Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா புலானாய்வு அதிகாரி ஜெயரட்னத்தின் துணைவியாரும் நவனீதம்பிள்ளையை சந்திப்பேன் என்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jeyaratnam_salara-150-seithy.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளதாக சரளா ஜெயரட்னம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஜெயரட்னத்தின் மனைவியே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து சரளா ஜெயரட்னம், நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார்.

  

கொழும்பில் தமது கணவரை கடத்திய புலிகள் வன்னியில் வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தகவல்களை மூடிமறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ள நிலையில், சரளா நவனீதம்பிள்ளையை சந்திப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90692&category=TamilNews&language=tamil

ஏட்டிக்குப்போட்டி அனந்திக்கு எதிர்,புலனாய்வுப் பிரிவு ஜெயரட்ணம் மனைவி சரளாவாம்! சாட்சியமளிக்காதேயென மிரட்டும் இலங்கை அரசு!

http://irruppu.com/?p=34038

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்திக்கும் நிகழ்ச்சி நிரலில் நாடுகளுக்கு நாள் புதியவர்கள் இணைந்துக்கொள்கின்றனர். ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் 30 ஆம் திகதியன்று நவநீதம்பிள்ளையை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇதன்போது வடக்குகிழக்கில் இராணுவத்தின் அதிக பிரசன்னம் உட்பட்ட மனித உரிமை மீறல்கள்,தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பாக கூட்டமைப்பு முறையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் புதியவர்கள் நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளது

இதன்படி விடுதலைப்புலிகளால் கொழும்பில் இருந்து கடத்திச்செல்லப்பட்டு வன்னியில் வைத்து கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஜெயரட்ணத்தின் மனைவியான சரளா, நவநீதம்பிள்ளையை சந்திக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி, நவநீதம்பிள்ளையை சந்திக்கவுள்ளமையை அடுத்தே அரசாங்கம் சரளாவை சந்திக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் முறையிடப்போவதாக இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளதாக சரளா ஜெயரட்னம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஜெயரட்னத்தின் மனைவியே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து சரளா ஜெயரட்னம், நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார்.கொழும்பில் தமது கணவரை கடத்திய புலிகள் வன்னியில் வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தகவல்களை மூடிமறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ள நிலையில், சரளா நவனீதம்பிள்ளையை சந்திப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கூட்டமைப்பு சந்திப்பதை சமநிலப்படுத்த கருணா, பிள்ளையான், தேவானந்தாவும் சந்திக்க வேண்டும்.  <_<

 

ஒரு தடவை "Lies Agreed Upon " படம் எடுத்து பெல் பொட்டிஞ்சருக்கு காசு கொடுத்து ஏமாந்த பின்னரும் அரசு திருந்தவில்லை. இந்த பொய்சாட்சிகளை மேடை ஏற்றுவத்தால் போட்டிக்கு போட்டியாக கொலை செய்வது நியாயம் என்று அரசு வாதாடுகிறது.

 

இந்த மனிசி மாட்டின விதம் வேறை.  அரசு, ஐ.நா வின் இடைக்கால வாய்மொழி அறிக்கையில் காட்டுவத்தற்காக,  விசாரணை என்ற பேரில் சில போராளிகளை அடித்து அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாயார் செய்து கொண்டுவருகிறது. அப்போ கண்டுபிடித்து சோடிக்கப்பட்டதுதான் இந்த தொலைஞ்சு ஜெயரத்தினம் கேஸ். அரசு அவன் பாவியை கதிர்காமைரை செய்தது போல் அரசு எதாவது செய்த்துவிட்டதோ தெரியாது. ஆனால் தொலைஞ்சு போய்விட்டான் என்று கூறிவிட்டு இந்த மனிசுக்கு பென்சன் கொடுக்கவில்லை. இப்போது புலிகள் கொலை செய்ததாக வழக்கு சோடிக்கப்படுவதால் கடமை நிமிதம் கொல்லப்பட்ட கொடுப்பனவுகள் மன்சிக்கு வரவேண்டும். இதை கேடக போய்தான் மாட்டியிருக்கிறா.

 

இது இன்னொரு ஹிருணிக்க கேஸாக மாறப்போகுது.

நிச்சயமாக ஜயரட்ணத்தின் துணைவியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் அதோடு ஜயரட்ணத்தால் விசாரணக்கு உட்படுத்தப்பட்டு கொடுமையாக நடத்தப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களை பற்றியும் விசாரிக்க வேண்டும்... முடிந்தால் தண்டனையை மனைவிக்கு குடுக்கலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயரட்ணத்தின் மனைவிக்காகவும் ஐநா விசாரணையைக் கொண்டுவருவதுதான் முறை.. :D

"We asked the government to help us. We wrote to the then IGP Anandarajah and other IGPS, told Minister Douglas Devananda to help us leave the country through his connections with the President. But, no one helped us" said a tearful Mrs Jeyaratnam.

She appealed to the government to speak to the LTTE and to the Norwegian peace envoy Erik Solheim and get her husband released. "It is peace time and the government can help to find my husband. No government officials have spoken to us so far. They have done nothing so far. My little children (age 5 and 7) do not know their father is missing. He was a honest police officer who served the country for more than fifteen years". The missing IP’s wife said when she made a complaint to the Sri Lanka Monitoring Mission (SLMM) the officials had told her that they will speak to the LTTE on the matter, but it was not possible for them to ask for Jeyaratnam’s release because it was not within their mandate.

