Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தா இல்லையேல் போரில் வெற்றியில்லை – சிறிலங்கா அதிபரின் செயலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotas-War-book.jpg

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இல்லாதிருந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போர் இருந்திருக்காது, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இல்லாதிருந்தால், வெற்றி சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க. 

கொழும்பில் நேற்றுமாலை இடம்பெற்ற சி.ஏ. சந்திரபிறேம எழுதிய, 'கோத்தாவின் போர்' என்ற ஆங்கில நூலின், சிங்கள மொழிபெயர்ப்பான 'கோத்தாபயகே யுத்தய' என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

சிறிலங்கா அதிபரின் தலைமையின் கீழும், கோத்தாபய ராஜபக்சவின் முயற்சியினாலும் தான் வெற்றி கிடைத்தது. 

கடந்தகாலத் தலைமைகள் பலவீனப்பட்டு, தோல்வியை சந்தித்த நிலையில் தான், சிறந்த தலைமைத்துவம் மூலம் கோத்தாபய ராஜபக்ச இதனை சாதித்துள்ளார் என்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1990களில் பல்வேறு நாடுகள் மற்றும் வெளிப்புற சக்திகளின் தலையீடுகளால், போரின் போது ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்தும் இந்த நூல் விபரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வில், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச, படைத்தளபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

எனினும் சிறிலங்கா அதிபரோ, அமைச்சர் பசில் ராஜபக்சவோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Gotas-War1.jpg

Gotas-War2.jpg

 

http://www.puthinappalakai.com/view.php?20130820108903

  • Replies 97
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். அது உணர்ந்து தான் போட முயலப்பட்டதாக இருக்கலாம். அன்றைக்கு ஒரு கொப்பக்கடுவா அழிந்ததால், வெல்லப்பட்டது. இதில் கோத்தபாயா தப்பியதால் அழிந்தோம்...

போர்க் குற்றங்களில் கோத்தபாயவை மாட்டிவிட்டு மகிந்தவை தப்பவைக்கும் முயற்சி.

சீனாவிடம் இழந்த கொழும்பு துறைமுகத்தை மீளப்பெற்றால் அது பசிலுக்கோ, கோத்தாவுக்கோ, மகிந்தாவிற்கோ புகழ்.

 

கோட்டையில் வாசலில் வந்த லோறன்சோடி அல்மெயடாவிடம் கையெழுத்துப்போட்டுக்கொடுத்த கொழும்புத் துறைமுகத்தை வெள்ளைகாரர்கள் தான் சிங்களவருக்கு பெற்றுக்கொடுத்தார்கள். D.S. சென்நாயக்காவோ அல்லது பண்டாரநாயக்கவோ அல்ல. 

 

அதே போலத்தால் வன்னியையும் சர்வதேசம்தான் மீண்டும் பிடித்தது. அதற்கும் கோத்தாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

 

முடிந்தால் மகிந்தா குடும்பம் இன்று திரும்ப சீனாவிடம் இழந்தபோன கொழும்புத்துறைமுகத்தை மீளபெற்றுக்காட்டட்டும். 

ttutyu

அப்படி என்றால் கோத்தபாயதான் முதலாவது போர்க்குற்றவாளி  

  • கருத்துக்கள உறவுகள்

ttutyu

ம்ம்ம்.. சிந்திக்கவேண்டிய விடயம்தான்.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அது தானே கோத்தா ஒரு அடிபட்ட பாம்பு சரத் பொன்சேகாவும் அதுவே ஆக ரெண்டு அடிபட்ட பாம்புகள் சேர்ந்து புலியை குதறி எடுத்து விட்டன திரும்பி கடிக்க புலிக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் இரண்டு பாம்புகளும் பல பக்கத்தால் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றன that's all

புலிகள் போரை முன்னெடுக்க முடியாமல் போன பிரதான காரணம் பிளேக்கும், இந்தியாவும் ஆயுதக் கப்பல்களை தாழ்த்தமை.  ஆயுதம் ஒழுங்காக வந்திருந்தால் ஒவ்வொரு கீபீராக இறக்கியிருக்கலாம். 

