Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாகும் குறும்படம் “துலைக்கோ போறியள்“

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

thulaikko-poriyal-poster.jpg

ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைக்கப்பட்டவை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.

இத்தலைப்பானது வடக்கில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். 

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.

இக்குறும்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை வலைப்பதிவரும் எழுத்தாளருமான ம.தி.சுதா எழுதி இயக்க முக்கிய பாத்திரங்களாக ஜெயதீபன், ஏரம்பு, செல்வம், செல்லா மற்றும் சுதேசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை செல்லா மேற்கொள்ள படத் தொகுப்பை கே.செல்வமும் இசையை அற்புதனும் வழங்கியிருக்கிறார்கள். குறும்படத் தயாரிப்பை ரஜிகரன் மேற்கொள்ள படத்திற்கான பட வடிவமைப்புக்களை மதுரன் அமைத்திருக்கிறார்.

படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இம் மாதம் நடுப்பகுதியில் இக்குறும்படம் வெளியிடப்பட இருக்கிறது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=6476

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை சில அப்புமார் பாரத்தோடை நடந்து வார நேரம்
எங்களிட்டைப் பாரத்தை இறக்கி வைக்க யோசிச்சுத் தம்பிமார் துலைக்கோ போறியள் என்பினம்.
எங்களுக்கு விஷயம் விளங்கிவிடும்  இல்லை அப்பு கிட்டத்தான் என்று விட்டுப்  பறந்து விடுவம்
:D

 

இணைப்புகளுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி

 

இது போன்ற  தாயக  படைப்புக்களை

புலம் பெயர் தேசங்களில்  நடைபெறும் குறும்படப்போட்டிகளில்  பங்குபற்றவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்

அதனால் 

இருபக்க திறமைகள்  வளர்வதுடன்  தாயக  கலைஞர்களும் பேரும் புகழும்  பண  பரிசில்களையும் பெறமுடியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இது போன்ற  தாயக  படைப்புக்களை
புலம் பெயர் தேசங்களில்  நடைபெறும் குறும்படப்போட்டிகளில்  
பங்குபற்றவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்
 
*இதில் நடிக்கும் வயதான ஒருவரை ஏற்க்கனவே ஒருசில
குறும்படத்தில் பார்த்த ஞாபகம் உள்ளது ........

இவர்களின் படைப்பு எப்படியானது  என்று பொறுத்திருந்து பார்ப்பம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.