Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் ஒரு புலி - ஒன்று

Featured Replies

உண்மையில் ஓவியக் கண்காட்சி ஒபரேஷன் லிபரேஷனுக்கு முன்பாக நடாத்தப்பட இருந்ததாக நன்பர்கள் சொன்னதாக ஞாபகம்.
 
பெரும்பாலான ஓவியங்களை ஒருவரே வரைந்ததாகவும் அவரது ஓவியங்கள் குமுதம் இதலில் அக்காலத்தில் ஓவியங்கள் வரையும் ஜே.. என்று கையெழுத்துப் போடுபவரின் ஓவியங்கள் போல் இருந்ததாகவும் இதனால் அந்த ஓவியர் தன்னை ஈழத்து ஜெயராஜ் என்று சொல்லிக்கொண்டதாகவும் சொன்னார்கள்.
  • Replies 103
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீரா பாரதி மற்றவர்களைப் போல் நான் இங்கு புலி ஒரு பரிசுத்த இயக்கம் மற்ற அமைப்புகள் எல்லாம் தமிழின துரோகிகள் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் உங்களை நோக்கிய எனது கேள்வி என்னவென்றால் .... இந்த உலகத்தின் வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் இருந்து கூட எடுத்தாவது ஒரு இலட்சிய ஆட்சிக்கு உதாரணம் காட்டுங்கள் இங்கு இலட்சிய ஆட்சி என்பது

1) தனது தரப்பு இலாப நட்டங்களை எள்ளளவேனும் கணக்கெடுக்காமல் முற்றுமுழுதாக 100% மக்களின் நலன் கருதி செயற்படுவது

2) அதிகாரம் மீது எதுவித ஆசையும் இன்றி ஒரு தொண்டு செய்பவன் போல் ஆட்சி செய்வது

3) எந் நேரத்திலும் மக்களின் நன்மைக்காக ஆட்சியை விட்டு இறங்கவோ இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கவோ தயாராகவிருப்பது.

கற்பனையில் கூட நடக்கமுடியாத விடயங்கள். அப்ப ஆட்சி அதிகாரம் எண்டு வந்தாலே பல தவறுகள் கெடுபிடிகள் இருந்தே ஆகும். புலி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

சரி உங்கள் போன்றோரின் ஆதங்கம் ஏன் புலி தனக்குத் தான் எல்லாம் என்று தமிழர் மீது ஏக பிரதிநிதித்துவத்தை எடுத்துக் கொண்டது? ஏன் மற்றைய அமைப்புக்களை எல்லாம் அழித்தது? ஞாயமான ஆதங்கங்கள் தான். 

சரி ஒரு பேச்சுக்கு புலி தானும் தன் பாடும் எண்டு இராணுவத்தோடு மட்டும் போராடிக் கொண்டிருந்தது என்று வையுங்கள். ரெலோ வந்து வாம்மா புலி என்ர செல்லம் எண்டு கொஞ்சி இருக்கும் எண்டா நினைக்கிறியள். அடக்கி ஆளுறதும், ஆட்சியை விஸ்தரிக்கிறதும், தனக்கு சவாலானவனை ஒழிப்பதும் தான் தொன்று தொட்டு இன்று வரை உலக வரலாறு. அப்ப புலி இல்லாட்டி ரெலோ, ரெலோ இல்லாட்டி இன்னொன்று. அல்லது சமபலத்தால் ஒவ்வொன்று ஒவ்வொரு ஏரியாவை கொன்றோல் பண்ணிறதும் மாறி மாறி தட்டுப் படுறதும் நொட்டுப் படுறதுமா போயிருக்கும் 

இது தான் நியதி. ஏனென்றால் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை அலசி ஆராஞ்சு மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்றுகூடி கையில் எடுக்கவில்லை. மோசமான மகாவம்ச சிந்தனையால் உருவாகப்பட்ட பேரினவாதத்துக்கும், இலங்கை தீவை விழுங்க நினைச்ச பிராந்திய வல்லாதிக்கத்தும் பிறந்தது தான் இந்த குழந்தை.பிறப்பே வக்கிரம். பிறகு அது எவ்வாறு ஆரோக்கியமாக வளர்வது? எங்கெல்லாம் இன்னொரு நாடு தன்ர ஆதாயத்துக்காக ஆயுதங்களை கொட்டுதோ அங்கெலாம் ஆப்கானிஸ்தான்கள் தான் உருவாகும். இது வரலாற்று நியதி.

