின் பூரண சம்மதத்துடன் சகல வசதிகளுடனும் குடியேற்றுவது அரசின் கடமை. இதனை அவ்விதிகள் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால், இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்தச் சர்வதேச நியமங்கள் புறமொதுக்கப்படுகின்றன என்பதை நான் இச்சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.   

இலங்கை அரசு 2012 ஓகஸ்ட் மாதத்துடன் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் நிறைவு செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தது. ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் சபையிலும் மீள்குடியேற்றம் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், இன்றுவரை யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கிலும், திருமலை மாவட்டத்தில் சம்பூர், குருமலையூற்று ஆகிய பகுதிகளிலும், மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம், சிலாவத்துறை ஆகிய பகுதிகளிலும், முல்லைத்தீவில் கேப்பாபிலவு,  கோம்பாவில் ஆகிய பகுதிகளிலும் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை.  

வலி.வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 6,381 ஏக்கர் காணிகள் அரசால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமானநிலைய விஸ்தரிப்பு, படைமுகாம்கள் போன்றவற்றின் தேவைகளுக்காகவே இக்காணிகள் சுவீகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 30 ஆயிரம் பேர் மீள்குடியமர முடியாமல் அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் பெரும் அவலங்களைத் தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்பிரதேசம் வடபகுதியின் உணவுத் தேவையின் பெரும்பகுதியைப் பூர்த்திசெய்த வளமான  செம்மண்ணைக்கொண்ட ஒரு பிரதேசமாகும். இங்கு மிளகாய், வெங்காயம், புகையிலை, வெற்றிலை, முந்திரிகை எனப் பல்வேறு பயிர்களும் பெருமளவில் விளைவிக்கப்பட்டன.   

இவ்வாறே இந்தப் பிரதேசத்தின் மயிலிட்டி, இலங்கையின் முக்கிய மீன்பிடி மையங்களில் ஒன்றாகும். போருக்கு முன்னைய காலங்களில் கொழும்பு புறக்கோட்டை மீன் சந்தைக்கு ஒவ்வொரு இரவும் பலநூறு மீன் லொறிகள் மயிலிட்டியிலிருந்து பறக்கும். மயிலிட்டி மீன் வந்தால்தான் புறக்கோட்டைச் சந்தை விழிக்கும் எனக் கூறும் அளவுக்கு பெருமளவு நல்ல  மீன்களை மயிலிட்டி அனுப்பிவைக்கும்.

மீன், உப உணவுப் பொருள்கள் என உள்ளூர் உற்பத்திகளின் ஒரு முக்கிய மையமாக விளங்கிய வலிகாமம் வடக்கு, இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தில் ஒரு காத்திரமான பங்கை வகித்தது.  ஆனால், இன்று இந்தப் பிரதேசம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்தப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கால்வைக்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த நில சுவீகரிப்பின் காரணமாக உள்ள உற்பத்திப் பொருளாதாரத்தில் நலிவு ஏற்படும். அதேவேளை, அந்த மக்கள் தங்கள் தொழில்களை இழந்து வாழ்வாதாரத்துக்கு வழியின்றி அல்லற்படுகின்றனர். இவ்வாறே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தில் அங்கு பரம்பரையாகக் குடியிருந்த 4,000 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளில் குடியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்களை நல்ல குடி தண்ணீர் கூடப் பெறமுடியாத வேறு இடங்களில் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குரிய நிவாரணங்கள் கூட இரக்கமற்ற முறையில் நிறுத்தப்பட்டன. கேப்பாபிலவு விவசாயம், மீன்பிடி என்பவற்றைத் தொழிலாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகிய தேவைகளுக்காகவே தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், இத்தகைய ஆக்கிரமிப்புகளின் மூலம் உள்ளூர் உற்பத்தியில் பெரும் நலிவு ஏற்படுகின்றது. இது பொருளாதார வளர்ச்சிக்கு விரோதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உறுப் பினர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.    கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரச புள்ளிவிவரம் ஒன்றில், முழு நாடும் 8 சதவீதம் பொருளாதார அபிவிருத்தி அடையும்போது வடக்கு, கிழக்கு 23 சதவீதம் அபிவிருத்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.   

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மீள் உருவாக்கம் செய்யப்படும் போது அபிவிருத்தி வீதம் அதிகமாகக் காட்டும் என்பதை இங்கு நாம் அவதானிக்கவேண்டும். லீசிங் மூலமாக வாகன விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், தொழில் வீழ்ச்சி காரணமாக அவற்றைப் பறிகொடுக்கும் நிலை ஏற்படுகிறது. வெளியூர் வர்த்தகர்களின் ஆதிக்கம் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள் வங்கிக் கடன்கள் கட்டமுடியாமல் தொழில்களையே இழுத்து மூடும் நிலை உருவாகிறது.   

எனவே, வடக்கு, கிழக்கு மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியேற அனும திக்க மறுப்பது மனித உரிமை மீறல் என்ற மட்டத்துடன் நின்றுவிடவில்லை. ஒட்டுமொத்த தேசிய உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை இந்தச் சபை புரிந்துகொள்ளவேண்டும்.   ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற கோஷம் உண்மையானால், எமது நில உரிமை, தொழில் உரிமை என்பன அங்கீகரிக்கப்படவேண்டும். அப்படியான ஒரே நிலையில் மட்டுமே இந்தத் தேசத்தின் அபிவிருத்தியில் தமிழ் மக்களும் பங்காளிகளாக ஆக முடியும் என்று தெரித்தார்.

http://www.sankathi24.com/news/32229/64//d,fullart.aspx

இதை நீக்க தமிழரின் பிரதிநிதியாக இருக்கும் நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்?

ஒரு ஆங்கிலப் பத்திரிகையை யாழில் தொடங்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீக்க தமிழரின் பிரதிநிதியாக இருக்கும் நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்?

ஒரு ஆங்கிலப் பத்திரிகையை யாழில் தொடங்கலாமே!

 

யாழ் களத்திலா? யாழ்ப்பாணத்திலா?

யாழ் களத்திலா? யாழ்ப்பாணத்திலா?

 

யாழ்ப்பாணத்தில் தான் தொடங்க வேண்டும்!!!

யாழ்களத்தில் தொடங்கினால் அதில் தமிழருக்கு பலன் இருக்காது! சிங்கள, இந்திய அரசுகளின் உண்மை சொரூபங்களை அப்படியே வெளிக்கொண்டு வரமுடியாது. சிங்கள அரசின் தணிக்கைகளை விட மோசமான தணிக்கைகள் இருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.