 

கோத்தாவுக்கும் பொன்சேக்காவும் இடையில் இருக்கும் கோட்டு வழக்கு யார் போரின் ஆயுதங்களில் கூடக் கொள்ளை அடித்தது என்பதில்தான். அதிலிருந்து பொன்சேக்கா இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

 

சர்வதேசம் புலிகளை அழிப்பதற்கும் விட மேலதிகமான ஆயுதங்களை கோத்தாவுக்கு கொடுத்தார்கள். அவர் அதை வைத்து போர்குற்றமும் செய்தார்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Ya ஆயுத கப்பல் மூழ்கடிப்பும் ஒரு காரணம் ஆனாலும் மிகத்திறமையான பல இளைய தளபதிகளை கோத்தா பொன்சேகா கூட்டணி கள முனைகளில் இறக்கி இருந்தது....

ஒரு கள மனையில் தேக்கம் தோல்வி ஏற்ப்பட்டால் உடனடியாக கள முனைத்தளபதிகள் சமரசத்துக்கு இடமே இல்லாமல் மாற்றப்பட்டார்கள் அதனால் தான் சில தளபதிகள் பொன்சேகா மேல் அதிரிப்த்தியில் இருந்தார்கள் பின்னர் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு பொன்சேகா கைது செய்யப்படும் போது அந்த அதிர்ப்த்தி தளபதிகளையே கோத்தா பயன்படுத்தி இருந்தார்

உண்மை தான். அது உணர்ந்து தான் போட முயலப்பட்டதாக இருக்கலாம். அன்றைக்கு ஒரு கொப்பக்கடுவா அழிந்ததால், வெல்லப்பட்டது. இதில் கோத்தபாயா தப்பியதால் அழிந்தோம்...

 

இது மிகவும் தவறான கருத்து நீங்கள் கூறுவதைப் பார்த்தால் புலிகள் ஏதே அதிர்ஷ்டத்தால் வென்றவர்கள் என்பது மாதிரி இருக்கு,புலிகளுக்கு வெற்றியை அவகளது வீரமும் விவேகமுமே அன்றி வேறு எதுவும் இல்லை, ஏன் இராணுவம் மட்டும் கருணாவை பிரிக்கவில்லையா, சார்ள்ஸ் கொல்லப்படவில்லையா,த்மைழ் செல்வன் கொல்லப்படவில்லையா, கிட்டு, திலீபன் போன்றவர்கள் கொல்லப்பட்வில்லையா, ஏன் குமரப்பா புலேந்திரன், குகன், தீபன், விதூஷா,கடாபி என எத்தனை பேர் கொல்லப்பட்டர்கள், புலிகள் தோற்றதற்கு ஒரேயொரு காரணம் சர்வதேசம் அரசுக்கு வழங்கிய அதிகபட்சமான ஆதரவு மட்டும் தான் காரணம். கோபேகடுவ இறந்தால் தான் புலிகள் வென்றார்கள் என்பது அவர்களை அவமதிக்கும் செயல்

Ya ஆயுத கப்பல் மூழ்கடிப்பும் ஒரு காரணம் ஆனாலும் மிகத்திறமையான பல இளைய தளபதிகளை கோத்தா பொன்சேகா கூட்டணி கள முனைகளில் இறக்கி இருந்தது....

ஒரு கள மனையில் தேக்கம் தோல்வி ஏற்ப்பட்டால் உடனடியாக கள முனைத்தளபதிகள் சமரசத்துக்கு இடமே இல்லாமல் மாற்றப்பட்டார்கள் அதனால் தான் சில தளபதிகள் பொன்சேகா மேல் அதிரிப்த்தியில் இருந்தார்கள் பின்னர் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு பொன்சேகா கைது செய்யப்படும் போது அந்த அதிர்ப்த்தி தளபதிகளையே கோத்தா பயன்படுத்தி இருந்தார்

 

ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது மட்டும் தான் காரணம்,மற்றயது எல்லம் தவறு அது சரி இளமையான சிறந்த தளபதியா? அப்படியாராவது சிங்களவ்பனிடம் இருக்கிறானா, ஜோக் அடிக்க வேண்டாம். நச்சு வாயு அடிக்க திறமையான இளமையான அதிகாரி தேவை இல்லை, கோத்தாவின் அம்மாமாவே காணும்

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்பிடியோ வெற்றி வெற்றி தானே....