எங்கட ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்தளவில் இரண்டு தான் வழி: 

1) புலி காட்டிய வழி

2) ரோவின் கைப்பிள்ளை

முதலாவது அழிக்கப்பட்டது வரலாறு. இரண்டாவதும் தேவை முடிந்தபின் அழிக்கப்பட்டிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

இதை விட முக்கிய கேள்வி. சிங்களவன் அடிக்க முதல் நாங்க ஒரு ஐக்கியமான இனமா இருந்தோமா என்பதுதான். யாழ்ப்பாணத்தான், வன்னியான், மட்டக்கிளப்பான் ... சின்ன யாழ்ப்பாணத்துக்குள்ளயே வடமராட்சி தென்மராட்சி தீவான் ... ஆயிரம் சாதிகள் வர்க்க பேதங்கள் இப்பிடி ஒரு குழம்பிய குட்டையாகத் தானே இருந்தோம். இந்த குட்டைக்குள்ள ரோ காரன் ஆயுதத்தை கொண்டு வந்து இந்தா நீயும் பிடி அவனும் பிடி எண்டு பத்து பேரிட்ட குடுத்தா, குட்டை கூவம் ஆகாமல் தேவலோகத்து பாற்கடலாகவா மாறும்?

இதில நீங்க மார்க்ஸியம் படிச்சு தோழர் தோழர் எண்டு சுத்துறத்தாலயோ காந்தியத்தை அக்கக்கா பிரிச்சு மேயுறத்தாலயோ எதையும் சாதிச்சிருக்க முடியாது.

இந்த கூவம் எண்டுற நிலையில் இருந்து பிரபாகரனுக்கு ஆயிரம் தெரிவும் உக்காந்து யோசிக்க நேரமும் எல்லாத்தையும் செய்து முடிக்கக் கூடிய வசதி வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவர் செய்த தவறு அடைஞ்சா தமிழீழம் எண்டுற ஒரு மூர்க்கமான சாத்தியமற்ற கொள்கையை முன்னெடுத்தது தான். அந்த கொள்கையில் உறுதியா நிண்டா நெருப்பாற்றில் நீந்துவது மட்டும் தான் ஒரே ஒரு தெரிவு. அதை நீங்கள் பிண அரசியல் என்டு சொல்லுறீங்கள். ஆனால் தன்னையும் தன் குடும்பத்தையும் அந்த நெருப்பாற்றை விட்டு ஓரமா தள்ளி வைச்சிருக்கேல்லை. கடைசிவரை அதிலேயே பயணித்து வீரச்சாவையும் அடைஞ்சு விட்டார். சாதாரண மக்கள் அதிலும் எம் தமிழ் மக்கள் உயிர் பயம், பந்த பாசங்கள், பொருள் கல்வி வசதி வாய்ப்புக்கள், பாலியல் இச்சைகள் இவற்றோடு இந்த மூர்க்கமான நெருப்பாற்றில் தொடர்ச்சியாக பயணிக்க முடியாதவர்கள் என்பதை உணரத்தவறி விட்டார்.

எனக்குள் ஒரு சின்ன ஆதங்கம் என்னவென்றால் 87 ஆம் ஆண்டு புலிகள் அந்த இடைக்கால நிர்வாக சபையை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை கைவிட்டு அரசியலுக்குள்ள போயிருந்தா ... தீர்வு என்று கிடைத்திருக்கவிட்டாலும் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்காது. ஏதோ ஈழ்த்தமிழினம் அந்த தீவில் தனது இருப்பையாவது உறுதி செய்திருக்கும் என்பதே......? ஆனாலும் அடிபடையாக சிந்தித்தால் ஏன் இந்தியா வட கிழக்கில் காலூன்றியது? தமிழனின் நன்மை கருதியா? இல்லவே இல்லை. சரி அப்ப வடக்கு கிழக்கை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பெரும் தென் சிங்களப் பகுதியை தனக்கு எதிரியாகவோ அல்லது வேறோர் நாடு செல்வாக்கு செலுத்தவோவா? இல்லவே இல்லை. ஒரே நோக்கம் முற்று முழு இலங்கை மீதான தன் ஆதிக்கம். அந்த ஆதிக்கத்தை நிறைவேற்ற ஏதுவான சூழல் எது? நிரந்தரமான சமாதானமா? இருக்கவே இருக்காது. பிறகு என்ன ... ஒரே குத்து வெட்டுத் தான். அப்பத் தானே பஞ்சாயத்து பண்ணலாம்.  சரி இன்னொரு பக்கத்தால் யோசித்தால் ... பனிப் போரின் பின் இந்தியாவின் மேற்கு சார்பான பல்டியின் பின் நிலமை எப்படிப் போயிருக்கும்? சீனாவை தடுக்கும் நோக்கில் அம்பேரிக்காவோடு சேர்ந்து சிங்களவனோடு டீலைப் போட்டுவிட்டு தமிழனை கைவிட்டிருந்தா ...?  என்ன இண்டைக்கு ஏதோ ஒரு இணையத் தளத்தில் பிரபாகரன் எப்பேற்பட்ட எழுச்சியான ஒரு போராட்டத்தை கைவிட்டு தமிழினத்தின் நம்பிக்கையை சிதைச்சிருக்கிறார் எண்டு எழுதியிருந்தாலும் எழுதியிருப்பம் :wub: 

