Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ranasingha-dias-seithy-150.jpg

போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று காரணம் காட்டி, சிறிலங்காவின் இரண்டு மூத்த மேஜர் ஜெனரல்களை, பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோரையே, நியூசிலாந்தின் ஓக்லாந்தில் நடத்தவுள்ள இராணுவப் பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வரும் செப்ரெம்பர் 9ம் நாள் ஆரம்பமாகவுள்ள பசுபிக் இராணுவ முகாமைத்துவக் கருத்தரங்கிற்கு அனுப்புவதற்கு, சிறிலங்கா இராணுவத் தலைமையகம், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வன்னிப் படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரை செய்திருந்தது.

  

இவர்களில் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவின் பெயர் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் சிக்கியுள்ளதால், அவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு நேற்றுமுன்தினம் அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில், 57வது டிவிசனின் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ். இவர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட போது, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டுகளும், அதுதொடர்பான பல தகவல்களும் வெளியாகின. சுவிற்சர்லாந்தில் இவருக்கு எதிராக போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு அங்கு நுழைந்தால் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளவராவார்.

 

மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடாத போதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளராக நியமிக்கப்பட்டவர். சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர். மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவை அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்னரும் இராணுவப் பயிற்சிக்கு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், போரில் ஈடுபட்ட 53வதுடிவிசனின் தளபதியாகப் பதவி வகித்தவர் என்று காரணம் கூறப்பட்டே அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார்.

 

எனினும், அவர் அமைதிக்காலத்திலேயே 53வது டிவிசன் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்று, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். போர்க்குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், 58வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, 59வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, யாழ்.படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோரை, போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்கா பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.

 

நியுயோர்க்கில் உள்ள போர்க் கல்லூரிக்குள் நுழைவதற்கு ஐ.நாவுக்கான பிரதி விதிவிடப் பிரதிநிதியாக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90679&category=TamilNews&language=tamil

இதை நாங்கள் வெற்‌றி என்று கொண்டாடுவதா? இல்லை என்றால் America தான் இந்த போர் முடிவுக்கு வந்ததற்கே முக்கிய காரணம்...ஆகவே இது America {ஒபாமா (வின் கட்சி :) ) ஓட்டு வாங்குவதற்க்கு} நடத்தும் நாடகம் என்பதா :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு போர்க்குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டிய தேவையும்.. அதன் மூலம் சிறீலங்காவிற்கு.. அழுத்தங்கள் வழங்க வேண்டிய தேவையும் உள்ளது. மேலும் அமெரிக்காவில் சர்வதேச அளவில் செயற்படும்.. நீதியான மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு உண்டு.

 

பிளேர்க் போன்றவர்களின் தவறான வழிநடத்தலால்.. நிகழ்ந்த தவறுகளை அமெரிக்கா சரி செய்ய வேண்டி இருப்பதும் இவ்வாறான வெளிப்படையான சில நகர்வுகளுக்கு காரணமாகும். மறைமுகமாக மகிந்தரோடு பேரமும் பேசிக் கொள்ளும் அமெரிக்கா.

 

எம்மைப் பொறுத்தவரை போர்க்குற்றம் என்பதை அமெரிக்கா விசாரிக்க வேண்டும்  என்பதல்ல கோரிக்கை. இன அழிப்பு போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஐநாவால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு அமெரிக்காவின் இவ்வாறான வெளிப்படையான நடவடிக்கைகளை சான்றுகளாக்கிக் கொள்வதும் போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை பலப்படுத்திக் கொள்வதும் இதில் நாம் செய்யக் கூடிய இராஜதந்திரமும் ஆகும்..!

 

அமெரிக்கா எம்மை வைச்சு சுயலாபம் தேட நினைக்கியில் நாம் அதற்குள் எமக்கான ஆதாயத்தை தேடிக் கொள்ள வேண்டும்..!

 

இதற்கு கொஞ்சம் நுண்ணிய சர்வதேசப் பார்வை அவசியம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

america வும் இலங்கையும் மறைமுகமாக பேரம் பேசுபவர்கள் ஆயின் நாமம் எப்போதும் தமிழர்களுக்கே...

இதில் எப்படி ஆதாயம் கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குக் கதை விடுகிறார்கள்? இவர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியாதா?? அப்படியானால் திருகோணமலையிலும், புல்மோட்டையிலும் அமெரிக்காவின் கொமாண்டோ படையணியும் சிங்களக் கொமாண்டோப் படையணியும் சேர்ந்து போர்ப்பயிற்சி எடுத்தனவே அண்மையில் ?? அப்போது போர்க்குற்றம் செய்திருக்கவில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

america வும் இலங்கையும் மறைமுகமாக பேரம் பேசுபவர்கள் ஆயின் நாமம் எப்போதும் தமிழர்களுக்கே...

இதில் எப்படி ஆதாயம் கிடைக்கும்?

 

எமது போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கைகளுக்கு அமெரிக்காவின் இந்த வெளிப்படையான நகர்வுகளை சான்றுகளாக்கிக் கொள்வதன் மூலம்.. அமெரிக்காவின் மறைமுக நகர்வுகளை மட்டுப்படுத்தலாம்.. அல்லது அமெரிக்கா எம்மையும் தாஜா பண்ண வேண்டிய சூழலை உருவாக்கலாம்..! ஒரே நாமம் வேண்டிக் கொண்டிருக்கும் நாம்.. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை உலகிற்கு அம்பலப்படுத்தி.. அதன் மூலமும் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை அதிகரிக்கலாம். எம் மக்கள் மீதான் போர்க்குற்றத்தில் அமெரிக்காவின் பங்களிப்பும் உள்ளது. அதன் காரணமாகத்தான்..நகர்வுகள் மந்தமாகச் செய்யப்படுகின்றன. ஆனால் சிரியாவில் எல்லாம் துரிதமாக நடக்கிறது.

 

ஐநா விசாரணைக்குழு போயும் விட்டது. நச்சுக் குண்டுகள் போடப்பட்ட குற்றச்சாட்டுகளும் வந்துவிட்டன.. ஆனால்... சிறீலங்காவில்.. ஐநா மூவர் குழு பரிந்துரையே கிடப்பில் போட்டாச்சு..! :icon_idea::(:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.