  • கருத்துக்கள உறவுகள்

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான் கோத்தாவின் பங்களிப்பு. 1987 ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து உவர் படை நடத்தி கடைசியா.. 2009 இல தான் வெண்டவராமில்ல. பெரிய கெட்டித்தனமான போர்..???!

 

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பிராந்திய ஆதிக்கச் சுழிக்குள்.. சிக்கிக் கொண்டிராவிட்டால்.. புலிகளை எவரும் போரில் வென்றிருக்க முடியாது..!

 

அதேபோல்.. போர் வெற்றி என்பது புலிகளின் அழிவும் அல்ல..! புலிகளை யாரும் அழிக்கவும் முடியாது..! ஆயிரம் கோத்தபாய வந்தாலும் அது சாத்தியமில்லை..! காரணம்.. புலிகள் தோன்றக் காரணமான அத்தனை காரணிகளையும் கோத்தபாய பத்திரமாக பாதுகாத்து வைச்சிருக்கிறார். அதுபோதும்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பிராந்திய ஆதிக்கச் சுழிக்குள்.. சிக்கிக் கொண்டிராவிட்டால்.. புலிகளை எவரும் போரில் வென்றிருக்க முடியாது..!

அதற்க்கு தக்க மாதிரி புலிகளும் தங்கள் திட்டங்களையும் செயல்ப்பாடுகளையும் மாற்றி இருக்கலாம்

கோத்தா தன்னுடைய கடந்த கால நடவைக்கைகளில் விட்ட பிழைகளை வைத்து அவற்றை சரி படுத்தி படைகைளையும் வளங்களையும் ஒருங்கிணைத்து புலிகளின் சில முன்னால்களையும் வைத்து போரை நடாத்தி முடித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பிராந்திய ஆதிக்கச் சுழிக்குள்.. சிக்கிக் கொண்டிராவிட்டால்.. புலிகளை எவரும் போரில் வென்றிருக்க முடியாது..!

அதற்க்கு தக்க மாதிரி புலிகளும் தங்கள் திட்டங்களையும் செயல்ப்பாடுகளையும் மாற்றி இருக்கலாம்

கோத்தா தன்னுடைய கடந்த கால நடவைக்கைகளில் விட்ட பிழைகளை வைத்து அவற்றை சரி படுத்தி படைகைளையும் வளங்களையும் ஒருங்கிணைத்து புலிகளின் சில முன்னால்களையும் வைத்து போரை நடாத்தி முடித்தார்

 

புலிகள் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தார்கள். அதனை நீங்கள் உணரவில்லை அல்லது மறந்து விட்டீர்கள் போலத் தெரிகிறது.

 

எல்லா ஈழப்போரிலும் புலிகளின் கை ஆரம்பத்தில் ஓக்கி இருக்கத்த நடவடிக்கைகளையே புலிகள் எடுப்பார்கள். காரணம்.. அவர்களுக்கு எதிரியின் பலம் பற்றித் தெரியும்.

 

ஆனால் 2006 இன் போது.. புலிகள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இந்தச் சுழிக்குள் சிக்காமல் விடுபடும் மார்க்கங்களை தான் கடைசி வரை மேற்கொண்டார்கள்.

 

இன்றேல்.. சிங்கள இராணுவத்தின் ஒவ்வொரு அடிக்கும்.. ஒவ்வொரு ஆக்கிரமிப்புச் சிங்களக் கிராமமாக அழிந்து கொண்டிருக்கும். சிங்களப் படைகளும் அவற்றை நோக்கி நகரும் நிலை வந்திருக்கும்..!

 

ஆனால்.. புலிகள் பயங்கரவாத உச்சரிப்புச் சுழியின் பலம் அறிந்து தான் பல அடக்கிவாசுப்புக்களைச் செய்தார்கள். அதேவேளை தம்மை தற்காப்பு நிலைக்குள்ளும் வைத்துக் கொண்டார்கள். இறுதி வரை அதுவே கதையாகியும் போனது.

 

ஆனாலும்.. புலிகளை அழித்துவிட்டோம் என்ற கடந்த கால உச்சரிப்புக்களின் தன்மை இன்று மாறி.. புலிகள் வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர் என்று அது சுருதி மாறுகிறது..!