 

physicsல் dynamics என்று ஒரு பாடம் உள்ளது. நடக்கும் ஒவ்வொரு அசைவுகளும் அந்தந்தக் கணத்தில் தாக்கிய விசைகளின் பொருட்டு நடந்து விடும். எமது போரட்டமும் அதே போன்றது தான்.

அதற்கு timing machine இல் பின்னால் போய் அலசி அங்கலாய்ப்பது. சுயவிமர்சனம் என்னும் பேரில் வீணாக வெறும் வாயை இரை மீட்டி காலம் கடத்துவது. எல்லாமே சுத்த வேஸ்ட் (இதை எழுதி முடிக்கும் போது இன்னும் தெளிவாகப் புரிந்தது -- எவன் போய் நான் எழுதியதை மினக்கெட்டு இருந்து வாசிக்கப் போகிறான் என்று உணர்ந்த போது  :icon_mrgreen: ).

 

ஏனென்றால் மீண்டும் ஒரு பனிப் போர், ஜே.ஆர், இந்தியாவின் ஆயுதப் பயிற்சி ... சாத்தியங்கள்? சரி இவையே நடந்தாலும் மக்கி மண்ணாய் போய் ஏறக்குறைய இப்பவே 3ஆம் சிறுபான்மை எண்ட நிலைக்குப் போன என் இனத்தால் ... ஒரு தடி தண்டே தூக்க முடியுமோ தெரியாது ... இதற்குள் ஆயுதமா? சரி அப்படி ஒரு நடந்தாலும் ... அது ரோவின் வழிகாட்டலில் நடக்குமே தவிர இங்கிருந்து நாங்கள் செயும் மீளாய்வு புண்ணாக்கு என்று எதிலும் நடக்கப் போவதில்லை. 

ஆக இதை விட்டால் சுவாரசியமாக அடி பிடி எண்டு விவாதிக்க வேறு மேட்டர் கிடையாது என்பதால் 1983 - 2009 க்குளேயே மீண்டும் மீண்டும் சுத்தித் சுழருவோமாக.

 

நீங்கள் கேட்பது நியாயமானா கேள்விதான்.
 
நாங்கள் சுயவிளம்பரம் செய்வது எப்படி??
இதற்கு ஒரு அறிவுரை தந்தால் இப்படி எல்லாம் ஏன் நாங்கள் எழுத போகிறோம்.
 
புலிகள் இல்லது போயிருந்தால் .............
நாங்கள் புடுங்கியிருப்போம் அப்படி என்று நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கத்தான் வேண்டும்.
இப்போ  புலியில்லை தானே போய்  புடுங்கலாமே என்று நீங்கள் கேட்பது. எங்களுக்கு ஒருபோதும் கேட்பதில்லை.
நாங்கள் இலக்கிய வாதிகள் எங்களுக்கு சத்தம் மட்டும்தான் கேட்கும்.
பறவைகள் ..... மிருகங்களின் பாசை  ,மட்டும்தான் புரியும்.
  • 2 weeks later...

மீராபாரதியின் சுயசரிதமும் கைவிடப்பட்டுவிட்‌டதா?

அண்ணை வாங்கோ , தொடர்ந்து எழுதுங்கோ   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.