Mrs Jeyaratnam said though her husband had stopped investigations on the activities of the LTTE, the Tigers had continued to follow him and her husband knew the LTTE had followed him for nearly seven years. Sarala Jeyaratnam said the suspect Mano, who invited them for dinner at the Mount-Lavinia hotel, had also gone missing and her efforts to call him on his mobile failed. "Mano promised to help my husband to get a job in London because he lived there." She described the van they went to meet Mano at the hotel as a white Toyota Dolphin with a blue border with a hood rack.

 

இந்த மனோ என்பவர் PLOT ஆகவோ அல்லது LTTE ஆகவோ இருந்திருந்தால் ஒரு புலனாய்வு அதிகாரி தற்பாதுகாப்பு இல்லாமல் அவருடன் இரவுச்சாப்பாடுக்கு போயிருக்க வழி இல்லை. அவர்கள் ஒரு இரவு சாப்பாட்டுக்கு போனவர்களாயின் உணவக சிற்பந்திகள் முதல் பலர் விசாரிக்கப்பட்டிருபார்கள். அரசு, இவர் மனோ என்ற எதிரியை சந்தித்து வெளிநாடு செல்ல முயல்கிறார் என்பதை தெரிந்திருந்தால்  அவரை முடித்துகட்டாமல் விட்டிருக்காது.

இந்த அதிகாரி புலிகளை வேவு பார்ப்பதை நிறுத்திய பின்னர் புலிகளின் மனோவுடன் சென்றதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் புலிகளிடம் இருந்து மிரட்டல்களும் வந்ததாம். அதிகாரி அரசால் வேண்டப்படாதவர் என்பது அந்த செய்தியில் இருக்கிறது. காணாமல் போய் சில நாட்களுக்குள், மனிசி, அரசு தங்களுக்கு உதவ மறுத்து வந்ததாக குற்றம் சாட்டியும் இருக்கிறா.  அரசு மீதான அவர்களின் சந்தேகத்தை இது காட்டுகிறது.

 

மனிசி நேராக LTTE யிடம் கணவரை விடும் படி கேட்டதாக இந்த பேட்டியில் இல்லை. அரசை விடுவித்துதரும்படிதான் கேட்டிருக்கிறா. அதனால் அவவே இதில் LTTE இன் பங்கை விட அரசின் பங்கு மீதுதான சந்தேகம் கூட வைத்திருக்கிறா. SLMM மறுதத்தற்கான சரியான காரண்ம் சொல்லப்படவிலை. அரசின் அதிகாரிகள் மீது புலிகளின் நடவடிக்கை எப்படி அவர்களின் கடமைக்குள் வராமல் போயிருக்கலாம்? மேலும் மனோவும் காணாமல் போய்விட்டார். இந்த மனோவின் மறவு பற்றி PLOT, LTTE என்ன சொன்னார்கள் என்பது யாருக்கேன் தெரியுமா? 

 

நவநீதம் பிள்ளைக்கு, இப்படி தமக்காக உழைத்த தமிழர்களான கதிர்காமர், பேர்னாண்டொ பிள்ளை ஜெயராஜா, இந்த அதிகாரி போன்ற்வர்களை அரசு கொலை செய்துவிட்டு போராளிகளை அடித்து "Lies Agreed Upon" தொடர்ந்து தயாரிக்கிறது எனபதை  சொல்லிவைக்க வேண்டும்.  அரசு புலிகள் கொலை செய்தார்கள் என்பதை தெரிந்த பின்னர் ஏன் கொடுப்பனவுகளை இழுத்தடித்தது என்று இந்த மனிசியிடம் கேட்க வேண்டும். அவர் தமிழர் என்றதாலா அல்லது கொலைக்காரணம் பொய் என்பத்தாலா என்பதை கண்டு பிடிக்க வேண்டும். அப்போது தானே ஒரு நீதவானாக இருந்த  நவநீதம் பிள்ளை இந்த மனிசியை சந்திக்கும் போது அவரின் உள்கிடக்கைகளை உணருவார்.

Edited by மல்லையூரான்

அரசு எப்போதாவது SLMM இடம் இந்த அதிகாரி தொலைந்து போனது பற்றி முறப்படு செய்த்திருந்திருக்கிறதா?

கதிர்காமரின் பொடிக்கு காணி இல்லை, செயரத்தினம் மனுசிக்கு பென்சன் இல்லை.

ஏன் தான் மாய்ந்து மாய்ந்து சிறி லங்கனுக்கு சேவை செய்கிறார்களோ தெரியவில்லை.

சிங்கள அரசின் வாலை பிடிச்சு கொண்டு திரிறவைக்கு இது நல்ல பாடம்   

  • கருத்துக்கள உறவுகள்

லசந்தாவின் மனைவியையும்(சோனாலி) கட்டாயம் சந்திக்க வேண்டும்.

கதிர்காமரின் பொடிக்கு காணி இல்லை, செயரத்தினம் மனுசிக்கு பென்சன் இல்லை.

ஏன் தான் மாய்ந்து மாய்ந்து சிறி லங்கனுக்கு சேவை செய்கிறார்களோ தெரியவில்லை.

உப்பிடி நடக்கும் என்று தெரிஞ்சு தான் டக்ளசுக்கு பிள்ளையே இல்லை  :icon_idea:

உப்பிடி நடக்கும் என்று தெரிஞ்சு தான் டக்ளசுக்கு பிள்ளையே இல்லை  :icon_idea:

அது உண்மையோ என்று டக்கியை கேட்டால்தான் தெரியும். :D  எத்தினை ஏற்கனே தெரு, திண்ணை எல்லாம் நிண்டு பிச்சை எடுக்குதுகளோ? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.