 

அன்று பயங்கரவாதம் (வன்முறைப் போராட்டம்) செய்வது புலிகள் என்றால்.. இன்று தமிழரின் உரிமைகளைக் கேட்பது கூட புலிகள் என்றாகி நிற்கிறது. அந்த வகையில்.. புலிகளை.. சிங்களமோ.. அல்லது துரோகிகளோ எக்காலத்திலும் அழிக்க முடியாது. தமிழர்களின் இலட்சியம் வெல்லப்படும் வரை புலிகள் இருப்பார்கள்..! :icon_idea::)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் என்று சொலுவது கூட கோத்தாவின் ஒரு ராஜதந்திரம்........:D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பிராந்திய ஆதிக்கச் சுழிக்குள்.. சிக்கிக் கொண்டிராவிட்டால்.. புலிகளை எவரும் போரில் வென்றிருக்க முடியாது..!

அதற்க்கு தக்க மாதிரி புலிகளும் தங்கள் திட்டங்களையும் செயல்ப்பாடுகளையும் மாற்றி இருக்கலாம்

கோத்தா தன்னுடைய கடந்த கால நடவைக்கைகளில் விட்ட பிழைகளை வைத்து அவற்றை சரி படுத்தி படைகைளையும் வளங்களையும் ஒருங்கிணைத்து புலிகளின் சில முன்னால்களையும் வைத்து போரை நடாத்தி முடித்தார்

 

இது சரியான தகவல் அல்ல.

 

பொன்சேகா ஒரு தடவை கூறி இருந்தார். புலிகள் கிளிநொச்சியை படையினர் நெருங்கும் வேளை மேற்கொண்ட தாக்குதலின் பின் படையினரின் மனோ வலிமை குறைந்து பின்வாங்கி ஓடும் நிலையில் இருந்தது. அவ்வேளை இந்தியாவும்.. பாகிஸ்தானும்.. எமக்களித்த உதவிகள் தான் அந்த நிலையை மாற்றி அமைத்தது என்று.

 

அந்தக் காலக்கட்டத்தில் தான் 7 நாட்டு அதிகாரிகள் வன்னிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு.. கள நிலையை ஆராய்ந்தார்கள். பொன்சேகா.. இந்தியா.. பாகிஸ்தான்.. சீனா என்று பறந்தார். கோத்தா இஸ்ரேலுக்கு ஓடினார். அதன் பின்னர் தான்... மன்னார் ஊடான பண்ட் உடைப்பும் நிகழ்ந்தது. எரி குண்டுகள் வீச்சும் ஆரம்பமானது. புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கப் போகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது.

 

இவை எல்லாம்.. திட்டமிட்டு பன்னாட்டுப் படைகள் எம்மீது திணித்தவை..! கோத்தாவின் அறிவோ.. பொன்சேகாவின் அறிவோ அல்ல அவை...! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மாவிலாறில் கைவைக்க போய் கிழக்கு மாகாணத்தை ஒவொரு பகுதியாக இழந்து கொண்டு வரவே புலிகளின் தோல்வி உறுதியாகி விட்டது...... அதவும் இவளவு அனுபவம் மிக்கபுளிகளை முள்ளி வாய்க்காலில் கொண்டு போய் ஒதுக்கியது சிங்களத்தின் மிகச்சிறந்த போரியல் ராஜதந்திரம்........

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார் என்று சொலுவது கூட கோத்தாவின் ஒரு ராஜதந்திரம்........ :D

 

இதில் ராஜதந்திரம் எதுவும் இல்லை. அசைலம் கொடுக்கிற நாடுகளுக்குத் தெரியும். யார் புலிகள்.. யார் போலிகள் என்று.

 

கோத்தாவின் ராஜதந்திரம் என்பது இங்கு... சரணடைந்த போராளிகள் மீதான தனது கொலைவெறியை திசை திருப்புவது தான். ஆனால் அது பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பின் முன் எனி எடுபடாது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அதே பொன்சேகா தான் கூறி இருந்தார் தொடர்ந்து முன்னேர முடியாத்கு என்று கூறிய தளபதிகள் மாற்றப்பட்டு புதிய தளபதிகள் நிருத்தப்பாடார்கள் பாகிஸ்தான் ஆயுதமோ அமெரிக்கா ஆயுதமோ 30 வருட அனுபவம் உள்ள போராளிகள் இயக்கம் இதை எல்லாம் புரிந்து கொண்டு இருக்க வேண்டாமா.......

சர்வதேச அரங்கில் எத்தனையோ விடையங்களை செய்திருக்கலாம்

அன்டன் பாலசிங்கத்தையும் கொண்டு போய் ஒதுக்கி.......

இதில் ராஜதந்திரம் எதுவும் இல்லை. அசைலம் கொடுக்கிற நாடுகளுக்குத் தெரியும். யார் புலிகள்.. யார் போலிகள் என்று.

கோத்தாவின் ராஜதந்திரம் என்பது இங்கு... சரணடைந்த போராளிகள் மீதான தனது கொலைவெறியை திசை திருப்புவது தான். ஆனால் அது பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பின் முன் எனி எடுபடாது..! :)

எது எப்பிடியோ ராஜதந்திரம் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கிழக்கில் மூதூரை கைப்பற்றியதும் கூட நடந்தது.. பிறகு தாமாகவே பின்வாங்கினார்கள்..! கோத்தா படையெடுப்பார் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம்.. :/

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மாவிலாறில் கைவைக்க போய் கிழக்கு மாகாணத்தை ஒவொரு பகுதியாக இழந்து கொண்டு வரவே புலிகளின் தோல்வி உறுதியாகி விட்டது...... அதவும் இவளவு அனுபவம் மிக்கபுளிகளை முள்ளி வாய்க்காலில் கொண்டு போய் ஒதுக்கியது சிங்களத்தின் மிகச்சிறந்த போரியல் ராஜதந்திரம்........

 

அப்படின்னு நீங்கள் நினைக்கிறீர்கள்.

 

மாவிலாறில் இருந்து ஒரே இரவுக்குள்.. மூதூருக்குள் சென்ற புலிகள் பற்றி என்ன சொல்ல முடிஞ்சுது..???!

 

அதேபோல்.. மண்டைதீவினூடு.. ஊர்காவற்றுறை வரை சென்ற புலிகள் ஏன் திரும்பி வந்தார்கள்..???!

 

இவற்றிற்கும்.. 2002 இல் யாழ் கச்சேரி வரை சென்ற புலிகள் திரும்பி வந்ததற்கும்.. திருவனந்தபுரத்தில் இந்தியப் படைகள் தயார்ப்படுத்தப்பட்டதற்கும்.. ஏதேனும் தொடர்பு..???!

 

புலிகள் கச்சேரியில் இருந்து.. சாவகச்சேரி ஊடாக.. இருந்து திரும்பி வரும் போது அவர்கள் மீது ஜானகப் பெரேராவால் கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பெருமளவு போராளிகள் வீணாகக் கொல்லப்பட்டார்கள். அதே புலிகள்.. பின்னர் தீச்சுவாலையில் இராணுவத்தை அடித்தும் விரட்டினார்கள்..! ஆனையிறவை தொடர்ந்தும் தக்க வைத்தார்கள். கச்சேரியில் நின்ற புலிகள் யாழ் நகரை அடைந்திருந்தால்... குடா நாடே அன்று புலிகள் கைக்குள் வந்திருக்கும்..!

 

புலிகள் மேற்கொண்ட 4 வலிந்து தாக்குதலிலும் அவர்கள் வெற்றி கண்டனர். ஆனால் என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல... விலகி வந்துவிட்டார்கள். அதேபோல்.. வன்னிக் கள முனையில்.. புலிகள் சண்டையிடாமலே வெளியேறி போன கள முனைகளில் இராணுவம் அடைந்த வெற்றிகளே அதிகம். சண்டை இட்டுப் பெற்ற வெற்றி என்றால் மன்னார் கள முனையில் மட்டும் தான் அது நடந்தது..!

 

பூநகரி இராணுவத்தின் கையில் இருக்கத்தக்கதாக.. ஆனையிறவு இராணுவத்தின் கையில் இருக்கத்தக்கதாக புலிகள்.. வன்னியை ஆண்டவர்கள். எனவே பூநகரி வீழ்ச்சி என்பது புலிகளுக்கு ஒரு பின்னடைவு அல்ல. ஆனால்...  புலிகள்.. வலிந்து தாக்குதல்களை எல்லாம் கைவிட்டு.. ஏன் பின்வாங்கும் படலத்தை ஆரம்பித்தார்கள் என்பது.. இன்று வரை மர்மமாக உள்ளது. அதற்குப் பின்னால்.. சர்வதேச வல்லாதிக்க சக்தி ஒன்றின்.. பிராந்திய வல்லாதிக்க.. சக்தி ஒன்றின்.. அச்சுறுத்தல் இருந்திருக்கவே வாய்ப்புள்ளது. அது சிங்களத்தின் வெற்றி அல்ல. பிராந்திய ஆதிக்கத்தின் வெற்றி..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயின் கடுமையான அழுத்தம் மற்றும் பாரிய நிலப்பரப்புகளை தொடர்ந்தும் தக்க வைக்க முடியாமல் பின்னோக்கி நகர்ந்தார்கள் ஆனால் ஒரு மூதூரை கைபோற்ற போய் ஒட்டு மொத்த தமிழ் ஈழத்தையுமே கைவிட வேண்டி வந்தது புலிகளின் தோல்விக்கு ஏற்பட்ட சறுக்களின் முதல் படி மாவிலாறு மற்றும் முதூர்.....

மாவிலாறில் தண்ணி நிறுத்தியதை வைத்து மிகத்தீவிரமான சர்வதேச பரப்புரைய இலங்கை அரசு செய்தது......

மற்றது மகிந்த குடும்பத்தையும் ஏனைய சிங்கள சாதாரண அரசியல் வாதிகள் போல் புலிகள் நினைத்திருந்தார்கள் கண்டி சிங்களவன விட அம்பாத்தோட்ட சிங்களவன் காரம் கூடின ஆக்கள்.....

கோத்தவை ராஜதந்திரி என்று வருணிக்கத்தக்க பாணியில் அவர் இதுவரையில் கொடுத்த பேட்டிகள் ஒன்றிலும் நடந்து இல்லை. கொலைக்களம் வெளியான பின்னர் வந்த பேட்டி ஒன்றில் மருந்து வெக்கையால் அந்தரபட்டு செருமிக்கொண்டிருந்தார்.  அண்ணன் அதைவிட மோசமான அரயில் சேலை இல்லாத பேட்டிகள் கொடுத்திருந்தார். மேலைநாட்டு சொல் ராஜ தந்திரம். இவை எல்லாம் அதற்கு எதிர். அப்படி பேட்டிகளை பார்தவர்கள் அண்ணன் தம்பியை நாயாக கூட மதிக்கமாட்டார்கள். அதனால் இன்று பொறிக்குள் மெல்ல மெல்ல சறுக்கிக்கொண்டு போகிறார்கள்.

 

போரில் வ்ன்றதால் கோத்தாவிடம் ராஜ தந்திரம் என்கிறார்கள். இதை செய்து முடித்தவன் உண்மையில் ஒரு தமிழனே. கதிர்காமர் இறப்பின் மேற்குநாடுகளின் ஆதரவு மெல்ல மெல்ல சரிந்துவிட்டது என்பதுதான் உண்மை. தமிழனை அழிப்பதும் தமிழன்தான். சிங்களவனுக்கு அது முடியாத காரியம்.


புலிகள் கிழக்கில் மூதூரை கைப்பற்றியதும் கூட நடந்தது.. பிறகு தாமாகவே பின்வாங்கினார்கள்..! கோத்தா படையெடுப்பார் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம்.. :/

நான் நோர்வே குடுத்த இடஞ்சலால் என்று நினத்தேன். நோர்வே தனக்கு துணையாக அமெரிக்கவை பாவித்தது போலிருந்தது அந்த நேரம். 

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்திய ஆதிக்கத்துக்கு எதிராகவும் புலிகள் ராஜதந்திர ரீதியில் செயல்ப்பட்டு இருந்தால் ஓரளவு தப்பி இருக்கலாம் என்பதே எனது வாதம்......

தப்பு வதற்கே வழி இல்லாத ஒரு வெட்டவெளி கடற்கரை பிரதேசத்திற்கு தங்கள் ஒட்டு மொத்த பலத்தையும் காவி சென்றது எது என்பது இன்று வரை புரியாத புதிர்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.